இந்து சமயம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சித்திரை-நமது புத்தாண்டுத் தொடக்கம்.
by Dheeran Tue Apr 12, 2022 8:21 am

» மீண்டும் வருக
by Dheeran Fri Oct 02, 2020 11:08 am

» கே இனியவன் ஆன்மீக கவிதைகள்
by கே இனியவன் Thu Nov 09, 2017 7:58 pm

» தீபத்திருநாள் வாழ்த்துக்கள்
by Dheeran Wed Oct 18, 2017 4:01 pm

» பண்டைய இந்தியாவின் விமானத் தொழில் நுட்பம்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:23 pm

» வெற்றி மாபெரும் வெற்றி!
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:16 pm

» பாரதி பாடலில் அராஜக “செக்யுலர்” திருத்தங்கள் - ஜடாயு
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:55 pm

» மோடி, கருப்புப்பண ஒழிப்பு, ஊடகங்கள் - ஜெயமோகன்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:41 pm

» அனைவருக்கும் வணக்கம்.
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:46 am

» நான் ஒரு ஹிந்து என்பதில் ஏன் பெருமிதம் கொள்கிறேன் – பாகம் 1 AGNIVEER
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:42 am

» தேவையா இந்த சமஸ்கிருத துவேஷம்
by Dheeran Sat Jun 25, 2016 12:46 pm

» சிவ வழிபாடு புத்தகம்
by tammy ranga Thu Dec 17, 2015 3:37 am

» ஷ்ரிடி சாய் பாபா புண்ணிய வரலாறு தமிழில்
by tammy ranga Thu Dec 17, 2015 3:35 am

» ஆரிய திராவிட மாயை
by Dheeran Thu Oct 29, 2015 4:10 pm

» தென்புலத்தார் வழிபாடு
by Dheeran Sun Sep 27, 2015 8:50 pm

» தமிழ் ஹிந்துவும் இலவச ஜோதிட கணிப்பு
by ஹரி ஓம் Mon Aug 03, 2015 2:36 am

» வெற்றி வேல்!!!வீரவேல்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
by ஹரி ஓம் Wed Jun 24, 2015 4:09 am

» சிவதாண்டவம் - PB ஸ்ரீனிவாஸ்
by i.mahatheva Thu Jun 18, 2015 5:24 pm

» கால சர்ப்ப தோஷம் என்றால் என்ன?
by jothi sangeetha Thu May 21, 2015 1:43 pm

» மல்லிகைப் பூவை தலையில் சூடுங்கள் - பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்து
by கே இனியவன் Thu May 21, 2015 11:02 am

























Topsites
Tamil 10 top sites [www.tamil10 .com ]
Ranking


எளிய தியானப் பயிற்சிகள்

5 posters

Go down

எளிய தியானப் பயிற்சிகள் Empty எளிய தியானப் பயிற்சிகள்

Post by ஆனந்தபைரவர் Tue Aug 03, 2010 3:03 pm

தியானம் உள்நோக்கிச் செல்லும் ஒரு நெடும்பயணம். விண்வெளிப் பயணம் செல்பவன் காணும் பிரம்மாண்டங்களைக் காட்டிலும் உள்நோக்கிச் செல்லும் இந்தப் பயணத்தில் அதிகமாக நாம் காண முடியும். நம்மில் நாம் அறியாத எத்தனையோ ரகசியங்கள் புதைந்து இருக்கின்றன. கோடிக்கணக்கில் செல்வத்தைப் புதைத்து வைத்து விட்டு அதை மறந்து போய் பிச்சைக்காரர்களாய் வாழ்ந்து கொண்டிருப்பவர்களைப் போலத் தான் நாமும் இருக்கிறோம். அந்தப் புதையலுக்கு நம்மை அழைத்துப் போகும் மார்க்கம் தான் தியானம்.

ஆரம்பத்தில் அந்த தியானம் கைகூடுவது அவ்வளவு சுலபமில்லை. மனம் வெளியே தான் எல்லா சுவாரசியமான விஷயங்களும் இருக்கின்றன என்ற தவறான அபிப்பிராயத்தில் இருக்கிறது. எனவே இந்த உள்நோக்கிய பயணத்தை அதை சுவாரசியமேயில்லாத செயலாக எண்ணி முரண்டு பிடிக்கும் தன்மையைக் கொண்டிருக்கிறது. அதன் அபிப்பிராயங்களை அலட்சியம் செய்து உறுதியாக ஆரம்பித்து அதை விட உறுதியாகத் தொடர்ந்து முயன்றால் ஒழிய இதில் வெற்றி அடைய முடியாது. இதை ஆரம்பத்திலேயே மனதிற்குள் உறுதிப் படுத்திக் கொள்வது முக்கியம்.

முதலில் எளிமையான சில தியானப் பயிற்சிகளை அறிந்து கொள்வோம். மனதைத் தியானத்தில் லயிக்க வைப்பதில் ஓரளவு வெற்றி பெற்ற பின் மற்ற மேலான தியானப் ப்யிற்சிகளுக்குச் செல்லலாம்.

முதல் தியானம் மூச்சின் மீது கவனம் வைக்கும் தியானம். இது கிட்டத்தட்ட ஆல்ஃபா அலைவரிசைக்குச் செல்லச் செய்த பயிற்சியைப் போன்றது தான்.

1) அமைதியாக ஓரு அமைதியான இடத்தில் அமருங்கள். தரையில் சம்மணமிட்டு அமர முடிந்தவர்கள் அப்படி அமரலாம். முடியாதவர்கள் ஒரு நாற்காலியிலும் அமர்ந்து கொள்ளலாம். முடிந்த வரை நேராக நிமிர்ந்து இருங்கள். கண்களை மூடிக் கொள்ளுங்கள். உங்கள் மூச்சின் மீது கவனம் வையுங்கள். உங்கள் மூச்சு இயல்பானதாக இருக்கட்டும்.
2) மூச்சு உங்கள் மூக்கின் வழியாக உள்ளே சென்று வெளி வரும் பயணம் வரை அதன் மீதே உங்கள் கவனத்தை வைத்திருங்கள். மூச்சு முழுமையாகவும் சீராகவும் மாற ஆரம்பிக்கும்.
3) இனி மூச்சை எண்ண ஆரம்பியுங்கள்.
4) மூச்சை உள்ளிழுங்கள். ஒன்று. வெளியே விடுங்கள். இரண்டு. மீண்டும் உள்ளே இழுங்கள். மூன்று. வெளியே விடுங்கள். நான்கு........
5) உங்கள் கவனம் ஆரம்பங்களில் கண்டிப்பாக மூச்சை விட்டு மற்ற விஷயங்களுக்குச் செல்லலாம். அதை உணர்ந்த உடனேயே மீண்டும் மூச்சிற்கே கொண்டு வாருங்கள். எண்ணிக்கையைத் தொடருங்கள்.
6) உங்கள் மூச்சு தானாக ஆழமாகும், அமைதியாகும், வேகம் குறையும். எண்ணிக்கையைத் தொடருங்கள். நூறு ஆகும் வரை எண்ணி விட்டு நிறுத்துங்கள். பின் கண்களைத் திறந்து, நிதானமாக எழுந்து தியானத்தை முடியுங்கள்.
7) இந்த தியானத்தின் போது உடலில் பல்வேறு உணர்வுகளை நீங்கள் உணர்வீர்கள். மூச்சு மூக்கு தொண்டை பகுதிகளில் சென்று வரும் போதும், நுரையீரல், வயிற்றுப் பகுதிகளை நிறைத்து திரும்பும் போதும் இது வரை உணர்ந்திராத சில நுண்ணிய உணர்வுகளை நீங்கள் உணர ஆரம்பிக்கலாம். அதை உணரும் போதும் உங்கள் எண்ணிக்க்கையை நிறுத்தி விடாதீர்கள்.
8) ஆரம்ப காலங்களில் சிலருக்கு தசைப்பிடிப்பு போன்ற அசௌகரியங்கள் ஏற்படலாம். நீங்கள் உட்காரும் நிலையை சற்று மாற்றிக் கொள்வதில் தவறில்லை. ஆனால் மூச்சின் எண்ணிக்கை செய்வது தடைப்படாமல் இருக்கட்டும்.
இன்னொரு எளிய தியானத்தையும் அறிந்து கொள்ளலாம். இது தீப ஒளிச்சுடர் தியானம். இந்த தியானத்தை அரையிருட்டு அறையில் செய்வது நல்லது. உங்கள் கண்பார்வைக்கு நேரான ஓரிடத்தில் இரண்டு அல்லது மூன்று அடிகள் தூரத்தில் மெழுகு வர்த்தி அல்லது விளக்கு பற்ற வைத்துக் கொள்ளுங்கள்.
மேலே சொன்ன தியானத்தின் முதலிரண்டு படிகள் இந்தத் தியானத்திற்கும் பொருந்தும். முறையாக அமர்ந்து, கண்களை மூடி மூச்சை சீராக்கிக் கொள்ளுங்கள். மூன்றாவதாக மூச்சில் முழுக்கவனம் வைப்பதற்குப் பதிலாக, கண்களைத் திறந்து அந்த எரியும் தீபத்தின் ஒளிச்சுடரில் உங்கள் கவனத்தை செலுத்துங்கள். எண்ணங்கள் அந்த தீப ஒளியை விட்டு ஓட ஆரம்பிக்கும் போதெல்லாம் மனதை மென்மையாக திரும்பவும் அந்த தீப ஒளிக்கே கொண்டு வந்து விடுங்கள். மனம் மெழுகுவர்த்தி பற்றியோ, விளக்கு பற்றியோ எண்ணக் கூட விடாதீர்கள். அந்த சுடர் மிகப்பிரகாசமாக எரிகின்றது, மிக மங்கலாக எரிகின்றது என்பது போன்ற எண்ணங்களைக் கூட வளர்த்தாதீர்கள். உடனே அதனுடன் சம்பந்தப்பட்ட மற்ற எண்ணங்கள் நம் மனதை ஆக்கிரமிக்க ஆரம்பித்து விடக்கூடும். தீப ஒளியில் மனம் லயிக்கப் பாருங்கள். மனம் அதை விட்டுச் செல்லும் போதெல்லாம் சலிக்காமல் அந்த தீபச்சுடருக்கே திரும்பக் கொண்டு வாருங்கள். நீங்கள் உறுதியாக இருக்கிறீர்கள் என்று அறிந்த பின் உங்கள் மனம் சிறிது சிறிதாக அலைவதை நிறுத்தி வசப்படும். தியான நிலை கைகூடும். சுமார் 20 முதல் 30 நிமிடங்கள் இந்த தியானத்தைச் செய்து முடியுங்கள்.
இந்த இரண்டு தியானங்களையும் முடித்த பின்னரும் தடாலென்று எழுவது, உடனே பரபரப்பான சூழ்நிலைக்கு மாறுவது கூடாது. சற்று நிதானமாக தியான நிலையில் இருந்து இயல்பான நிலைக்குத் திரும்புங்கள்.அப்போது தான் அந்த தியானத்தால் பெற்ற அமைதியின் ஒரு பகுதியை மனதின் ஆழத்தில் நீண்ட நேரம் தக்க வைத்துக் கொள்ள முடியும்.
தினமும் இரு முறை தியானம் செய்ய முடிந்தவர்கள் காலை ஒரு தியானமும், மாலை ஒரு தியானமும் செய்யலாம். அப்படி இரண்டு முறை செய்ய முடியாதவர்கள் இந்த இரண்டு தியானங்களில் ஒன்றையாவது தினமும் செய்யுங்கள்.


-என் கணேசன்
http://enganeshan.blogspot.com
ஆனந்தபைரவர்
ஆனந்தபைரவர்

Posts : 1375
Join date : 27/07/2010
Age : 38
Location : இந்திய திருநாடு

Back to top Go down

எளிய தியானப் பயிற்சிகள் Empty Re: எளிய தியானப் பயிற்சிகள்

Post by ஹரி ஓம் Tue Aug 03, 2010 3:45 pm

அருமையான விளக்கம்... நன்றி
ஹரி ஓம்
ஹரி ஓம்
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

Posts : 922
Join date : 03/08/2010
Age : 38
Location : கன்னியாகுமரி

Back to top Go down

எளிய தியானப் பயிற்சிகள் Empty Re: எளிய தியானப் பயிற்சிகள்

Post by nirshan2007 Tue Aug 03, 2010 4:02 pm

அருமையான பயிற்சி முறைகள் .... மிக்க நன்றி அட்மின் ...
இதில் மூச்சு உள்ளிழுத்து வெளியே விடும் போது ஒன்று என்ற எண்ணிக்கை ஆகும் அல்லவா???
இல்லை உள்ளிளுப்பது ஒரு எண்ணிக்கை வெளியே விடுவது ஒரு எண்ணிக்கையா ???

அறியாத இந்த சிறுவனுக்கு விளக்குங்கள் தலைவா ....
மிக்க நன்றி
nirshan2007
nirshan2007

Posts : 7
Join date : 03/08/2010
Location : நிலா

Back to top Go down

எளிய தியானப் பயிற்சிகள் Empty Re: எளிய தியானப் பயிற்சிகள்

Post by ஆனந்தபைரவர் Tue Aug 03, 2010 4:05 pm

nirshan2007 wrote:அருமையான பயிற்சி முறைகள் .... மிக்க நன்றி அட்மின் ...
இதில் மூச்சு உள்ளிழுத்து வெளியே விடும் போது ஒன்று என்ற எண்ணிக்கை ஆகும் அல்லவா???
இல்லை உள்ளிளுப்பது ஒரு எண்ணிக்கை வெளியே விடுவது ஒரு எண்ணிக்கையா ???

அறியாத இந்த சிறுவனுக்கு விளக்குங்கள் தலைவா ....
மிக்க நன்றி

இழுப்பது மட்டும்தான் அண்ணா மூச்சின் மீது மட்டும் கவனம் வையுங்கள் எண்ணிக்கையில் வேண்டாம் எழா இல்லை எட்டா என குழப்பத்தில் தியானம் செய்யும் ஆர்வம் குறையும்
ஆனந்தபைரவர்
ஆனந்தபைரவர்

Posts : 1375
Join date : 27/07/2010
Age : 38
Location : இந்திய திருநாடு

Back to top Go down

எளிய தியானப் பயிற்சிகள் Empty Re: எளிய தியானப் பயிற்சிகள்

Post by nirshan2007 Tue Aug 03, 2010 4:10 pm

Admin wrote:
nirshan2007 wrote:அருமையான பயிற்சி முறைகள் .... மிக்க நன்றி அட்மின் ...
இதில் மூச்சு உள்ளிழுத்து வெளியே விடும் போது ஒன்று என்ற எண்ணிக்கை ஆகும் அல்லவா???
இல்லை உள்ளிளுப்பது ஒரு எண்ணிக்கை வெளியே விடுவது ஒரு எண்ணிக்கையா ???

அறியாத இந்த சிறுவனுக்கு விளக்குங்கள் தலைவா ....
மிக்க நன்றி

இழுப்பது மட்டும்தான் அண்ணா மூச்சின் மீது மட்டும் கவனம் வையுங்கள் எண்ணிக்கையில் வேண்டாம் எழா இல்லை எட்டா என குழப்பத்தில் தியானம் செய்யும் ஆர்வம் குறையும்

மிக்க நன்றி தலைவா ... கண்டிப்பாக முயற்சிக்கிறேன் ....
நானும் ரொம்ப நாளா தியானம் செய்ய வேண்டும் என்று நினைப்பதுண்டு ...
ஆனால் அதற்குரிய வழிமுறைகள் தெரியாமல் முழித்து கொண்டு இருக்கிறேன் ...
மிக்க நன்றி
nirshan2007
nirshan2007

Posts : 7
Join date : 03/08/2010
Location : நிலா

Back to top Go down

எளிய தியானப் பயிற்சிகள் Empty Re: எளிய தியானப் பயிற்சிகள்

Post by மஞ்சுபாஷிணி Tue Aug 03, 2010 4:15 pm

தியானம் எவ்வயதிலும் செய்யலாம்.... மனக்கட்டுப்பாடும் மனதை பண்படுத்தும் முயற்சியும் தியானம் செய்வதில் கண்டிப்பாக முழு வெற்றி கிடைக்கும் என்பதற்கான அருமையான பகிர்வு.....

தியானம் செய்வது என்பது கடமையாக நினைக்காமல் நம் உடலை தினமும் தூய்மைப்படுத்துவதால் ஏற்ப்படும் புத்துணர்ச்சி மனதுக்கும் ஏற்ப்படவேண்டாமா அதனால் தியானம் மிக மிக அவசியம் என்பதை உணர்த்திய அருமையான பகிர்வுக்கு அன்பு நன்றிகள்...

மஞ்சுபாஷிணி

Posts : 5
Join date : 03/08/2010

Back to top Go down

எளிய தியானப் பயிற்சிகள் Empty Re: எளிய தியானப் பயிற்சிகள்

Post by nirshan2007 Tue Aug 03, 2010 4:21 pm

மஞ்சுபாஷிணி wrote:தியானம் எவ்வயதிலும் செய்யலாம்.... மனக்கட்டுப்பாடும் மனதை பண்படுத்தும் முயற்சியும் தியானம் செய்வதில் கண்டிப்பாக முழு வெற்றி கிடைக்கும் என்பதற்கான அருமையான பகிர்வு.....

தியானம் செய்வது என்பது கடமையாக நினைக்காமல் நம் உடலை தினமும் தூய்மைப்படுத்துவதால் ஏற்ப்படும் புத்துணர்ச்சி மனதுக்கும் ஏற்ப்படவேண்டாமா அதனால் தியானம் மிக மிக அவசியம் என்பதை உணர்த்திய அருமையான பகிர்வுக்கு அன்பு நன்றிகள்...

மிக்க நன்றி மஞ்சுக்கா .....
nirshan2007
nirshan2007

Posts : 7
Join date : 03/08/2010
Location : நிலா

Back to top Go down

எளிய தியானப் பயிற்சிகள் Empty Re: எளிய தியானப் பயிற்சிகள்

Post by ராகவா Sun Aug 17, 2014 9:28 pm

மிகவும் நன்றி...
ராகவா
ராகவா

Posts : 1164
Join date : 11/09/2013
Age : 43
Location : தஞ்சை மாவட்டம்

http://tamilhindu.forumta.net/

Back to top Go down

எளிய தியானப் பயிற்சிகள் Empty Re: எளிய தியானப் பயிற்சிகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum