இந்து சமயம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சித்திரை-நமது புத்தாண்டுத் தொடக்கம்.
by Dheeran Tue Apr 12, 2022 8:21 am

» மீண்டும் வருக
by Dheeran Fri Oct 02, 2020 11:08 am

» கே இனியவன் ஆன்மீக கவிதைகள்
by கே இனியவன் Thu Nov 09, 2017 7:58 pm

» தீபத்திருநாள் வாழ்த்துக்கள்
by Dheeran Wed Oct 18, 2017 4:01 pm

» பண்டைய இந்தியாவின் விமானத் தொழில் நுட்பம்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:23 pm

» வெற்றி மாபெரும் வெற்றி!
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:16 pm

» பாரதி பாடலில் அராஜக “செக்யுலர்” திருத்தங்கள் - ஜடாயு
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:55 pm

» மோடி, கருப்புப்பண ஒழிப்பு, ஊடகங்கள் - ஜெயமோகன்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:41 pm

» அனைவருக்கும் வணக்கம்.
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:46 am

» நான் ஒரு ஹிந்து என்பதில் ஏன் பெருமிதம் கொள்கிறேன் – பாகம் 1 AGNIVEER
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:42 am

» தேவையா இந்த சமஸ்கிருத துவேஷம்
by Dheeran Sat Jun 25, 2016 12:46 pm

» சிவ வழிபாடு புத்தகம்
by tammy ranga Thu Dec 17, 2015 3:37 am

» ஷ்ரிடி சாய் பாபா புண்ணிய வரலாறு தமிழில்
by tammy ranga Thu Dec 17, 2015 3:35 am

» ஆரிய திராவிட மாயை
by Dheeran Thu Oct 29, 2015 4:10 pm

» தென்புலத்தார் வழிபாடு
by Dheeran Sun Sep 27, 2015 8:50 pm

» தமிழ் ஹிந்துவும் இலவச ஜோதிட கணிப்பு
by ஹரி ஓம் Mon Aug 03, 2015 2:36 am

» வெற்றி வேல்!!!வீரவேல்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
by ஹரி ஓம் Wed Jun 24, 2015 4:09 am

» சிவதாண்டவம் - PB ஸ்ரீனிவாஸ்
by i.mahatheva Thu Jun 18, 2015 5:24 pm

» கால சர்ப்ப தோஷம் என்றால் என்ன?
by jothi sangeetha Thu May 21, 2015 1:43 pm

» மல்லிகைப் பூவை தலையில் சூடுங்கள் - பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்து
by கே இனியவன் Thu May 21, 2015 11:02 am

Topsites
Tamil 10 top sites [www.tamil10 .com ]
Ranking


ராகவேந்த்ரா அற்புதம் -திருப்பூர் கிருஷ்ணன்

+2
ராகவன்
ஆனந்தபைரவர்
6 posters

Go down

ராகவேந்த்ரா அற்புதம் -திருப்பூர் கிருஷ்ணன்  Empty ராகவேந்த்ரா அற்புதம் -திருப்பூர் கிருஷ்ணன்

Post by ஆனந்தபைரவர் Mon Nov 07, 2011 4:43 pm

திருப்பூர் கிருஷ்ணன்
ராகவேந்த்ரா அற்புதம் -திருப்பூர் கிருஷ்ணன்  100300103.5HQwFSJw.P1010098

சரணடைந்தவர்களைக் காப்பாற்றுவது மட்டுமா சித்தர்களின் குணம்? தன்மேல் அவ நம்பிக்கை கொண்டு தன்னை யாரும் சோதித் தால், அவர்கள் சோதனையை நகைத்தவாறே எதிர்கொண்டு, அதன் மூலமே அவர்களுக்குத் தன்மேல் நம்பிக்கை வருமாறு செய்வதும்கூட சித்தர்களின் குணம்தானே? அப்படியொரு சம்பவம் சித்த புருஷரான ராகவேந்திரர் வாழ்வில் நிகழ்ந்திருக்கிறது.

எழுத்தறிவற்ற வெங்கண்ணாவுக்கு ஒரே கணத்தில் சரஸ்வதி கடாட்சம் கிட்டுமாறு செய்தார் ஸ்ரீராகவேந்திரர். நவாப் கொடுத்த ஓலையை விறுவிறுவென்று படித்த வெங்கண்ணா, நவாபின் அன்புக்கு ஆளாகி அவரால் திவானாகவும் ஆனான். ஆனால் ஒருமுறை தெள்ளத் தெளிவாக நவாபிடம் நடந்த உண்மையைச் சொல்லிலிவிட்டான்.

""எனக்கு சத்தியமாக எழுதப் படிக்கத் தெரியாது. நான் பள்ளிக்கூடத்திற்குச் சென்றதே இல்லை. ஆனால் நீங்கள் தந்த ஓலையை ராகவேந்திரரைப் பிரார்த்தித்துப் பிரித்தேன். அன்றிலிலிருந்து எனக்கு எழுதப் படிக்கத் தெரிந்து விட்டது. இதுதான் நடந்தது. நீங்கள் இந்த உண்மையை அறியவேண்டும் என்பதற் காக இதைச் சொன்னேன்!''

நவாபின் வியப்பு எல்லை கடந்தது. இது உண்மையாக இருக்குமா? வெங்கண்ணா பொய் பேசக்கூடியவனாகத் தெரியவில்லையே? விசாரித்ததில் இதை உண்மை என்றுதானே மற்ற எல்லாரும்கூடச் சொல்கிறார்கள்?

ராகவேந்திரரின் மகிமையைச் சோதித்துப் பார்த்துவிட வேண்டும். இந்த எண்ணத்துடன் அவர் தங்கியிருக்கும் இடத்தை விசாரித்தறிந்து அவரைத் தேடிச் சென்றான் நவாப்.

படை பரிவாரங்களுடன் தன்னைத் தேடிவந்த நவாபை அன்போடு வரவேற்றார் ஸ்ரீராகவேந்திரர். அவரை நேரில் தரிசித்த நவாபிற்கு அவரின் கருணை பொழியும் தவப்பொலிலிவு நிறைந்த முகம் பரவசம் தந்தது.

என்றாலும் ஒரு மனிதரால் இன்னொரு மனிதருக்குத் திடீரென்று எழுத்தறிவைத் தர முடியுமா? இப்போது நாம் செய்யும் சோதனை யில் இவர் தேறினால் அப்போது அதையும் நடந்ததாக ஒப்புக்கொள்வோம். இவ்வாறு சிந்தித்தது நவாபின் மனம்.

ராகவேந்திரர் அவனது உள்மன ஓட்டங் களை முழுமையாக ஊகித்துவிட்டார். மனிதர் களின் மனத்தை உள்ளது உள்ளவாறு படிப்ப தில் கைதேர்ந்த மெய்ஞ்ஞானி அல்லவா அவர்!

""எனக்கு சமர்ப்பிப்பதற்காகத் தட்டில் ஏதோ கொண்டு வந்திருக்கிறாயே அப்பா! அதைக் கொண்டு வா!'' என்று நகைத்தவாறே கேட்டார்.

நவாப் தான் கொண்டுவந்திருந்த வெள்ளித் தட்டை தன் அருகே இருந்த உதவியாளரிட மிருந்து வாங்கினான். அது பட்டுத் துணியால் முழுமையாக மூடப்பட்டிருந்தது. அதனுள் இருந்தது ஆட்டு மாமிசம்! ஒரு தூய இந்துத் துறவிக்கு ஆட்டு மாமிசத்தை சமர்ப்பிக்க எடுத்து வந்திருந்தான் நவாப்!

ராகவேந்திரர் ஏதொன்றும் சொல்லவில்லை. அந்தத் தட்டை கையில் வாங்கிக் கொண்டார். அதை மூடியிருந்த பட்டுத் துணியின்மேல் தன் கமண்டலத்தில் இருந்த மந்திர நன்னீரை எடுத்துத் தெளித்தார்.

""நீயே இந்தத் துணியைத் திற அப்பா!'' என் றார் நவாபிடம். நவாப் தயங்கியவாறே தட்டின் மேலே மூடியிருந்த பட்டுத் துணியை மெல்ல விலக்கினான்.

அடுத்த கணம் அவன் கண்களை அவனா லேயே நம்ப முடியவில்லை. தட்டில் ஆட்டு மாமிசம் இருந்த இடத்தில் மாமிசத்தைக் காணவில்லை. அதற்குப் பதிலாக தட்டு நிறைய பலவண்ண ரோஜா மலர்களும் பல்வேறு பழ வகைகளும் இருந்தன!

எப்படி இந்த விந்தை நிகழ்ந்தது! ஆகா! மாமிசத்தை மலர்களாக மாற்றக் கூடிய இவர் உண்மையிலேயே ஒரு மகான்தான். இவரை சந்தேகித்தோமே! கண்ணீர் வழிய அவரது திருப் பாதங் களில் விழுந்து நமஸ்கரித்தான் நவாப்.

அவன் மனம் நடுங்கியது. எத்தகைய அபசாரம் செய்துவிட் டோம்! உண்மையிலேயே மகானான ஒருவருக்கு நாம் மாமிசத்தை சமர்ப்பிக்கக் கொண்டுவந்தோமே? அவர் தன்னை மன்னிப்பாரா? அவன் இதயம் கலங்கியது.

நமஸ்கரித்து எழுந்த நவாப் ஸ்ரீராகவேந்திரரிடம், ""என்னிட மிருந்து எதையாவது கேட்டுப் பெறுங்கள். அதைப் பெற்றுக் கொண்டதன் மூலம் என்னை மன்னித்ததாய் உணர்த்துங்கள். இந்த அருளை என்மேல் கட்டா யம் காட்ட வேண்டும் நீங்கள்!'' என்று உருகிக் கரைந்தான்.

அந்த முஸ்லிம் மன்னனின் விழிநீர் ராகவேந்திரர் உள்ளத் தைக் குளிர்வித்தது. அவர், ""துங்கபத்ரா நதிக்கரையில் உள்ள மாஞ்சாலி என்ற கிராமம் எனக்கு வேண்டும்'' என்று கேட்டார்.

நவாப் திகைத்தான். அது வளமான கிராமம் அல்ல. மேலும் ஏற்கெ னவே ஹாஜி ஒருவருக்கு அந்த கிராமத்தை வழங் கலாம் என்ற எண்ணமும் நவாபுக்கு இருந்தது. ""வேறு நல்ல செழிப்பான கிராமமாக கேட்டுப் பெறலாமே? இந்த வறண்ட பூமி எதற்கு?'' என்று அன்போடு வினவினான் நவாப்.

நவாப் சொல்வது உண்மைதான் என்பதை ராகவேந்திரரும் அறிவார். மாஞ்சாலிலி கிராமத்தில் அப்போது முட்செடிகள்தான் மண்டிக் கிடந்தன. பூமிக்கு மேலே உள்ள நிலைமை அது. ஆனால் பூமிக்கு உள்ளே அபரிமிதமான ஆன்மிக சக்தி ஓடிக் கொண்டிருக்கிறது என்பதை அவர்தானே அறிவார்!

""அந்த வறண்ட பூமியைத் தந்தால் போது மானது. அதைத் தவிர வேறு எதுவும் எனக்குத் தேவையில்லை!'' என்று தீர்மானமாக அறிவித்தார் ஸ்ரீராகவேந்தி ரர். இம்மட்டில் தன்னை மன்னித்ததற்கு அடையாள மாக அவர் தன்னிடமிருந்து ஏதோ ஒன்றைப் பெற்றுக் கொள்கிறாரே, அதுவே போதும் என்று மகிழ்ந்தான் நவாப். அவர் சித்தப்படியே செய்வதாகச் சொல்லிலி மாஞ் சாலிலி கிராமத்தை அவருக்கு சாசனம் எழுதித் தந்தான்.

ராகவேந்திரரின் பாதம் பட்ட தினத்திலிலிருந்து மாஞ்சாலி கிராமம் பூஞ்சோலை ஆயிற்று. துங்கபத்ரை துள்ளிக் குதித்துவந்து அந் தக் கிராமத்தை வளப்படுத்தி னாள். வறண்ட பூமியில் தானாய் மழைபெய்து செழுமை பெருகியது. மான்களும் மயில்களும் அந்த இடம் தேடிக் குடிவரத் தொடங்கின.

அந்த கிராமத்தில் தனது இஷ்ட தெய்வமான வெங்கடாசலபதிக்கு ஓர் ஆலயத்தையும் நிர்மாணித்தார் ராகவேந்திரர். அவரால் நிர்மாணிக்கப்பட்டதால் அந்த ஆலயம் மிகுந்த சக்தி உடையதாயிற்று. ஸ்ரீராகவேந்திர ரைத் தரிசிக்கவும் வெங்கடாசலபதியை வழிபடவும் மக்கள் கூட்டம் கூட்டமாய் மாஞ்சாலி கிராமத் திற்கு வரத் தொடங்கினர்.

காலம் வேகமாக ஓடியது. சித்தர்கள் என்றும் வாழ்பவர்கள் அல்லவா? தான் என்றும் வாழ்பவர் என்பதை மக்கள் அறியுமாறு செய்ய எண்ணினார் ராகவேந்திரர். எனவே ஜீவசமாதி அடைவது என்று முடிவு செய்தார். (ஜீவசமாதி என்பது, உயிரோடிருக்கும்போதே தன்னை மண்ணுக்குள் வைத்து சமாதி கட்டச் சொல்லிலி விடுவது.)

அதன்பொருட்டுத் தன் அடியவனான வெங்கண்ணாவை அழைத்தார். எழுதப் படிக்கத் தெரியாத தனக்கு எழுத்தறிவினை ஒரு கணத்தில் அருளிய தன் தெய்வமான ராக வேந்திரர் என்ன கட்டளை இடப்போகிறார் என்று வெங்கண்ணா அவர் திருவாயையே பார்த்தவாறு காத்திருந்தான். ஆனால் அவர் இட்ட கட்டளை கடுமையானது.

அவர், தான் ஜீவசமாதியில் புக வசதியாக ஒரு குழி தோண்டுமாறு பணித்தார். தனக்கு விருப்பமே இல்லாத அந்தப் பணியில் குருவின் கட்டளை என்பதால் வேறு வழியின்றி ஈடுபட்டான் வெங்கண்ணா. அவன் கண்களில் நிற்காமல் அருவிபோல் வழிந்த கண்ணீர் ராகவேந்திரர் மனத்தை உருக்கியது.

""கவலை வேண்டாம் வெங்கண்ணா. நான் என்றும் நிலையாக வாழ் வேன். இந்த பிருந்தாவனத் திற்குள் நிரந்தரமாகக் குடி இருப்பேன். அதன் பொருட்டே பிருந்தாவனம் புகுகிறேன். நீ வேண்டும் போதெல்லாம் நான் உன் முன் காட்சி தருவேன்! பிருந்தாவனத்தை விரைவில் தயார் செய்!'' என்று ஆணை யிட்டார் . கண்ணீரைத் துடைத்தவாறே அவர் ஆணைக்கு அடிபணிந்தான் வெங்கண்ணா.
ஸ்ரீராகவேந்திரர் ஜீவசமாதியில் பிரவேசம் செய்யவிருக்கிறார் என்ற செய்தி விறுவிறுவென எங்கும் பரவியது. மக்கள் வெள்ளம் மாஞ்சாலிலி கிராமத்தில் ஆயிரக்கணக்கில் அலைமோதியது. அந்த அதிசயக் காட்சியைக் காண நாட்டின் எல்லா மூலைகளிலிலிருந்தும் பக்தர்கள் ஆவலாய் வந்து குவிந்தார்கள்.

ஜீவசமாதி அடையும் எண்ணத்தில் மலர்ந்த முகத்துடன் பிருந்தாவனத்திற்குள் இறங்கி எழுந்தருளினார் ராகவேந்திரர். பத்மாசனமிட்டு அமர்ந்தார். அவர் வலக்கரத்தில் துளசி மணிமாலை தொங்கியவாறு இருந்தது. அந்த மாலை எப்போது கீழே விழுகிறதோ அப்போது தன்மேல் மண்ணிட்டுத் தான் அமர்ந்துள்ள குழியை மூட வேண்டும் என்பது ராகவேந்திரரின் அறிவிப்பு.

அந்த மாலை விழாமலே இருக்கக் கூடாதா என்று மக்கள் பிரார்த்தித்துக் கொண்டிருந் தார்கள். ஆனால் ஒரு குறிப்பிட்ட தருணத்தில் அந்த மாலை கையைவிட்டுக் கீழே விழுந்தது. "ஸ்ரீராகவேந்திர சுவாமிக்கு ஜே' என்ற முழக்கம் எங்கும் எதிரொலிலித்தது. கண்ணீர் வழிய வழிய வெங்கண்ணா மண்ணைக் கொண்டு அந்த பிருந்தாவனக் குழியை மூடலானான். தலைக்கு மேல் 1,200 சாலிலிகிராமங்கள் வைத்து, அதற்கு மேல் ஒரு பலகை வைத்து மூடி பிருந்தாவனம் முழுமையாக நிர்மாணிக்கப்பட்டது.

சுவாமிகளின் முக்கியமான சீடர்களில் ஒருவர் அப்பண்ணாச்சாரி. அவர் அப்போது அங்கில்லை. தொலை தூரத்திலிலிருந்தார். செய்தி கேள்விப்பட்டு ஓடோடி வந்தார்.

வழியில் மாஞ்சாலிலி கிராமத்தை அடைய முடியாதவாறு துங்கபத்ரை நதி வெள்ளப் பெருக்கெடுத்து ஓடிக் கொண்டி ருந்தது. கண்ணீர் வெள்ளத்துடன் ராகவேந்திரரையே தியானித்தவாறு தண்ணீர்மேல் நடக்கலானார் அப்பண்ணா. என்ன ஆச்சரியம்! உண்மையிலேயே தரையில் நடப்பதுபோல் தண்ணீர்மேல் நடந்து கடந்துவிட்டார் அவர்.

ஆதிசங்கரரின் சீடரான பத்மபாதரை சங்கரர் "வா' என்று அழைத்தபோது நதியின் அக்கரையில் இருந்த அவர் நதிமேல் நடந்து நதியைக் கடந்தாரே? அதுபோலான ஓர் அற் புதம் அப்போதும் நிகழ்ந்தது. சம்சார சாகரத்தையே தாண்ட குருநாதரின் நாமம் துணை செய்கிறபோது இந்த துங்கபத்ரை வெள்ளத்தைக் கடப்பதா பிரமாதம்?

ஆனால் அப்பண்ணாச்சாரி போய்ச் சேர்வதற்குள் அங்கே பிருந்தா வனம் முழுமையாகிவிட்டது. அனைத்தும் முடிந்து மேலே பூச்சு வேலையும் நிகழ்ந்தாயிற்று. அப்பண்ணா, ""சுவாமி! என் மேல் கருணை இல்லையா? நான் வருவதற்குள் ஏன் சமாதியில் ஆழ்ந்தீர்கள்?'' என்று கேட்டுக் கதறிய கதறல் அந்தப் பிராந்தியமெங்கும் எதிரொலிலித்தது.

அப்போது திடீரென பிருந்தாவனத்தின் உள்ளிருந்து ராகவேந்திரரின் குரல் கணீரென்று ஒலிலித்தது.

""ஏன் அழுகிறாய் அப்பண்ணா? நான் இந்த பிருந்தானவத்திற்குள் நிரந்தரமாக இருக்கப் போகிறேன் அப்பா. எப்போது உனக்கு எந்தச் சங்கடம் வந்தாலும் என்னை அழை. நான் தோன்றி அந்தச் சங்கடங்களைத் தீர்த்து வைப்பேன். அழாதே. கண்ணைத் துடைத்துக் கொள்!'' என்றது அந்தக் குரல். அப்பண்ணா மிகுந்த மனமகிழ்ச்சியுடனும் நிறைவுடனும் அந்த பிருந்தாவனத்தை விழுந்து நமஸ்கரித் தான்.

தாமஸ் மன்றோவுக்கு அந்தச் சமாதியிலிலிருந்து வெண்ணிலவுபோல் மேலெழுந்து காட்சி தந்தவர்தானே அவர்? என்றும் வாழும் சித்தர் கள் வரிசையில் ஸ்ரீராகவேந்திரர் இவ்விதம் இணைந்தார். இன்றும் மந்திராலயத்தில் தன்னை நாடிவரும் அன்பர்களுக்கு அவர் தொடர்ந்து அருள்பாலிலித்து வருகிறார்.

நன்றி நக்கீரன் ஓம் மாத இதழ்
ஆனந்தபைரவர்
ஆனந்தபைரவர்

Posts : 1375
Join date : 27/07/2010
Age : 36
Location : இந்திய திருநாடு

Back to top Go down

ராகவேந்த்ரா அற்புதம் -திருப்பூர் கிருஷ்ணன்  Empty Re: ராகவேந்த்ரா அற்புதம் -திருப்பூர் கிருஷ்ணன்

Post by ராகவன் Mon Nov 07, 2011 9:36 pm

ராகவேந்திரர் குறித்த கட்டுரைக்கு நன்றி அட்மின். எல்லாம் வல்லவராகிய ராயரின் அருள் உங்களுக்குக் கிட்டட்டும்.
ராகவன்
ராகவன்
வழிநடத்துனர்

Posts : 895
Join date : 27/07/2010
Location : தமிழகம்

http://www.tamilhindu.net/

Back to top Go down

ராகவேந்த்ரா அற்புதம் -திருப்பூர் கிருஷ்ணன்  Empty Re: ராகவேந்த்ரா அற்புதம் -திருப்பூர் கிருஷ்ணன்

Post by உமா Tue Nov 08, 2011 6:42 pm

நன்றி அட்மின் அவர்களே.
உமா
உமா

Posts : 51
Join date : 20/08/2011

Back to top Go down

ராகவேந்த்ரா அற்புதம் -திருப்பூர் கிருஷ்ணன்  Empty Re: ராகவேந்த்ரா அற்புதம் -திருப்பூர் கிருஷ்ணன்

Post by ஹரி ஓம் Thu Nov 10, 2011 4:12 pm

நன்றி பகிர்வுக்கு

_________________
.... எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது ....

.... எது நடக்கிறதோ அது நன்றாகவே நடக்கிறது ....

.... எது நடக்க இருக்கிறதோ அதுவும் நன்றாகவே நடக்கும் ....

.... உன்னுடையதை எதை இழந்தாய்? ....

.... எதற்காக நீ அழுகிறாய்? ....

.... எதை நீ கொண்டு வந்தாய் அதை நீ இழப்பதற்கு? ....

.... எதை நீ படைத்திருந்தாய் அது வீணாவதற்கு? ....

.... எதை நீ எடுத்து கொண்டாயோ அது இங்கிருந்தே எடுக்கப்பட்டது ....

.... எதை கொடுத்தாயோ அது இங்கேயே கொடுக்கப்பட்டது ....

.... எது இன்று உன்னுடையதோ அது நாளை மற்றொருவருடையதாகிறது ....
ஹரி ஓம்
ஹரி ஓம்
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

Posts : 922
Join date : 03/08/2010
Age : 36
Location : கன்னியாகுமரி

Back to top Go down

ராகவேந்த்ரா அற்புதம் -திருப்பூர் கிருஷ்ணன்  Empty Re: ராகவேந்த்ரா அற்புதம் -திருப்பூர் கிருஷ்ணன்

Post by Arun Iyer Fri Nov 11, 2011 2:02 pm

நன்றி அற்புதம்
Arun Iyer
Arun Iyer

Posts : 24
Join date : 10/11/2011
Age : 37
Location : Chennai

Back to top Go down

ராகவேந்த்ரா அற்புதம் -திருப்பூர் கிருஷ்ணன்  Empty Re: ராகவேந்த்ரா அற்புதம் -திருப்பூர் கிருஷ்ணன்

Post by ந.கார்த்தி Fri Feb 17, 2012 6:34 pm

பகிர்வுக்கு நன்றி
ந.கார்த்தி
ந.கார்த்தி

Posts : 269
Join date : 15/08/2011
Age : 27
Location : sholingar

http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

ராகவேந்த்ரா அற்புதம் -திருப்பூர் கிருஷ்ணன்  Empty Re: ராகவேந்த்ரா அற்புதம் -திருப்பூர் கிருஷ்ணன்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum