Latest topics
» சித்திரை-நமது புத்தாண்டுத் தொடக்கம். by Dheeran Tue Apr 12, 2022 8:21 am
» மீண்டும் வருக
by Dheeran Fri Oct 02, 2020 11:08 am
» கே இனியவன் ஆன்மீக கவிதைகள்
by கே இனியவன் Thu Nov 09, 2017 7:58 pm
» தீபத்திருநாள் வாழ்த்துக்கள்
by Dheeran Wed Oct 18, 2017 4:01 pm
» பண்டைய இந்தியாவின் விமானத் தொழில் நுட்பம்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:23 pm
» வெற்றி மாபெரும் வெற்றி!
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:16 pm
» பாரதி பாடலில் அராஜக “செக்யுலர்” திருத்தங்கள் - ஜடாயு
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:55 pm
» மோடி, கருப்புப்பண ஒழிப்பு, ஊடகங்கள் - ஜெயமோகன்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:41 pm
» அனைவருக்கும் வணக்கம்.
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:46 am
» நான் ஒரு ஹிந்து என்பதில் ஏன் பெருமிதம் கொள்கிறேன் – பாகம் 1 AGNIVEER
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:42 am
» தேவையா இந்த சமஸ்கிருத துவேஷம்
by Dheeran Sat Jun 25, 2016 12:46 pm
» சிவ வழிபாடு புத்தகம்
by tammy ranga Thu Dec 17, 2015 3:37 am
» ஷ்ரிடி சாய் பாபா புண்ணிய வரலாறு தமிழில்
by tammy ranga Thu Dec 17, 2015 3:35 am
» ஆரிய திராவிட மாயை
by Dheeran Thu Oct 29, 2015 4:10 pm
» தென்புலத்தார் வழிபாடு
by Dheeran Sun Sep 27, 2015 8:50 pm
» தமிழ் ஹிந்துவும் இலவச ஜோதிட கணிப்பு
by ஹரி ஓம் Mon Aug 03, 2015 2:36 am
» வெற்றி வேல்!!!வீரவேல்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
by ஹரி ஓம் Wed Jun 24, 2015 4:09 am
» சிவதாண்டவம் - PB ஸ்ரீனிவாஸ்
by i.mahatheva Thu Jun 18, 2015 5:24 pm
» கால சர்ப்ப தோஷம் என்றால் என்ன?
by jothi sangeetha Thu May 21, 2015 1:43 pm
» மல்லிகைப் பூவை தலையில் சூடுங்கள் - பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்து
by கே இனியவன் Thu May 21, 2015 11:02 am
கோகுலத்தில் கிருஷ்ணன் லீலைகள்
இந்து சமயம் :: செய்திகள் :: கட்டுரைகள்
Page 1 of 1
கோகுலத்தில் கிருஷ்ணன் லீலைகள்
கோகுலத்தில் தவழ்ந்த பாலகிருஷ்ணனின் விளையாட்டுகளில் மனதைப் பறி கொடுக்காத பக்தர்களே இல்லை எனலாம். கிருஷ்ண லீலைகள் அத்தனை இனிமையானவை! கிருஷ்ணானுபவத்திலே மூழ்கித் திளைத்த மகான்கள், அந்த மாயக்கண்ணனை நினைத்து, நினைத்து நெஞ்சுருகி, அவன் செய்த குறும்புகள் யாவையும் மனக்கண்ணில் நிலை நிறுத்தி, தாங்கள் பெற்ற அந்த இன்ப அனுபவங்களையெல்லாம் மிகச் சிறந்த பாடல்களாக, உயர் தோத்திரங்களாக, கவிதா ரத்தினங்களாக படைத்துத் தந்திருக்கிறார்கள்.
அத்தகைய மகான்களில், கேரளத்தைச் சேர்ந்த லீலா சுகரும் ஒருவர். 328 சுலோகங்கள் அடங்கிய "கிருஷ்ண கர்ணாம்ருதம்' என்ற நூல் அவரால் இயற்றப்பட்டது. "கர்ணாம்ருதம்' என்றால் "செவிக்கு அமுதம் போன்று இனியது' என்று பொருள். அந்த நூலிலிருந்து ஒரு சில துளிகள் இங்கே....!
ஒரு சமயம், குழந்தை கிருஷ்ணன் அன்னை யசோதையின் மடியில் படுத்திருந்தான். "அம்மா! பசிக்கிறது. குடிக்கப் பால் கொடு' என்றான். "இப்போது ஏதும் இல்லையடா' என்கிறாள் தாய். "எப்பொழுது இருக்கும்?' எனக் கேட்கிறது குழந்தை. "ராத்திரியில் இருக்கும்' என்கிறாள் யசோதை. "ராத்திரி என்றாள் என்ன?' என்று ஒன்றும் அறியாதவன் போல வினவுகிறான் மாயக்கண்ணன். "ராத்திரி என்றால் இருட்டாக இருக்கும்' எனப் பதில் தருகிறாள் யசோதை. உடனே கண்கள் இரண்டையும் இறுக மூடிக்கொண்ட குழந்தை, "ராத்திரி வந்துவிட்டது... கொடு' என்று அம்மாவின் புடவைத் தலைப்பை இழுத்து அடம் பிடித்ததாம். நான்கே வரிகள் அடங்கிய சமஸ்கிருத சுலோகத்தின் மூலம் இந்த நாடகம் முழுவதையும் படம் பிடித்துக் காட்டுகிறார் லீலாசுகர்.
கிருஷ்ணன் மண் தின்ற கதையை மற்றொரு சுலோகத்தின் மூலம் அற்புதமாகச் சித்தரிக்கிறார் லீலாசுகர்.
விளையாடச் சென்ற கண்ணன் "மண்ணைத் தின்றான்' என்ற புகார் வரவே, யசோதை கண்ணனைக் கூப்பிட்டு, "மண்ணைத் தின்றாயா? உண்மையைச் சொல்' என்று மிரட்டுகிறாள். "யார் சொன்னது மண்ணைத் தின்றதாக?' என்கிறான் மண்ணை உண்ட மாயன். "உன் அண்ணன் பலராமன் சொன்னான்' என்கிறாள் யசோதை. "அண்ணன் பொய் சொல்லுகிறான் அம்மா. வேண்டுமானால் என் வாயைப் பார்' என்று தனது பவளச் செவ்வாயைத் திறந்து காட்டுகிறான் கண்ணன். அந்த வாயினில் உலகம் அனைத்தையும் கண்டு மிகுந்த ஆச்சரியத்தை அடைகிறாள் யசோதை. "அப்படி தாயை ஒரு நொடியில் பிரமிக்க வைத்து, (மீண்டும் மாயையால் அவளுடைய கண்களை மறைத்து) விந்தை புரிந்த அந்த கிருஷ்ணன் நம்மையெல்லாம் காப்பவனாக இருக்கட்டும்' என்கிறார் லீலாசுகர்.
இன்னொரு இனிமையான சம்பவத்தைக் காண்போம். கோகுலத்திலே, ஒரு வீட்டிலே புகுந்து வெண்ணெய் திருடிக்கொண்டிருக்கிறான் கிருஷ்ணன். அப்போது அங்கு வந்த அந்த வீட்டின் பெண்மணி, "யார் நீ?' எனக் கேட்கிறாள். "பலராமனின் தம்பி' என்று சாமர்த்தியமாகக் கூறுகிறது குழந்தை. "இங்கு எங்கு வந்தாய்?' என வினவுகிறார் அந்தப் பெண். "என் வீடு என நினைத்து நுழைந்துவிட்டேன்' என்கிறான் கண்ணன். ஏனெனில், கிராமங்களிலே எல்லா வீடுகளும் ஒரே மாதிரி இருக்குமல்லவா? அந்தப் பெண் விடவில்லை. மேலும் கேட்கிறாள். "அது சரி, வெண்ணெய் பாத்திரத்தில் கையை வைப்பானேன்?' என்கிறாள். "கன்றுக்குட்டி ஒன்று காணவில்லை. ஒரு வேளை அது இந்த வெண்ணெய் பாத்திரத்தில் இருக்கிறதோ எனப் பார்க்கிறேன். ஏதும் வருத்தமடைய வேண்டாம்' என விஷமமாகப் பதிலளிக்கிறான் கண்ணன். கன்றுக்குட்டியை வெண்ணெய் இருக்குமிடத்தில் தேடிய அந்தக் குறும்பனைக் கண்டு யார்தான் மோகிக்க மாட்டார்கள்?
கோகுலத்திலே கிருஷ்ணன், வெண்ணெயை மட்டும் திருடவில்லை; கோபிகைகள் அனைவருடைய உள்ளத்தையும் கொள்ளை கொண்டான். அதனால்தான் "தயிர், மோர், பால்' எனக் கூவி விற்க வேண்டிய ஒரு பெண்மணி, கிருஷ்ணன் மீதிருந்த அன்பின் மிகுதியால் "கோவிந்தா, தாமோதரா, மாதவா' என கூவிக் கொண்டே போனாள் என்கிறார் லீலாசுகர்.
கிருஷ்ண கர்ணாம்ருதத்தின் ஒவ்வொரு சுலோகமும் ஒரு அரிய ரத்தினமாகும். கிருஷ்ணனின் திருமேனி அழகைப் பற்றி லீலாசுகர் கூறுகிறார்.
"ஆலிலை மேல் பள்ளி கொண்ட அந்த பாலகிருஷ்ணன், தாமரை போன்ற கைகளால், தாமரை போன்ற பாதத்தை எடுத்து, தாமரை போன்ற வாயில் வைத்துக் கொண்டிருக்கிறான். அத்தகைய முகுந்தனை தியானம் செய்வோம்' என்கிறார் லீலாசுகர்.
கிருஷ்ணனின் அழகிய உருவத்தினை நம் மனதில் நிலை நிறுத்திக் கொள்ளும் வண்ணம் கூறுகிறது லீலாசுகரின் மற்றொரு அழகிய சுலோகம்.
நெற்றியில் கஸ்தூரி திலகம், மார்பில் கெüஸ்துப மணி, மூக்கு நுனியில் புதிய முத்து, கையில் புல்லாங்குழல், கையில் வளை, திருமேனி முழுவதிலும் சந்தனம், கழுத்தில் முத்துமாலை இவற்றையெல்லாம் அணிந்து கொண்டு, கோபிகைகள் சூழ வெற்றி வலம் வருவானாம் ஆயர் தலைவனான கோபால சூடாமணி. அந்தக் கோபால சூடாமணியை நம் மனக்கண்முன் கொண்டு வந்துவிட்டால் எல்லையற்ற இன்பத்தை நாமும் பெறலாமே!
ஆனந்தபைரவர்- Posts : 1375
Join date : 27/07/2010
Age : 39
Location : இந்திய திருநாடு
இந்து சமயம் :: செய்திகள் :: கட்டுரைகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum