Latest topics
» சித்திரை-நமது புத்தாண்டுத் தொடக்கம். by Dheeran Tue Apr 12, 2022 8:21 am
» மீண்டும் வருக
by Dheeran Fri Oct 02, 2020 11:08 am
» கே இனியவன் ஆன்மீக கவிதைகள்
by கே இனியவன் Thu Nov 09, 2017 7:58 pm
» தீபத்திருநாள் வாழ்த்துக்கள்
by Dheeran Wed Oct 18, 2017 4:01 pm
» பண்டைய இந்தியாவின் விமானத் தொழில் நுட்பம்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:23 pm
» வெற்றி மாபெரும் வெற்றி!
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:16 pm
» பாரதி பாடலில் அராஜக “செக்யுலர்” திருத்தங்கள் - ஜடாயு
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:55 pm
» மோடி, கருப்புப்பண ஒழிப்பு, ஊடகங்கள் - ஜெயமோகன்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:41 pm
» அனைவருக்கும் வணக்கம்.
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:46 am
» நான் ஒரு ஹிந்து என்பதில் ஏன் பெருமிதம் கொள்கிறேன் – பாகம் 1 AGNIVEER
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:42 am
» தேவையா இந்த சமஸ்கிருத துவேஷம்
by Dheeran Sat Jun 25, 2016 12:46 pm
» சிவ வழிபாடு புத்தகம்
by tammy ranga Thu Dec 17, 2015 3:37 am
» ஷ்ரிடி சாய் பாபா புண்ணிய வரலாறு தமிழில்
by tammy ranga Thu Dec 17, 2015 3:35 am
» ஆரிய திராவிட மாயை
by Dheeran Thu Oct 29, 2015 4:10 pm
» தென்புலத்தார் வழிபாடு
by Dheeran Sun Sep 27, 2015 8:50 pm
» தமிழ் ஹிந்துவும் இலவச ஜோதிட கணிப்பு
by ஹரி ஓம் Mon Aug 03, 2015 2:36 am
» வெற்றி வேல்!!!வீரவேல்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
by ஹரி ஓம் Wed Jun 24, 2015 4:09 am
» சிவதாண்டவம் - PB ஸ்ரீனிவாஸ்
by i.mahatheva Thu Jun 18, 2015 5:24 pm
» கால சர்ப்ப தோஷம் என்றால் என்ன?
by jothi sangeetha Thu May 21, 2015 1:43 pm
» மல்லிகைப் பூவை தலையில் சூடுங்கள் - பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்து
by கே இனியவன் Thu May 21, 2015 11:02 am
மந்திரத் தமிழ்
3 posters
Page 1 of 1
மந்திரத் தமிழ்
மந்திரம் என்பது தூய தமிழ்ச் சொல். இதிலிருந்து ‘மந்த்ரம்’ என்ற வடமொழிச்சொல் எடுத்தாளப் பட்டது. இவை இரண்டும் பார்ப்பதற்கு ஒன்று போலவே தோற்றம் அளித்தாலும் இரண்டின் பொருளும் வெவ்வேறு. எதிரெதிரானது.
‘மந்த்ரம்’ என்ற வடமொழிச் சொல்லுக்கு நினைப்பவனைக் காப்பாற்றுவது என்று பொருள். தொடர்ந்து உச்சரித்து வந்தால் குறிப்பிட்ட உச்சாடன எண்ணிக்கையில் நினைப்பவனை ‘மந்த்ரம்’ காப்பாற்றும். இங்கே ‘மந்த்ரம்’ எஜமானன். சொல்லுபவன் அடிமை. தவறாக உச்சரித்து விட்டால் ‘மந்த்ரம்’ ஒரு எஜமானனைப் போல தண்டித்து விடும்.
நாரதர் செய்த வேள்வியில் செபிக்கப்பட்ட தவறான உச்சரிப்பால் ஆற்றல் மிகுந்த பிரமாண்டமான ஆடு தோன்றி அவர்களை ஓட ஓட விரட்டியது என்பார்கள். பிறகு முருகன் அதை அடக்கி வாகனமாக்கிக் கொண்டான் என கந்த புராணம் கூறும். எனவே வடமொழி ‘மந்த்ரத்தில்’ நாம் கவனிக்க வேண்டியவை இரண்டு.
1. ஆயிரம், பத்தாயிரம், இலட்சம் என்ற எண்ணிக்கையில் செபித்தால் தான் அது வேலை செய்யும்.
2. தவறாக உச்சரித்தால் சொல்கிறவனை அது தண்டித்து விடுவதால் வடமொழி ‘மந்த்ரம்’ எஜமானன், சொல்லுபவன் அடிமை.
தமிழில் கூறப்படும் மந்திரம் இதற்கு நேர் எதிரானது. இங்கே சொல்லுபவன் எஜமானன். மந்திரம் அவனது ஆணைக்கு கட்டுப்பட்டு செயலாற்றும் அடிமை. சொல்லுபவன் எஜமானன் ஆனதால் அவன் அதை பல முறை உருப்போட்டு செபிக்க வேண்டுவதில்லை. அவனது சொல் ஒருமுறை சொல்லப்பட்டால் போதும். மந்திரம் உடனே செயலாற்றும். இதற்கு பல உதாரணங்கள் எடுத்துக்கூறலாம்.
எனினும் சுந்தரர் முதலை உண்ட பாலனை எழுப்பியதையே சிறந்த சான்றாகக் கூறலாம். முதலை உண்ட பாலனை எழுப்பும் போது சுந்தரர் ஒரு மூலையில் உட்கார்ந்து ஒரு லட்சம் வரை எந்த மந்திரத்தையும் முணு முணுக்கவில்லை. அதன்பிறகு உருவேறிய அதனைக்கூறி முதலை உண்ட பாலனை எழுப்பவில்லை.
“ கரைக்கால் முதலையைப் பிள்ளை தரச் சொல்லு காலனையே “
என்று ஓரடி பாடியவுடன் பிள்ளை ஓடி வந்தான். அந்த அடியில் சுந்தரர் காலனுக்கு அவிநாசியப்பர் (சிவன்) வழியாக (Through proper channel) ஆணையிடுகிறார். அவிநாசியப்பர் மேலாண்மையில் பணியாற்றும் சிற்றதிகாரியான காலன் பிள்ளையை மீட்டு ஒப்படைக்கிறான்.
இது தமிழ் மந்திரத்திற்கே உரிய பேராற்றல். இதனை அப்படியே மந்திரத்திற்கு இலக்கணமாகத் தொல்காப்பியம் கூறுகிறது.
“நிறைமொழி மாந்தர் ஆணையிற்கிளந்த
மறைமொழி தானே மந்திரம் என்ப”
அப்படியானால் நாம் இப்போது “ கரைக்கால் முதலையைப் பிள்ளை தரச்சொல்லு காலனையே “ என்று பாடும் போது ஒரு பிள்ளை ஓடி வரவில்லையே என்று சந்தேகம் வரலாம்.
நாம் கூறும் போது வெறும் வார்த்தைகளை மட்டுமே உச்சரிக்கிறோம். அந்தச் சொற்களில் ஆற்றல் இல்லை.
சுந்தரர் சொல்லும்போது அந்தச் சொற்களில் பேராற்றலை மறைத்து வைத்தார். எனவே அது மறைமொழி எனப்பட்டது. நாம் கூறும்போது சொற்களில் அவற்றிற்குரிய ஆற்றல் இல்லாமையால் அவை குறைமொழி.
எனவே தமிழ் மந்திரம் உயர்வானது என்பதை உணர்கிறோம். அதன் ஆற்றல் சொற்களில் புதைந்து கிடக்கும் என்பதையும் உணர்கிறோம்.
(நன்றி: திருமுருகாற்றுப்படை : சகுந்தலை நிலையம் வெளியிட்டது)

Last edited by சாமி on Thu Mar 08, 2012 9:26 am; edited 1 time in total
Re: மந்திரத் தமிழ்
விளக்கத்திர்க்கு நன்றி அய்யா
ஹரி ஓம்- தலைமை நடத்துனர்
- Posts : 922
Join date : 03/08/2010
Age : 38
Location : கன்னியாகுமரி
Similar topics
» தமிழ் வடமொழி கேள்விபதில்கள்-1
» தமிழ் ஆண்டுப்பெயர்கள் தமிழில்
» தமிழ் திதிகள் தமிழில்
» தமிழ் மாதங்கள் தமிழில்
» கருவறையில் தமிழ் – சிறப்பு மாநாடு !
» தமிழ் ஆண்டுப்பெயர்கள் தமிழில்
» தமிழ் திதிகள் தமிழில்
» தமிழ் மாதங்கள் தமிழில்
» கருவறையில் தமிழ் – சிறப்பு மாநாடு !
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum