இந்து சமயம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சித்திரை-நமது புத்தாண்டுத் தொடக்கம்.
by Dheeran Tue Apr 12, 2022 8:21 am

» மீண்டும் வருக
by Dheeran Fri Oct 02, 2020 11:08 am

» கே இனியவன் ஆன்மீக கவிதைகள்
by கே இனியவன் Thu Nov 09, 2017 7:58 pm

» தீபத்திருநாள் வாழ்த்துக்கள்
by Dheeran Wed Oct 18, 2017 4:01 pm

» பண்டைய இந்தியாவின் விமானத் தொழில் நுட்பம்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:23 pm

» வெற்றி மாபெரும் வெற்றி!
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:16 pm

» பாரதி பாடலில் அராஜக “செக்யுலர்” திருத்தங்கள் - ஜடாயு
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:55 pm

» மோடி, கருப்புப்பண ஒழிப்பு, ஊடகங்கள் - ஜெயமோகன்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:41 pm

» அனைவருக்கும் வணக்கம்.
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:46 am

» நான் ஒரு ஹிந்து என்பதில் ஏன் பெருமிதம் கொள்கிறேன் – பாகம் 1 AGNIVEER
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:42 am

» தேவையா இந்த சமஸ்கிருத துவேஷம்
by Dheeran Sat Jun 25, 2016 12:46 pm

» சிவ வழிபாடு புத்தகம்
by tammy ranga Thu Dec 17, 2015 3:37 am

» ஷ்ரிடி சாய் பாபா புண்ணிய வரலாறு தமிழில்
by tammy ranga Thu Dec 17, 2015 3:35 am

» ஆரிய திராவிட மாயை
by Dheeran Thu Oct 29, 2015 4:10 pm

» தென்புலத்தார் வழிபாடு
by Dheeran Sun Sep 27, 2015 8:50 pm

» தமிழ் ஹிந்துவும் இலவச ஜோதிட கணிப்பு
by ஹரி ஓம் Mon Aug 03, 2015 2:36 am

» வெற்றி வேல்!!!வீரவேல்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
by ஹரி ஓம் Wed Jun 24, 2015 4:09 am

» சிவதாண்டவம் - PB ஸ்ரீனிவாஸ்
by i.mahatheva Thu Jun 18, 2015 5:24 pm

» கால சர்ப்ப தோஷம் என்றால் என்ன?
by jothi sangeetha Thu May 21, 2015 1:43 pm

» மல்லிகைப் பூவை தலையில் சூடுங்கள் - பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்து
by கே இனியவன் Thu May 21, 2015 11:02 am

























Topsites
Tamil 10 top sites [www.tamil10 .com ]
Ranking


பில்லி சூனியம் , ஏவல், பேய் , பிசாசு , செய்வினை , அபிசார துஷ்ட மந்திர பிரயோகம் போன்றவற்றால் பாதிக்கபட்டவர்களுக்கு ஒரு சிறந்த பரிகார தலம் நாமக்கல் -நரசிம்மர்,ஆஞ்சநேயர் " ஓம் சூராய நம"

2 posters

Go down

பில்லி சூனியம் , ஏவல், பேய் , பிசாசு , செய்வினை , அபிசார துஷ்ட மந்திர பிரயோகம் போன்றவற்றால் பாதிக்கபட்டவர்களுக்கு ஒரு சிறந்த பரிகார தலம் நாமக்கல் -நரசிம்மர்,ஆஞ்சநேயர் " ஓம் சூராய நம" Empty பில்லி சூனியம் , ஏவல், பேய் , பிசாசு , செய்வினை , அபிசார துஷ்ட மந்திர பிரயோகம் போன்றவற்றால் பாதிக்கபட்டவர்களுக்கு ஒரு சிறந்த பரிகார தலம் நாமக்கல் -நரசிம்மர்,ஆஞ்சநேயர் " ஓம் சூராய நம"

Post by knesaraajan Mon Feb 20, 2012 12:33 pm

பில்லி சூனியம் , ஏவல், பேய் , பிசாசு , செய்வினை , அபிசார துஷ்ட மந்திர பிரயோகம் போன்றவற்றால் பாதிக்கபட்டவர்களுக்கு ஒரு சிறந்த பரிகார தலம் நாமக்கல் -நரசிம்மர்,ஆஞ்சநேயர் " ஓம் சூராய நம"


நாமக்கல் – நரசிம்மர்,ஆஞ்சநேயர்


சேலம் டு திருச்சி செல்லும் வழியில் நாமக்கல் மாவட்டம் உள்ளது . நாமக்கல் பேருந்து நிலையத்துக்கு மிக அருகிலேயே இந்த திரு கோவில் அமைந்துள்ளது ,


நாமக்கல் நரசிம்மர் கோவிலின் முக்கியமான வரலாறு

(இந்த கோவிலை இங்கே அமைத்ததுக்கு மிக முக்கிய காரணம் இந்த மாவட்டத்தில் அமைந்துள்ள கொல்லி மலை , இம்மலையில் (மலையடிவாரத்தில் ) அந்த காலத்தில்(இன்றும் ) நிறைய மந்திரவாதிகள் இருந்தனர் ,அவர்களின் தீய சக்திகளிடமிருந்து மக்களை காப்பற்றுவதற்காக இங்கு ஆஞ்சநேயர் மற்றும் நரசிம்ம சுவாமி சன்னதியை முன்னோர்கள் ஏற்படுத்தினர் ,

இக்கோவில் பில்லி சூனியம் , ஏவல், பேய் , பிசாசு , செய்வினை , அபிசார துஷ்ட மந்திர பிரயோகம் போன்ற மாந்திரீக பிரச்சனையால் பாதிக்கபட்டவர்களுக்கு ஒரு சிறந்த பரிகார தலம் ஆகும் ,

"இங்கு நரசிம்மர் சன்னதியில் கொடுக்கும் துளசி தீர்த்தமே மிக மிக சக்தி வாய்ந்தது மற்றும் விசேசமானது "








நாமக்கல் மலையும் அதன்மீது உள்ள கோட்டையும் மகாவிஷ்ணுவின் கோட்டையாக உள்ளது. மலையின் கீழ்ப்புறம் ரங்கநாதராகவும் மலைமேல் கோட்டையின் உள்ளே வரதராகவும் மலையின் மேலே நரசிம்மராகவும் மூன்று அவதாரங்களில் எழுந்தருளியுள்ளார். இப்படி மூன்று அவதாரம் பெற்றிருப்பினும், நரசிம்மரே இங்கு பிரதானம்.
முதலில் கோயிலுக்கு முன்னே ஹனுமார் கிழக்குத் திசை நோக்கியவராக 15 அடி உயரத்தில் காட்சி தருகிறார். அடுத்து நரசிம்மர் நாமகிரித் தாயாருடன் உள்ள சந்நிதி. நரசிம்மர் மிகவும் கம்பீரமாக பெரிய சிம்மாசனம் ஒன்றின் மீது

"ஓம் சூராய நம" சூரன் - ஆஞ்சநேயர்

(ஆஞ்சநேயர் மகா மந்திரம் )


அமர்ந்து உள்ளார். நரசிம்மன் ஸ்ரீதேவி பூதேவி சமேதராக உள்ளார். திரிவிக்கிரமர், வராகர், வாமனர், அனந்தநாராயணர் ஆகியோர் நரசிம்மரின் இரு பக்கங்களில் இடம் பெற்றுள்ளனர்.
அடுத்து நாமகிரித் தாயார் கிழக்கு நோக்கி எழுந்தருளியுள்ளதை தரிசிக்கலாம். பட்டாடை உடுத்தி நிறைய அணிகலன்கள் தரித்து நெற்றியில் நாமம் கொண்டு அற்புதமாகக் காட்சி தருகிறாள்.
நரசிம்மருக்கு நேரே உள்ள சுவரில் ஒரு சாளரம். அதன் வழியே அனுமாரைக் காணலாம். ஆனால் அனுமன் கண்கள் நரசிம்மரை-அவரது பாதங்களைப் பார்த்து இருப்பதுபோல் அமைந்துள்ளது.
வெளியே வந்து வடக்குப் பக்கம் வந்தால் அரங்கநாதரைத் தரிசிக்கலாம். அரங்கநாதர் கார்கோடகன் மேல் தெற்கே தலையும் வடக்கே காலும் நீட்டிச் சயனித்திருப்பதைக் காணலாம். காலடியில் சங்கரநாராயணரைக் காணலாம். சற்றுப் பின்னால் அரங்கநாயகி தாயாரைக் காணலாம்.
கீழே இறங்கி வந்தால் கமலாலயம். அது அனுமனுக்குத் தாகம் தீர்த்தது. அடுத்து மலையேறினால் வரதராஜரைத் தரிசிக்கலாம்.
இரண்யனை வதம் செய்த நரசிம்மர் யாரும் நெருங்க இயலாதபடி உக்கிரம் பொங்கக் காட்சி தந்ததைக் கண்டு பிரகலாதன் வேண்டுதலுக்கு இணங்க சாந்தமூர்த்தியாகி சாளக்கிராம வடிவில் கண்டகி நதிக்கரையில் அமர-திருமகள் தனது நாயகனைப் பிரிந்ததால் இந்தக் கமலாலயத்தில் தவம் புரிய, சஞ்சீவி மலையைச் சுமந்து வந்த அனுமன் கண்டகி நதிக்கரையில் இருந்த சாளக்கிராம நரசிம்மரையும் எடுத்துக் கொண்டு வர, இந்தக் கமலாலயத்தைக் கண்டதும் தனது தாகம் தீர்த்துக் கொள்ள நினைத்து நரசிம்மரை கையிலிருந்து கீழே வைக்க, தாகம் தீர்ந்ததும் நரசிம்மரைத் தூக்கினால் நரசிம்மர் வரவில்லை. எவ்வளவு முயன்றும் அனுமனால் முடியவில்லை. இங்கே தான் நரசிம்மரை நினைத்து லட்சுமியும் தவம் புரியவே, அவளுக்கு நரசிம்மர் அருள் புரியவே இங்கே தங்கி விட்டாராம்.
இந்தத் தலத்துக் கோயில்கள் குடைவரைக் கோயில்கள். 300 ஆண்டுகளுக்குமுன் மகேந்திரவர்மன் குடைந்து அமைத்தவை. அதியேந்திர விஷ்ணு கிரகம் என்று இத்தலத்தைப் பற்றிக் கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அற்புதச் சிற்ப வேலைப்பாடுகளைக் கொண்ட நாமக்கல் நரசிம்மர் வரம் தரும் விஷ்ணு தலமாகக் கருதப்படுகிறார்.

ஒரு சிறு தகவல் :

கணித மேதை ராமானுஜம் நாமகிரி தாயாரை உபாசனை செய்து உள்ளார் , இவர் கேட்கும் கணக்குக்கு இத்தாயாரே உடனே பதில் தருவதாக பல இடங்களில் கூறி உள்ளார் .

அப்படிப்பட்ட தாயாரை வணங்கி நாமும் அனுகிரகம் பெறுவோம் .பில்லி சூனியம் , ஏவல், பேய் , பிசாசு , செய்வினை , அபிசார துஷ்ட மந்திர பிரயோகம் போன்றவற்றால் பாதிக்கபட்டவர்களுக்கு ஒரு சிறந்த பரிகார தலம் நாமக்கல் -நரசிம்மர்,ஆஞ்சநேயர் " ஓம் சூராய நம" Blog-post_9426

knesaraajan

Posts : 42
Join date : 20/02/2012

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum