இந்து சமயம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சித்திரை-நமது புத்தாண்டுத் தொடக்கம்.
by Dheeran Tue Apr 12, 2022 8:21 am

» மீண்டும் வருக
by Dheeran Fri Oct 02, 2020 11:08 am

» கே இனியவன் ஆன்மீக கவிதைகள்
by கே இனியவன் Thu Nov 09, 2017 7:58 pm

» தீபத்திருநாள் வாழ்த்துக்கள்
by Dheeran Wed Oct 18, 2017 4:01 pm

» பண்டைய இந்தியாவின் விமானத் தொழில் நுட்பம்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:23 pm

» வெற்றி மாபெரும் வெற்றி!
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:16 pm

» பாரதி பாடலில் அராஜக “செக்யுலர்” திருத்தங்கள் - ஜடாயு
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:55 pm

» மோடி, கருப்புப்பண ஒழிப்பு, ஊடகங்கள் - ஜெயமோகன்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:41 pm

» அனைவருக்கும் வணக்கம்.
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:46 am

» நான் ஒரு ஹிந்து என்பதில் ஏன் பெருமிதம் கொள்கிறேன் – பாகம் 1 AGNIVEER
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:42 am

» தேவையா இந்த சமஸ்கிருத துவேஷம்
by Dheeran Sat Jun 25, 2016 12:46 pm

» சிவ வழிபாடு புத்தகம்
by tammy ranga Thu Dec 17, 2015 3:37 am

» ஷ்ரிடி சாய் பாபா புண்ணிய வரலாறு தமிழில்
by tammy ranga Thu Dec 17, 2015 3:35 am

» ஆரிய திராவிட மாயை
by Dheeran Thu Oct 29, 2015 4:10 pm

» தென்புலத்தார் வழிபாடு
by Dheeran Sun Sep 27, 2015 8:50 pm

» தமிழ் ஹிந்துவும் இலவச ஜோதிட கணிப்பு
by ஹரி ஓம் Mon Aug 03, 2015 2:36 am

» வெற்றி வேல்!!!வீரவேல்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
by ஹரி ஓம் Wed Jun 24, 2015 4:09 am

» சிவதாண்டவம் - PB ஸ்ரீனிவாஸ்
by i.mahatheva Thu Jun 18, 2015 5:24 pm

» கால சர்ப்ப தோஷம் என்றால் என்ன?
by jothi sangeetha Thu May 21, 2015 1:43 pm

» மல்லிகைப் பூவை தலையில் சூடுங்கள் - பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்து
by கே இனியவன் Thu May 21, 2015 11:02 am

Topsites
Tamil 10 top sites [www.tamil10 .com ]
Ranking

அறம், பொருள், இன்பம், வீடு – இவையே தமிழ் வேதம்.

+2
சேயோன்
சாமி
6 posters

Go down

அறம், பொருள், இன்பம், வீடு – இவையே தமிழ் வேதம். Empty அறம், பொருள், இன்பம், வீடு – இவையே தமிழ் வேதம்.

Post by சாமி Thu Mar 22, 2012 12:20 pm

ஒவ்வொரு மதத்திற்கும் ஒரு வேதம் உண்டு. கிறித்தவர்களுடைய வேதம் ‘பைபிள்’, இசுலாமியர்களுக்கு ‘குரான்’. பௌத்தர்களுக்கு ‘பிடகம்’.

நமக்கு மட்டும் வேதம் வடமொழியில் இருப்பதாக நாம் ஏன் நினைக்கிறோம்? இதைவிட வேடிக்கை ஒன்று உண்டா?. இந்த வேடிக்கையே வாடிக்கையானது தான் வேதனை. காரணம், நாம் எதையும் ஆராய்ந்து பார்க்காமலே சோம்பேறித் தனமாக ஏற்றுக் கொள்ளப் பழகிவிட்டோம்.

நாம் எதையும் காரண காரியத்தோடு ஆராய வேண்டும். தாயுமானவர் உயிர்களை ‘ஆராயும் அறிவு நீ’ என்று பாடினார்.

அப்படியானால் எது தமிழர்க்கு வேதம் என்பதை ஆராயாமலே எவரோ சொல்லும் ஏதோ ஒரு வேதத்தை வேற்று மொழியில் இருப்பதை – எப்படி நம்முடைய வேதம் என்று ஏற்றுக் கொள்வது? எனவே எது வேதம் என்பதை ஆராய வேண்டும்.

வேதம் என்பது இரண்டு விதமாக சொல்லப்படுகிறது.
1) இறைவனால் பாடப்பட்டது.
2) சுயம்பு – தானாகத் தோன்றியது.

வடமொழி வேதத்தை காழ்ப்புணர்ச்சியோடு பார்க்கவில்லை. ஆராய்ச்சி என்றால் காய்தல் உவத்தல் என்பது இருக்கக் கூடாது; உண்மைதான் அதில் முக்கியம். அந்தப் பார்வையால் ஆராய்கிறோம். வடமொழி வேதத்தை – அதாவது நம்மில் பலர் நமது வேதம் என்று நினைத்துக் கொண்டிருக்கிறோமே, அதை வடமொழி வித்தகர்களே தானாகத் தோன்றியது என்கிறார்கள். வைதிகர்கள் அவ்வேதத்தை அப்படித்தான் கொண்டாடுகிறார்கள். அப்படியானால் அந்த வேதத்திற்கும் தமிழர்களுக்கும் நிச்சயமாக தொடர்பு கிடையாது.

தமிழர்களாகிய நமது வேதம் இறைவனால் பாடப்பட்டது. இறைவனால் பாடப்பட்ட வேதம் எதுவோ அதற்கும் நமக்கும்தான் தொடர்பு உண்டு.

“அற்சனை பாட்டேயாகும் ஆதலால் மண்மேல் நம்மை
சொற்றமிழ் பாடுகென்றான் தூமறை பாடும் வாயான்”

என்பது பெரியபுராண வாக்கு. அதாவது தூயமறைகளை எல்லாம் இறைவன் தம் வாயினாலேயே பாடியருளினான் என்கிறார் சேக்கிழார். உடனே நமக்கு சேக்கிழாருக்கு முன்னால் அப்படியாரும் சொன்னார்களா என்று கேட்கத் தோன்றலாம்.

சங்க காலத்தில் கூட வேதம் இறைவனால் பாடப்பட்டது என்றே கூறப்பட்டது. புறநானூற்றில் 166 ஆவது பாட்டில் இது அழகாகக் கூறப்பட்டிருக்கிறது.

“நன்றாய்ந்த நீணிமிர் சடை
முதுமுதல்வன் வாய்போகா
தொன்று புரிந்த ஈரிரண்டின்
ஆறுணர்ந்த ஒரு முதுநூல்”

என்று அப்பாடல் தொடங்குகிறது. சிவபெருமானை முதுமுதல்வன் என்று அப்பாடல் கூறுகிறது. அந்த முதுமுதல்வனாகிய சிவபெருமானின் திருவாயிலிருந்து மறைகள் நீங்காமல் வந்து கொண்டிருக்கிறதாம். ஒரு வேதம் சிவபெருமானால் அருளப்பட்டது என்று சங்க காலம் முதல் சேக்கிழார் வரை கூறப்பட்டது. இன்னொன்று சிவபெருமானால் அருளப்படாமல் தானாகத் தோன்றியது என்று வடமொழியாளர்களால் போற்றிக் கூறப்பட்டு வடமொழியில் உள்ளது. இதிலிருந்து இதுவேறு அதுவேறு என்பது நன்றாகத் தெரிய வருகிறது. ஆனால் நாமோ இதுவரை சிவபெருமான் அருளாத, சுயம்புவாகத் தோன்றிய வடமொழி வேதத்தையே உண்மை வேதம் என்றும் நம்முடைய வேதம் என்றும் கொண்டிருக்கிறோம். பெரியவர்கள் தலைப்பாடாக அடித்துக் கொண்டாலும் நம்முடைய மனம் தாவிக் குதித்து அந்த வடமொழி வேதத்திற்குத் தான் போய் நிற்கிறது.

பெருமான் பாடியதுதான் தமிழ் வேதம்; அதுவே நமக்கு வேதம்.

திருஞானசம்பந்தக் குழந்தை ஒரு வினா எழுப்புகிறது. கல்லால மரத்தின் கீழ் அமர்ந்த பெருமானே! ஏதோ வேதம் சொன்னாயே? என்ன என்று சேய்ஞலூரில் கேட்கிறது.

“ நூலடைந்த கொள்கையாலே நுன்னடி கூடுதற்கு
மாலடைந்த நால்வர் கேட்க நல்கிய நல்லறத்தை
ஆலடைந்த நீழல்மேவி அருமறை சொன்னதென்னே
சேலடந்த தண்கழனிச் சேய்ஞலூர் மேயவனே! “

இது சம்பந்தர் திருசேய்ஞலூரில் பாடியருளியது. சேய்ஞலூர் முருகப்பெருமான் குழந்தையாக இருந்து வணங்கிய தலம். அத்துடன் சண்டீசர் குழந்தை வணங்கிய தலம். இங்கே பார்த்தீர்களானால் அருமறை சொன்னதென்னே என்ற கேள்வி எழுப்பப் பட்டுள்ளது. பதில் இப்பாடலில் இல்லை.

பதிலை வயதான பெரியவர் என்று அழைக்கப்படுகிற சிவபெருமான் தலமான திருமுதுகுன்றப் பதிகத்தில் கூறுகிறார் சம்பந்தர்.

“ சுழிந்த கங்கை தோய்ந்த திங்கள் தொல்அரா நல்லிதழி
சழிந்த சென்னிச் சைவவேடம் தானினைந் தைம்புலனும்
அழிந்த சிந்தை அந்தணாளர்க்கு அறம் பொருள் இன்பம் வீடு
மொழிந்த வாயான் முக்கணாதி மேயது முதுகுன்றே “

அதாவது ‘மாலடைந்த நால்வர் கேட்க’ என்று சேய்ஞலூர் பாடலில் குறிப்பிட்ட சனகர், சனந்தனர், சனாதனர், சனற்குமாரர் என்ற நால்வரைக் குறிப்பிட்டவர், இந்தப் பாடலில் ‘அழிந்த சிந்தனை அந்தணாளர்’ என்று அவர்களைக் குறிப்பிடுகிறார்.

அங்கே அவர்களுக்கு சொன்ன அருமறை என்னே என்று வினாவி அவாய் நிலையாக (SUSPENSE) விட்டவர் இங்கே அது என்ன என்று விளம்புகிறார். அவை அறம், பொருள், இன்பம், வீடு என்றார். இந்த நான்கும் தமிழர்க்கே உரித்தானது என்பதை எல்லா அறிஞர்களும் கூறுகின்றனர். சிவஞான முனிவரும் தொல்காப்பிய முதல் சூத்திர விருத்தியுரையில் இவை தமிழுக்கே உரிய பகுப்பு என்று கூறுகிறார்.

எனவே தமிழில் உள்ள அறம், பொருள், இன்பம், வீடு என்பதுதான் நம்முடைய வேதம். இதுதான் நம்முடையது. சுயம்புவான வடமொழி வேதத்திற்கும் நமக்கும் சம்பந்தமில்லை.

இவை ஒவ்வொன்றிற்கும் நூல்கள் தமிழில் பலவுண்டு. சிலவற்றைப் பார்ப்போம்.
அறம்: 18 நூல்கள் உண்டு. அவை பதிணெண் கீழ்க் கணக்கு எனப்படும் அறநூல்கள், அதில் ஒன்றுதான் திருக்குறள்.
பொருள்: அதாவது உலகியல் அறிவு. பலபேர் பணம் சம்பாதிப்பது மட்டுமே பொருள் என்று நினைக்கின்றனர். இல்லை, நல்ல பெயரைச் சம்பாதிப்பதும் பொருள்தான். அதற்கு உலகியல் அறிவு வேண்டும். திருக்குறளில் பொருட்பால் என்ற ஒரு பிரிவே உண்டு. காஞ்சிபுரத்திலிருந்து வடக்கே சென்ற சாணக்கியனின் அர்த்த சாஸ்திரமே ‘காஞ்சிபுரத்தில் அவன் ஆராய்ந்த தமிழ் நூல்களின் பிழிவே’ என்பது சரித்திர ஆசிரியர்கள் கருத்து.
இன்பம்: அகத்துறை. இது தமிழர்களுக்கே உரித்தானது. இதன்பால் தமிழ்ச் சங்க நூல்கள் ஏராளம். அவ்வளவு ஏன்? சிவபெருமானே ‘இறையனார் களவியல்’ என்ற அகத்துறை நூல் செய்திருக்கிறார்.
வீடு: துறவு பற்றியும் மெய்யுணர்வு பற்றியும் திருக்குறளில் இயலாகவும், அதிகாரமாகவும் கூறப்பட்டுள்ளது. தமிழிலக்கணமான தொல்காப்பியத்தில் தாபத பக்கம் பேசப்படுகிறது. இதற்கென காஞ்சித்திணை என்று ஒரு திணையே வகுக்கப்பட்டுள்ளது. மதுரைக் காஞ்சி என்பது பத்துப்பாட்டில் ஒன்று.

இந்த நாலும்தான் வேதம். இந்த நான்கையும் தனித்தனியாக ஆராயும் நூல்கள் தமிழில் இருக்க இந்த நான்கையும் ஒன்றாகக் கூறுவது திருக்குறள்.

ஆக திருக்குறள் உள்ளிட்ட அறம், பொருள், இன்பம் வீடு பற்றிய நூல்கள்தான் நம்முடைய வேதம் என்று உணருவோம்.

காய்ச்ச பலாவின் கனியுண்ண மாட்டாமல் ஈச்சம் பழத்திற்கு நாம் ஏன் இடறவேண்டும்?

(நன்றி: திருமந்திரச் சிந்தனைகள் புத்தகம்)
சாமி
சாமி
நண்பர்கள்

Posts : 121
Join date : 15/02/2012

http://arundhtamil.blogspot.in

Back to top Go down

அறம், பொருள், இன்பம், வீடு – இவையே தமிழ் வேதம். Empty Re: அறம், பொருள், இன்பம், வீடு – இவையே தமிழ் வேதம்.

Post by சேயோன் Fri Mar 23, 2012 3:27 pm

என்ன பண்றது பாஸு
'வெள்ளையா' இருக்கிறவன் சொல்வதெல்லாம் உண்மை ன்னு நினைக்கிறான் நம்ம ஆளு.
ஆனா அவன் சொல்றதெல்லாம் "நொள்ளை" ன்னு என்னைக்கு தெரியுமோ தெரியல!

சேயோன்

Posts : 55
Join date : 01/03/2012

Back to top Go down

அறம், பொருள், இன்பம், வீடு – இவையே தமிழ் வேதம். Empty Re: அறம், பொருள், இன்பம், வீடு – இவையே தமிழ் வேதம்.

Post by svelan74 Thu Mar 29, 2012 12:06 am

திரு சாமி அவர்களுக்கு,

தங்களின் விரிவான கட்டுரையை கண்டேன். எமக்கு ஏற்பட்ட ஐயங்களை போக்குமாறு தயவு கூர்ந்து கேட்டுக் கொள்கிறேன்.

1. சிவபெருமானை ஏன் சங்கப் புலவர்கள் மிகுந்து பாடவில்லை. முருகனையும், திருமாலையும் பாடியவர்கள் ஏன் சிவனை விட்டார்கள்? வினாயகருக்கு கூட அகவல் இருக்கிறதே.! இதற்கு ஏதாவது காரணம் உள்ளதா?

2. தமிழ் வேதம் என்று தனியாக இருக்கும் பட்சத்தில், பஞ்சாக்ஷர
மந்திரத்திற்கு ஈடாக தமிழில் மந்திரம் உள்ளதா? அது என்ன?

3. கோயிலில் மூலஸ்தானத்தில் உள்ள சிவனுக்கு தமிழ் வேதம்
கூறும் பெயர் என்ன?

செந்தில்

svelan74

Posts : 30
Join date : 31/07/2010

Back to top Go down

அறம், பொருள், இன்பம், வீடு – இவையே தமிழ் வேதம். Empty Re: அறம், பொருள், இன்பம், வீடு – இவையே தமிழ் வேதம்.

Post by சாமி Fri Mar 30, 2012 9:38 pm

svelan74 wrote:திரு சாமி அவர்களுக்கு,
தங்களின் விரிவான கட்டுரையை கண்டேன். எமக்கு ஏற்பட்ட ஐயங்களை போக்குமாறு தயவு கூர்ந்து கேட்டுக் கொள்கிறேன்.
1. சிவபெருமானை ஏன் சங்கப் புலவர்கள் மிகுந்து பாடவில்லை. முருகனையும், திருமாலையும் பாடியவர்கள் ஏன் சிவனை விட்டார்கள்? வினாயகருக்கு கூட அகவல் இருக்கிறதே.! இதற்கு ஏதாவது காரணம் உள்ளதா?
2. தமிழ் வேதம் என்று தனியாக இருக்கும் பட்சத்தில், பஞ்சாக்ஷர
மந்திரத்திற்கு ஈடாக தமிழில் மந்திரம் உள்ளதா? அது என்ன?
3. கோயிலில் மூலஸ்தானத்தில் உள்ள சிவனுக்கு தமிழ் வேதம்
கூறும் பெயர் என்ன?
செந்தில்

நன்றி செல்வன். உங்கள் கேள்விகளுக்கு ஒவ்வொன்றாய் பதில் தருகிறேன்
சாமி
சாமி
நண்பர்கள்

Posts : 121
Join date : 15/02/2012

http://arundhtamil.blogspot.in

Back to top Go down

அறம், பொருள், இன்பம், வீடு – இவையே தமிழ் வேதம். Empty Re: அறம், பொருள், இன்பம், வீடு – இவையே தமிழ் வேதம்.

Post by சாமி Fri Mar 30, 2012 9:50 pm

svelan74 wrote:
1. சிவபெருமானை ஏன் சங்கப் புலவர்கள் மிகுந்து பாடவில்லை. முருகனையும், திருமாலையும் பாடியவர்கள் ஏன் சிவனை விட்டார்கள்? வினாயகருக்கு கூட அகவல் இருக்கிறதே.! இதற்கு ஏதாவது காரணம் உள்ளதா?
செந்தில்

சிவபெருமானைப் பற்றி ஏராளமான பாடல்கள் உள்ளது. சங்கப்பாடல்களில் கடவுள் வாழ்த்தாக அமைவது பெரும்பாலும் சிவபெருமானைப் பற்றியதுதான்.
யாரும் சிவனைப் பற்றி பாடாமல் விடவில்லை.
சிவனைப் பற்றி பேசினால் தமிழ் வளர்ந்துவிடுமோ என்று காரணமாக ' சிவனையே' புறக்கணித்தவர்கள் ... புறக்கணிக்கிறவர்கள் தான் உண்டு. அல்லது சிவனை கும்பிடுவதை 'பயமுறுத்தி யவர்கள்' உண்டு.

சிவனைப்பற்றி தேவாரம் திருவாசகம் உள்ளிட்ட 'பன்னிரு திருமுறைகளே' உண்டு. வாங்கிப் படியுங்கள்.
சிவனும் புறநானூறும் என்ற என்னுடைய பதிவைப் பாருங்கள்.
சாமி
சாமி
நண்பர்கள்

Posts : 121
Join date : 15/02/2012

http://arundhtamil.blogspot.in

Back to top Go down

அறம், பொருள், இன்பம், வீடு – இவையே தமிழ் வேதம். Empty Re: அறம், பொருள், இன்பம், வீடு – இவையே தமிழ் வேதம்.

Post by சேயோன் Sun Apr 01, 2012 9:39 am

சாமி wrote:
சிவபெருமானைப் பற்றி ஏராளமான பாடல்கள் உள்ளது. சங்கப்பாடல்களில் கடவுள் வாழ்த்தாக அமைவது பெரும்பாலும் சிவபெருமானைப் பற்றியதுதான். யாரும் சிவனைப் பற்றி பாடாமல் விடவில்லை.
சிவனைப் பற்றி பேசினால் தமிழ் வளர்ந்துவிடுமோ என்று காரணமாக ' சிவனையே' புறக்கணித்தவர்கள் ... புறக்கணிக்கிறவர்கள் தான் உண்டு. அல்லது சிவனை கும்பிடுவதை 'பயமுறுத்தி யவர்கள்' உண்டு.
சிவனைப்பற்றி தேவாரம் திருவாசகம் உள்ளிட்ட 'பன்னிரு திருமுறைகளே' உண்டு. வாங்கிப் படியுங்கள்.
சிவனும் புறநானூறும் என்ற என்னுடைய பதிவைப் பாருங்கள்.

நீங்கள் கூறுவது உண்மை. நன்றி

சேயோன்

Posts : 55
Join date : 01/03/2012

Back to top Go down

அறம், பொருள், இன்பம், வீடு – இவையே தமிழ் வேதம். Empty Re: அறம், பொருள், இன்பம், வீடு – இவையே தமிழ் வேதம்.

Post by svelan74 Mon Apr 02, 2012 6:03 am

திரு சாமி அவர்களுக்கு,

தங்கள் பதில் பதிவுக்கு நன்றி.

என்னுடைய கேள்வி இலக்கம் ஒன்று, சிவபெருமானை ஏன் சங்கப் புலவர்கள் மிகுந்து பாடவில்லை என்பது? திருவாசகம், தேவாரம் என்ற சமயக் குரவர்கள் பாடியதை விடுத்து. சிவனும் புறநானூறும் என்ற தங்களின் பதிவின் URLஐ தர முடியுமா?

மேலும் கேள்வி இலக்கம் இரண்டு (தமிழில் பஞ்சாக்ஷிரம்)
மற்றும் கேள்வி இலக்கம் மூன்று (மூலஸ்தானத்தில் இருக்கும் சிவபெருமானுக்கு தமிழ்வேதப்பெயர்) பற்றிய தங்களின் கருத்தை அறிய விரும்புகிறேன்.

செந்தில்

svelan74

Posts : 30
Join date : 31/07/2010

Back to top Go down

அறம், பொருள், இன்பம், வீடு – இவையே தமிழ் வேதம். Empty Re: அறம், பொருள், இன்பம், வீடு – இவையே தமிழ் வேதம்.

Post by சாமி Mon Apr 02, 2012 9:11 am

திரு சாமி அவர்களுக்கு,
சிவனும் புறநானூறும் என்ற தங்களின் பதிவின் URLஐ தர முடியுமா?

பதிவிற்கு நன்றி !
புறநானூறும் சிவபெருமானும்' என்ற பதிவை http://arundhtamil.blogspot.in/ பார்க்கலாம்.
நமது தளத்தில் லேடஸ்ட் டாபிக்ஸ் ல் உள்ளது.
சாமி
சாமி
நண்பர்கள்

Posts : 121
Join date : 15/02/2012

http://arundhtamil.blogspot.in

Back to top Go down

அறம், பொருள், இன்பம், வீடு – இவையே தமிழ் வேதம். Empty Re: அறம், பொருள், இன்பம், வீடு – இவையே தமிழ் வேதம்.

Post by svelan74 Wed Apr 04, 2012 10:32 am

திரு சாமி அவர்களுக்கு,

தங்களின் "புறநானூறும் சிவபெருமானும்" என்ற டமில்ஹிந்து.நெட் பதிவை படித்து புறநானூற்று கடவுள் வாழ்த்து பாடல் சிவபெருமானைக் குறிக்கிறது என்று அறிந்து கொண்டேன். மிக்க நன்றி.

அந்த பாட்டும் சரி, மற்ற சங்கப்பாடல்களும் சரி...ஏன் ஆலகாலவிஷம் அருந்தியது , மாதொரு பாகம் வைத்தது, திரிபுரம் எரித்தது என்கின்ற வேதச் செய்திகளையே கூறுகின்றன? ஏன் சிவபெருமானின் திருவிளையாடல்களைப் பற்றி பேசவில்லை? திருவிளையாடல்கள் சங்க காலத்திற்கு பின்னர் நடந்ததா?

திருவிளையாடல்கள் கதைகள் தமிழகத்தைச் சார்ந்து தானே வருகிறது..மிகுதியாக மதுரையைச் சுற்றி..இதற்கு ஏதாவது விளக்கம் இருக்கிறதா?

மேலும் என்னுடைய முதல் பதிவிலுள்ள கேள்வி இலக்கம் இரண்டு மற்றும் கேள்வி இலக்கம் மூன்றுக்கு தங்களின் கருத்தை அறிய விரும்புகிறேன்.

செந்தில்

svelan74

Posts : 30
Join date : 31/07/2010

Back to top Go down

அறம், பொருள், இன்பம், வீடு – இவையே தமிழ் வேதம். Empty Re: அறம், பொருள், இன்பம், வீடு – இவையே தமிழ் வேதம்.

Post by Dhantaayuthapaani Thu Apr 05, 2012 3:48 pm

வணக்கம் உங்களதுபதிவு முன்னுக்குப்பின் முறனாக உள்ளது. அவசரமாக ஆராயாமல் இடப்பட்ட பதிவாகத் தெரிகிறது. பதிவில் எனக்கு கீழ்கண்ட ஐயங்கள் தோன்றுகின்றன. அவற்றை தெளிவுபடுத்துமாறு வேண்டுகிறேன்.

1)இறைவனே தமிழ்வேதங்களைப்பாடியதாகக் கூறியுள்ளீர்கள், மேலும் பதினென் கீழ்க்கணக்கு நூல்கள் தமிழ்வேதத்துள் ஒன்று என்கிறீர்கள் அப்படியானால் அப் 18 நூல்களும் சிவபெருமானால் பாடப்பட்டவையா?

2)அவ்வாறு இல்லை, அவற்றுள் நீங்கள் கூறிய திருக்குறள் போன்ற நூல்கள், திருவள்ளுவர்,சமணமுனிவர்கள்,நாகனார் பொன்றோரால் இயற்றப்பட்டவை என உணர்ந்தால் இக்கட்டுரை தவறானது என ஒப்புக்கொள்வீர்களா?

3)பதிவிடும்முன் அந்த புத்தகத்தில் கூறியுள்ளவற்றின் உண்மைத் தன்மையை ஆராய்ந்து உறுதிசெய்துகொண்டீர்களா?

பதிலிடுவீர்கள் என நம்புகிறேன் நன்றி.

Dhantaayuthapaani

Posts : 32
Join date : 05/04/2012

Back to top Go down

அறம், பொருள், இன்பம், வீடு – இவையே தமிழ் வேதம். Empty Re: அறம், பொருள், இன்பம், வீடு – இவையே தமிழ் வேதம்.

Post by பத்மநாபன் Thu Apr 05, 2012 6:51 pm

பெரிய கட்டுரையாக உள்ளது. நீங்கள் சொல்வது ஒத்துக்கொள்ளும்படியாக இருக்கிறது.

மேலும் பல கட்டுரைகள் எழுதி தெளிவு தரும்படி கேட்டுக் கொள்கிறேன்.
பத்மநாபன்
பத்மநாபன்

Posts : 28
Join date : 05/04/2012

Back to top Go down

அறம், பொருள், இன்பம், வீடு – இவையே தமிழ் வேதம். Empty Re: அறம், பொருள், இன்பம், வீடு – இவையே தமிழ் வேதம்.

Post by சாமி Thu Apr 05, 2012 11:15 pm

தண்டாயுதபாணி wrote: பதிவில் எனக்கு கீழ்கண்ட ஐயங்கள் தோன்றுகின்றன. அவற்றை தெளிவுபடுத்துமாறு வேண்டுகிறேன்.
1)இறைவனே தமிழ்வேதங்களைப்பாடியதாகக் கூறியுள்ளீர்கள், மேலும் பதினென் கீழ்க்கணக்கு நூல்கள் தமிழ்வேதத்துள் ஒன்று என்கிறீர்கள் அப்படியானால் அப் 18 நூல்களும் சிவபெருமானால் பாடப்பட்டவையா?
.
கருத்துக்கு நன்றி நண்பர் திரு.தண்டாயுதபாணி !
என்னுடைய சில கருத்துக்கள் :
1. இக்கட்டுரையை பொறுமையாக இன்னும் ஒரு முறை படியுங்கள்.. நீங்கள் கேட்டதற்கான பதில் அதிலேயே உள்ளது.
2. மஞ்சள் கண்ணாடி போட்டுக் கொண்டு பார்த்தால் எல்லாம் மஞ்சளாகவே தெரியும்! கண்ணாடியை கழட்டி விட்டு பாருங்கள். உண்மை நிறம் புரியும்.
3. பக்கத்து வீட்டுக்கு, நேற்று குடி வந்த பெண்மணியை என்னுடைய தாய் என்று என்னால் சொல்ல முடியாது. என்னை பெற்றவளைத் தான் என் தாய் என்று என்னால் சொல்ல முடியும். 'தெய்வத் தமிழ்' தான் என் தாய்..
சாமி
சாமி
நண்பர்கள்

Posts : 121
Join date : 15/02/2012

http://arundhtamil.blogspot.in

Back to top Go down

அறம், பொருள், இன்பம், வீடு – இவையே தமிழ் வேதம். Empty Re: அறம், பொருள், இன்பம், வீடு – இவையே தமிழ் வேதம்.

Post by சாமி Thu Apr 05, 2012 11:18 pm

பத்மநாபன் wrote:பெரிய கட்டுரையாக உள்ளது. நீங்கள் சொல்வது ஒத்துக்கொள்ளும்படியாக இருக்கிறது.
மேலும் பல கட்டுரைகள் எழுதி தெளிவு தரும்படி கேட்டுக் கொள்கிறேன்.

நன்றி நண்பரே! உங்களின் பாராட்டு என்னை மேலும் பல உண்மைகளை எழுதும் வல்லமையைத் தரும். நன்றி.
சாமி
சாமி
நண்பர்கள்

Posts : 121
Join date : 15/02/2012

http://arundhtamil.blogspot.in

Back to top Go down

அறம், பொருள், இன்பம், வீடு – இவையே தமிழ் வேதம். Empty Re: அறம், பொருள், இன்பம், வீடு – இவையே தமிழ் வேதம்.

Post by Dheeran Fri Apr 06, 2012 2:24 am

அனைவருக்கும் வணக்கம்,

எனது இந்தப்பதிவின் நோக்கம் யார்மனதையும் புண்படுத்துவதல்ல, என்பதைப் பணிவன்போடு தெரிவித்துக்கொள்கின்றேன், எனது நோக்கம் தர்மம் தழைக்கவேண்டும் அதன்மூலம் அனைவரும் இன்புற்று வாழ்வாங்கு வாழவேண்டும் என்பதே.

இங்கு மேலே பதியப்பட்டுள்ள அறம்,பொருள்.இன்பம்,வீடு,ஆகியவே தமிழ் வேதம் எனும் பதிவில் கண்டுள்ளக்கருத்துக்கள் தவறானவையாகவே எனக்குப்படுகிறது அவற்றை இங்குள்ள எனது பலபதிவுகளில் விளக்கி உள்ளேன்.

இங்கு பலநண்பர்கள் பல கேள்விகளை எழுப்பியுள்ளதால் எனது கருத்துகளையும் இங்கு பதிய நேர்ந்தது

பல கேள்விகளுக்கு திரு.சாமி அவர்கள்தான் பதிலளிக்கவேண்டும். அந்த உரிமை அவருக்குத்தான் உண்டு ஆகவே நான் இங்கு இப்பதிவில் மேற்கோள்காட்டப்பட்டுள்ள தமிழ் இலக்கியங்கள்பற்றிய மாற்றுக்கருத்தை மட்டும் முன்வைக்க விரும்புகிறேன். இதில் விதிமீறல் எதேனும் இருந்தால் அனைவரும் மன்னிப்பீர்களாக.

முதலில்

நன்றாய்ந்த நீணிமிர் சடை
முதுமுதல்வன் வாய்போகா
தொன்று புரிந்த ஈரிரண்டின்
ஆறுணர்ந்த ஒரு முதுநூல்”

எனும் புறநானூற்றுப்பாடல் ரிக்வேதம் முதலான வேதங்களையே குறிக்கிறது அப்பாடல் அந்த வேதத்தின் மேன்மையைக்குறித்தே பாடப்பட்டதாகும் .அது தமிழ் வேதம் எனும் எதைப்பற்றியும் கூறவில்லை. காரணம் அது ஆரங்கமுள்ள நால் வேதத்தையே குறிக்கிறது அத்தன்மையோடிருப்பது ரிக் வேதம் முதலான நால் வேதமே

அப்பாடல் அறியாமையாலோ அல்லது வேறுபல காரணங்களாலோ தமிழ்ப்பற்றாளர்கள் எனப்படுவோரால் தூற்றப்படும் பார்ப்பானான
சோணாட்டு பூஞ்சாற்றூர் ( பூஞ்சிற்றூர்) ப்பார்ப்பான் கௌணியன் (கௌண்டின்னியகோத்திரத்திற்பிறந்தவன்).விண்ணந்தா யனை ஆவூர் மூலங்கிழார் பாடியது.

பாடக்காரணம் அவவந்தணர், மேற்கண்ட வேதநெறியைத் தூற்றிப் பழித்து மாயாவாதம்பேசிப் பொய்யுறைத்த புறமதத்தாரை ஞானத்தால் வென்றது.

இரண்டாவதாக

//சுழிந்த கங்கை தோய்ந்த திங்கள் தொல்அரா நல்லிதழி
சழிந்த சென்னிச் சைவவேடம் தானினைந் தைம்புலனும்
அழிந்த சிந்தை அந்தணாளர்க்கு அறம் பொருள் இன்பம் வீடு
மொழிந்த வாயான் முக்கணாதி மேயது முதுகுன்றே//

ஞானம்பெற்ற வேதம்கற்ற படைப்புத்தொழிலில் விருப்பமற்ற மேலும் உயர்ந்த மேன்மைபெற விரும்பிய சனகாதி முனிவர்களுக்கு தட்சிணாமூர்த்தியாகிய இறைவன் உபதேசம் வழங்கினான் என்பதே இப்பாடலின் கருத்து.

ஒருவேளை இறைவன் அவர்களுக்கு தமிழ்வேதம் எனக்கூறப்படும் வேதத்தைத் தந்திருந்தால் அதை அவர்களே மக்களுக்கு வழங்கியிருப்பர் அவற்றை மீண்டும் கட்டுரையாசிரியர் கூறுவதுபோல் திருவள்ளுவர் போன்றோர் எழுதியிருக்க வேண்டி இருந்திருக்காது.

அல்லாமல் திருவள்ளுவர் மற்றும் சமனமுனிவர்கள் எழுதிய நாலடியார் போன்றவை இறைவன் அருளிய தமிழ் வேதங்களாயின், பகவான் அம்முனிவர்களை அன்நூல்களையே கற்றுணருமாறு வழிகாட்டியிருப்பார்.

இவ்வாறு பகுத்தறிவோடு விஷயங்களை அணுகும் முறையைத்தான் தாயுமானவரும் //ஆராயும் அறிவு நீ// என்று பாடியிருப்பார் என நினைக்கிறேன்.

மூன்றாவதாக

பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் மனிதர்களால் இயற்றப்பட்டவையை அவற்றில் சில நூல்களை இயற்றியவர்கள் சமண,பௌத்த முனிவர்கள் அவர்கள் சிவனையே இறைவன் என்று ஏற்றுக்கொள்ளாதவர்கள் அவர்கள் இயற்றியது எப்படி சிவன்சொன்ன வேதமாகும் எனும் ரகசியம் அப்பன் ஈஸ்வரனுக்குமட்டுமே விளங்கும்.

18 கீழ்க்கணக்கு நூல்களும் அவற்றின் ஆசிரியர்களும்

1. நாலடியார் - சமணமுனிவர்கள்
2. நான்மணிக்கடிகை - விளம்பி நாகனார்
3. இன்னா நாற்பது - கபிலர்
4. இனியவை நாற்பது- பூதஞ்சேந்தனார்
5. திரிகடுகம்- நல்லாதனார்
6. ஏலாதி- கணிமேதாவியார்
7. முதுமொழிக்காஞ்சி- கூடலூர்க்கிழார்
8. திருக்குறள்- திருவள்ளுவர்
9. ஆசாரக்கோவை- பெருவாயின் முள்ளியார்
10. பழமொழி400 - முன்றுரை அரையனார்,சமனமுனிவர்கள்
11 சிறுபஞ்சமூலம் - காரியாசான்
12. ஐந்திணை ஐம்பது- பொறையனார்
13. ஐந்திணை எழுபது- மூவாதியார்
14. திணைமொழி ஐம்பது- கண்ணஞ் சேந்தனார்
15. திணைமாலை நூற்றைம்பது- கணிமேதாவியார்
16. கைந்நிலை- புல்லங்காடனார்
17. கார்நாற்பது - கண்ணங்கூத்தனார்
18. களவழி நாற்பது-பொய்கையார்

இவர்களில் யாரும் தட்சிணாமூர்த்தியோ ஈஸ்வரனோ அல்ல. ஆகவே இவைதான் ஈசன் கடைபிடிக்கச்சொன்ன வேதங்கள் என்பது பொய்.

ஆக இவர்கள் பரப்ப விரும்புவது இந்துமதமோ, சைவமோ,வைணவமோ அல்ல அது நெரியறியாப் புதுமதம் அதற்கு நன்றாக இருக்கட்டுமென்று தமிழ்மதம் எனப்பெயரிடுவாரோ என்னமோ?

பொய்களை உண்மைபோல்கூறி அது பலிக்காமல் போனால் அடுத்து அவர்கள் கூறவருவது சிவன்,விஷ்ணு,சக்தி யாவரும் தமிழரது கடவுள் அல்ல என்பதும் முருகனுக்கும், சிவன்,பார்வதிக்கும் எந்ததொடர்பும் இல்லை என்பதுமாகும்.

தமிழும்,சமஸ்கிருதமும் நம் இரு கண்கள். தமிழ்ப் பற்றாளர்கள் என்போர் அதை அடுத்தவீட்டுப்பெண் என்றால் அது அறியாமைதானன்றி வேறல்ல.
//மடப்பிடியோடு களிறு// வந்ததுகண்டு அவற்றை சிவனாகவும், சத்தியாகவும் கண்டதுதான் தமிழ் பக்தி, பக்கத்துவீட்டுப்பெண்ணையும் அம்மா என்றழைப்பது தமிழ்ப்பண்பாடு. உவமையோடு கூறவேண்டுமானால் தன் உடன்பிறந்தாளது குழந்தைகளைப் பேணிவளர்க்க விரும்பி தனக்கென்று குழந்தைபெறாதவள்தான் சமஸ்கிருதத் தாய்.

நான் கூறவிரும்புவது - ஆயிரம்கைகள் மறைத்தாலும் ஆதவனை மறைக்க முடியாது.
Dheeran
Dheeran
நண்பர்கள்

Posts : 148
Join date : 12/10/2011
Age : 50
Location : கோவை

http://dheeranstalwart.blogspot.in/

Back to top Go down

அறம், பொருள், இன்பம், வீடு – இவையே தமிழ் வேதம். Empty Re: அறம், பொருள், இன்பம், வீடு – இவையே தமிழ் வேதம்.

Post by சாமி Fri Apr 06, 2012 8:22 am

svelan74 wrote:
3. கோயிலில் மூலஸ்தானத்தில் உள்ள சிவனுக்கு தமிழ் வேதம்
கூறும் பெயர் என்ன?
செந்தில்

நண்பரே
கந்தழி மற்றும் நடுதறி என்ற வார்த்தைகள் உண்டு.
உங்களது மற்ற கேள்விகளுக்கு விடையளிக்காதது நேரமின்மையே காரணம்.
கூடிய சீக்கிரம் அளிக்கிறேன்.
நன்றி
சாமி
சாமி
நண்பர்கள்

Posts : 121
Join date : 15/02/2012

http://arundhtamil.blogspot.in

Back to top Go down

அறம், பொருள், இன்பம், வீடு – இவையே தமிழ் வேதம். Empty Re: அறம், பொருள், இன்பம், வீடு – இவையே தமிழ் வேதம்.

Post by Dhantaayuthapaani Fri Apr 06, 2012 4:27 pm

தண்டாயுதபாணி wrote:வணக்கம் உங்களதுபதிவு முன்னுக்குப்பின் முறனாக உள்ளது. அவசரமாக ஆராயாமல் இடப்பட்ட பதிவாகத் தெரிகிறது. பதிவில் எனக்கு கீழ்கண்ட ஐயங்கள் தோன்றுகின்றன. அவற்றை தெளிவுபடுத்துமாறு வேண்டுகிறேன்.

1)இறைவனே தமிழ்வேதங்களைப்பாடியதாகக் கூறியுள்ளீர்கள், மேலும் பதினென் கீழ்க்கணக்கு நூல்கள் தமிழ்வேதத்துள் ஒன்று என்கிறீர்கள் அப்படியானால் அப் 18 நூல்களும் சிவபெருமானால் பாடப்பட்டவையா?

2)அவ்வாறு இல்லை, அவற்றுள் நீங்கள் கூறிய திருக்குறள் போன்ற நூல்கள், திருவள்ளுவர்,சமணமுனிவர்கள்,நாகனார் பொன்றோரால் இயற்றப்பட்டவை என உணர்ந்தால் இக்கட்டுரை தவறானது என ஒப்புக்கொள்வீர்களா?

3)பதிவிடும்முன் அந்த புத்தகத்தில் கூறியுள்ளவற்றின் உண்மைத் தன்மையை ஆராய்ந்து உறுதிசெய்துகொண்டீர்களா?

பதிலிடுவீர்கள் என நம்புகிறேன் நன்றி.

எனது இப்பதிவிற்கு

நன்றாய்ந்த நீணிமிர் சடை
முதுமுதல்வன் வாய்போகா
தொன்று புரிந்த ஈரிரண்டின்
ஆறுணர்ந்த ஒரு முதுநூல்”

எனும் புறநானூற்றுப்பாடல் ரிக்வேதம் முதலான வேதங்களையே குறிக்கிறது அப்பாடல் அந்த வேதத்தின் மேன்மையைக்குறித்தே பாடப்பட்டதாகும் .அது தமிழ் வேதம் எனும் எதைப்பற்றியும் கூறவில்லை. காரணம் அது ஆரங்கமுள்ள நால் வேதத்தையே குறிக்கிறது அத்தன்மையோடிருப்பது ரிக் வேதம் முதலான நால் வேதமே

அப்பாடல் அறியாமையாலோ அல்லது வேறுபல காரணங்களாலோ தமிழ்ப்பற்றாளர்கள் எனப்படுவோரால் தூற்றப்படும் பார்ப்பானான 
சோணாட்டு பூஞ்சாற்றூர் ( பூஞ்சிற்றூர்) ப்பார்ப்பான் கௌணியன் (கௌண்டின்னியகோத்திரத்திற்பிறந்தவன்).விண்ணந்தா யனை ஆவூர் மூலங்கிழார் பாடியது.

பாடக்காரணம் அவவந்தணர், மேற்கண்ட வேதநெறியைத் தூற்றிப் பழித்து மாயாவாதம்பேசிப் பொய்யுறைத்த புறமதத்தாரை ஞானத்தால் வென்றது.

இரண்டாவதாக

//சுழிந்த கங்கை தோய்ந்த திங்கள் தொல்அரா நல்லிதழி
சழிந்த சென்னிச் சைவவேடம் தானினைந் தைம்புலனும்
அழிந்த சிந்தை அந்தணாளர்க்கு அறம் பொருள் இன்பம் வீடு
மொழிந்த வாயான் முக்கணாதி மேயது முதுகுன்றே// 

ஞானம்பெற்ற வேதம்கற்ற படைப்புத்தொழிலில் விருப்பமற்ற மேலும் உயர்ந்த மேன்மைபெற விரும்பிய சனகாதி முனிவர்களுக்கு தட்சிணாமூர்த்தியாகிய இறைவன் உபதேசம் வழங்கினான் என்பதே இப்பாடலின் கருத்து.

ஒருவேளை இறைவன் அவர்களுக்கு தமிழ்வேதம் எனக்கூறப்படும் வேதத்தைத் தந்திருந்தால் அதை அவர்களே மக்களுக்கு வழங்கியிருப்பர் அவற்றை மீண்டும் கட்டுரையாசிரியர் கூறுவதுபோல் திருவள்ளுவர் போன்றோர் எழுதியிருக்க வேண்டி இருந்திருக்காது.

அல்லாமல் திருவள்ளுவர் மற்றும் சமனமுனிவர்கள் எழுதிய நாலடியார் போன்றவை இறைவன் அருளிய தமிழ் வேதங்களாயின், பகவான் அம்முனிவர்களை அன்நூல்களையே கற்றுணருமாறு வழிகாட்டியிருப்பார். 

இவ்வாறு பகுத்தறிவோடு விஷயங்களை அணுகும் முறையைத்தான் தாயுமானவரும் //ஆராயும் அறிவு நீ// என்று பாடியிருப்பார் என நினைக்கிறேன். 

மூன்றாவதாக

பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் மனிதர்களால் இயற்றப்பட்டவையை அவற்றில் சில நூல்களை இயற்றியவர்கள் சமண,பௌத்த முனிவர்கள் அவர்கள் சிவனையே இறைவன் என்று ஏற்றுக்கொள்ளாதவர்கள் அவர்கள் இயற்றியது எப்படி சிவன்சொன்ன வேதமாகும் எனும் ரகசியம் அப்பன் ஈஸ்வரனுக்குமட்டுமே விளங்கும்.

18 கீழ்க்கணக்கு நூல்களும் அவற்றின் ஆசிரியர்களும் 

1. நாலடியார் - சமணமுனிவர்கள்
2. நான்மணிக்கடிகை - விளம்பி நாகனார்
3. இன்னா நாற்பது - கபிலர்
4. இனியவை நாற்பது- பூதஞ்சேந்தனார்
5. திரிகடுகம்- நல்லாதனார்
6. ஏலாதி- கணிமேதாவியார்
7. முதுமொழிக்காஞ்சி- கூடலூர்க்கிழார்
8. திருக்குறள்- திருவள்ளுவர்
9. ஆசாரக்கோவை- பெருவாயின் முள்ளியார்
10. பழமொழி400 - முன்றுரை அரையனார்,சமனமுனிவர்கள்
11 சிறுபஞ்சமூலம் - காரியாசான்
12. ஐந்திணை ஐம்பது- பொறையனார்
13. ஐந்திணை எழுபது- மூவாதியார்
14. திணைமொழி ஐம்பது- கண்ணஞ் சேந்தனார்
15. திணைமாலை நூற்றைம்பது- கணிமேதாவியார்
16. கைந்நிலை- புல்லங்காடனார்
17. கார்நாற்பது - கண்ணங்கூத்தனார்
18. களவழி நாற்பது-பொய்கையார்

இவர்களில் யாரும் தட்சிணாமூர்த்தியோ ஈஸ்வரனோ அல்ல. ஆகவே இவைதான் ஈசன் கடைபிடிக்கச்சொன்ன வேதங்கள் என்பது பொய்.

என நீண்ட விளக்கமளித்த தீரன் அவர்களுக்கு நன்றி

சாமியவர்களே எந்தவண்ணக் கண்ணாடிபோட்டுப் பார்த்தாலும் யானை யானையாகவும் பூனை பூனையாகவும்தானே தெரியும். எனதுகேள்வி இல்லாதஒன்றை இருப்பதாகக்கூறுகிறீர்களே அதைப்பற்றியதுதான்.

காத்திருக்கிறேன்Dhantaayuthapaani

Posts : 32
Join date : 05/04/2012

Back to top Go down

அறம், பொருள், இன்பம், வீடு – இவையே தமிழ் வேதம். Empty Re: அறம், பொருள், இன்பம், வீடு – இவையே தமிழ் வேதம்.

Post by சேயோன் Fri Apr 06, 2012 5:28 pm

தீரன் WROTE:
தமிழும்,சமஸ்கிருதமும் நம் இரு கண்கள். தமிழ்ப் பற்றாளர்கள் என்போர் அதை அடுத்தவீட்டுப்பெண் என்றால் அது அறியாமைதானன்றி வேறல்ல.//மடப்பிடியோடு களிறு// வந்ததுகண்டு அவற்றை சிவனாகவும், சத்தியாகவும் கண்டதுதான் தமிழ் பக்தி, பக்கத்துவீட்டுப்பெண்ணையும் அம்மா என்றழைப்பது தமிழ்ப்பண்பாடு. உவமையோடு கூறவேண்டுமானால் தன் உடன்பிறந்தாளது குழந்தைகளைப் பேணிவளர்க்க விரும்பி தனக்கென்று குழந்தைபெறாதவள்தான் சமஸ்கிருதத் தாய்.

திரு.தீரன் அவர்கள் எழுதும் அனைத்துக் கட்டுரைகளையும் படித்து உள்ளேன். எல்லாம் சமஸ்கிருததிலிருந்து வந்ததுதான் என்று வலுக்கட்டாயமாக எல்லாவற்றையும் திரித்து வெளியிடுவார். கடைசியில் தனது சம்ஸ்கிருத சார்பு தெரிந்து விடக் கூடாது என்று தமிழும் சம்ஸ்கிருதமும் எனக்கு இரண்டு கண்கள் என்பார்.

படிக்கும் எல்லோருமே முட்டாள் என்று நினைப்பு வேண்டாம் நண்பரே!

‘தாய்க்கு’ விளக்கம் நீங்கள் சொல்லித் தர வேண்டாம். எல்லாம் எங்கள் பாட்டி (ஒளவையார்) முதல் இன்றைய பேரன் வரை உங்களுக்கும் உங்கள் சார்பு மொழிக்கும் சொல்லித் தருவார்கள்.

இங்கு உள்ள பிரச்சினையே பக்கத்து வீட்டு பெண்மணி என் வீட்டில் வந்து உட்கார்ந்து கொண்டு, “என்னைத்தான் நீ தாய் என்று அழைக்க வேண்டும் என்பதுதான்”.

உங்களுக்கு உங்கள் சார்பு மொழி பிடித்திருந்தால் ‘கெட்டியாக பிடித்துக்கொள்ளுங்கள். யார் வேண்டாம் என்று சொன்னது?. அடுத்தவரை நிர்ப்பந்திக்காதீர்கள்.

இது தீரன் அவர்களுக்கு எனது பணிவான வேண்டுகோள்

சேயோன்

Posts : 55
Join date : 01/03/2012

Back to top Go down

அறம், பொருள், இன்பம், வீடு – இவையே தமிழ் வேதம். Empty Re: அறம், பொருள், இன்பம், வீடு – இவையே தமிழ் வேதம்.

Post by svelan74 Fri Apr 06, 2012 7:05 pm

திரு சாமி அவர்களுக்கு,

"கோயிலில் மூலஸ்தானத்தில் உள்ள சிவனுக்கு தமிழ் வேதம்
கூறும் பெயர் என்ன?" என்ற என் கேள்விக்கு "கந்தழி மற்றும் நடுதறி என்ற வார்த்தைகள் உண்டு" என்று பதில் அளித்துள்ளீர்கள்.

கந்தழி மற்றும் நடுதறி என்ற வார்த்தைகள் மூலஸ்தானத்திலிருக்கும் சிவனைக் குறிக்கும் சொற்கள் என்பதற்கு சைவசமயச் சான்று தர முடியுமா? இவை இப்போதும் பயன்பாட்டில் இருக்கும் வார்த்தைகளா?

எனது இன்னொரு கேள்விக்கும் (பஞசாக்ஷரத்திற்கு தமிழ்வேதம் கூறும் பெயர் என்ன?)விடையெளிப்பீர்கள் என்று காத்திருக்கிறேன்.

செந்தில்

svelan74

Posts : 30
Join date : 31/07/2010

Back to top Go down

அறம், பொருள், இன்பம், வீடு – இவையே தமிழ் வேதம். Empty Re: அறம், பொருள், இன்பம், வீடு – இவையே தமிழ் வேதம்.

Post by சாமி Tue Apr 10, 2012 8:32 am

svelan74 wrote:தமிழ் வேதம் என்று தனியாக இருக்கும் பட்சத்தில், பஞ்சாக்ஷர
மந்திரத்திற்கு ஈடாக தமிழில் மந்திரம் உள்ளதா? அது என்ன?
செந்தில்

நண்பரே, எனது
'நமசிவய எனும் ஐந்தெழுத்து மந்திரம்'
புதிய பதிவைப் பாருங்கள். நன்றி!

சாமி
சாமி
நண்பர்கள்

Posts : 121
Join date : 15/02/2012

http://arundhtamil.blogspot.in

Back to top Go down

அறம், பொருள், இன்பம், வீடு – இவையே தமிழ் வேதம். Empty Re: அறம், பொருள், இன்பம், வீடு – இவையே தமிழ் வேதம்.

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum