Latest topics
» சித்திரை-நமது புத்தாண்டுத் தொடக்கம். by Dheeran Tue Apr 12, 2022 8:21 am
» மீண்டும் வருக
by Dheeran Fri Oct 02, 2020 11:08 am
» கே இனியவன் ஆன்மீக கவிதைகள்
by கே இனியவன் Thu Nov 09, 2017 7:58 pm
» தீபத்திருநாள் வாழ்த்துக்கள்
by Dheeran Wed Oct 18, 2017 4:01 pm
» பண்டைய இந்தியாவின் விமானத் தொழில் நுட்பம்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:23 pm
» வெற்றி மாபெரும் வெற்றி!
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:16 pm
» பாரதி பாடலில் அராஜக “செக்யுலர்” திருத்தங்கள் - ஜடாயு
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:55 pm
» மோடி, கருப்புப்பண ஒழிப்பு, ஊடகங்கள் - ஜெயமோகன்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:41 pm
» அனைவருக்கும் வணக்கம்.
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:46 am
» நான் ஒரு ஹிந்து என்பதில் ஏன் பெருமிதம் கொள்கிறேன் – பாகம் 1 AGNIVEER
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:42 am
» தேவையா இந்த சமஸ்கிருத துவேஷம்
by Dheeran Sat Jun 25, 2016 12:46 pm
» சிவ வழிபாடு புத்தகம்
by tammy ranga Thu Dec 17, 2015 3:37 am
» ஷ்ரிடி சாய் பாபா புண்ணிய வரலாறு தமிழில்
by tammy ranga Thu Dec 17, 2015 3:35 am
» ஆரிய திராவிட மாயை
by Dheeran Thu Oct 29, 2015 4:10 pm
» தென்புலத்தார் வழிபாடு
by Dheeran Sun Sep 27, 2015 8:50 pm
» தமிழ் ஹிந்துவும் இலவச ஜோதிட கணிப்பு
by ஹரி ஓம் Mon Aug 03, 2015 2:36 am
» வெற்றி வேல்!!!வீரவேல்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
by ஹரி ஓம் Wed Jun 24, 2015 4:09 am
» சிவதாண்டவம் - PB ஸ்ரீனிவாஸ்
by i.mahatheva Thu Jun 18, 2015 5:24 pm
» கால சர்ப்ப தோஷம் என்றால் என்ன?
by jothi sangeetha Thu May 21, 2015 1:43 pm
» மல்லிகைப் பூவை தலையில் சூடுங்கள் - பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்து
by கே இனியவன் Thu May 21, 2015 11:02 am
நான்மறைகள்-திரித்தல் வாதத்தின் மூலம் எது?
2 posters
இந்து சமயம் :: செய்திகள் :: கட்டுரைகள்
Page 1 of 1
நான்மறைகள்-திரித்தல் வாதத்தின் மூலம் எது?
"சைவஞ் சிவனுடன் சம்பந்த மாவது"
என்பது திருமூலரின் திருவாக்கு.
நம் சிவபெருமான் கயிலைவாசி. சைவர்களும் வடக்கு நோக்கியே பூசை செய்வர்; விழுந்து வணங்குவர் திருநீறும் அணிவர். தமிழ் ஓர் அற்புதமான மொழி, என்றாலும், அது ஒரு பிரதேசமொழியே அல்லாமல் பாரதம தழுவிய மொழியாக அமையவில்லை. சமஸ்கிருதம் தேச மொழியாகவே அமைந்த மொழி. ஆகவே தான் சிவபெருமான அனைத்தையும் தொடக்கத்தில்
தேசமொழியில் அருளி, அதன் பிறகே தமிழ் ஞானியர்மூலம் தமிழுக்குப் பெருமை சேர்த்திருக்கிறார்
தமிழ்நாட்டுச் சைவர்கள் இவ்விரு மொழிகளிலும் தேர்ச்சி பெற்றவர்களாகவே விளங்கி வந்திருக்கின்றனர். காளத்திக்கு எழுந்தருளிய ஞானப் பிள்ளையார் அத்தலத்தில் சிவனாரை வழிபட்ட பின்னர் வடக்குநோக்கிச் செல்லவில்லை.
"அங்கண்வட திசைமேலும் குடக்கின் மேலும்
அருந்தமிழின் வழக்கங்கு நிகழா தாகத்
திங்கள் புனை முடியார்தந் தானந் தோறும்
சென்றுதமிழ் இசைபாடுஞ் செய்கை போல
மங்கையுடன் வானவர்கள் போற்றி சைப்ப
வீற்றிருந்தார் வடகயிலை வணங்கிப் பாடிச்
செங்கமல மலர்வாவித் திருக்கே தாரம்
தொழுதுதிருப் பதிகஇசை திருத்தப் பாடி.
கூற்றுதைத்தார் மகிழ்ந்ததோ கரணம் பாடிக்
குலவுதிருப் பருப்பதத்தின் கொள்கை பாடி
ஏற்றின்மிசை வருவார்இந் திரன்றன் நீல
பருப்பதமும் பாடிமற்றி றைவர் தானம்
போற்றிசொன் மலர்மாலை பிறவும் பாடிப்
புகலியர்தம் பெருந்தகையார் புனித மாகும்
நீற்றின் அணிகோலத்துத் தொண்டர் சூழ
நெடிதுமகிழ்ந் தப்பதியில் நிலவு கின்றார்."
பாரததேசம் முழுமையும் பயன்பெற வேண்டும் என்றே சிவனார் திருவுள்ளம் பற்றி அவையிற்றை பாரததேச மொழியில் அருளியுள்ளார். இவைகளே மூல நூல்கள்.
சித்தியாருக்கு மேல் நூல் இல்லை என்பார்கள். அச்சித்தியார் கூறுதாவது:
"வேதநூல் சைவநூல் என்று இரண்டே நூல்கள்;
வேறு உரைக்கும் நூல் இவற்றின் விரிந்த நூல்கள்"
வேதநூல்களாவன இருக்கு, யஜுர், சாமம், அதர்வணம் என்ற நான்குமாகும். சைவநூல்கள் சிவாகமங்கள். வேதம் பொது என்பதும் சிவாகமம் சிறப்பு என்பதும் சைவர்தம் கொள்கை.
வேதநூல்கள் மேலே சொல்லப்பட்டனவே என்ற உண்மை, போற்றிப் பேணப்பட வேண்டிய ஒன்று. அங்ஙனமே ஆந்திர, கன்னட, கேரள தேசத்தாருக்கும் இவற்றுக்கு வடக்கே உள்ள பகுதிகளில் வாழ் மக்களுக்கும் அமைந்த கருத்தாகும். தமிழர்களும் இக்கருத்தையே போற்றி வந்தனர். தமிழருள் வைணவர்களும் இதில் எந்தவித ஐயப்பாடும் எந்தக் காலத்திலும் தோன்றியதில்லை. ஆனால் தமிழ்ச் சைவரில் ஒரு சிலருக்கு தேவையற்ற ஐயப்பாடு எழுந்தது நம்மவரின் தவக்குறைவு என்பது நிச்சயம். இவ்வையப்பாடும் சற்றேறக்குறைய எண்பது ஆண்டுகளுக்கு முன்புதான் தோற்றுவிக்கப்பட்டது. இந்நூதன கருத்தைத் தோற்றுவித்தவர்களுக்கு ஓர் உள்நோக்கம் உண்டு என்பது வெளிப்படை. தங்கள் நோக்கத்தை மறைக்கவே அவர்கள் பொருந்தாக் கூற்றுக்களை அவ்வக்காலங்களில் அழுத்தமாய்க்கூறி மக்களைக் குழப்பி இருக்கிறார்கள்.
"பல்லாவரம் சுவாமி வேதாசலம் அவர்கள், திருவாசகத்தில் போற்றித் திருவகவலுக்கு எழுதிய விரிவுரையில் "மூவர் நான்மறை முதல்வா போற்றி" யென்னும் 94 ஆம் அடியிலுள்ள மூவர் நான்மறை யென்ற சொற்றொடர், தொல்காப்பியம், இறையனார் அகப்பொருள், திருக்குறள், தேவாரம், சிவஞானபோதம் என்னும் நூல்களைக் குறிக்குமென்றும், வடமொழி நான்கு வேதங்களைக் குறிகா தென்றும் எழுதினார்கள். இதற்குப் பென்னம்பெரும் எதிர்ப்புத் தோன்றவே, தொடர்ந்து தாம் திருவாசகத்திற்கு உரை எழுதப் போவதாக அறிவித்த அவர், தாம் கொண்டிருந்த எண்ணத்தைக் கை நெகிழவிட்டார். ஆனாலும், அவர் தோற்றுவித்த மாயையில் சிக்கிய அன்பர் ஒருவர் வேதங்கள் தமிழ்மொழி வேதங்களே என்று நிறுவ முனைந்தார். அவர்தாம் கா.சு.பிள்ளையவர்கள், தர்க்கம் பயின்றிருந்த இவர் இதனை நம்பாமல் குதர்க்கத்திலும், விதர்க்கத்திலும், ஈடுபடத் தொடங்கினார்.
இவருக்கு முன்னவராக விளங்கியவரின் வழி அடைக்கப்பட்டுவிட்டது கண்டு, இவர் ஓர் நூதன மார்க்கபந்துவாக உருவெடுத்தார். சுவாமி வேதாசலமவர்கள் கொள்கைக்குத் தாம் உடம்பாடில்லாதவராய், நான்மறையென்று வேறு தமிழ்நூல்களென ஒரு கட்டுரை கட்டியெழுதி அதற்குத் திருநான்மறை விளக்கமெனப் பெயரிட்டு செந்தமிழ்ச் செல்வியில் பிரசுரித்திருக்கின்றார்.
அதன் கருத்தாவது, நந்தமிழ்நாட்டில் தமிழ் மக்கள் நால்வருக்குச் சிவபிரான் கல்லால மரத்தடியிலே, அறம், பொருள், இன்பம், வீடு என்னும் புருடார்த்தம் நான்கனையு முணர்ந்த, அந்தமிழ்ப் பெரியோர்கள் திருக்குறள் போன்று நான்மறையென்னும் பெயருடன் நூல்கள் தமிழிற் செய்திருந்தார்க ளென்பதும், அந்நூல்களுடன் ஆறங்கமுந் தமிழிலேயே அவர்கள் இயற்றினார்களென்பதும், அந்நூல்கள் முதற் சங்கத்திறுதியில் உண்டான கடல்கோளில் அச்சங்கத்தின் ஏனைய தமிழ்நூல்களுடன் இறந்து போயினவென்பதுவும், நமது சைவ சமயாசாரியார்கள் திருவுள்ளக்கருத்தும் அதுவேயென்பதுவுமாம்".
இங்ஙனம் இவர் மனமார உண்மையைப் புரட்டிவிட்டார். சிவாகமங்கள் கடலில் வீசப்பட்ட நிலையிலே, கேவேடர் ஆகி, கெளிறு அது படுத்தும்; மாவேட்டு ஆகிய ஆகமம் வாங்கியும் அருளினார் சிவபெருமான், என்ற உண்மை சமயாசாரியாராகிய மாணிக்கவாசகரால் கீர்த்தித் திருஅகவலில் அருளப்பட்டிருக்கிறது.
திருவாசகத்துக்கு உரை வரைந்த திரு.கா.சு.பிள்ளையவர்களுக்கு இந்த உண்மை தெரியாததன்று. ஆகவே பிள்ளையவர்களின் பொருந்தாக்கூற்று அசதியாடுதலுக்கு உரியது என்று உணர்ந்த சைவப்பிரசாரகரும், கவிப்புலவருமாகிய யாழ்ப்பாணத்து குமாரசாமி குருக்கள் அவர்கள் கீழ்வரும் கருத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்:
"வடமொழி தென்மொழிகளை ஒருங்கே தந்த ஈசன் கல்லாலின்கண் நால்வர்க்குபதேசித்த தமிழ்மறைகள் கடல் கோட்பட வடமொழி வேதசிவாகமங்களையே இத்தமிழுலகு கொள்ளத் திருவுள்ளம் பற்றினாராயின் அதனை மாற்றவல்ல சிருட்டி கர்த்தர் யாவரோ! ஆயினும் ஸ்ரீ.கா.சுப்பிரமணிய பிள்ளையவர்கள் அவனருள் வயத்தராய்ச் சாகரத் தாழ்ந்து தமிழ் மறைகளைக் கொணர்ந்து தமிழுலகுக்கீவரேல் அதனை விலக்கவல்லார் யாவரோ!"
மேற்கண்ட உரையானது
மா.சாம்பசிவபிள்ளை அவர்களின் திருநான்மறைவிளக்க ஆராய்ச்சி எனும் நூலுக்கு முதுமுனைவர் தி.ந.இராமச்சந்திரன்,டி.லிட்(யாழ்) அவர்கள் எழுதிய பதிப்புரையின் பகுதி ஆகும்.
ஆயிரமாயிரம் ஆண்டுகளாக வழங்கிவந்த நன்னெறியின் உண்மைத்தன்மையை சிலர் குழப்ப முற்படுவதின் மூலம் இதுதான்.
வான்முகில் வழாது பெய்க மலிவளஞ் சுரக்க
மன்னன் கோன்முறை யரசு செய்க குறைவிலா துயிர்கள் வாழ்க
நான்மறை யறங்க ளோங்க நற்றவம் வேள்வி மல்க
மேன்மைகொள் சைவநீதி விளங்குக வுலக மெல்லாம்."

Re: நான்மறைகள்-திரித்தல் வாதத்தின் மூலம் எது?
//தமிழ் ஓர் அற்புதமான மொழி, என்றாலும், அது ஒரு பிரதேசமொழியே அல்லாமல் பாரதம தழுவிய மொழியாக அமையவில்லை.//
உலகம் போற்றும் இறைமொழி தாய்த் தமிழுக்கு உங்களுடைய கூற்று பொருந்தாது என நினைக்கிறேன். உங்கள் தேடல் ஒருதலைபட்சமாக இருப்பதாக என் எண்ணம்.
உங்கள் முயற்சி வெற்றியடைய வாழ்த்துக்கள்.
உலகம் போற்றும் இறைமொழி தாய்த் தமிழுக்கு உங்களுடைய கூற்று பொருந்தாது என நினைக்கிறேன். உங்கள் தேடல் ஒருதலைபட்சமாக இருப்பதாக என் எண்ணம்.
உங்கள் முயற்சி வெற்றியடைய வாழ்த்துக்கள்.
Re: நான்மறைகள்-திரித்தல் வாதத்தின் மூலம் எது?
வாழ்த்துக்களுக்கு நன்றி திரு.ராஜ்,ரமேஷ் அவர்களே,
உலகம்போற்றும் தெய்வமொழி தமிழ் உண்மைதான்.
தமிழின் குழந்தை எனப்படும் மலையாளத்தைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள் வாழும் கேரளத்தின் உட்பகுதிகளில் வாழும் மலையாளிகள்கூட தமிழைப் புரிந்துகொள்வதில்லை. மற்ற மாநிலத்தவரைப்பற்றி சொல்லவேண்டியதில்லை. இது அனைவரும் அறிந்த உண்மை . அப்படியிருக்கும்போது எப்படி எனது தேடல் ஒருதலைப்பட்சமானதாகும்?
நன்றிகளுடன்
தீரன்.

Similar topics
» திருமுறையாசிரியர்கள் தம் திருவாக்கில் நான்மறைகள்
» யோகாசனங்கள் மூலம் குணமாகும் 10 நோய்கள்
» ஆகமம் – 2 - தமிழ் முனிவர்கள் மூலம் இறைவனால் வெளிப்படுத்தப்பட்டது
» தேனீக்கள் மூலம் அருள்வாக்கு தரும் அம்பிகை
» மூலம் ஆயில்யம். நட்சத்திரங்களால் பெண்களின் புகுந்த வீட்டிற்கு தீங்கு வருமா?
» யோகாசனங்கள் மூலம் குணமாகும் 10 நோய்கள்
» ஆகமம் – 2 - தமிழ் முனிவர்கள் மூலம் இறைவனால் வெளிப்படுத்தப்பட்டது
» தேனீக்கள் மூலம் அருள்வாக்கு தரும் அம்பிகை
» மூலம் ஆயில்யம். நட்சத்திரங்களால் பெண்களின் புகுந்த வீட்டிற்கு தீங்கு வருமா?
இந்து சமயம் :: செய்திகள் :: கட்டுரைகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum