இந்து சமயம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சித்திரை-நமது புத்தாண்டுத் தொடக்கம்.
by Dheeran Tue Apr 12, 2022 8:21 am

» மீண்டும் வருக
by Dheeran Fri Oct 02, 2020 11:08 am

» கே இனியவன் ஆன்மீக கவிதைகள்
by கே இனியவன் Thu Nov 09, 2017 7:58 pm

» தீபத்திருநாள் வாழ்த்துக்கள்
by Dheeran Wed Oct 18, 2017 4:01 pm

» பண்டைய இந்தியாவின் விமானத் தொழில் நுட்பம்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:23 pm

» வெற்றி மாபெரும் வெற்றி!
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:16 pm

» பாரதி பாடலில் அராஜக “செக்யுலர்” திருத்தங்கள் - ஜடாயு
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:55 pm

» மோடி, கருப்புப்பண ஒழிப்பு, ஊடகங்கள் - ஜெயமோகன்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:41 pm

» அனைவருக்கும் வணக்கம்.
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:46 am

» நான் ஒரு ஹிந்து என்பதில் ஏன் பெருமிதம் கொள்கிறேன் – பாகம் 1 AGNIVEER
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:42 am

» தேவையா இந்த சமஸ்கிருத துவேஷம்
by Dheeran Sat Jun 25, 2016 12:46 pm

» சிவ வழிபாடு புத்தகம்
by tammy ranga Thu Dec 17, 2015 3:37 am

» ஷ்ரிடி சாய் பாபா புண்ணிய வரலாறு தமிழில்
by tammy ranga Thu Dec 17, 2015 3:35 am

» ஆரிய திராவிட மாயை
by Dheeran Thu Oct 29, 2015 4:10 pm

» தென்புலத்தார் வழிபாடு
by Dheeran Sun Sep 27, 2015 8:50 pm

» தமிழ் ஹிந்துவும் இலவச ஜோதிட கணிப்பு
by ஹரி ஓம் Mon Aug 03, 2015 2:36 am

» வெற்றி வேல்!!!வீரவேல்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
by ஹரி ஓம் Wed Jun 24, 2015 4:09 am

» சிவதாண்டவம் - PB ஸ்ரீனிவாஸ்
by i.mahatheva Thu Jun 18, 2015 5:24 pm

» கால சர்ப்ப தோஷம் என்றால் என்ன?
by jothi sangeetha Thu May 21, 2015 1:43 pm

» மல்லிகைப் பூவை தலையில் சூடுங்கள் - பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்து
by கே இனியவன் Thu May 21, 2015 11:02 am

























Topsites
Tamil 10 top sites [www.tamil10 .com ]
Ranking


வேதம் = தூய தமிழ்ச் சொல்

+2
சேயோன்
சாமி
6 posters

Go down

வேதம் = தூய தமிழ்ச் சொல் Empty வேதம் = தூய தமிழ்ச் சொல்

Post by சாமி Tue Apr 10, 2012 5:37 pm

வே என்பது ஓரெழுத்து வேர்ச் சொல்.

அதிலிருந்து வேதல், வேய்தல், வேலி போன்றச் சொற்கள் கிளைத்து எழும்.
வேகவைக்கும்போது பாத்திரத்தின் மேலே ஒரு தட்டை வைத்து மூடுவோம்.
கூரை வேயும் போது சுவர்களின் மீது ஓலை, ஓடு போன்றவற்றால் மூடுவோம்.
ஒரு குறிப்பிட்ட நிலப்பரப்பை மற்றவரிடமிருந்து மறைக்க இடும் அமைப்பை வேலி என்கிறோம்.

அது போல பல உள்ளுறைகளை மறைத்து மூடிச் சொல்வதை வேதம் என்று ஆன்றோர் கூறினர். வேய்ந்தது வேதம் எனப்பட்டது. ஆகவே அது தூய தமிழ் வேர் ஒன்றினைக் கொண்ட தூய தமிழ்ச் சொல்.

இவ்வாறு பல உயரிய உள்ளுறைகளை மறைத்துக் கூறிய மறை - வேதம் என்பன தமிழில் பண்டைய காலம்தொட்டே இருந்துவருகின்றன. இதனை மணிவாசகர் ‘பண்டாய நான்மறை’ என்று குறிப்பிடுகிறார். ‘சதாசிவம் தத்துவம் முத்தமிழ் வேதம்' என்று திருமூலர் எடுத்துக் கூறுகிறார்.
சாமி
சாமி
நண்பர்கள்

Posts : 121
Join date : 15/02/2012

http://arundhtamil.blogspot.in

Back to top Go down

வேதம் = தூய தமிழ்ச் சொல் Empty Re: வேதம் = தூய தமிழ்ச் சொல்

Post by சேயோன் Wed Apr 11, 2012 8:14 am

சாமி wrote:வே என்பது ஓரெழுத்து வேர்ச் சொல்.
பல உள்ளுறைகளை மறைத்து மூடிச் சொல்வதை வேதம் என்று ஆன்றோர் கூறினர். வேய்ந்தது வேதம் எனப்பட்டது. ஆகவே அது தூய தமிழ் வேர் ஒன்றினைக் கொண்ட தூய தமிழ்ச் சொல்.

நன்றி நண்பரே!
வேதம் என்பதற்கான தெளிவு பெற்றேன்.

சேயோன்

Posts : 55
Join date : 01/03/2012

Back to top Go down

வேதம் = தூய தமிழ்ச் சொல் Empty Re: வேதம் = தூய தமிழ்ச் சொல்

Post by ஹரி ஓம் Wed Apr 11, 2012 2:38 pm

நன்றி தெரிந்து கொண்டேன்
ஹரி ஓம்
ஹரி ஓம்
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

Posts : 922
Join date : 03/08/2010
Age : 38
Location : கன்னியாகுமரி

Back to top Go down

வேதம் = தூய தமிழ்ச் சொல் Empty Re: வேதம் = தூய தமிழ்ச் சொல்

Post by svelan74 Fri Apr 13, 2012 5:28 pm

திரு சாமி அவர்களுக்கு,

தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

தங்களின் இந்த பதிவில் ஒரு ஐயம். வேதம் என்பது தமிழ்ச் சொல் என்றால் வேதாசலம் என்ற தன் பெயரை மறைமலை அடிகள் ஏன் மறைமலை என்று மாற்றிக் கொண்டார்? வேதமலை என்றே வைத்திருக்கலாமே??

‘சதாசிவம் தத்துவம் முத்தமிழ் வேதம்' என்று திருமூலர் கூறியதில் சதாசிவம் என்பதும் தத்துவம் என்பதும் தமிழ்ச் சொற்கள் தானா?

செந்தில்

svelan74

Posts : 30
Join date : 31/07/2010

Back to top Go down

வேதம் = தூய தமிழ்ச் சொல் Empty Re: வேதம் = தூய தமிழ்ச் சொல்

Post by சேயோன் Fri Apr 13, 2012 10:22 pm

svelan74 wrote:திரு சாமி அவர்களுக்கு,
தங்களின் இந்த பதிவில் ஒரு ஐயம். வேதம் என்பது தமிழ்ச் சொல் என்றால் வேதாசலம் என்ற தன் பெயரை மறைமலை அடிகள் ஏன் மறைமலை என்று மாற்றிக் கொண்டார்? வேதமலை என்றே வைத்திருக்கலாமே??
செந்தில்

மறைமலை அடிகளைக் கேட்க வேண்டிய கேள்வி என்று நினைக்கிறேன்.
கணேசா, செந்தில் ஆண்டவா, தண்டாயுதபாணி.... தீரனாக நண்பர் குட்டையைக் குழப்ப வேண்டும் என்றே திரிகிறாரே... புத்திமதி சொல்லக் கூடாதா.

நண்பரே இதற்கும் என்னைப்பாராட்ட வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்.

சேயோன்

Posts : 55
Join date : 01/03/2012

Back to top Go down

வேதம் = தூய தமிழ்ச் சொல் Empty Re: வேதம் = தூய தமிழ்ச் சொல்

Post by svelan74 Sat Apr 14, 2012 11:26 am

திரு சேயோன் அவர்களே,

இங்கும் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதிலிடாமல் வேறெங்கோ செல்கிறீரே?? விளக்கமாக கூறுகிறேன்.

தனித்தமிழ் இயக்கம் கண்ட மறைமலை அடிகளே "வேதம்" தமிழ்ச்சொல்லாக இருந்திருந்தால் வேதாசலம் என்று தன் தந்தையார் இட்ட பெயரை வேதமலை என்றே வைத்திருப்பாரே ஆக வேதம் தமிழ்ச் சொல் இல்லை என்பது தான் கருத்து.

மறைமலை அடிகளிடம் கேட்க வேண்டிய கேள்வி என்கிறீர்கள். ஒப்புக் கொள்கிறேன். தாங்கள் இட்ட பதிவிலிருந்து தங்களிடம் கேட்ட கீழ்கண்ட கேள்விக்கு பதில் அளிப்பீர்களா?

‘சதாசிவம் தத்துவம் முத்தமிழ் வேதம்' என்று திருமூலர் கூறியதில் சதாசிவம் என்பதும் தத்துவம் என்பதும் தமிழ்ச் சொற்கள் தானா?

தமிழும் வடமொழியும் இரண்டற கலந்தது..அவற்றை பிரிக்க எண்ணியும் சைவசமயத்தில் குழப்பம் விளைவிக்கவும் ஆதாரமற்ற/ஆராய்சியுமற்ற செய்திகளை நாம் புறம் தள்ள வேண்டும் என்பதே வேண்டுகோள்.

செந்தில்

svelan74

Posts : 30
Join date : 31/07/2010

Back to top Go down

வேதம் = தூய தமிழ்ச் சொல் Empty Re: வேதம் = தூய தமிழ்ச் சொல்

Post by நடத்துனர் Sat Apr 14, 2012 12:54 pm

svelan74 wrote:தமிழும் வடமொழியும் இரண்டற கலந்தது..அவற்றை பிரிக்க எண்ணியும் சைவசமயத்தில் குழப்பம் விளைவிக்கவும் ஆதாரமற்ற/ஆராய்சியுமற்ற செய்திகளை நாம் புறம் தள்ள வேண்டும் என்பதே வேண்டுகோள்.
ஆளும் அரசியல்வாதிகள் தங்கள் சுயநலத்துக்காக இது போல பிரித்தாளும் சூழ்ச்சிகளை கையாண்டு இன்று தமிழ் , வடமொழி என்று இரு எல்லைகளுக்கு தள்ளபட்டுள்ளோம்

நடத்துனர்

Posts : 49
Join date : 31/07/2010

Back to top Go down

வேதம் = தூய தமிழ்ச் சொல் Empty Re: வேதம் = தூய தமிழ்ச் சொல்

Post by பத்மநாபன் Sun Apr 15, 2012 8:53 am

சாமி wrote:வே என்பது ஓரெழுத்து வேர்ச் சொல்.
அதிலிருந்து வேதல், வேய்தல், வேலி போன்றச் சொற்கள் கிளைத்து எழும்.
வேகவைக்கும்போது பாத்திரத்தின் மேலே ஒரு தட்டை வைத்து மூடுவோம்.
கூரை வேயும் போது சுவர்களின் மீது ஓலை, ஓடு போன்றவற்றால் மூடுவோம்.
ஒரு குறிப்பிட்ட நிலப்பரப்பை மற்றவரிடமிருந்து மறைக்க இடும் அமைப்பை வேலி என்கிறோம்.
அது போல பல உள்ளுறைகளை மறைத்து மூடிச் சொல்வதை வேதம் என்று ஆன்றோர் கூறினர். வேய்ந்தது வேதம் எனப்பட்டது. ஆகவே அது தூய தமிழ் வேர் ஒன்றினைக் கொண்ட தூய தமிழ்ச் சொல்.
இவ்வாறு பல உயரிய உள்ளுறைகளை மறைத்துக் கூறிய மறை - வேதம் என்பன தமிழில் பண்டைய காலம்தொட்டே இருந்துவருகின்றன. இதனை மணிவாசகர் ‘பண்டாய நான்மறை’ என்று குறிப்பிடுகிறார். ‘சதாசிவம் தத்துவம் முத்தமிழ் வேதம்' என்று திருமூலர் எடுத்துக் கூறுகிறார்.

அருமையான விளக்கம். நன்றி
பத்மநாபன்
பத்மநாபன்

Posts : 28
Join date : 05/04/2012

Back to top Go down

வேதம் = தூய தமிழ்ச் சொல் Empty Re: வேதம் = தூய தமிழ்ச் சொல்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum