இந்து சமயம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சித்திரை-நமது புத்தாண்டுத் தொடக்கம்.
by Dheeran Tue Apr 12, 2022 8:21 am

» மீண்டும் வருக
by Dheeran Fri Oct 02, 2020 11:08 am

» கே இனியவன் ஆன்மீக கவிதைகள்
by கே இனியவன் Thu Nov 09, 2017 7:58 pm

» தீபத்திருநாள் வாழ்த்துக்கள்
by Dheeran Wed Oct 18, 2017 4:01 pm

» பண்டைய இந்தியாவின் விமானத் தொழில் நுட்பம்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:23 pm

» வெற்றி மாபெரும் வெற்றி!
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:16 pm

» பாரதி பாடலில் அராஜக “செக்யுலர்” திருத்தங்கள் - ஜடாயு
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:55 pm

» மோடி, கருப்புப்பண ஒழிப்பு, ஊடகங்கள் - ஜெயமோகன்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:41 pm

» அனைவருக்கும் வணக்கம்.
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:46 am

» நான் ஒரு ஹிந்து என்பதில் ஏன் பெருமிதம் கொள்கிறேன் – பாகம் 1 AGNIVEER
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:42 am

» தேவையா இந்த சமஸ்கிருத துவேஷம்
by Dheeran Sat Jun 25, 2016 12:46 pm

» சிவ வழிபாடு புத்தகம்
by tammy ranga Thu Dec 17, 2015 3:37 am

» ஷ்ரிடி சாய் பாபா புண்ணிய வரலாறு தமிழில்
by tammy ranga Thu Dec 17, 2015 3:35 am

» ஆரிய திராவிட மாயை
by Dheeran Thu Oct 29, 2015 4:10 pm

» தென்புலத்தார் வழிபாடு
by Dheeran Sun Sep 27, 2015 8:50 pm

» தமிழ் ஹிந்துவும் இலவச ஜோதிட கணிப்பு
by ஹரி ஓம் Mon Aug 03, 2015 2:36 am

» வெற்றி வேல்!!!வீரவேல்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
by ஹரி ஓம் Wed Jun 24, 2015 4:09 am

» சிவதாண்டவம் - PB ஸ்ரீனிவாஸ்
by i.mahatheva Thu Jun 18, 2015 5:24 pm

» கால சர்ப்ப தோஷம் என்றால் என்ன?
by jothi sangeetha Thu May 21, 2015 1:43 pm

» மல்லிகைப் பூவை தலையில் சூடுங்கள் - பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்து
by கே இனியவன் Thu May 21, 2015 11:02 am

Topsites
Tamil 10 top sites [www.tamil10 .com ]
Ranking

திராவிடமும் தமிழும் ஆரியமும்-பொய்களால் உண்மையை மறைக்கமுடியாது.

+2
tmm_raj_ramesh
Dheeran
6 posters

Go down

திராவிடமும் தமிழும் ஆரியமும்-பொய்களால் உண்மையை மறைக்கமுடியாது. Empty திராவிடமும் தமிழும் ஆரியமும்-பொய்களால் உண்மையை மறைக்கமுடியாது.

Post by Dheeran Tue Apr 17, 2012 1:05 am

அனைவருக்கும் வணக்கம் நமது தளத்தில் தமிழ், சமஸ்கிருதம், மற்றும் நமது தர்மத்தின் அடிப்படையான வேதம், ஆகமம் ,திருமுறைகள் ஆகியவற்றைப்பற்றிய மாறுபட்ட கருத்துக்கள் அலசப்படுகின்றன. இந்தப்பதிவுகளில், சில அன்பர்கள் திரும்பதிரும்ப வலியுறுத்தி நிறுவ விரும்புவது.

1) தமிழர் வேறு ஆரியர் வேறு
2) தமிழும் சமஸ்கிருதமும் பகை மொழிகள்
3) தமிழ் சான்றோர்கள் சமஸ்கிருதத்தைப் புறக்கணித்தனர்
4) சமஸ்கிருதத்தில் உள்ள வேத நெறியும் தமிழர்களுடைய வாழ்வியல் நெறியும் மாறுபட்டவை
5) தமிழர்களுக்கென்று (தமிழ்பேசும் ஹிந்துக்களுக்கு மட்டும்) தனிப்பட்ட வேதம் உள்ளது

என்பதுபோன்ற ஆதாரமற்ற கற்பனைகளைத்தான்

1) தமிழர் வேறு ஆரியர் வேறு

உண்மையிலேயே நமது தமிழ் அன்பர்கள் சிலர் சமஸ்கிருதம் அயலர்மொழி என்றும் இந்தியாவில் ஆரியர் திராவிடர் எனும் இரு இனங்கள் உள்ளன என்றும் இதில் ஆரிய இனம் திராவிட இனத்தை அடிமைப்படுத்தியது என்றும் நம்புகின்றனர்.

இந்த நம்பிக்கைக்குக் காரணம் நமக்கு சொல்லிக்கொடுக்கப்பட்ட பொய் வரலாறு. இந்தப்பொய் உறுதியான பல ஆதாரங்கள் மூலம் தகர்க்கப்பட்டும் இன்னும் நமது புத்தகங்களில் மாற்றப்படாமல் உள்ளது. அதற்குக்காரணம் நமது நாட்டை ஆளும் காங்கிரசும் , இந்துக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்துவிடுவார்களோ என்று அஞ்சும் இடதுசாரிகளும், சுயநலவாதிகளான நாத்திகவாதிகளும், மொழிப்பற்றையும், இனப்பற்றையும் திசைதிருப்பி பிழைப்புநடத்தும் திராவிட கட்சிகளும் அவர்களுக்குப் படியளந்த ,அளக்கும் தோழர்களான கிருத்துவ மிஷனரிகளும் தான்.

இந்தப் பொய்பிரச்சாரத்தின் வேர் ஜெர்மானியர்களின் இனப்பெருமிதம் எனும் கோட்பாட்டில் ஆரம்பித்து பிரித்தாளுவதற்காக ஆங்கிலேயரால் வளர்க்கப்பட்டு, இன்று சுயநலத்துக்காக, ,திராவிடரை முன்னேற்ற கடலில் விழுவதாகக் கூறுபவர்கள் முதற்கொண்டு நாத்திகவாதிகள் மிஷனரிகள் என்று பலதரப்பட்ட தன்னலவாதக் கும்பல்களால் பேணப்படுகிறது. இதற்கு சில அப்பாவி ஆன்மீகவாதிகளும் பொதுமக்களும் பலியாகிவிடுவதுதான் மிகப்பெரிய வேதனை.
மேலும் தெரிந்துகொள்ள

The Myth of Aryan Invasion theary
Death of Aryan invasion theary
Aryan Invasion — History or Politics?

இந்த ஆரிய திராவிட பிரிவினையை தமிழகத்தில் இருந்தவர்கள் அரசியல் ஆதயத்துக்காகப் பயன்படுத்திக்கொண்டனர் தமிழரிடம் தாழ்வு மனப்பான்மையை ஏற்படுத்தினர் அவர்கள் தம்மை தமிழினக் காவலர்களாகக் காட்டிக்கொண்டனர்.

அந்த தாழ்வுமனப்பான்மையின் வெளிப்பாடுதான்

// ஆரியர்களுக்கு தயிர், மோர், வெண்ணை எல்லாம் தெரியாது அதற்குபதிலாக சாணத்தையும் கோமியத்தையும் பஞ்சகாவ்யத்தில் சேர்துவிட்டனர்//

// அகத்தியர் ஆரியன்,அவர் தமிழைத் திருடினார்//

என்பதுபோன்ற எண்ணற்ற பிதற்றல்கள்,

உண்மை என்னவென்றால் சமஸ்கிருதம் ஒரு இனத்தின், ஜாதியின் மொழி அல்ல.

2) தமிழும் சமஸ்கிருதமும் பகை மொழிகள்

எக்காலத்திலும் மொழிகள் தானாக கத்தியெல்லாமெடுத்து சண்டைப்போடா. இனங்களுக்குள் நடக்கும் மோதலில் மொழிகளின் ஆதிக்கம் வரலாம் இங்கு சமஸ்கிருதம் பொது மொழியாகவே இருந்துள்ளது இந்திய மொழிகள் அனைத்துடனும் கலந்துள்ளது. அனைத்து இனத்தவரும் அப்பொதுமொழியை வளப்படுத்தி உள்ளனர். ஆகவே இக்கருத்து பொய்யானது.

3) தமிழ் சான்றோர்கள் சமஸ்கிருதத்தைப் புறக்கணித்தனர்

நாத்திகர்களின் பொருளற்றவாதம் எடுபடாதநிலையில் ஆத்திகர்களின்போர்வையில் நடத்தும் பொய்ப்பிரச்சாரம் இது

முதலில் தமிழ் உயர்ந்தது என்பார்கள், அதற்கு ஆதாரமாக சமய ஆன்றோர்கள் தமிழை சிறப்பித்துக் கூறியதைப்போட்டுவிட்டு. பார்த்தீர்களா அவர்கள் வடமொழியை புறக்கணித்தனர் என்பர். அவர்கள் அவ்வாறு வடமொழியைத் தள்ளவில்லையே என்று கேட்டால் நம்மை வடமொழி ஆதரவாளன் என முத்திரை குத்தி வாதத்தை திசைதிருப்புவர்.

சான்றோர்கள் வேதம் முதலான சமஸ்கிருத நூல்களின் சிறப்பை கூறும் பாக்களை மேற்கோள் காட்டினால் அவர்கள் கூறியது மறை, மறைவேறு வேதம் வேறு என்பர் பிறகு // வேதம் தமிழ்வார்த்தை// என்பார்கள் அதற்க்குப் பொருத்தமில்லாத இலக்கணமும் எழுதுவார்கள். யாராவது பகுத்தறிவோடு கேள்விகேட்டால் வசைமாரிதான். ஆனால் கேட்ட கேள்விகளுக்கு பதில்கள் மட்டும் வரவே வராது. உண்மையில் தமிழை அழிப்பவர்கள் யார் என்று அனைத்து தமிழரும் தம்மைத்தாமே கேட்டுக்கொண்டால் நல்லது. "அவலை நினைத்து உரலை இடிப்பது" என்பது இதுதான்.

4) சமஸ்கிருதத்தில் உள்ள வேத நெறியும் தமிழர்களுடைய வாழ்வியல் நெறியும் மாறுபட்டவை
5) தமிழர்களுக்கென்று (தமிழ்பேசும் ஹிந்துக்களுக்கு மட்டும்) தனிப்பட்ட வேதம் உள்ளது

கடைசியாக இங்குவந்து நிற்பார்கள் இதன் பிண்ணனி தமிழரை மற்ற ஹிந்துக்களிடமிருந்து பிரிப்பது இதற்குத், தலைவர்கள்,, பகுத்தறிவு பகலவன்கள் என்று நாத்திகவாதிகளை துணைக்கு வைத்துக்கொள்வார்கள். இந்த இடம்தான் சாயம் வெளுத்து வேடம் வெளிப்படுமிடம். திருமுறைகளுக்கும் நாத்திகர்களுக்கும் என்ன தொடர்பு. அவர்களை பந்திக்கே கூப்பிடவில்லை இங்குவந்து இலைஓட்டை என்றால்எப்படி?

ஆன்மிக அன்பர்களுக்கு நாம் விடுக்கும் வேண்டுகோள் "நாம் அனைவரும் உயர்ந்த ஞான பரம்பரையின் வாரிசுகள், அதன் மூலம், இந்தியாவெங்கும் பரவி இருக்கிறது. வேதமும் வடமொழியும் நமது சொந்த சொத்துகள், இந்த உண்மையை மறக்கவேண்டாம்" நமக்கு இங்கு வீரத்துறவி விவேகானந்தர் நல்லதொரு வழிகாட்டி.

வானவன்காண் வானவர்க்கு மேலா னான்காண்
வடமொழியுந் தென்றமிழும் மறைகள் நான்கும்
ஆனவன்காண் ஆனைந்தும் ஆடி னான்காண்
ஐயன்காண் கையிலனல் ஏந்தி யாடும்
கானவன்காண் கானவனுக் கருள்செய் தான்காண்
கருதுவார் இதயத்துக் கமலத் தூறும்
தேனவன்காண் சென்றடையாச் செல்வன் றான்காண்
சிவனவன்காண் சிவபுரத் தெஞ்செல்வன் தானே.- திருச்சிவபுரம்

மூரி முழங்கொலிநீ ரானான் கண்டாய்
முழுத்தழல்போல் மேனி முதல்வன் கண்டாய்
ஏரி நிறைந்தனைய செல்வன் கண்டாய்
இன்னடியார்க் கின்பம் விளைப்பான் கண்டாய்
ஆரியன் கண்டாய் தமிழன் கண்டாய்
அண்ணா மலையுறையெம் அண்ணல் கண்டாய்
வாரி மதகளிறே போல்வான் கண்டாய்
மறைக்காட் டுறையும் மணாளன் தானே.-திருமறைக்காடு

மாசற்ற சோதி மலர்ந்த மலர்ச்சுடரே
தேசனே தேனா ரமுதே சிவபுரனே
பாசமாம் பற்றறுத்துப் பாரிக்கும் ஆரியனே-திருவாசகம்

இப்பாடல்களை நன்றாக ஆராய்ந்தால் மேற்கண்ட உண்மைகள் விளங்கும்.

Last edited by Dheeran on Sat Apr 21, 2012 6:43 pm; edited 1 time in total
Dheeran
Dheeran
நண்பர்கள்

Posts : 148
Join date : 12/10/2011
Age : 52
Location : கோவை

http://dheeranstalwart.blogspot.in/

Back to top Go down

திராவிடமும் தமிழும் ஆரியமும்-பொய்களால் உண்மையை மறைக்கமுடியாது. Empty Re: திராவிடமும் தமிழும் ஆரியமும்-பொய்களால் உண்மையை மறைக்கமுடியாது.

Post by tmm_raj_ramesh Tue Apr 17, 2012 12:40 pm

தீரன் ஐயா.
விளக்கத்திற்கு நன்றி.

ஒவ்வொரு முறையும் உங்கள் விளக்கத்தின் உள்நோக்கம் என்ன என்றால் தமிழ் ஒரு இனத்தின் மொழி. ஆனால் சமக்கிருதம் சர்வேதச மொழி என்று வாதிடுகிறீர்கள்.

உங்களுடைய மொழியை உயர்த்த மற்ற மொழிகளை தாழ்த்தாதீர்கள்.

பெற்றோர்களுக்கு அவரவர் பிள்ளைகள் அழகானவர்கள் தான்.
முன்னோர்களின் சொத்துக்களுக்கு எப்படி நாம் வாரிசாகிறோமோ அதேபோல் தான் அவர்களின் மொழிகளுக்கும் நாம் தான் வாரிசு. அவர்களின் அடையாளங்களை நாம் போற்றி காப்பது நம் கடமை.

இந்து மதம் உயிராய் பிறந்த அனைவற்றிருக்கும் பொது சொந்தம். அதை மொழி வெறியால் பிரித்து விடாதீர்கள்.

tmm_raj_ramesh
நண்பர்கள்

Posts : 167
Join date : 02/03/2012
Age : 48
Location : thirumangalam திருமங்கலம்

http://vedhajothidam.blogspot.in

Back to top Go down

திராவிடமும் தமிழும் ஆரியமும்-பொய்களால் உண்மையை மறைக்கமுடியாது. Empty Re: திராவிடமும் தமிழும் ஆரியமும்-பொய்களால் உண்மையை மறைக்கமுடியாது.

Post by Dheeran Tue Apr 17, 2012 1:39 pm

வணக்கம் நண்பர் திரு.ராஜ்,ரமேஷ், அவர்களே,

எனது பதிவு எதிலும் தமிழ்மொழியை தாழ்த்தி சொல்லவே இல்லையே?

//வடமொழியுந் தென்றமிழும் மறைகள் நான்கும்
ஆனவன்காண் //

எனும் பாடலை மேற்கோள் காட்டும்பொழுது அது தமிழைதத் தாழ்த்துவதாகுமா?

இறைவனை வடமொழியும்,தமிழுமாக ஆனவன் என்று சான்றோர் கூறும்பொழுது அவர்தம் வழியை பின்பற்றும்நாம் இவற்றில் எதைத் தாழ்த்தினாலும் அது இறைவனை தூற்றியதாகாதா? இதுதான் என் கேள்வி.

நன்பரே தமிழ்மொழியை நாம் எங்கும் தாழ்த்தியதே இல்லை. நமக்கு மொழிப்பற்று உண்டு நண்பரே அதுவும் தமிழ்மொழிப் பற்றுதான். அதன் விளைவுதான் இத்தனை பதிவுகளும். ஆனால் நமக்கு மொழி வெறி கிடையாது நம்மத்தவிர அனைவரும் காட்டுமிராண்டிகள் எனக்கூறுவதுதான் மொழிப்பற்று என்று ஒரு இலக்கணம் இருக்குமானால் , தன் மொழி இலக்கணத்தையே விதண்டவாதத்துக்கு துணையாக வளைக்கலாம் என்பதுதான் மொழிப்பற்று என்றால். அந்தத்தன்மையைக்கொண்ட மொழிப்பற்று எனக்கு இல்லை.

நண்பரே மொழிப்பற்று எனும் போர்வைபோர்த்தி தமிழனின் பாரம்பரியத்தைக் குலைக்கமுயலும் முயற்சிகளைத்தான் நாம் இங்கு ஆதாரங்களுடன் மறுத்துவருகிறோம்.

தங்களுக்கு மனமார்ந்த நன்றிகள்.

,
Dheeran
Dheeran
நண்பர்கள்

Posts : 148
Join date : 12/10/2011
Age : 52
Location : கோவை

http://dheeranstalwart.blogspot.in/

Back to top Go down

திராவிடமும் தமிழும் ஆரியமும்-பொய்களால் உண்மையை மறைக்கமுடியாது. Empty Re: திராவிடமும் தமிழும் ஆரியமும்-பொய்களால் உண்மையை மறைக்கமுடியாது.

Post by tmm_raj_ramesh Tue Apr 17, 2012 2:33 pm

தீரன் ஐயா.
விளக்கத்திற்கு நன்றி.

"நாம் அனைவரும் உயர்ந்த ஞான பரம்பரையின் வாரிசுகள், அதன் மூலம், உலகமெங்கும் பரவி இருக்கிறது. வேதமும் தமிழ் மொழியும் நமது சொந்த சொத்துகள், இந்த உண்மையை மறக்கவேண்டாம்"

இந்த வார்த்தை மாற்றத்தைத்தான் எதிர்பார்க்கிறோம் இது சரியா தவறா என்பதில்லை வாதம். இப்படி ஏன் இருக்கக்கூடாது என்பது தான்.

tmm_raj_ramesh
நண்பர்கள்

Posts : 167
Join date : 02/03/2012
Age : 48
Location : thirumangalam திருமங்கலம்

http://vedhajothidam.blogspot.in

Back to top Go down

திராவிடமும் தமிழும் ஆரியமும்-பொய்களால் உண்மையை மறைக்கமுடியாது. Empty Re: திராவிடமும் தமிழும் ஆரியமும்-பொய்களால் உண்மையை மறைக்கமுடியாது.

Post by Dheeran Wed Apr 18, 2012 2:54 pm

நன்றி நண்பரே.
Dheeran
Dheeran
நண்பர்கள்

Posts : 148
Join date : 12/10/2011
Age : 52
Location : கோவை

http://dheeranstalwart.blogspot.in/

Back to top Go down

திராவிடமும் தமிழும் ஆரியமும்-பொய்களால் உண்மையை மறைக்கமுடியாது. Empty Re: திராவிடமும் தமிழும் ஆரியமும்-பொய்களால் உண்மையை மறைக்கமுடியாது.

Post by சேயோன் Thu Apr 19, 2012 11:47 pm

Dheeran wrote:
1) தமிழர் வேறு ஆரியர் வேறு , 2) தமிழும் சமஸ்கிருதமும் பகை மொழிகள்
3) தமிழ் சான்றோர்கள் சமஸ்கிருதத்தைப் புறக்கணித்தனர், 4) சமஸ்கிருதத்தில் உள்ள வேத நெறியும் தமிழர்களுடைய வாழ்வியல் நெறியும் மாறுபட்டவை
5) தமிழர்களுக்கென்று (தமிழ்பேசும் ஹிந்துக்களுக்கு மட்டும்) தனிப்பட்ட வேதம் உள்ளது
என்பதுபோன்ற ஆதாரமற்ற கற்பனைகளைத்தான்

மாசற்ற சோதி மலர்ந்த மலர்ச்சுடரே
தேசனே தேனா ரமுதே சிவபுரனே
பாசமாம் பற்றறுத்துப் பாரிக்கும் ஆரியனே.

பதப்பொருள்:
மாசற்ற சோதி மலர்ந்த – களங்கமற்ற சோதியாகிய மரத்தில் பூத்த,
மலர்ச்சுடரே – பூப்போன்ற சுடரே
தேசனே – குருமூர்த்தியே
தேனா – தேனே
ஆரமுதே – அரிய அமுதே
சிவபுரனே – சிவபுரத்தையுடையோனே
பாசமாம் பற்றறுத்துப் – பாசமாகிய தொடர்பையறுத்து
பாரிக்கும் – காக்கின்ற
ஆரியனே – ஆசிரியனே
இங்கு குறிப்பிடப்படும் ஆரியன் சாதியைக் குறித்தல்ல. ஆசிரியன் என்ற பொருளைக்குறித்தது.

உம்ம உளறலுக்கு ஒரு அளவேயில்லையா? நீர் குறிப்பிட்டிருக்கும் மற்றப் பாடல்களுக்கும் நீர் காழ்ப்புணர்ச்சியுடன் புரிந்து கொண்டிருக்கும் அர்த்தம் வேறு. உண்மை வேறு.

எல்லாத்தையும் மாத்தி மாத்தி சொன்னா கேக்கறவன்லாம் கேனையனா?
நீர் சொல்வது எல்லாமே ரீல் என்பது படிக்கும் அனைவருக்குமே தெரியும். திரும்ப திரும்ப சொல்வதால் உங்களுடைய வடிகட்டுன பொய் உண்மையாகிவிடாது நண்பரே.

சேயோன்

Posts : 55
Join date : 01/03/2012

Back to top Go down

திராவிடமும் தமிழும் ஆரியமும்-பொய்களால் உண்மையை மறைக்கமுடியாது. Empty Re: திராவிடமும் தமிழும் ஆரியமும்-பொய்களால் உண்மையை மறைக்கமுடியாது.

Post by Dheeran Sat Apr 21, 2012 12:58 am

சேயோன் wrote:

ஆரியனே – ஆசிரியனே
இங்கு குறிப்பிடப்படும் ஆரியன் சாதியைக் குறித்தல்ல. ஆசிரியன் என்ற பொருளைக்குறித்தது.

உம்ம உளறலுக்கு ஒரு அளவேயில்லையா? நீர் குறிப்பிட்டிருக்கும் மற்றப் பாடல்களுக்கும் நீர் காழ்ப்புணர்ச்சியுடன் புரிந்து கொண்டிருக்கும் அர்த்தம் வேறு. உண்மை வேறு.

எல்லாத்தையும் மாத்தி மாத்தி சொன்னா கேக்கறவன்லாம் கேனையனா?
நீர் சொல்வது எல்லாமே ரீல் என்பது படிக்கும் அனைவருக்குமே தெரியும். திரும்ப திரும்ப சொல்வதால் உங்களுடைய வடிகட்டுன பொய் உண்மையாகிவிடாது நண்பரே.

வணக்கம் திரு சேயோன் அவர்களே...

எனது பதிவைப் படித்துவிட்டு கருத்திட்டமைக்கு நன்றிகள் பல.

எனது பதிவுகளை உளறல் எனக்கூறிவிட்டு நான் வலியுறுத்திவரும் ஆரியன் என்றால் சாதியைக் குறித்ததல்ல என்பதை ஒப்புக்கொண்டதற்கு எனது வாழ்த்துக்கள். நானும் அதையேதான் கூறி வருகிறேன். அந்த வார்த்தை உயர்ந்தவையான அனைத்தையும் குறிப்பிடப்பயன்படும் வார்த்தை. அது எந்த சாதியையும், இனத்தையும் குறிப்பிடுவது அல்ல என்பதுதான் எனது கருத்தும்.

இந்தப்பதிவிலுள்ள பாடல் எதற்கும் நான் விளக்கம் ஏதும் கொடுக்காமல் இருக்கும்பொழுதே நான் புரிந்துகொண்ட அர்த்தத்தை கண்டுபிடித்துவிட்டதாக கூறுகிறீர்கள். இவவளவு அவசரம் ஆகாது சேயோன் அவர்களே.

எனது பதிவுகளைப் பதட்டமில்லாமல் படித்துப்பாருங்கள் உங்களுக்குப் பல உண்மைகள் விளங்கும்.
Dheeran
Dheeran
நண்பர்கள்

Posts : 148
Join date : 12/10/2011
Age : 52
Location : கோவை

http://dheeranstalwart.blogspot.in/

Back to top Go down

திராவிடமும் தமிழும் ஆரியமும்-பொய்களால் உண்மையை மறைக்கமுடியாது. Empty Re: திராவிடமும் தமிழும் ஆரியமும்-பொய்களால் உண்மையை மறைக்கமுடியாது.

Post by சேயோன் Sat Apr 21, 2012 8:57 am

உமது உளறல் என்பது நான் சொன்னது
நீர் சொன்ன
1) தமிழர் வேறு ஆரியர் வேறு
2) தமிழும் சமஸ்கிருதமும் பகை மொழிகள்
3) தமிழ் சான்றோர்கள் சமஸ்கிருதத்தைப் புறக்கணித்தனர்
4) சமஸ்கிருதத்தில் உள்ள வேத நெறியும் தமிழர்களுடைய வாழ்வியல் நெறியும் மாறுபட்டவை
5) தமிழர்களுக்கென்று (தமிழ்பேசும் ஹிந்துக்களுக்கு மட்டும்) தனிப்பட்ட வேதம் உள்ளது
என்பதுபோன்ற ஆதாரமற்ற கற்பனைகளைகள்

என்பதைப்பற்றியதுதான். உமது திரித்து எழுதும் பணி தொடரட்டும். அப்போதுதான் நீர் யார் என்பது வெட்ட வெளிச்சமாகும்

சேயோன்

Posts : 55
Join date : 01/03/2012

Back to top Go down

திராவிடமும் தமிழும் ஆரியமும்-பொய்களால் உண்மையை மறைக்கமுடியாது. Empty Re: திராவிடமும் தமிழும் ஆரியமும்-பொய்களால் உண்மையை மறைக்கமுடியாது.

Post by svelan74 Sat Apr 21, 2012 12:20 pm

திரு சேயோன் அவர்களுக்கு,

ஆரியன் என்ற வார்த்தைக்கு "ஆசிரியன்" என்ற பதப்பொருளை கூறியவர் யார்? எந்த உரையில்?

திரு தீரன் அவர்களுக்கு,

நமக்குள் தேவையற்ற குழப்பம் கூடாது என்ற தங்களின் கருத்து வரவேற்கத்தக்கது. ஆரியன் என்ற பதத்திற்கு தாங்கள் கூறும் பொருள் என்ன?

செந்தில்

svelan74

Posts : 30
Join date : 31/07/2010

Back to top Go down

திராவிடமும் தமிழும் ஆரியமும்-பொய்களால் உண்மையை மறைக்கமுடியாது. Empty Re: திராவிடமும் தமிழும் ஆரியமும்-பொய்களால் உண்மையை மறைக்கமுடியாது.

Post by Dheeran Sat Apr 21, 2012 6:38 pm

svelan74 wrote:திரு தீரன் அவர்களுக்கு,

நமக்குள் தேவையற்ற குழப்பம் கூடாது என்ற தங்களின் கருத்து வரவேற்கத்தக்கது. ஆரியன் என்ற பதத்திற்கு தாங்கள் கூறும் பொருள் என்ன?

செந்தில்

வணக்கம் திரு செந்தில்,
நான் அறிந்தவரையில் ஆரியன் எனும் பதம்,
1) இறைவன்
2)சத்குரு
3)உயர்ந்ததொரு வாழ்க்கை நெறியை மேற்கொண்டு வாழும் பண்பாளர்கள்
ஆகியோரைக் குறிக்கும் என்று நம்புகிறேன்.

மேலும் எனது தளத்தில்,
யார்-ஆரியன்?
எனும் பதிவில் நான் கண்டவற்றைப் பகிர்ந்துள்ளேன்
நன்றி.

Last edited by Dheeran on Sat Apr 21, 2012 8:31 pm; edited 1 time in total
Dheeran
Dheeran
நண்பர்கள்

Posts : 148
Join date : 12/10/2011
Age : 52
Location : கோவை

http://dheeranstalwart.blogspot.in/

Back to top Go down

திராவிடமும் தமிழும் ஆரியமும்-பொய்களால் உண்மையை மறைக்கமுடியாது. Empty Re: திராவிடமும் தமிழும் ஆரியமும்-பொய்களால் உண்மையை மறைக்கமுடியாது.

Post by Dheeran Sat Apr 21, 2012 8:26 pm

சேயோன் அவர்களே நீங்கள் எதை உளறல் என்கிறீர்கள் என்பது எனக்குப் புரியவில்லை.
எனது பதிவுகளில் ஆதாரங்களைக் கொடுத்துள்ளேன் அவையும் அறிவியல் பூர்வமானவை, தர்க்கரீதியிலானவை.

நான் எதையும் திரித்து சொல்லவில்லை ,வாதத்தை திசைதிருப்புவதும் திரித்துச் சொல்லிக் குழப்புவதும் இங்கு வேறுசிலர்தான், அதைப் பாராட்டுவது உங்களது வழக்கம் என்பதை அனைவரும் படித்துவருகின்றனர்.

இங்கு ஆன்மீகத்துக்கும், ஆன்மிகம் சார்ந்த பழக்கங்களுக்கும் விளக்கம்கூற நாத்திகர்களின் துணையை நாடுவது யார் என்பதும் வேடதாரி யார் என்பதும்
அவரவர்க்கே தெரியும்.
நன்றி,
Dheeran
Dheeran
நண்பர்கள்

Posts : 148
Join date : 12/10/2011
Age : 52
Location : கோவை

http://dheeranstalwart.blogspot.in/

Back to top Go down

திராவிடமும் தமிழும் ஆரியமும்-பொய்களால் உண்மையை மறைக்கமுடியாது. Empty Re: திராவிடமும் தமிழும் ஆரியமும்-பொய்களால் உண்மையை மறைக்கமுடியாது.

Post by Dheeran Sat Apr 21, 2012 9:10 pm

Dheeran wrote:
svelan74 wrote:திரு தீரன் அவர்களுக்கு,

நமக்குள் தேவையற்ற குழப்பம் கூடாது என்ற தங்களின் கருத்து வரவேற்கத்தக்கது. ஆரியன் என்ற பதத்திற்கு தாங்கள் கூறும் பொருள் என்ன?

செந்தில்

வணக்கம் திரு செந்தில்,
நான் அறிந்தவரையில் ஆரியன் எனும் பதம்,
1) இறைவன்
2)சத்குரு
3)உயர்ந்ததொரு வாழ்க்கை நெறியை மேற்கொண்டு வாழும் பண்பாளர்கள்
ஆகியோரைக் குறிக்கும் என்று நம்புகிறேன்.

மேலும் எனது தளத்தில்,
யார்-ஆரியன்?
எனும் பதிவில் நான் கண்டவற்றைப் பகிர்ந்துள்ளேன்
நன்றி.

யார் ஆரியன் ? எனும் பதிவின் லிங்கிற்கு செல்ல இந்த தளத்தில் உள்நுழையவேண்டும். நன்றி.
Dheeran
Dheeran
நண்பர்கள்

Posts : 148
Join date : 12/10/2011
Age : 52
Location : கோவை

http://dheeranstalwart.blogspot.in/

Back to top Go down

திராவிடமும் தமிழும் ஆரியமும்-பொய்களால் உண்மையை மறைக்கமுடியாது. Empty Re: திராவிடமும் தமிழும் ஆரியமும்-பொய்களால் உண்மையை மறைக்கமுடியாது.

Post by Dhantaayuthapaani Sun Apr 22, 2012 10:49 pm

Dheeran wrote:

அனைவருக்கும் வணக்கம் நமது தளத்தில் தமிழ், சமஸ்கிருதம், மற்றும் நமது தர்மத்தின் அடிப்படையான வேதம், ஆகமம் ,திருமுறைகள் ஆகியவற்றைப்பற்றிய மாறுபட்ட கருத்துக்கள் அலசப்படுகின்றன. இந்தப்பதிவுகளில், சில அன்பர்கள் திரும்பதிரும்ப வலியுறுத்தி நிறுவ விரும்புவது.

1) தமிழர் வேறு ஆரியர் வேறு
2) தமிழும் சமஸ்கிருதமும் பகை மொழிகள்
3) தமிழ் சான்றோர்கள் சமஸ்கிருதத்தைப் புறக்கணித்தனர்
4) சமஸ்கிருதத்தில் உள்ள வேத நெறியும் தமிழர்களுடைய வாழ்வியல் நெறியும் மாறுபட்டவை
5) தமிழர்களுக்கென்று (தமிழ்பேசும் ஹிந்துக்களுக்கு மட்டும்) தனிப்பட்ட வேதம் உள்ளது

என்பதுபோன்ற ஆதாரமற்ற கற்பனைகளைத்தான்

சைவ சமயத்தின் மேன்மையைக் குழைக்கும்விதமாக பொய்த்தகவல்களைப் பரப்பியும், மந்திரவார்த்தைகளையும் பிற வடமொழி வார்த்தைகளையும் வேண்டுமென்றே திரித்தும் திரு.சாமி போன்றோர் இடும் பதிவுகளுக்கு நல்ல பதிலாக இந்தக்கட்டுரை உள்ளது. வாழ்த்துக்கள்.

Dhantaayuthapaani

Posts : 32
Join date : 05/04/2012

Back to top Go down

திராவிடமும் தமிழும் ஆரியமும்-பொய்களால் உண்மையை மறைக்கமுடியாது. Empty Re: திராவிடமும் தமிழும் ஆரியமும்-பொய்களால் உண்மையை மறைக்கமுடியாது.

Post by Dheeran Mon Apr 23, 2012 5:56 pm

Dheeran wrote:
svelan74 wrote:திரு தீரன் அவர்களுக்கு,

நமக்குள் தேவையற்ற குழப்பம் கூடாது என்ற தங்களின் கருத்து வரவேற்கத்தக்கது. ஆரியன் என்ற பதத்திற்கு தாங்கள் கூறும் பொருள் என்ன?

செந்தில்

வணக்கம் திரு செந்தில்,
நான் அறிந்தவரையில் ஆரியன் எனும் பதம்,
1) இறைவன்
2)சத்குரு
3)உயர்ந்ததொரு வாழ்க்கை நெறியை மேற்கொண்டு வாழும் பண்பாளர்கள்
ஆகியோரைக் குறிக்கும் என்று நம்புகிறேன்.

மேலும் எனது தளத்தில்,
யார்-ஆரியன்?
எனும் பதிவில் நான் கண்டவற்றைப் பகிர்ந்துள்ளேன்
நன்றி.

ஆரியன் என்ற ஒரு தனி இனக்குழு உலகில் இருந்ததே இல்லை. இந்தப்பதிவில் உள்ள லிங்க்' குகளுக்குச்சென்றும் இதை உறுதிப்படுத்திக்கொள்ளலாம்.

வாழ்த்துக்களுக்கு நன்றி தண்டபாணி அவர்களே.

இங்கு பதிவுகளில் உள்ள லிங்குகளுக்குச் செல்ல இந்த தளத்தில் உள்நுழையவேண்டும். நன்றி.
Dheeran
Dheeran
நண்பர்கள்

Posts : 148
Join date : 12/10/2011
Age : 52
Location : கோவை

http://dheeranstalwart.blogspot.in/

Back to top Go down

திராவிடமும் தமிழும் ஆரியமும்-பொய்களால் உண்மையை மறைக்கமுடியாது. Empty Re: திராவிடமும் தமிழும் ஆரியமும்-பொய்களால் உண்மையை மறைக்கமுடியாது.

Post by Dhantaayuthapaani Mon Apr 23, 2012 11:27 pm

தகவல்களுக்கு நன்றி.

தூங்குகிறவர்களை எழுப்பலாம், தூங்குகிறமாதிரி நடிப்பவர்களை எழுப்பமுடியாது,விடாமல் முயற்சி செய்கிறீர்கள் வாழ்த்துக்கள்.
நண்பரே எனதுபெயர் தண்டாயுதபாணி, தண்டபாணி அல்ல. நன்றி.

Dhantaayuthapaani

Posts : 32
Join date : 05/04/2012

Back to top Go down

திராவிடமும் தமிழும் ஆரியமும்-பொய்களால் உண்மையை மறைக்கமுடியாது. Empty Re: திராவிடமும் தமிழும் ஆரியமும்-பொய்களால் உண்மையை மறைக்கமுடியாது.

Post by Dheeran Fri Apr 27, 2012 11:42 pm

தண்டாயுதபாணி wrote:தகவல்களுக்கு நன்றி.

தூங்குகிறவர்களை எழுப்பலாம், தூங்குகிறமாதிரி நடிப்பவர்களை எழுப்பமுடியாது,விடாமல் முயற்சி செய்கிறீர்கள் வாழ்த்துக்கள்.
நண்பரே எனதுபெயர் தண்டாயுதபாணி, தண்டபாணி அல்ல. நன்றி.
திரு தண்டாயுதபாணி அவர்களுக்கு நன்றி.
பிழையைத் திருத்திக்கொள்கிறேன்.
யார் எப்படியிருப்பினும் நாமறிந்த உண்மைகளை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.
நன்றி..
Dheeran
Dheeran
நண்பர்கள்

Posts : 148
Join date : 12/10/2011
Age : 52
Location : கோவை

http://dheeranstalwart.blogspot.in/

Back to top Go down

திராவிடமும் தமிழும் ஆரியமும்-பொய்களால் உண்மையை மறைக்கமுடியாது. Empty Re: திராவிடமும் தமிழும் ஆரியமும்-பொய்களால் உண்மையை மறைக்கமுடியாது.

Post by Dhantaayuthapaani Mon May 21, 2012 1:41 pm

நன்றி,

நல்லவிஷயங்களைப் பகிர்ந்துகொள்ளவும், உண்மைகளுக்கு உறு துணையாகவும் சேர்ந்திருப்போம்.

Dhantaayuthapaani

Posts : 32
Join date : 05/04/2012

Back to top Go down

திராவிடமும் தமிழும் ஆரியமும்-பொய்களால் உண்மையை மறைக்கமுடியாது. Empty Re: திராவிடமும் தமிழும் ஆரியமும்-பொய்களால் உண்மையை மறைக்கமுடியாது.

Post by madhavadas Mon May 21, 2012 11:23 pm

1. இந்தியாவில் ஆயிரக்கணக்கான வர்ஷங்களாக வேதங்கள் ஒலிதுவருகிறது, அதில் எங்காவுது அவர்கள் நம் நாட்டில் வருவதற்க்கு முன் இருந்த இடத்தைப்பற்றி ஒரு தகவலும் சொல்லவில்லை.
2. ஆரியர்கள் வெள்ளயாக இருப்பார்கள் திராவிடர்களின் நிறம் கருப்பு. ஆரியக்கடவுள்களான கிருஷ்ணர் ஸ்ரீராமர் கருப்பு.
3. ஆரியர்கள் பிராமணர்கள். வேதங்கள் எழுதிய பல முனிவர்களும் பிற ஜாதியை சேர்ந்தவார்கள், விஸ்வாமித்த்ர் - ராஜாவாக இருந்தவர். வியாசர் - முக்குவ பெண்ணின் மகன். ஏன், நாம் கடவுள்களான கிருஷ்ணர் யாதவர். ராமர் கிஷத்ரீயர்.
4. ஆரியரும் திராவிடரும் ஒரே கடவுளை வணங்குகிறார்கள். மக்களை பிரிந்து ஆதாயம் எடுப்பதர்க்காக பொய்களால் மறைக்க முயற்சிக்கிறார்கள்.

ஜாக்கிரதையாக இருப்போம்.

madhavadas

Posts : 3
Join date : 13/05/2012

Back to top Go down

திராவிடமும் தமிழும் ஆரியமும்-பொய்களால் உண்மையை மறைக்கமுடியாது. Empty Re: திராவிடமும் தமிழும் ஆரியமும்-பொய்களால் உண்மையை மறைக்கமுடியாது.

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum