இந்து சமயம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சித்திரை-நமது புத்தாண்டுத் தொடக்கம்.
by Dheeran Tue Apr 12, 2022 8:21 am

» மீண்டும் வருக
by Dheeran Fri Oct 02, 2020 11:08 am

» கே இனியவன் ஆன்மீக கவிதைகள்
by கே இனியவன் Thu Nov 09, 2017 7:58 pm

» தீபத்திருநாள் வாழ்த்துக்கள்
by Dheeran Wed Oct 18, 2017 4:01 pm

» பண்டைய இந்தியாவின் விமானத் தொழில் நுட்பம்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:23 pm

» வெற்றி மாபெரும் வெற்றி!
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:16 pm

» பாரதி பாடலில் அராஜக “செக்யுலர்” திருத்தங்கள் - ஜடாயு
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:55 pm

» மோடி, கருப்புப்பண ஒழிப்பு, ஊடகங்கள் - ஜெயமோகன்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:41 pm

» அனைவருக்கும் வணக்கம்.
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:46 am

» நான் ஒரு ஹிந்து என்பதில் ஏன் பெருமிதம் கொள்கிறேன் – பாகம் 1 AGNIVEER
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:42 am

» தேவையா இந்த சமஸ்கிருத துவேஷம்
by Dheeran Sat Jun 25, 2016 12:46 pm

» சிவ வழிபாடு புத்தகம்
by tammy ranga Thu Dec 17, 2015 3:37 am

» ஷ்ரிடி சாய் பாபா புண்ணிய வரலாறு தமிழில்
by tammy ranga Thu Dec 17, 2015 3:35 am

» ஆரிய திராவிட மாயை
by Dheeran Thu Oct 29, 2015 4:10 pm

» தென்புலத்தார் வழிபாடு
by Dheeran Sun Sep 27, 2015 8:50 pm

» தமிழ் ஹிந்துவும் இலவச ஜோதிட கணிப்பு
by ஹரி ஓம் Mon Aug 03, 2015 2:36 am

» வெற்றி வேல்!!!வீரவேல்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
by ஹரி ஓம் Wed Jun 24, 2015 4:09 am

» சிவதாண்டவம் - PB ஸ்ரீனிவாஸ்
by i.mahatheva Thu Jun 18, 2015 5:24 pm

» கால சர்ப்ப தோஷம் என்றால் என்ன?
by jothi sangeetha Thu May 21, 2015 1:43 pm

» மல்லிகைப் பூவை தலையில் சூடுங்கள் - பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்து
by கே இனியவன் Thu May 21, 2015 11:02 am

























Topsites
Tamil 10 top sites [www.tamil10 .com ]
Ranking


தீபாவளிப் பண்டிகை – சிவவிரதங்கள் எட்டில் ஒன்று (நரகாசுரனைக் கொன்ற நாள் அல்ல)

Go down

தீபாவளிப் பண்டிகை – சிவவிரதங்கள் எட்டில் ஒன்று (நரகாசுரனைக் கொன்ற நாள் அல்ல) Empty தீபாவளிப் பண்டிகை – சிவவிரதங்கள் எட்டில் ஒன்று (நரகாசுரனைக் கொன்ற நாள் அல்ல)

Post by சாமி Thu Aug 23, 2012 10:26 am

(RTM என்கிற ரேடியோ டெலிவிசன் மலேசியா என்கிற மலேசியா அரசுக்கு சொந்தமான ரேடியோவுக்கு தெய்வமுரசு மாத இதழ் ஆசிரியர் திரு.மு.பெ.சத்தியவேல் முருகனார் அளித்த பேட்டி)

பேட்டியாளர் திருமிகு மனோன்மணி: ஐயா! தங்களை மீண்டும் சந்தித்துப் பேட்டி எடுப்பதில் மிக்க மகிழ்ச்சி. தற்போது மலேசியாத் தமிழர்களில் வரும் தீபாவளியின் பரபரப்பு தொடங்கிவிட்டது. இந்தத் தீபாவளிக் கொண்டாட்டத்தின் அடிப்படையைப் பற்றி சற்று எடுத்துச் சொல்லுங்கள் ஐயா!

தெய்வமுரசு ஆசிரியர்: அம்மா! தங்களை மீண்டும் ஒரு பேட்டிக்காகச் சந்திப்பதில் மெத்தமகிழ்ச்சி. தீபாவளிப் பண்டிகை என்பது 200 அல்லது 300 ஆண்டுகளாக தமிழர்களிடையே மிக்க பிரபலம் அடைந்திருப்பது உண்மைதான்.

கேள்வி: இது பற்றிக் கூறும்போது இது நரகாசுரனைக் கிருஷ்னண் கொன்ற நாள் என்றும் அதையே மக்களும் கொண்டாடுகின்றனர் என்றும் கூறுகிறார்களே! இதைப்பற்றி உங்கள் கருத்து என்ன?

பதில்: ஒருவர் கொல்லப்பட்டதைக் கொண்டாடுவது என்பது நாகரீகம் ஆகாது. அது காந்தியே ஆனாலும் அல்லது கோட்சேவே ஆனாலும் எவர் ஒருவர் சாவிலும் இனிப்பு கொடுத்துக் கொண்டாடுவது அநாகரீகமான செயலே. இறந்தவன் கெட்டவனே ஆனாலும் அவன் செய்த ஓரிரண்டு நல்ல செயல்களைக் கூறி அவனுக்காக அழுவது உலகியல்பு. அல்லாமல் இப்படியாக இன்னொருவர் வாழக்கூடாது என்று இவன் சாவில் நாம் பெறும் படிப்பினையாக இருக்கட்டும் என்றாவது சொல்வார்களே ஒழிய ஒருவன் மரணத்தில் இனிப்பு உண்டு மகிழ்வது எந்த வகையிலும் ஏற்கத்தக்கது அல்ல.

கேள்வி: ஆனால் புராணம் இப்படித்தான் சொல்கிறது என்கிறார்களே?

பதில்: விஷ்ணு புராணத்திலும், தேவி பாகவதத்திலும் இந்தக் கதை கூறப்படுவது உண்மைதான். ஆனால் அங்கே கூட நரகாசுரனின் தாயாகிய பூமாதேவி அவனை மன்னித்தருள் என்றுதான் கேட்டதாகக் கூறப்படுகிறதே ஒழிய (விஷ்ணுபுராணம் லிப்கோ பதிப்பு: பக்கம் 401) அவன் இறந்ததை இந்த பூமியில் உள்ளவர்கள் கொண்டாட வேண்டும் என்று கேட்டதாக கூறப்படவில்லை. அதுதான் தீபாவளியாகக் கொண்டாடப் படுகிறது என்கிற குறிப்பும் இல்லை.

இன்னும் சொல்லப்போனால் பூமாதேவி திருமாலின் இன்னொரு மனைவி. வராக அவதாரத்தில் திருமாலுக்கும் பூமாதேவிக்கும் பிறந்தவன் நரகாசுரன் என்று விஷ்ணுபுராணம் கூறுகிறது. திருமாலோ தேவர்களில் ஒருவர். அவருக்கு பிறந்தவன் எப்படி அசுரனாவான்? அகலிகையை தொட்டுக் கெட்ட இந்திரனைப் போல இவனும் ஒரு கெட்ட தேவனாகலாமே ஒழிய இவன் அசுரன் ஆவது எப்படி? புராணக் கூற்றில் இதுவே முரண்பாடு.

அதற்கப்புறம் மகனைத் தந்தை கொன்றதும் அவ்வளவு சரியானதாகக் கூற முடியாது. அப்படியே கெட்டதொரு மகனைத் தம் கையாலேயே கொன்ற நீதிமிக்கத் தந்தைதான் திருமால் என்றாலும் கொல்லலாம்! ஆனால் இதைப் பூமியில் உள்ளவர்கள் கொண்டாடுங்கள் என்றா ஒரு தந்தைக் கூறுவார்? கொல்வது வேறு; அதைக் கொண்டாடுவது வேறல்லவா?

எனவே நரகாசுரனை அவன் தந்தை நாராயணன் கொன்றதைக் கொண்டாடுவதே தீபாவளி என்பது விஷ்ணுபுராணத்திற்கும் அறிவிற்கும் உலகியலுக்கும் பொருந்தாமல் யாரோ வடநாட்டினர் கட்டிவிட்ட புரளி என்பதே உண்மை.

ஏனென்றால் வடஇந்தியாவில்தான் இன்று கூட இராவணலீலா என்று இராவணனை எரித்து அவன் மரணம் கொண்டாடப்படுகிறது. இது முற்றிலும் வட இந்திய வழக்கம். தமிழரிடம் இந்த அநாகரிகம் எப்போதுமே படிந்ததில்லை.

(தொடரும்)
சாமி
சாமி
நண்பர்கள்

Posts : 121
Join date : 15/02/2012

http://arundhtamil.blogspot.in

Back to top Go down

தீபாவளிப் பண்டிகை – சிவவிரதங்கள் எட்டில் ஒன்று (நரகாசுரனைக் கொன்ற நாள் அல்ல) Empty Re: தீபாவளிப் பண்டிகை – சிவவிரதங்கள் எட்டில் ஒன்று (நரகாசுரனைக் கொன்ற நாள் அல்ல)

Post by சாமி Sun Oct 27, 2013 11:23 am

கேள்வி: ஐயா! விஷ்ணு புராணத்தில் உள்ளதாகத் தாங்கள் கூறியவை உண்மைதான். வானொலியில் கூட ஒரு புராண நாடகம் ஒலிபரப்பினோம். அதில் நரகாசுரனின் தாயான பூமித்தாய் தனக்கும் திருமாலுக்கும் பிறந்த மகனின் சாவுக்கு திருமாலே காரணமாகி விட்டது பற்றிப் புலம்புதாகவும், தன் மகனின் குறைகளைப் பொறுத்து மன்னிக்க வேண்டும் என்றும், அவன் சாவை யாரும் கொண்டாடுவது கூடாது என்றும் புலம்பி வேண்டிக் கொண்டதாக வரும். ஆக ஐயா சொன்னது சரிதான்! அப்படியானால் தீபாவளிப் பண்டிகையின் பொருள்தான் என்ன?

பதில்: தீபாவளி என்ற சொல் வடசொல். ஆவளி என்றால் வரிசை. நாமாவளி என்பது நாமங்களின் வரிசை என்பது போல தீபாவளி என்றது தீபங்களின் வரிசையைக் குறிக்கும். இத் தீப வழிபாடு சிவ விரதங்கள் எட்டில் ஒன்று. இதை அடிக்கடி வாரியார் சுவாமிகள் கூட கூறுவார். தீபாவளியின் பொருட்டு எடுத்த ஒரு தொலைக்காட்சிப் பேட்டியில் கூட அவர் இப்படித்தான் கூறினார் என்பது நோக்கத்தக்கது. அவர் தீபாவளி என்றால் அது நரகாசுரனின் சாவைக் கொண்டாடுவது என்று ஒரு முறைகூட தப்பித்தவறிக்கூட அவர் சொல்லிக் கேட்டதில்லை. சமய உலகில் வாரியார் வாக்கிற்கு தனி ஒரு மதிப்பு உண்டல்லவா? ஆக தீபாவளி என்பது நரகாசுரன் வதத்துடன் தொடர்புடையது அல்ல என்று ஆதாரத்துடன் ஆன்றோர் வாக்குடனும் காணத் தெளிவாகியது.
(தொடரும்)
சாமி
சாமி
நண்பர்கள்

Posts : 121
Join date : 15/02/2012

http://arundhtamil.blogspot.in

Back to top Go down

தீபாவளிப் பண்டிகை – சிவவிரதங்கள் எட்டில் ஒன்று (நரகாசுரனைக் கொன்ற நாள் அல்ல) Empty Re: தீபாவளிப் பண்டிகை – சிவவிரதங்கள் எட்டில் ஒன்று (நரகாசுரனைக் கொன்ற நாள் அல்ல)

Post by சாமி Thu Oct 16, 2014 12:26 am

தீபாவளி உலகமெல்லாம் கொண்டாடும் நன்னாள் பொன்னாள். இதை யாண்டும் எல்லோரும் குதூகலமாகக் கொண்டாடுகிறார்கள். சிவபெருமானை நினைத்துக் கடைத்தேறும் விரதங்கள் எட்டு. அதில் தீபாவளியும் ஒன்று. - வாரியார் சுவாமிகள்
சாமி
சாமி
நண்பர்கள்

Posts : 121
Join date : 15/02/2012

http://arundhtamil.blogspot.in

Back to top Go down

தீபாவளிப் பண்டிகை – சிவவிரதங்கள் எட்டில் ஒன்று (நரகாசுரனைக் கொன்ற நாள் அல்ல) Empty Re: தீபாவளிப் பண்டிகை – சிவவிரதங்கள் எட்டில் ஒன்று (நரகாசுரனைக் கொன்ற நாள் அல்ல)

Post by சாமி Thu Oct 16, 2014 12:28 am

கேள்வி: ஐயா! விஷ்ணு புராணத்தில் உள்ளதாகத் தாங்கள் கூறியவை உண்மைதான். வானொலியில் கூட ஒரு புராண நாடகம் ஒலிபரப்பினோம். அதில் நரகாசுரனின் தாயான பூமித்தாய் தனக்கும் திருமாலுக்கும் பிறந்த மகனின் சாவுக்கு திருமாலே காரணமாகி விட்டது பற்றிப் புலம்புதாகவும், தன் மகனின் குறைகளைப் பொறுத்து மன்னிக்க வேண்டும் என்றும், அவன் சாவை யாரும் கொண்டாடுவது கூடாது என்றும் புலம்பி வேண்டிக் கொண்டதாக வரும். ஆக ஐயா சொன்னது சரிதான்! அப்படியானால் தீபாவளிப் பண்டிகையின் பொருள்தான் என்ன?

பதில்: தீபாவளி என்ற சொல் வடசொல். ஆவளி என்றால் வரிசை. நாமாவளி என்பது நாமங்களின் வரிசை என்பது போல தீபாவளி என்றது தீபங்களின் வரிசையைக் குறிக்கும். இத் தீப வழிபாடு சிவ விரதங்கள் எட்டில் ஒன்று. இதை அடிக்கடி வாரியார் சுவாமிகள் கூட கூறுவார். தீபாவளியின் பொருட்டு எடுத்த ஒரு தொலைக்காட்சிப் பேட்டியில் கூட அவர் இப்படித்தான் கூறினார் என்பது நோக்கத்தக்கது. அவர் தீபாவளி என்றால் அது நரகாசுரனின் சாவைக் கொண்டாடுவது என்று ஒரு முறைகூட தப்பித்தவறிக்கூட அவர் சொல்லிக் கேட்டதில்லை. சமய உலகில் வாரியார் வாக்கிற்கு தனி ஒரு மதிப்பு உண்டல்லவா? ஆக தீபாவளி என்பது நரகாசுரன் வதத்துடன் தொடர்புடையது அல்ல என்று ஆதாரத்துடன் ஆன்றோர் வாக்குடனும் காணத் தெளிவாகியது. (தொடரும்)
சாமி
சாமி
நண்பர்கள்

Posts : 121
Join date : 15/02/2012

http://arundhtamil.blogspot.in

Back to top Go down

தீபாவளிப் பண்டிகை – சிவவிரதங்கள் எட்டில் ஒன்று (நரகாசுரனைக் கொன்ற நாள் அல்ல) Empty Re: தீபாவளிப் பண்டிகை – சிவவிரதங்கள் எட்டில் ஒன்று (நரகாசுரனைக் கொன்ற நாள் அல்ல)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum