இந்து சமயம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சித்திரை-நமது புத்தாண்டுத் தொடக்கம்.
by Dheeran Tue Apr 12, 2022 8:21 am

» மீண்டும் வருக
by Dheeran Fri Oct 02, 2020 11:08 am

» கே இனியவன் ஆன்மீக கவிதைகள்
by கே இனியவன் Thu Nov 09, 2017 7:58 pm

» தீபத்திருநாள் வாழ்த்துக்கள்
by Dheeran Wed Oct 18, 2017 4:01 pm

» பண்டைய இந்தியாவின் விமானத் தொழில் நுட்பம்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:23 pm

» வெற்றி மாபெரும் வெற்றி!
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:16 pm

» பாரதி பாடலில் அராஜக “செக்யுலர்” திருத்தங்கள் - ஜடாயு
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:55 pm

» மோடி, கருப்புப்பண ஒழிப்பு, ஊடகங்கள் - ஜெயமோகன்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:41 pm

» அனைவருக்கும் வணக்கம்.
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:46 am

» நான் ஒரு ஹிந்து என்பதில் ஏன் பெருமிதம் கொள்கிறேன் – பாகம் 1 AGNIVEER
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:42 am

» தேவையா இந்த சமஸ்கிருத துவேஷம்
by Dheeran Sat Jun 25, 2016 12:46 pm

» சிவ வழிபாடு புத்தகம்
by tammy ranga Thu Dec 17, 2015 3:37 am

» ஷ்ரிடி சாய் பாபா புண்ணிய வரலாறு தமிழில்
by tammy ranga Thu Dec 17, 2015 3:35 am

» ஆரிய திராவிட மாயை
by Dheeran Thu Oct 29, 2015 4:10 pm

» தென்புலத்தார் வழிபாடு
by Dheeran Sun Sep 27, 2015 8:50 pm

» தமிழ் ஹிந்துவும் இலவச ஜோதிட கணிப்பு
by ஹரி ஓம் Mon Aug 03, 2015 2:36 am

» வெற்றி வேல்!!!வீரவேல்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
by ஹரி ஓம் Wed Jun 24, 2015 4:09 am

» சிவதாண்டவம் - PB ஸ்ரீனிவாஸ்
by i.mahatheva Thu Jun 18, 2015 5:24 pm

» கால சர்ப்ப தோஷம் என்றால் என்ன?
by jothi sangeetha Thu May 21, 2015 1:43 pm

» மல்லிகைப் பூவை தலையில் சூடுங்கள் - பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்து
by கே இனியவன் Thu May 21, 2015 11:02 am

Topsites
Tamil 10 top sites [www.tamil10 .com ]
Ranking


சைவ மரபினை பாதுகாக்கும் மாநாடு

3 posters

Go down

 சைவ மரபினை பாதுகாக்கும் மாநாடு Empty சைவ மரபினை பாதுகாக்கும் மாநாடு

Post by Dheeran Sat Dec 08, 2012 10:06 am

நம் சைவ சமயத்திற்கென்று மிகப் பெரிய பாரம்பரியம் இருக்கின்றது. ஆதியும் அந்தமுமில்லா அருப்பெருஞ்சோதியாகிய நம் சிவபெருமானே வேத ஆகமங்களை தம் திருவாய் மலர்ந்தருளினார். முத்தமிழும் மறைகள் நான்கும் ஆனவனாகிய நம் சிவபெருமான் மாதவம் செய்த தென் திசையாகிய செந்தமிழ் நாட்டின்மேல் கொண்ட தனிப்பெருங்கருணையினாலே பன்னிருத் திருமுறைகளையும் பதினான்கு சாத்திரங்களையும் தம் அருளாளர்கள் மூலம் திருநெறிய தமிழில் அருளிச் செய்தார்.

இக்காலத்தில் சிலர் திருவேடம் பூண்டு தம் தோற்றம் மறந்து வேதாகம நிந்தனையை தமிழ் பற்று என்ற பெயரில் செய்து வருவது மிகவும் வேதனைக்குரியதாகும்.

நம் தொன்மையான சைவ மரபினை பாதுகாக்கும் நோக்குடன் நம் சிவபெருமான் அருளிய வேதம், ஆகமம் மற்றும் நம் அருளாளர்கள் அருளிய பன்னிருத் திருமுறை மற்றும் பதினான்கு சாத்திரங்களையும் தகுந்த முறையில் போற்றவும் சைவ பெருமக்களிடையே விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தவும் சைவநெறி வளர்ச்சிக் கழகத்தால் இம்மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டது.

மாநாட்டின் முதல் நிகழ்வாக திருவாரூர் அருள்மிகு ஸ்ரீதியாகராஜ பெருமானுக்கு வழிபாடு நடத்தப்பட்டது. திருநெடுங்களம் சிவஸ்ரீ ரமேஷ் குருக்கள் தூப தீபத்துடன் வழிபாட்டினை ஏற்ற, திருவாவடுதுறை ஆதீன கட்டளைத் தம்பிரான் ஸ்ரீமத் சுந்தரமூர்த்தி தம்பிரான் சுவாமிகள் பஞ்சபுராணம் பாடி மாநாட்டினைத் துவக்கி வைத்தனர்.

ஸ்ரீமத் சுந்தரமூர்த்தி சுவாமிகள் தொடர்ந்து அருளுரை வழங்கினார். அவர் தம் உரையில் “இந்துக்கள் அனைவரும் மொழியின் பேரால் பிரிக்கப்பட்டு சிவ சிந்தையினின்றும் விலகி நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளது” என்று கூறினார். மேலும், ஸ்ரீமத் சிவஞான சுவாமிகளின் போதனைகளைக் குறை கூறுபவர்களை வன்மையாகக் கண்டித்தார். திருவாவடுதுறை ஆதீனம் நடத்தும் சைவ சித்தாந்த நேர்முகப் பயிற்சியையும், திருமுறைப் பயிற்சியையும் எல்லோரும் பயன்படுத்திக் கொண்டால் பயனுடையதாக இருக்கும் என்றும் குறிப்பிட்டார்.

பெங்களூர் அன்பர்கள் நடத்திய ஸ்ரீசண்டேச நாயனார் மற்றும் ஸ்ரீகண்ணப்ப நாயனாரின் நாடகங்கள் காண்போர்களின் மனதை பறித்தன. அவையில் கூடியிருந்தவர்கள் தங்கள் கண்களின் கண்ணீர் மல்க நாடகங்களைக் கண்டுகளித்தனர். பெங்களூர் சிவச் செல்விகள் பூஜா மற்றும் சரயு ஆகியோர் “தோடுடைய செவியன்…” என்ற திருப்பதிகத்திற்கு நடனம் ஆடி அவையோர்களை சிவானந்தத்தில் ஆழ்த்தினர். பிறகு அடிவர்களுக்கு மாகேஸ்வர பூசை சிறப்பாக நடைபெற்றது.

நண்பகல் அமர்வின் முதல் நிகழ்வாக சென்னை நன்மங்கலம் சிவாயநம அவர்கள் தம் கணீர் குரலில் சிவபுராணம் பாட, கூடியிருந்த அவையோரும் உடன் பாடினர்.

ஸ்ரீகாசி மடத்து இணை அதிபர் ஸ்ரீமத் சுந்தமூர்த்தி தம்பிரான் சுவமிகள் “மொழிக்கு மொழி தித்திக்கும் திருமுறைகள்” என்ற தலைப்பில் திருமுறையின் பெருமைகளை மிக அற்புதமாக எடுத்துரைத்தார். மேலும், ஹர ஹர நமபார்வதி பதயே| ஹர ஹர மகாதேவா|| என்ற மகுடம் வந்த விதமும், திருமுறைகளில் இந்த வார்த்தைகள் கையாளப்பட்டுள்ள விதத்தையும் காட்டி, சைவப் பெருமக்கள் இம்மகுடத்தைக் கூற வேண்டும் என்றும் வலியுறுத்தினார். வயதான காலத்தில் மட்டும் இது போன்ற பணிகளில் ஈடுபடும் பக்தர்களின் மத்தியில் இளைஞர்களால் இம்மாநாடு நடத்தப்படுவது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கின்றது என்றார்.

துலாவூர் ஆதீன ஸ்ரீலஸ்ரீ குருமகா சன்னிதானம் அவர்கள் தம் அருளாசியில், “நித்ய அனுஷ்டானம், சைவ ஒழுக்கம், முறையான தீக்கை இவற்றைக் கடைப்பிடிப்பதே சிறப்பு என்றும் அதுதான் தெய்வீக தன்மையைத் தரும்” என்றும் கூறினார். மேலும், சைவ மரபு என்பதன் முக்கியம் பற்றியும் கூறினார்.

நெடுங்களம் சிவஸ்ரீ ரமேஷ் குருக்கள் மற்றும் கோவை சிவஸ்ரீ சுரேஷ் குருக்கள் அருமறைப் பயனாகிய திருஉருத்திரம் மற்றும் சிவ ஆகமங்களை ஓதினர். தற்காலத்தில் சைவ விழாக்களில் காணுதற்கரிய வேத ஆகம பாராயாணத்தைக் கண்ட அன்பர்கள் மிகுந்த பரவசமடைந்தனர்.

கோவை சைவத்திரு. கந்தசாமி ஓதுவார் அவர்கள் திருமுறை இன்னிசை நிகழ்த்தினார்.

சைவ நெறி வளர்ச்சிக் கழகத்தின் கொள்கைகளை சிவ. கோமதிநாயகம் அவர்கள் விளக்கிக் கூறினார். அவர்தம் உரையில் தமிழகத்தில் பூஜைகள் நடக்காத சிவாலயங்களில் சிவாகம வழியில் பூசைகள் நடத்த கழகம் பாடுபடும் என்றும் மொழியின் காரணமாக வேறுபட்டு நிற்கும் சைவர்களிடையே தொன்மையான சைவ மரபினைப் பற்றிய விழிப்புணர்ச்சியை ஏற்படுத்துதலும் சைவ சமயத்தை இழிவு படுத்துபவர்களுக்கு கண்டனம் தெரிவித்தலும் கழகத்தின் முக்கிய கொள்கைகள் என கூறினார். சைவ சமயத்தின் அடிப்படைக் கோட்பாடுகளையே தன் கொள்கைகளாகக் கொண்டு எல்லாம் வல்ல சிவபெருமான் திருவடியை மட்டுமே நம்பிதான் இவ்வியக்கமே உருவாக்கப்பட்டுள்ளது. சைவப் பெருமக்கள் அனைவரும் சைவநெறி வளர்ச்சிக் கழகத்தில் சேர்வதைத் தங்கள் கடமையாக உணர்ந்து சேர வேண்டும். அனைவரும் ஒருங்கிணைந்து ஓர் அணியிலே திரண்டு ஒருமித்த குரல் எழுப்பினால் நம்மால் எதையும் சாதிக்க முடியும். ஈசன் அருளால் இன்று உருவாகியிருக்கும் இந்த அமைப்பு வெகு விரைவிலேயே ஆயிரக்கணக்கான தொண்டர்களை உடைய ஓர் சக்தி வாய்ந்த அமைப்பாக திகழும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை. நமக்குக் குருவருளும் திருவருளும் தோன்றாத் துணையாக இருக்கும் என்று கூறினர்.

shaivam.org இணைய தள நிருவாகியும், சிறந்த சைவ நெறி புரவலருமான பெங்களூரைச் சேர்ந்த சிவத்திரு. சு. கணேஷ் அவர்கள் “வேதம் நான்கிலும் மெய்ப்பொருளாவது நாதன் நாமம் நமசிவாயவே” என்ற தலைப்பில் நான்மறையின் சிறப்பை முத்து முத்தாக எடுத்துரைத்தார்.

பிரம்மஸ்ரீ அருணசுந்தர குருக்கள் “ஆகமமாகி நின்று அண்ணிப்பான் தாள்வாழ்க” என்ற தலைப்பில் சிவ ஆகமங்களின் பெருமைகளை எடுத்துக் கூறினார். திருமுறைகள் எவ்வாறெல்லாம் ஆகமங்களைப் போற்றுகின்றன என்று ஆதாரங்களுடன் கூறினார்.

சைவத்திரு நெல்லை சிவகாந்தி அவர்கள் “திருவருட்பயன்” என்ற தலைப்பில் சைவ சிந்தாந்தக் கருத்துக்களை விளக்கினார். சைவத்தின் பயனே திருவருட் பயன் என்று உறுதியாக எடுத்துக்காட்டுகள் மூலம் கூறினார். திருவருட்பயனை திருக்குறளுடன் ஒப்புநோக்கி விளக்கினார்.

சைவத்திரு சாமி தியாகராஜன் அவர்கள் “அர்ச்சனை” என்ற தலைப்பில் அர்ச்சகர்-இறைவன் இவர்களுக்குள்ள தொடர்பு அதன் பலன் எல்லாவற்றையும் தனக்கே உரிய இனிய நடையில் பேசினார்.

சேக்கிழார் அடிப்பொடி சிவத்திரு T.N. இராமச்சந்திரன் அவர்கள் இம்மாநாட்டைப் பற்றிப் பேசும்போது “மாநாடு என்றால் இதுதான் மாநாடு” என்று பேசி இம்மாநாட்டிற்கு மேலும் மகுடம் சூட்டினார்.

தருமை ஆதீன மௌனமடம் முனைவர். ஸ்ரீமத் குமாரசுவாமி தம்பிரான் சுவாமிகள் காலை முதல் இரவு வரை நிகழ்ச்சிகளில் முழுமையாகப் பங்கேற்று, “தமிழ்சொல்லும் வடசொல்லும் தாள்நிழல் சேர” என்ற தலைப்பில் அழகுற பேசி அரிய கருத்துக்களை எடுத்துரைத்தார். மேலும், வேத ஆகம, திருமுறைகள் சிறப்பையும் ஒப்புநோக்கி விவரித்தார். வரலாற்று சிறப்புமிக்க இம்மாநாட்டினை நடத்திய சைவநெறி வளர்ச்சிக் கழகத்திற்கு தம் பாராட்டுக்களைத் தெரிவித்தார்.

சைவத்திரு பட்டமுத்து அவர்கள் “தமிழ்மொழி வடமொழி” என்ற இருமொழிகளின் பெருமைகளையும் ஒப்பிட்டு ஸ்ரீமத் மாதவ சிவஞான சுவாமிகள் அருளிய காஞ்சிபுராணம் மூலம் மிக அரிய கருத்துக்களை மேற்கோள் காட்டி விளக்கினார். மேலும், இரு பாலகர்களை முன்னிறுத்தி வடமொழியிலும் தமிழிலும் உள்ள சிவஞான போத சூத்திரங்களை ஓதச் செய்தார். மேலும், வேதத்தின் சிறப்பை விளக்கி “வடமொழி என்பது தந்தை மொழி என்றும், தென் தமிழ் என்பது தாய்மொழி” என்றும் நயம்பட கூறினார்.

“புற்றில்வாழ் அரவுமஞ்சேன்” என்ற திருவாசகப் பதிகத்திற்கு சிவச் செல்வி சரயு மிக அழகாக நடனம் ஆடினார்.

இறுதியாக கூனம்பட்டி கல்யாணபுரி ஆதீன குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ ராஜ. சரவண மாணிக்கவாசக சுவாமிகள் “எல்லாவற்றிலும் நம் முன்னோரின் மரபுபடியே செல்லுதல்தான் நல்லது” என்றும் “கும்பாபிஷேகம் என்பதை குடமுழுக்கு என்று சொல்வது கூட பிழையே” என்று கூறினார். நள்ளிரவு நெருங்கும் நேரத்திலும் அரங்கம் முழுவதும் நிரம்பியிருந்த சைவ நேயர்களின் ஆர்வத்தைக் கண்டு மகிழ்ந்து ஆசீர்வதித்தார்.

சிவத்திரு கோமதிநாயகம் அவர்கள் மாநாட்டின் தீர்மானங்களை வாசித்து பலத்த கரவொலியைப் பெற்றார். அன்பர்கள் எழுப்பிய “அரகர” என்னும் ஒலியால் மாநாட்டு மன்றமே அதிர்ந்தது.

மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

தமிழகத்தில் பூசையே நடைபெறாத சிவாலயங்களை ஆங்காங்கே சைவப் பெருமக்கள் தத்தெடுத்து நித்திய பூசைகள் சிவாகம முறைப்படி நிகழ முழு முயற்சி எடுக்க சைவ மக்களை இம்மாநாடு வேண்டுகிறது.

நமது சமய சான்றோர்கள் நமக்குத் தந்துள்ள சைவ மரபுகளை மீறாமல் கடைப்பிடித்து சைவ ஒழுக்கங்களைப் பேணி பாதுகாக்க, சைவ உலகினை இம்மாநாடு வேண்டுகிறது.

சைவ மக்களுக்கு தமிழும், சமஸ்கிருதமும் இரு கண்களாகக் கொள்ள வேண்டும் என்ற அருளாளர்கள் அருளாணையைத் தமது உயிராகக் கொள்ள வேண்டும் என்று சைவ உலகினை இம்மாநாடு வேண்டுகிறது.

வறுமையால் வாடுகின்ற திருமுறை ஓதுவா மூர்த்திகளுக்கு மாதந்தோறும் சம்பாவனைக் கொடுத்து ஆதரித்து மகிழும் கோவை ஆனைக்கட்டி மடத்தின் அதிபதி ஸ்ரீதயானந்த சரஸ்வதி சுவாமிகளை இம்மாநாடு பணிந்து வணங்கி தனது நன்றியுணர்வு பெருக்கினை புலப்படுத்துகிறது.

சிவாச்சாரியார்களும், திருமுறை ஓதுவார்களும் நமது சைவ சமயத்தின் இருகண்கள். இவ்விரு பெருமக்களும் நித்திய பூசையிலும் மகா கும்பாபிஷேகங்களிலும் ஒருவரையொருவர் அனுசரித்து உதவுமாறு இம்மாநாடு வேண்டுகிறது.

இந்து சமய அறநிலையத் துறையின் ஆளுகைக்குட்பட்ட சிவாலயங்கள் பலவற்றில் மகா கும்பாபிஷேகமும் தங்க ரதம் அமைத்தல் போன்ற நற்காரியங்களையும் செய்து வருகின்ற தமிழக இந்து சமய அறநிலையத் துறையினை இம்மாநாடு பாராட்டுகிறது.
இம்மாநாட்டில் பங்கேற்ற சைவ அன்பர்கள் அனைவரும் இரு மாதத்திற்கு ஒருமுறை கூடி, சைவ மரபினைப் பாதுகாக்கக் கருத்துப் பரிமாற்றம் செய்து மகிழ வேண்டும் என அன்பர்களை இம்மாநாடு வேண்டுகிறது.

- திருச்சிற்றம்பலம் –

நன்றி- tamilhindu.com
Dheeran
Dheeran
நண்பர்கள்

Posts : 148
Join date : 12/10/2011
Age : 51
Location : கோவை

http://dheeranstalwart.blogspot.in/

Back to top Go down

 சைவ மரபினை பாதுகாக்கும் மாநாடு Empty Re: சைவ மரபினை பாதுகாக்கும் மாநாடு

Post by Dhantaayuthapaani Sat Dec 14, 2013 9:19 pm

நன்றி, மேலும் கட்டுரைகளை எதிபார்க்கின்றோம்

Dhantaayuthapaani

Posts : 32
Join date : 05/04/2012

Back to top Go down

 சைவ மரபினை பாதுகாக்கும் மாநாடு Empty Re: சைவ மரபினை பாதுகாக்கும் மாநாடு

Post by ராகவா Sun Aug 17, 2014 7:38 pm

நன்றி..
ராகவா
ராகவா

Posts : 1164
Join date : 11/09/2013
Age : 42
Location : தஞ்சை மாவட்டம்

http://tamilhindu.forumta.net/

Back to top Go down

 சைவ மரபினை பாதுகாக்கும் மாநாடு Empty Re: சைவ மரபினை பாதுகாக்கும் மாநாடு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum