இந்து சமயம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சித்திரை-நமது புத்தாண்டுத் தொடக்கம்.
by Dheeran Tue Apr 12, 2022 8:21 am

» மீண்டும் வருக
by Dheeran Fri Oct 02, 2020 11:08 am

» கே இனியவன் ஆன்மீக கவிதைகள்
by கே இனியவன் Thu Nov 09, 2017 7:58 pm

» தீபத்திருநாள் வாழ்த்துக்கள்
by Dheeran Wed Oct 18, 2017 4:01 pm

» பண்டைய இந்தியாவின் விமானத் தொழில் நுட்பம்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:23 pm

» வெற்றி மாபெரும் வெற்றி!
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:16 pm

» பாரதி பாடலில் அராஜக “செக்யுலர்” திருத்தங்கள் - ஜடாயு
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:55 pm

» மோடி, கருப்புப்பண ஒழிப்பு, ஊடகங்கள் - ஜெயமோகன்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:41 pm

» அனைவருக்கும் வணக்கம்.
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:46 am

» நான் ஒரு ஹிந்து என்பதில் ஏன் பெருமிதம் கொள்கிறேன் – பாகம் 1 AGNIVEER
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:42 am

» தேவையா இந்த சமஸ்கிருத துவேஷம்
by Dheeran Sat Jun 25, 2016 12:46 pm

» சிவ வழிபாடு புத்தகம்
by tammy ranga Thu Dec 17, 2015 3:37 am

» ஷ்ரிடி சாய் பாபா புண்ணிய வரலாறு தமிழில்
by tammy ranga Thu Dec 17, 2015 3:35 am

» ஆரிய திராவிட மாயை
by Dheeran Thu Oct 29, 2015 4:10 pm

» தென்புலத்தார் வழிபாடு
by Dheeran Sun Sep 27, 2015 8:50 pm

» தமிழ் ஹிந்துவும் இலவச ஜோதிட கணிப்பு
by ஹரி ஓம் Mon Aug 03, 2015 2:36 am

» வெற்றி வேல்!!!வீரவேல்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
by ஹரி ஓம் Wed Jun 24, 2015 4:09 am

» சிவதாண்டவம் - PB ஸ்ரீனிவாஸ்
by i.mahatheva Thu Jun 18, 2015 5:24 pm

» கால சர்ப்ப தோஷம் என்றால் என்ன?
by jothi sangeetha Thu May 21, 2015 1:43 pm

» மல்லிகைப் பூவை தலையில் சூடுங்கள் - பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்து
by கே இனியவன் Thu May 21, 2015 11:02 am

























Topsites
Tamil 10 top sites [www.tamil10 .com ]
Ranking


திருச்செந்தூர் முருகன் சிலை

3 posters

Go down

 திருச்செந்தூர் முருகன் சிலை Empty திருச்செந்தூர் முருகன் சிலை

Post by கார்த்திகா Thu Jun 20, 2013 1:40 am


ஒருமுறை திருச்செந்தூரில் கோவில் கொண்டுள்ள ஆறுமுகப் பெருமான் விக்கிரகம் தங்கத்தால் அமைந்தது என்பதைக் கேள்விப்பட்ட டச்சுக்காரர்கள், அதை நள்ளிரவில் திருடி மரக்கலம் மூலம் கடத்திச் செல்ல முயன்றனர். மரக்கலம் சிறிது தூரம் கடலில் சென்றதும் சூறாவளிக் காற்று பலமாக விசியது. கடலும் கொந்தளித்தது.

மரக்கலத்தில் இருந்த முருகப்பெருமானின் விக்கிரகத்தால்தான் இப்படி நிகழ்கிறது என்பதை உணர்ந்த அவர்கள், அந்த விக்கிரகத்தை நடுக்கடலில் வீசினர். மழையும் நின்றது. கடல் கொந்தளிப்பு அடங்கியது. அக்காலத்தில் திருநெல்வேலியை தலைநகராகக் கொண்டு தென்பாண்டிய நாட்டை, மதுரை நாயக்க மன்னர்களின் பிரதிநிதியாக ஆண்டு வந்த வடமலையப்பன் பிள்ளை என்பவர் திருச்செந்தூர் முருகனின் தீவிர பக்தர்.

இவர் விக்கிரகம் காணாமல் போன செய்தி கேட்டு துடித்துப் போனார். அன்றிரவு அவரது கனவில் தோன்றிய முருகப்பெருமான், கடலில் தனது விக்கிரகம் கிடக்கும் இடத்தை அடையாளம் காண்பித்தார். அதாவது, சிலை கடலுக்குள் வீசப்பட்டு கிடக்கும் இடத்தின் மேலே ஒரு கருடன் பறக்கும், சிலை உள்ள இடத்தில் ஒரு எலுமிச்சம் பழம் மிதக்கும் என்பதை உணர்த்தினார்.

மறுநாள் கடலுக்குள் மரக்கலத்தில் பயணித்த வடமலையப்பன், ஓரிடத்தில் கருடன் பறப்பதையும், அந்த பகுதியில் கடல்நீரில் எலுமிச்சம் பழம் மிதந்து கொண்டிருப்பதையும் பார்த்து, அந்த இடத்தில் சிலையை தேடினார். நீருக்குள் வீசப்பட்டுக் கிடந்த சிலை மீட்கப்பட்டது. இந்த சம்பவக் காட்சிகள் ஓவியமாக வரையப்பட்டு வைக்கப்பட்டுள்ளதை திருச்செந்தூர் கோவிலுக்கு இப்போது சென்றாலும் பார்க்கலாம்.s
கார்த்திகா
கார்த்திகா

Posts : 59
Join date : 04/11/2011

Back to top Go down

 திருச்செந்தூர் முருகன் சிலை Empty Re: திருச்செந்தூர் முருகன் சிலை

Post by ஹரி ஓம் Thu Jun 20, 2013 3:08 am

நானும் திருச்செந்தூர் பலமுறை போய்ருக்கிறேன்.. கடற்கரையின் வெகு அருகாமையில் கோவில் அமைந்துள்ளது.. சுனாமியில் பல கிலோமீட்டர் வரை பாதிக்கப்பட்ட போதும் சில அடி தூரத்தில் உள்ள இந்த கோவிலில் சிறு பாதிப்பும் ஏற்படவில்லை என்பது குறிபிடதக்கது :) :)
ஹரி ஓம்
ஹரி ஓம்
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

Posts : 922
Join date : 03/08/2010
Age : 38
Location : கன்னியாகுமரி

Back to top Go down

 திருச்செந்தூர் முருகன் சிலை Empty Re: திருச்செந்தூர் முருகன் சிலை

Post by ராகவா Tue Feb 11, 2014 1:00 am

நன்றி
ராகவா
ராகவா

Posts : 1164
Join date : 11/09/2013
Age : 44
Location : தஞ்சை மாவட்டம்

http://tamilhindu.forumta.net/

Back to top Go down

 திருச்செந்தூர் முருகன் சிலை Empty Re: திருச்செந்தூர் முருகன் சிலை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum