இந்து சமயம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சித்திரை-நமது புத்தாண்டுத் தொடக்கம்.
by Dheeran Tue Apr 12, 2022 8:21 am

» மீண்டும் வருக
by Dheeran Fri Oct 02, 2020 11:08 am

» கே இனியவன் ஆன்மீக கவிதைகள்
by கே இனியவன் Thu Nov 09, 2017 7:58 pm

» தீபத்திருநாள் வாழ்த்துக்கள்
by Dheeran Wed Oct 18, 2017 4:01 pm

» பண்டைய இந்தியாவின் விமானத் தொழில் நுட்பம்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:23 pm

» வெற்றி மாபெரும் வெற்றி!
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:16 pm

» பாரதி பாடலில் அராஜக “செக்யுலர்” திருத்தங்கள் - ஜடாயு
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:55 pm

» மோடி, கருப்புப்பண ஒழிப்பு, ஊடகங்கள் - ஜெயமோகன்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:41 pm

» அனைவருக்கும் வணக்கம்.
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:46 am

» நான் ஒரு ஹிந்து என்பதில் ஏன் பெருமிதம் கொள்கிறேன் – பாகம் 1 AGNIVEER
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:42 am

» தேவையா இந்த சமஸ்கிருத துவேஷம்
by Dheeran Sat Jun 25, 2016 12:46 pm

» சிவ வழிபாடு புத்தகம்
by tammy ranga Thu Dec 17, 2015 3:37 am

» ஷ்ரிடி சாய் பாபா புண்ணிய வரலாறு தமிழில்
by tammy ranga Thu Dec 17, 2015 3:35 am

» ஆரிய திராவிட மாயை
by Dheeran Thu Oct 29, 2015 4:10 pm

» தென்புலத்தார் வழிபாடு
by Dheeran Sun Sep 27, 2015 8:50 pm

» தமிழ் ஹிந்துவும் இலவச ஜோதிட கணிப்பு
by ஹரி ஓம் Mon Aug 03, 2015 2:36 am

» வெற்றி வேல்!!!வீரவேல்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
by ஹரி ஓம் Wed Jun 24, 2015 4:09 am

» சிவதாண்டவம் - PB ஸ்ரீனிவாஸ்
by i.mahatheva Thu Jun 18, 2015 5:24 pm

» கால சர்ப்ப தோஷம் என்றால் என்ன?
by jothi sangeetha Thu May 21, 2015 1:43 pm

» மல்லிகைப் பூவை தலையில் சூடுங்கள் - பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்து
by கே இனியவன் Thu May 21, 2015 11:02 am

Topsites
Tamil 10 top sites [www.tamil10 .com ]
Ranking


கடவுள் என்றால் என்ன? – 2

Go down

கடவுள் என்றால் என்ன? – 2 Empty கடவுள் என்றால் என்ன? – 2

Post by ராகவா Sun Oct 20, 2013 9:25 pm

ஈஸ்வரனை பகவான் என்று எப்படி புரிந்துகொள்வது
நாம் மேன்மேலும் எவ்வாறு ஈஸ்வரனை பற்றிப் புரிந்துகொள்ப் போகிறோம். ஈஸ்வரனிடம் உள்ள சக்திகள் அனைத்தும் நம்மிடமும் இருக்கவேண்டும். இல்லை என்றால் ஈஸ்வரனை முழுமையாக புரிந்துகொள்ளமுடியாது.
சமஸ்கிருத மொழியில் ஈஸ்வரன் என்பது பகவான் என்றும் கூறப்படும். அதாவது பக: (Bhaga). ‘பக’ என்றால் என்ன ? ஐஸ்வர்யம் – இறைமை, ஞானம் – அறிவாற்றல், வைராக்யம் – பந்தங்களில் இருந்து விடுபடுதல், வீர்யம் – எதையும் ஆக்கவும் அழிக்கவும் சக்தி, யஷஸ் – புகழ், ஸ்ரீ – செல்வம். இந்த ஆறு குணங்களும் அளவிடமுடியாத அளவில் இருப்பது ’பகம்’. இப்படி உடையவர்தான் பகவான்.
கடவுள் என்றால் என்ன? – 2 Cosmic_goddess_bhuvaneshvari-197x300முதல் ’பக’ ஐஸ்வர்யத்தை சுட்டிக்காட்டுகிறது (அதாவது சகலமும் அறிந்த). சிறிய எறும்பைக் கண்டால் அதை கையில் எடுத்து அதன் உயிரை காப்பாற்றமுடியும் இல்லையேல் நசுக்கி சாகடிக்கலாம் அதற்கு சக்தி இருக்கிறது. அதை போல் அனைத்து ஜிவராசிகளையும் நம்மால் பாதுகாக்கவும் அழிக்கவும் முடியும். ஆனால் நுண் ஜீவராசிகளான பாக்டிரியா, வைரஸ் இவைகளை நாம் எதுவும் செய்துவிட முடியாது. ஏன் என்றால் நம் கண்ணால் அதை காணமுடியாது. நம் சக்தி இங்கே நின்றுவிடுகிறது. அதாவது அதற்கான ஐஸ்வர்யம் – ஆற்றல் நம்மிடம் இல்லை. இரண்டாவது ஞானம் – அறிவு. உங்களுடைய பிள்ளைக்கு நீங்கள் மேதாவி. ஏன் என்றால் (5+4=9) என்று உங்களுக்கு தெரியும். பிள்ளையின் கண்ணிற்கு நீங்கள் எல்லாம் தெரிந்தவர். ஆனால் உங்கள் அறியாமை அறிந்ததைவிட அதிகம். எனவே அது முழுமை பெற்ற அறிவு ஆகாது. மூன்றாவது வைராக்கியம் – பந்தத்திலிருந்து விடுபடுதல். வைராக்கியம் என்றால் பிரச்சனைகளை எல்லாம் எதிர் கொள்ளாமல் மௌனமாக இருப்பது அன்று. அப்படி என்றால் நீங்கள் அதற்க்காக பயப்படுகீறீர்கள். இதை எதிர் கொள்ளாவிட்டால் மனவருத்தம் ஏற்ப்படும் என்று செய்கின்றபோதும் அதனால் பாதிக்கப்படுகீறீர்கள். வாழைப் பழத்தை உரித்து சலனமே இல்லாமல் தோலியை எறிவதுபோல் வைராக்யம் இருக்கவேண்டும். ”நா திவேஷ்தி நா கனக்சதி” – ” வெறுக்கவும் இல்லை யாசிக்கவும் இல்லை. ஒரு காலத்தில் பலூனும், பளிங்குக் கற்களும் நமக்கு மிகவும் முக்கியமானதாக இருந்தது. இன்று வளர்ந்து விட்ட சூழலில் அது ஒர் பூர்ணவத்தை அடைந்துள்ளது. இதுவும் ஒரு வகை வைராக்கியம். இப்படி பூர்ணவத்தை நாம் எல்லாவற்றிலும் அடையமுடியதில்லை. ஆனால் ஈஸ்வரன் இந்த வைராக்கிய பூர்ணவத்தை அறிந்தவன். இதுதான் ’பக’ !
நான்காவது வீர்யம் – ஆக்கவும் அழிக்கவும் சிலவற்றிற்கு செயல் திறன் உள்ளது. ஆனால் எப்பொழுதுமே, எல்லாவற்றிலுமே சாத்தியப்படுவதில்லை. இது முற்றிலுமாக முடிவில்லாமல் இருந்தால் அது வீர்யம். இதுதான் ’பக’! ஐந்தாவது யஷஸ் – புகழ். இங்கே உள்ள எல்லா புகழும் ஈஸ்வரனால் ஏற்பட்டதுதான். இங்கே உள்ள அத்தனை பிரம்மாண்டமான உருவாக்கமும் புகழும் ஈஸ்வரனுடையதுதான். சூரியன், சந்திரன், பூமி, நமது கண், காது, அவை காண்பதற்கும், கேட்பதற்கும் ஏதுவாய் படைக்கப்பட்டது. நமது வாயால் மதுரமாக பாடமுடியும், இனிமையாக பேசமுடியம். இவை எல்லா சாதாரணமானவை அல்ல. இவையே ‘விபூதிகள்’ – புகழ் அத்தனையும் ஈஸ்வரனை சார்ந்ததுதான். இதுதான் ’பக’ ! ஆறாவது ஸ்ரீ – செல்வம். இது அளவிட முடியாதபடி இருந்தால் அது ’பக’. ஒருவர் தன்னைவிட ஏழ்மையில் உள்ளவருக்கு பொருள் அளிக்கும் பொழுது கொடுப்பதால் நமக்கு சில இழப்பு என்ற எண்ணமே இல்லாது எல்லாமுமே ஈஸ்வரன் கொடுத்ததுதான் என்று நினைப்பார்கள் என்றால் அவன் ஸ்ரீமான். இந்த ஆறு குணங்கள் அளவிடமுடியாத அளவில் இருந்தால் அதுதான் ’பக’. ஆனால் அப்படி இருப்பவர் ஒருவர்தான். அவர்தான் பகவான் ! இப்படித்தான் நாம் ஈஸ்வரனை பகவானாக புரிந்துகொள்ள வேண்டும். அப்படி புரிந்துகொண்டு விட்டோம் என்றால் இங்கே இருப்பது எல்லாமுமே ஈஸ்வரனுடையதுதான் என்பது விளங்கும்.
ஈஸ்வரனின் படைப்பில் பல்வேறு ஒழுங்கு விதிகள் (ஆர்டர்)
ஒழுங்கு-ஆர்டர் என்றவுடன் இந்த பரந்து விரிந்த பிரபஞ்சம் எல்லாவற்றிலும் ஒரே மாதிரியான ஒழுங்குமுறை உள்ளது என்பதை புரிந்து கொள்ளவேண்டும். நாம் கனவு உலகில் தங்குதடையின்றி எல்லாவிடமும் செல்கின்றோம் அது நம்மை தனிமை படுத்தி பிரிப்பதில்லை. அதைப் போல் ஈஸ்வரன் என்பவர் எல்லா அறிவாற்றலையும் கொண்டு இந்த பௌதீகப் பிரபஞ்சத்தை விரிவாக்கம் செய்துள்ளார். இதன் உள் எல்லாவிதமான சக்திகளும் (பஞ்ச பூதங்கள்), எல்லாவிதமான ஒழுங்குமுறை சட்டங்களும், எல்லாவிதமான புவியியல் முறைகளும் மற்ற எல்லாமுமே அடங்கும். வெறும் பௌதீக உலகம் மட்டும் ஒரு ஒழுங்முறையை கொண்டது அன்று. இந்த பூமியிலும் மனித ஜிவராசிகளிடத்தும், ஜடப் பொருளைத் (inert) தவிர வாழ்கை வடிவங்கள் உள்ளன. இந்த வாழ்க்கை வடிவங்கள் குறிப்பிட்ட சூழ்நிலையையும், சில சாத்தியக்கூறுகளையும் சார்ந்துள்ளது. இந்த ஒழுங்குமுறை எல்லாமுமே ஒன்றுசேர்ந்து மற்றொரு ஒழுங்குமுறையான உயிரியலை கொண்டுள்ளது. உயிரினம் இந்த பூமியில் மட்டும்தான் உள்ளது என்பது உண்மை அல்ல. இந்த பிரபஞ்ச பால்வெளியில் கோடானகோடி நக்ஷத்திரங்கள் உள்ளன. இந்த ஒவ்வொரு நக்ஷத்திரமும் சூரியனை போல் அதற்கே உரியதான கிரகங்களின் சுழற்சியைக் கொண்டுள்ளது. இவை ஏதோ சிலவற்றில் நிச்சயமாக உயிரினங்கள் இருக்கமுடியும். ஆனால் இவை எல்லாவற்றிற்குமே ஒழுங்கு சட்ட விதிகள் ஒன்றே.
கடவுள் என்றால் என்ன? – 2 Galaxy_m31_spyral_galaxy-300x225சில நக்ஷத்திரங்களுக்கும், கிரகங்களுக்கும் இது தான் ஒழுங்குமுறை விதி மற்றவற்றிற்கு வேறு என்பது உண்மை இல்லை இந்த மொத்தப் பிரபஞ்ச பால் வெளியே ஒன்றேயான ஒழுங்குமுறை விதிபடித்தான் இயங்குகின்றது. இதை பௌதீக விஞ்ஞானம் உறுதி செய்துள்ளது. நமது சாஸ்திரங்கள் சொல்வது என்னவென்றால், இந்த பூமியின் ஒழுங்கு விதிகளே சொர்க்கத்தில் உள்ளது என்று. எனவே வேறு எங்காவது உயிர் இனம் இருந்தால் அதுவும் இந்த அணுக்கூறு செயல்பாட்டிலிருந்து விலகியிருக்க சாத்தியம் இல்லை. இயற்கையிலேயே இவையும் உயிரியலை சார்ந்த ஒழுங்கு விதியையே கொண்டிருக்கும். ஒற்றை அலகு (uni-cellular) அமைப்போ அல்லது பல-அலகு (multi-cellular) அமைப்போ எல்லாமுமே உயிரியலைச் சார்ந்ததுதான். இதே உயிரியல் அடிப்படையில்தான் மரங்கள், தாவரங்கள் ஆராய்ச்சி செய்யப்படுகின்றன. எனவே உயிரியலைப் பற்றித் தெரிந்துகொள்வது ஈஸ்வரனை பற்றி தெரிந்து கொள்வதே ஆகும். அதனால் இதுவும் புனிதமானது. எனவே ஈஸ்வரன் என்பவர் பௌதீக ஒழுங்குமுறைகளிலும், உயிரியல் ஒழுங்குமுறைகளிலும் வியாபித்து இருக்கின்றார்.
வாழும் உயிரினம் அனைத்திலும் பிராணன் உள்ளது. அதுவே எல்லாவிதமான வளர்சிக்கும் ஆக்க சக்தியாக உள்ளது. ஒரு சிறு எறும்பிலிருந்து பிரபஞ்சத்தில் உள்ள உயிரினம் எல்லாவற்றிலுமே இந்த பிராணன் உள்ளது. இந்த பிராணன்தான் ஒரு வித ‘உளவியல் ஒழுங்கு விதிப்படி’ (psychological order) சுகாதாரமாக வளர்வதற்கும், பாதிப்புகளை ஏற்படுத்துவதற்கும் காரணமாக உள்ளது. இதே உளவியல் ஒழுங்கு விதிப்படி மரங்களும், தாவரங்களும் முறையே ஒளிச்சேர்கை மூலம் (photosynthesizes) நமக்குத் தேவையான உணவை தயார் செய்கின்றன. இதுதான் தாவர உளவியல். இந்த உளவியல் ஒழுங்கு விதிப்படி விஞ்ஞானிகள் பல்வேறு தடுப்பு, தற்காப்பிற்காகவும், நோய் நீக்கவும் மருந்துகளை முதலில் எலிகளுக்கு செலுத்தி அதன் பக்க விளைவுகளை கண்டுபிடித்து மாற்றங்கள் செய்து முறையான மருந்தைத் தயாரித்து அது மனிதனிடமும் செயல்படும் என்று நம்புகிறார்கள். என்னடா ஒரு எலிக்கு வேலை செய்யும் மருந்து நமக்கு அந்த வேலையை செய்வதா ! நாம் எலியைவிட மட்டமா என்பது உண்மை அல்ல. இதை உறுதிப்படுத்த எலியை தவிர குரங்கிற்கும் அந்த மருந்தை செலுத்தி அதன் பக்கவிளைவை ஆராய்ந்து பின்புதான் இது மனிதனிடமும் செயலபடும் என்ற முடிவிற்கு வருகிறார்கள். அவர்கள் எலியிடமிருந்து மனிதனுக்கு தாவுகிறார்கள். ஏன் என்றால் எல்லாமுமே ஒரே ஒழுங்கு விதிதான் என்பதால். ஒரு முத்து மாலையை எடுத்துக்கொண்டால் அந்த முத்துக்களை தாங்கி பிடிக்க அதன் இடையே கோர்க்கப்பட்ட நூல் இழைபோல் பிராணன் என்பது எல்லா உயிரினிடத்தும் உள்ளே இருந்து உயிருடன் இருக்கும் வரையில் தாங்கிப்பிடிக்கிறது. இந்த உளவியல் விரிவாக்கம் ஈஸ்வரனின் விரிவாக்கமே. அதனால் உளவியலைப் பற்றி தெரிந்து கொள்வது ஈஸ்வரனைப் பற்றி தெரிந்துகொள்வதே ஆகும்.
இது தவிர மனோவியல் ஒழுங்குமுறை உள்ளது. நாய்களுக்கென்று ஒரு தனி மனோவியல் உள்ளது. அதைப்போல் எல்லா மிருகங்களுக்கும் ஒரு தனித்த மனோவியல் உள்ளது. ஒவ்வொரு இனமும் பொதுவாகவே ஒரே மாதிரித்தான் நடந்துகொள்ளும். அங்கே ஒரு மனோவியல் ஒழுங்குமுறை உள்ளது. அதனால் தான் ஒரு சிங்கத்தையோ, யானையையோ பழகி பணியவைக்க முடிகிறது. நம்மை விட சக்தி படைத்திருந்தும் நாம் பழகி படியவைத்தால் நில் என்றாலும், உட்கார் என்றாலும், நட, திரும்பு என்றாலும் அதை செய்கின்றது. அதைப்போல் மனித இனத்திற்கென்றே ஒரு தனி மனோவியல் உள்ளது. ஒவ்வொருவரின் நடத்தை, அணுகு முறை, மதிப்புக்கள் எல்லாமுமே ஒரு வெளிப்பாடுதான். அந்த வெளிப்பாடுகளுக்கு ஒரு பின்ணனி (background) உண்டு. இந்த ஒழுங்கு முறை என்பது பின்னணியைக் கொண்டு வெளிப்படுத்துவதே ஆகும். நம்முடைய ஆவல், பயப்படுதல், கோபம் எல்லாவற்றிற்குமே பிண்ணனி உள்ளது. அதுவும் ஒரு மனோவியலைச் சார்ந்ததே ஆகும். உங்களுடைய கவலை எங்கோ சொர்க்கத்திலிருந்து வந்தது இல்லை. அதற்கென்று சில ஒழுங்கு விதிகள் உண்டு. அதைபோல் தனிமைபட்டு விட்டோம் என்ற எண்ணமும் கூட.
கடவுள் என்றால் என்ன? – 2 Cosmos-300x300இது எப்படி உங்களை பாதிக்கிறது என்ற பின்ணனியை நாம் சரியாக புரிந்துகொள்ளாததால் வந்த கவலை. அதைப் போல் கோபமும் ஏற்ப்படுகிறது. ஆனால் அதற்கு நீங்கள் பொறுப்பாளி இல்லை. ஆனால் உங்களுடைய எதிர்மறை செயலுக்கு நீங்கள்தான் பொறுப்பாளி. எனவே நாம் ஒருவரை கோபப்பட்டு எதிர் மறை செயலில் ஈடுபடக்கூடாது. மனோவியல் இதற்கான காரணங்களை முன்வைக்கிறது. நமது பொறாமை மற்ற உணர்வுகள் எல்லாமுமே ஈஸ்வரனின் ஒழுக்க விதிப்படித்தான் நடக்கிறது. நாம் அதை புரிந்துகொண்டால் நம்மைவிட்டு பொறாமை காணாமல் போய்விடும். இப்படி எல்லா உணர்வுகளும் ஒரு விதியை பின்பற்றுவதால் அதற்காக நாம் வருத்தப்பட தேவை இல்லை. எனவே நாம் மனிதர்களுடைய உணர்வுகளை மதிக்கவேண்டும். எவ்வளவு உயர்ந்தவராக இருந்தாலும் அவருடைய வாழ்கை அவரது உணர்வுகளை ஒட்டியேதான் அமையும். நினைவாற்றல் இல்லாமல் மனோவியல் இல்லை. சொல்லப்போனால் நினைவாற்றலே ஒர் மனோவியல்தான். நமது எதிர் வினை எல்லாமுமே நினைவாற்றலை ஒட்டியதே.
மற்றொரு ஒழுங்குவிதி உள்ளது. அதனை அந்தக்கரண அறிவு (Cognition) அல்லது தர்க்க அறிவு (Reasoning) எனலாம். இதனால் நாம் பலதரப்பட்ட அறிதல்களை சரி அல்லது தவறு என்று முடிவு கட்டமுடிகிறது. மொத்த ஒழுங்குவிதிகள் வரிசையில் எல்லாம் ஈஸ்வரனின் இந்த தர்க்க அறிவை காணலாம்.
ஈஸ்வரனின் பூரண ஒழுங்குமுறை விதிகள்

இந்த ஒவ்வொரு விதிக்கும் இடைவெளி என்பது கிடையாது. எங்கெல்லாம் பௌதீக ஒழுங்குவிதி வரிசை உள்ளதோ அங்கெல்லாம் உயிரியல் விதிமுறை உள்ளது. ஏன் என்றால் எல்லாமுமே துகள்கள் (particles) அடிப்படையில் உண்டானதுதான். உடற்கூறுவிற்கும் (anatomy), உளவியலுக்கும் இடைவெளி கிடையாது. அல்லது உயிரியலுக்கும், உடற்கூறுவிற்கும், உளவியலுக்கும், மனோவியலுக்கும் சொல்லும்படியான எந்த இடைவெளியும் கிடையாது. எல்லாமுமே ஒரு ஒழுங்கு விதியை பின்பற்றுவதுதான். நாம் புரிந்து கொள்ளவேண்டியது என்னவென்றால் ஈஸ்வரன் தான் விரிவாக்கம் அடைந்து ஒரு பெரிய மஹா ஒழுங்கு விதியாக வியாபித்திருக்கிறான். இது வெறும் பிரபஞ்ச ஒழுங்கு விதிமுறை என்று சொல்லமுடியாது. இதுவே ஒரு பிரம்மாண்டமான மொத்த ஒழுங்குவரிசை விதிமுறை ஆகும். அப்படி என்றால் நாம் எவ்வளவு தொலைவில் ஈஸ்வரனை பிரிந்து இருக்கின்றோம்? நாம் பௌதீக ஒழுங்கு வரிசையிலிருந்து விலகி இருக்கிறோமா ? இல்லை ! உயிரியல் ஒழுங்கு வரிசையிலிருந்து விலகி இருக்கிறோமா? இல்லை ! உளவியல் ஒழுங்கு வரிசையிலிருந்து விலகி இருக்கிறோமா ? இல்லை ! மனோவியல் ஒழுங்கு வரிசையிலிருந்து விலகி இருக்கிறோமா? இல்லை ! நாம் கோபம் கொள்ளும்போது மனோவியல் ஒழுங்கு வரிசையில் விலகி உள்ளோமா ? இல்லை ! நாம் கோபம் கொள்ளும்போதும் ஈஸ்வரனுடைய மனோவியல் ஒழுங்கு வரிசையின் உள்ளேதான் உள்ளோம். ஈஸ்வரன் இந்த மனோவியல் ஒழுங்கு வரிசையில் வியாபித்திருக்கிறார். நாம் ஒன்றை கண்டுபிடிக்கிறோம் என்றாலும், நாம் அந்த ஈஸ்வரனின் மஹா ஒழுங்குவிதி வரிசையில்தான் அடங்குவோம். ஈஸ்வரன்தான் கண்டுபிடித்தவர் உள்ளே ஒரு மஹா ஒழுங்கு வரிசையாக வியாபித்திருக்கிறார்.

தர்மம் என்ற ஒழுங்கு விதி

நாம் ஒருவருடன் ஒருவர் உறவாட வேண்டும். மிருகங்களுடன் உறவாட வேண்டும். மரம், செடி, கொடிகளுடன் உறவாட வேண்டும். எப்பொழுதுமே இந்த உறவாடல்கள் நிகழ்ந்து கொண்டேதான் இருக்கும். எனவே இந்த உறவு முறையை யாரும் தவிர்க்க முடியாது, எதிர் கொள்ளத்தான் வேண்டும். இப்படி எதிர்கொள்ளும் போது அந்த உறவாடல்கள் சரியா, தவறா என்பதற்கு பொது விதிகள் உள்ளன. இந்த பொதுவிதிகளின் வரிசைக்கிரமமே தர்மத்தின் வரிசைகிரமம். எப்படி நாம் இந்த பூமியின் புவீயீர்ப்பு விசையை உணர்கின்றோமோ அவ்வாறே தர்மத்தின் ஒழுங்கு விதிகளை நாம் எப்பொழுதும் முன் அனுபவத்துடன் உணர்கின்றோம். தர்மம் என்பது மனிதனுடைய தலையைப் போன்றது. அதுவே உங்கள் செய்கைகளை கட்டுப்படுத்துகிறது. இந்த கட்டுப்படுத்துதல் இல்லை என்றால் ஒருவருக்கு எது நல்லது, எது கெட்டது என்ற தெரிந்துகொள்ள வாய்பே இல்லை.
அப்படி என்றால் இந்த உருவாக்கம் குறை உள்ளது ஆகும். உதாரணத்திற்கு ஒரு மோட்டார் வாகனம் பிரேக் இல்லாமல் ஒரு அங்காடியில் நுழைவது போல்தான். நமக்கு என்றுமே யாரும் மலை உச்சியில் நின்றுகொண்டு உபதேசம் செய்ததில்லை. நமக்கு கடவுளின் குமாரர் தேவை இல்லை (son of God) தீர்க்கதரிசியாக ஒரு மெசையாவோ (Messiah) அல்லது இறைத்தூதரோ (Prophet) வந்து இதுதான் உலக நீயதி, இதுதான் உலக தர்மம் என்று சொல்ல தேவை இல்லை.
இங்குள்ள எல்லாமுமே ஈஸ்வரனால் உருவாக்கப்பட்டு விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது என்றால் தர்மம் என்பதும் இந்த விரிவாக்கத்தின் ஒர் அங்கமே. அது ஒரு கட்டளையோ அல்லது ஆணையோ அல்ல. அதுதான் வேதம் சொல்லும் தர்மம். அதனால் தான் எப்போதும் இலக்குகளே வழிமுறைகளை நியாயப் படுத்துகின்றன என்பது தகாது (That is the reason why end does not justify the means). அதனால் தான் தர்மச் செயலையும் அதர்ம வழியில் சென்று செய்தால் அது தர்மம் ஆகாது. ஈஸ்வரனின் பொருட்டுகூட நாம் அதர்மமாக செயல்படக்கூடாது ஏன் என்றால் தர்மத்தை ஈஸ்வரனிடமிருந்து பிரிக்கமுடியாது.
கடவுள் என்றால் என்ன? – 2 Swami_dayananda_saraswati
இருக்கின்ற சூழ்நிலையைப் பொறுத்து இதுதான் சரி, இப்படித்தான் செய்யவேண்டும் என்பது தர்மம், அதையும் ஈஸ்வரனிடமிருந்து பிரிக்கமுடியாது. நாம் வேண்டுமானால் உள்ளூர் சட்டங்களை மீறி செயல்படலாம், ஆனால் தர்மத்தை மீறி செயல்பட முடியாது, ஏன் என்றால் தர்மம் என்பதே ஈஸ்வரன்தான். எனவே தர்மத்தை மீறி பிறாண்டினால் அதுவும் நம்மை தீண்டி பிறாண்டும். நாம் செய்யும் செயலும் அதன் பாதிப்பும் அளவில் மட்டும் அல்லாது அதற்கு எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும் என்பது விதி. ( Action and reaction are not only equal, they are opposite too). எனவே நாம் அதர்மமாக செயல்படும் பொழுது பாவத்தை நோக்கி ஈர்க்கப்படுகிறோம். தர்மமாக செயல்படும் பொழுது அதாவது மற்றவருக்கு உதவும் பொழுது புண்ணியத்தை நோக்கி ஈர்க்கப்படுகிறோம். இந்த புண்ணியமும், பாவமும் நமது உறவினர்கள். எனவே கர்ம ஒழுங்கு விதி என்பதும் ஈஸ்வரன்தான். தர்மம்-கர்மம் (புண்ணியம் – பாவம்) என்பது ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள்தான்.
அத்தனை உருவாக்கங்களிலும் ஈஸ்வரன் என்றுமே எப்பொழுதுமே வியாபித்து இருக்கிறபடியால் நாம் ஈஸ்வரன் என்பவர் சொர்க்கத்தில் அமர்ந்திருக்கிறார் என்று சொல்லமுடியாது. இங்கே இருப்பதெல்லாம ஈஸ்வரன் தான். இதுதான் வேதத்தின் பார்வை. நாம் தவறாக இநத பார்வையை இழக்கமுடியாது. எனவே இங்கே சூழ்ந்துள்ள ஒழுங்குவரிசை எல்லாமுமே ஈஸ்வரன் தான் என்பதை நாம் ஒத்துக்கொள்ள வேண்டும். இல்லை ஈஸ்வரன் வேறு என்பது முட்டாள் தனமானது. அதற்காக மற்றவர்கள் கொண்டிருக்கும் நம்பிக்கைகளைத் தூற்றவேண்டும் என்பது இல்லை.
இந்த ஈஸ்வரனை மட்டும்தான் நாம் எல்லா விதமான நுண் ஆய்விற்கு உட்படுத்த முடியும். ”ஈசாவாஸ்யம் இதம் ஸர்வம்” என்ற வேத வாக்கை நாம் நிரூபிக்க வேண்டும் என்ற சுமை நமக்கு இல்லை. இங்கே இருப்பதெல்லாம் ஈஸ்வர ன்தான், நாம் அதை கண்ணால் காண்கின்றோம். இதை நம்மால் நிரூபிக்கமுடியும் என்றாலும், ஒருவர் இதை கண்டு உணராவிட்டால் அவர் இது ஈஸ்வரன் இல்லை என்று நிரூபிக்கும் சுமையை ஏற்கின்றார். இதைப் புரிந்துகொள்வதும் கண்ணால் கண்டு உணர்வதும் அவர் அவர் கையில் தான் இருக்கிறது. இதைப் புரிந்து கொள்ளாமல் இது ஈஸ்வரன் என்பது உண்மையில்லை என்றால் எது உண்மை என்பதை நிரூபிக்கும் சுமையை ஏற்கிறார்கள். அப்படி சொல்பவருடன் நாம் விவாதம் செய்யது அவர்கள் சொல்வது என்ன என்று கேட்கவேண்டும், பிறகு நாம் பிரச்சனை எங்கே உள்ளது என்பதை சுட்டிக்காட்டலாம். ஏன் என்றால் இங்கே எந்த நம்பிக்கைக்கும் இடம் இல்லை.
ஒருவரது வாழ்கையில் ஈஸ்வரனை எப்படி கொண்டு வருவது?

இந்த உலக வழக்கில் உள்ள ஈஸ்வரனின் ஒழுங்குவிதி வரிசையை எவ்வளவுக்கு எவ்வளவு பாராட்டுகின்றோமோ அந்த அளவு நாம் அவரை பற்றி தெரிந்து கொண்டு விட்டோம் என்று அர்த்தம். இங்கே ஒர் புனிதத்தை காண்கின்றோம். அதை உங்களால் ஏற்றுக்கொள்ள முடிகிறது. ஈஸ்வரனை ஏற்றுக் கொள்ளாதவர்கள் எப்படி பாதுகாப்பாகவும், அமைதியாகவும் இருக்க முடியும் ?
நாம் ஈஸ்வரன் என்ன என்று புரிந்துகொண்டு விட்டோமானால் நாம் அந்த ஒழுங்கு விதிக்கு அப்பால் செல்வதில்லை. ஏன் என்றால் அதைப் பற்றிய விழிப்புணர்வும், சிந்தனையும் நமக்கு இருப்பதால். இந்த விழப்புணர்வில் நாம் நிம்மதி கொள்ள முடிகிறது. இது தவறானது என்று சொல்ல முடியாததால் இந்த ஒழுங்கு விதியை நாம் உண்மை என்று ஏற்கின்றோம். ஈஸ்வரன் தவறானது என்று சொல்லமுடியாது என்று நாம் சொல்லவில்லை தவறே இல்லாத ஒழுங்குவிதி வரிசைதான் ஈஸ்வரன் என்று சொல்கின்றோம். ஈஸ்வரன் ஒரு ஒழுங்குவிதி வரிகையில் இருக்கிறார் அந்த ஒழுங்குவிதி வரிசை தவறானதாக இருக்கமுடியாது. எனவே ஒருவர் தர்க்க அறிவைக் கொண்டு ஈஸ்வரனைப் பற்றி ஆராய்ந்தால் தவறே கண்டுபிடிக்க முடியாத (infallible) ஈஸ்வரனை தான் காண்பார்கள். இப்படித் தவறே கண்டுபிடிக்க முடியாத ஒழுங்குவிதி வரிசையை நாம் உடற்கூறுவியலிலும், உளவியலிலும், உயிரியலிலும், மனோவியலிலும், குணவியலிலும் (epistemology), தர்மத்திலும் மற்ற எல்லாவற்றிலுமே தர்க்க அறிவால் காண்கின்றோம். எனவே எப்பொழுதும் நேரம், ஆகாயவெளி இவைகளிலிருந்தும் நாம் ஈஸ்வரனை பிரிந்திருப்பதில்லை. இப்படியாக ஒருவர் கடவுளை புரிந்துகொண்டு விட்டார்கள் எனில் அவர் தன்னிடத்தே ஈஸ்வரனின் அருளை என்றும் பெற்றிறுப்பார். அவர்களுக்கு என்றும் சாந்தி என்பது நிச்சயம் !!!

கடவுள் கருணை ( அருள்)

கருணை நமக்காகத்தான் உள்ளது என்பதைப்போல் சிலர் நினைக்கிறார்கள். இது மற்ற மத பாரம்பரியத்தில், சொர்க்கத்தில் இருக்கும் கடவுளால் கணிக்கப்பட்டு பலருக்கு விநியோகம் செய்கிறார் என்கிறார்கள். இங்கே ஒரு கேள்வி எழுகிறது? எந்த அடிப்படையில் சிலருக்கு மட்டும் கருணையை அருளி மற்றவர்களை கண்டுகொள்வது இல்லை. சரி இதை இவர் எப்படி விநியோகம் செய்வார். ஏதாவது பரிசுச் சீட்டு குலுக்கல் முறையில் தேர்தெடுத்தா ? கடவுள் இப்படி மலிவான முறையை கையாளுபவரா? அப்படி இல்லை என்றால் எந்த அடிப்படையில் ஒருவருக்கு கருணை அளிக்கவேண்டும் என்று தீர்மானிக்கிறார்?
நம்மை பொறுத்தவரையில் கடவுள் கருணையை பாக்கெட்டில் அடைத்து விநியோகம் செய்பவர் அல்ல. அல்லது ஈஸ்வரன் அதிகாலையில் எழுந்தவுடன் யாருக்கெல்லாம் இன்று நான் கருணை வழங்கவேண்டும் என்ற குழப்பத்தால், நமது விஷ்ணு பகவான் லக்ஷ்மியிடம் இன்று நான் யார் யாருக்கு கருணை அளிக்கவேண்டும் என்று கேட்டு எதையும் செய்வதில்லை.
கடவுள் என்றால் என்ன? – 2 Home-ganesh-puja-225x300கருணை என்பது நாம் சுயமாக சம்பாதித்து சேமிக்கவேண்டிய ஒன்று. அது முற்பிறவியில் சேர்த்ததாகவோ அல்லது இப்பிறவியில் சம்பாதித்து சேமிக்கவேண்டிய ஒன்று. ஈஸ்வரனுடைய கருணையைப் பெறுவது என்பது ஒரு ரப்பர் மரத்திலிருந்து ரப்பர் பாலை பெறுவது போல். நாம் கடவுளிடன் வேண்டிக்கொள்வது நமது கஷ்டங்கள் தீர்வதற்காக என்று நினைப்பது உண்மை இல்லை. இது நமது கலாசாரம். புனிதமான கலாசார குணம். வேண்டுதல் என்பது கருணையை சேமிப்பது ஆகும். இந்த சேமிப்பிற்கு வேண்டுதலை விட நமது செய்கைகளே உன்னதமானது. வாய்விட்டு வேண்டுவது இரண்டாவது விதம். மனத்தால் வேண்டுவது மூன்றாவது விதம். அதிர்ஷ்டபலன் வேண்டுமானால் நாம் செயலில்தான் இறங்க வேண்டும் பூஜை செய்வது உள்ளவற்றில் சிறந்த செயல்முறை ஆகும். ஏன் என்றால் அப்பொழுது அதாவது நமது உடல், சொல், மனம் என்ற இந்த மூன்றும் சேர்ந்து செயல்படுகின்றது. உடலால் தான் கர்மவினையை தீர்த்து அதிர்ஷ்டத்தை எளிதில் அடையமுடியும். நாம் ஒரு சிலையின் முன் சென்று ஒரு பூவைகூட வைக்காவிடில் நாம் தோல்வி அடைந்தவர். தோல்வி அடைவதற்காகவே பிறந்தவர் என்றாகிவிடும். கருணை (அருள்) என்பது அதிர்ஷ்ட பலன், அது இஷ்ட பலன் இல்லை. எனவே அதிர்ஷ்டத்தை சம்பாதிப்பதற்கு உகந்த வழி நித்திய கர்மா, நித்திய பூஜை முதலானவை ஆகும். அதில்தான் பிராணாயாமமும், தியானமும் அடங்கும். அங்கேதான் எண்ணம், சொல், செயல் என்ற மூன்றும் ஒருசேர முழு செயல் நடைபெறுகிறது.
விக்கிரஹ வழிபாடு ஒரு சிலை வழிபாடு என்று சொல்கிறவர்கள் தோல்வி அடைந்தவர்கள். அவர்கள் பௌதீக வழிகளில் கடவுளை அணுகுவதில்லை. அதனால் அவர்கள் ஈஸ்வரனின் தொடர்பையும் அறிவதில்லை. அவர்கள் வெறும் வாயால் வேண்டுவதைத் தவிர மனதால் அணுகுவதில்லை. மனதால் தியானிக்கின்ற பொழுது அது சாதாரண நிலையிலிருந்து தடைகள் இன்றி அதிவேகமாகப் பயணத்தை மேற்கொள்கிறது (வேண்டுதலை கொண்டு செல்கிறது). பூஜையைவிட வேறு மாதிரியான வேண்டுதல்கள் அவ்வளவு எளிதில் பலனை கொடுக்காது.
ராகவா
ராகவா

Posts : 1164
Join date : 11/09/2013
Age : 42
Location : தஞ்சை மாவட்டம்

http://tamilhindu.forumta.net/

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum