Latest topics
» சித்திரை-நமது புத்தாண்டுத் தொடக்கம். by Dheeran Tue Apr 12, 2022 8:21 am
» மீண்டும் வருக
by Dheeran Fri Oct 02, 2020 11:08 am
» கே இனியவன் ஆன்மீக கவிதைகள்
by கே இனியவன் Thu Nov 09, 2017 7:58 pm
» தீபத்திருநாள் வாழ்த்துக்கள்
by Dheeran Wed Oct 18, 2017 4:01 pm
» பண்டைய இந்தியாவின் விமானத் தொழில் நுட்பம்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:23 pm
» வெற்றி மாபெரும் வெற்றி!
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:16 pm
» பாரதி பாடலில் அராஜக “செக்யுலர்” திருத்தங்கள் - ஜடாயு
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:55 pm
» மோடி, கருப்புப்பண ஒழிப்பு, ஊடகங்கள் - ஜெயமோகன்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:41 pm
» அனைவருக்கும் வணக்கம்.
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:46 am
» நான் ஒரு ஹிந்து என்பதில் ஏன் பெருமிதம் கொள்கிறேன் – பாகம் 1 AGNIVEER
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:42 am
» தேவையா இந்த சமஸ்கிருத துவேஷம்
by Dheeran Sat Jun 25, 2016 12:46 pm
» சிவ வழிபாடு புத்தகம்
by tammy ranga Thu Dec 17, 2015 3:37 am
» ஷ்ரிடி சாய் பாபா புண்ணிய வரலாறு தமிழில்
by tammy ranga Thu Dec 17, 2015 3:35 am
» ஆரிய திராவிட மாயை
by Dheeran Thu Oct 29, 2015 4:10 pm
» தென்புலத்தார் வழிபாடு
by Dheeran Sun Sep 27, 2015 8:50 pm
» தமிழ் ஹிந்துவும் இலவச ஜோதிட கணிப்பு
by ஹரி ஓம் Mon Aug 03, 2015 2:36 am
» வெற்றி வேல்!!!வீரவேல்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
by ஹரி ஓம் Wed Jun 24, 2015 4:09 am
» சிவதாண்டவம் - PB ஸ்ரீனிவாஸ்
by i.mahatheva Thu Jun 18, 2015 5:24 pm
» கால சர்ப்ப தோஷம் என்றால் என்ன?
by jothi sangeetha Thu May 21, 2015 1:43 pm
» மல்லிகைப் பூவை தலையில் சூடுங்கள் - பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்து
by கே இனியவன் Thu May 21, 2015 11:02 am
சதுரகிரி மலை பயணம் -பாகம் -1
இந்து சமயம் :: மகான்கள் :: சித்தர்கள்
Page 1 of 1
சதுரகிரி மலை பயணம் -பாகம் -1
[size=10][size=10][size=10]அருள்மிகு சுந்தரமகாலிங்கம்[/size][/size][/size] |
10. 1. 13 வியாழக்கிழமை இரவு 8 மணிக்கு விருதுநகரில் இருந்து எனது
பைக்கில் புறப்பட்டு 51 கி.மீ பயணம் செய்து சதுரகிரி மலையின் அடிவாரம்,
தாணிப்பாறைக்கு இரவு 9.30க்கு வந்தோம்.
அந்த நேரத்திலும் அங்கு அன்னதானம் வழங்கி கொண்டிருந்தனர், ஆடி
அம்மாவாசையெனில் அந்த இடத்தில் நிற்க இடமில்லாத அளவு பக்தர்கள் கூட்டம்இருக்கும், ஆனால் இன்று ஐம்பதுபேருக்கும் குறைவானவர்களே அங்கு இருந்தனர். அடிவாரத்தில் டார்ச்லைட் இருபது ரூபாய்க்கு விற்றுகொண்டிருந்தனர்,
7மலைகடந்து ( 11 கி.மீட்டர் ) சுந்தரமகாலிங்கம் அடைய குறைந்தது 3மணி நேரமாகும் அதுவரை இருட்டில் தான் நடக்க வேண்டும், என்பதால் வீட்டில் இருந்து டார்ச் கொண்டு வந்து விட்டோம்.
மார்கழி மாதம் பனிவிழும் நேரம் அம்மாவாசை இருட்டு நாங்கள் இருவர்
மட்டுமே மலை ஏறினோம், பத்து நிமிடத்திற்கு முன் 4 பேர் சென்றுள்ளனர்
வேகமாக சென்றால் அவர்களுடன் இணைந்து கொள்ளலாம் என ஒரு சாது கூறினார்.
டார்ச் வெளிச்சத்தில் மலை பாதயில் நடந்தோம், சிறிது தூரம் சாதாரண
பாதையாக இருந்தது பத்து நிமிட நடைக்கு பின் வனக்காளி கோவில் வந்தது
அருமையான இடம் இயற்கையை ரசிக்க வேண்டிய இடம்
அந்த கோவிலில் இரவு 10மணிக்கு அன்னதானம் வழங்கிகொண்டிருந்தனர், சுட,சுட, ரசம் சாதம் பொறியலுடன் சாப்பிட்டு விட்டு பயணத்தை தொடர்ந்தோம்.
நான் குளிராக இருக்கும் என ஸ்வட்டர் அதன்மேல் சட்டை அணிந்து
இருந்தேன், நண்பரோ மேல் சட்டையை கழட்டி வெற்றுடம்புடன் புறப்பட்டார்,
குளிரபோகுது என்றேன் அவர் சிரித்துக்கொண்டே மலையில் ஏற ஏற வியர்க்கும்
என்றார், அந்த இடத்தில் இருந்த கடினமான பாதை ஆரம்பித்து விடுகிறது,
வழுக்குபாறை, செங்குத்துபாறை என டார்ச் லைட் வெளிச்சத்தில் கடந்தோம் மலைஏறும் போது எனக்கு மூச்சு வாங்கியது அப்போது உட்காரபோவேன் நண்பர் உட்கார விடமாட்டார் பாறையில் சாய்ந்து நில்லுங்கள், மூச்சுவாங்குவது சரியானபின் நடப்போப் உட்கார்ந்தால் பின் நடக்கும் போது கால்வலிக்கும்என்பார், பத்துநிமிடம் நடப்பது இரண்டுநிமிடம் ஓய்வு என பயணம் தொடர்ந்தது,
ஒரு மணி நேர நடையில் என் ஸ்வட்டர், சட்டை வியர்வையால் நனைந்து விட்டது,நானும் மேல் சட்டையை கழட்டிவிட்டேன்.
அடுத்த ஒரு மணிநேர பயணம் மிக கடினமாக இருந்தது. வானில் நட்சத்திரங்கள் கூட தெரியாத அளவு மரங்கள் உயரமாகவும் அடர்த்தியாகவும் இருந்தது, சிலஇடங்களில் இடது பக்கம் பெரியபள்ளம் காணப்படுகிறது விழுந்தால் பிழைப்பது கடினம் ஜாக்கிரதையாக நடக்கவும் என நண்பர் கூறிக்கொண்டே வருவார், ஐந்து வருடமாக மாதம்மாதம் அம்மாவாசைக்கு வருகிறார் ஒன்னரை மணிநேரத்தில் செருப்புபோடாமல் கோவிலுக்கு சென்றுவிடுவார் எனக்கா அவரும் மெதுவாக நடந்துவந்தார்.
இரண்டு மணிநேரத்திற்கு பின் பெரிய பசுகிடை பகுதிக்கு வந்தடைந்தோம், இயற்கையாகவே பெரிய பாறைகளால் ஆன சமவெளி நூறு பேர் கூட
படுத்துக்கொள்ளலாம், காட்டில் மாடு மேய்பவர்கள் மாடுகளுடன் ஓய்வு
எடுக்கும் பகுதி என்பதால் பெரிய பசுகிடை என பெயராம், இடமும் அருமை
காலைநீட்டி படுத்தேன் உடம்பில் வடியும் வேர்வை மீது
மார்கழிபனி உடம்பில் படும் போது உடலில் ஜஸ் வைத்து ஒத்தடம் தருவது போன்ற ஆனந்தம், டார்ச் லைட்டை அணைத்து விட்டு அந்த இருளில் யாருமில்லா கானகத்தில்படுத்துகொண்டே வானத்தில் உள்ள நட்சத்திரங்களை பார்ப்பது ஆனந்தம் ஆனந்தமே,பக்கத்தில் இருப்பவர் கூட தெரியாத அளவு இருள், கானகத்தில் எழும் சப்தம் கூட இல்லை,ஆனால் மனதில் கொஞ்சம் கூட பயம் ஏற்படவில்லை எல்லாம் சுந்தரமகாலிங்கம் அருள்தான்.
பத்துநிமிட ஓய்வுக்கு பின் புறப்பட்டோம் அரைமணி நேரம் பயணம் சின்ன
[size=10][size=10][size=10]நாவல் ஊற்று[/size][/size][/size] |
[size=10][size=10][size=10]8.6.2013 அன்று சுந்தரமகாலிங்கம் மலை சென்றபோது வறண்டு காணப்பட்ட நாவல் ஊற்று[/size][/size][/size] |
[size=10][size=10][size=10]அருள்மிகு.சுந்தரமகாலிங்கம் சன்னதி[/size][/size][/size] |
காலை 3.30 இருக்கும் நண்பர் எழுப்பிவிட்டார், மகாலிங்கம் கோவிலுக்கும்
மேல் சந்தனமகாலிங்கம் சன்னதியில் பூசை ஆரம்பித்துவிட்ட மணி ஓசை கேட்க அங்கு போவாம் என அழைத்து சென்றார், மரத்துபோன கால்கள் எட்டுவைக்க சிரமப்பட்டாலும் அங்கு சென்று பூசையை பார்த்தோம், அந்த குளிர்நேரத்திலும் பலர் கலந்து கொண்டனர், சக்கரைபொங்கள் பிரசாதம் தந்தனர் சுவையாக இருந்தது.
அதன் பின் சுந்தரமகாலிங்கம் சன்னதி வந்தோம் அங்கும் பக்தர்கள் தந்த
இளநீர்,விபூதி,மஞ்சல், பஞ்சாமிருதம் பொருட்களை வைத்து அபிஷேகம் செய்து அதன் பின் மலர்அலங்காரம் செய்து பூசை நடந்தது . ஆனந்தமான தரிசனம் ஒருமணிநேரம் நடந்தது.அபிஷேக விபூதி அனைவருக்கும் வழங்கினார்கள்.
காலை6 மணிக்கு பூசை முடிந்தவுடன் அந்த பகுதியில் அன்னதானம் ஆரம்பமாய் விடுகிறது, இரவு வரை அன்னதானம் நடைபெறுமாம்.காலை சுடசுட உப்புமா சாப்பிட்டுவிட்டு, காலை 7மணிக்கு கீழே இறங்க ஆரம்பித்தோம்,
இரவு ஆள்நடமாட்டம் இல்லாதபாதையில் சாரைசாரையாக பக்தர்கள் கூட்டம் மலை ஏறிகொண்டிருந்தனர்.
ஏறும்போது மூச்சு இறைத்தது எனில் கீழே இறங்கும் போது கால் அதிக வேதனை தந்தது, ஏறுவதை விட மலை இறங்குவது கடினமாக இருந்தது, இறங்கும் போது, பாறையிடுக்கில் கால் மாட்டிகொள்ளாமல் இறங்கவேண்டும். ஏறுபவர்கள் வழிவிடாவிட்டால் சிரமம்தான் காரணம் சில இடங்கள் பாதை குறுகி உள்ளது.
[size=10][size=10][size=10]பயணகட்டுரையாளர்[/size][/size][/size] |
அடிவார பாதை முழுவதும் காவிஉடை பிச்சைகாரர்கள். சிலர் அவர்களிடம்மலையின் மொத்த அழகையும் ரசித்தபடி அடிவாரத்தை அடைய காலை9.30மணி. அதற்கு முன் வழியில் பல இடங்களில் சுக்குமல்லி காபி வழக்கினர், ஒரு இடத்தில் மலைகிழங்கு மூலிகை டீ போட்டு விற்பனை செய்கின்றனர், வாங்கி குடித்தோம் அருமையான சுவை களைப்பு போன இடம் தெரியவில்லை.
பிச்சைபோட்டு விபூதி பூசிக்கொண்டனர். அடிவாரத்தில் சப்பாத்தி, பொங்கல்
அன்னதானம் நடைபெற்றது. பொங்கல் சாப்பிட்டுவிட்டு புறப்பட்டோம். அரசுபேருந்து வசதிகள் அதிகமாகவே உள்ளது.{விழா காலங்களில்}
பயணம் மீண்டும் தொடரும் ...மறக்கமுடியாத அனுபவம்.
நன்றி:திரு.வேல்.முருகன்
Similar topics
» சதுரகிரி மலை பயணம் -பாகம் -2
» சதுரகிரி யாத்திரை நூல்
» ஆலவாய் (மதுரை மாநகரத்தின் கதை) - சரித்திரத்தின் ஊடே ஒரு நெடும் பயணம்
» காஷ்மீர் காத்திடுவோம் , பாகம் – 2
» மஹாபாரதம் வீடியோ - தமிழில்
» சதுரகிரி யாத்திரை நூல்
» ஆலவாய் (மதுரை மாநகரத்தின் கதை) - சரித்திரத்தின் ஊடே ஒரு நெடும் பயணம்
» காஷ்மீர் காத்திடுவோம் , பாகம் – 2
» மஹாபாரதம் வீடியோ - தமிழில்
இந்து சமயம் :: மகான்கள் :: சித்தர்கள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum