Latest topics
» சித்திரை-நமது புத்தாண்டுத் தொடக்கம். by Dheeran Tue Apr 12, 2022 8:21 am
» மீண்டும் வருக
by Dheeran Fri Oct 02, 2020 11:08 am
» கே இனியவன் ஆன்மீக கவிதைகள்
by கே இனியவன் Thu Nov 09, 2017 7:58 pm
» தீபத்திருநாள் வாழ்த்துக்கள்
by Dheeran Wed Oct 18, 2017 4:01 pm
» பண்டைய இந்தியாவின் விமானத் தொழில் நுட்பம்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:23 pm
» வெற்றி மாபெரும் வெற்றி!
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:16 pm
» பாரதி பாடலில் அராஜக “செக்யுலர்” திருத்தங்கள் - ஜடாயு
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:55 pm
» மோடி, கருப்புப்பண ஒழிப்பு, ஊடகங்கள் - ஜெயமோகன்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:41 pm
» அனைவருக்கும் வணக்கம்.
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:46 am
» நான் ஒரு ஹிந்து என்பதில் ஏன் பெருமிதம் கொள்கிறேன் – பாகம் 1 AGNIVEER
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:42 am
» தேவையா இந்த சமஸ்கிருத துவேஷம்
by Dheeran Sat Jun 25, 2016 12:46 pm
» சிவ வழிபாடு புத்தகம்
by tammy ranga Thu Dec 17, 2015 3:37 am
» ஷ்ரிடி சாய் பாபா புண்ணிய வரலாறு தமிழில்
by tammy ranga Thu Dec 17, 2015 3:35 am
» ஆரிய திராவிட மாயை
by Dheeran Thu Oct 29, 2015 4:10 pm
» தென்புலத்தார் வழிபாடு
by Dheeran Sun Sep 27, 2015 8:50 pm
» தமிழ் ஹிந்துவும் இலவச ஜோதிட கணிப்பு
by ஹரி ஓம் Mon Aug 03, 2015 2:36 am
» வெற்றி வேல்!!!வீரவேல்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
by ஹரி ஓம் Wed Jun 24, 2015 4:09 am
» சிவதாண்டவம் - PB ஸ்ரீனிவாஸ்
by i.mahatheva Thu Jun 18, 2015 5:24 pm
» கால சர்ப்ப தோஷம் என்றால் என்ன?
by jothi sangeetha Thu May 21, 2015 1:43 pm
» மல்லிகைப் பூவை தலையில் சூடுங்கள் - பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்து
by கே இனியவன் Thu May 21, 2015 11:02 am
சதுரகிரி மலை பயணம் -பாகம் -2
இந்து சமயம் :: மகான்கள் :: சித்தர்கள்
Page 1 of 1
சதுரகிரி மலை பயணம் -பாகம் -2
சுந்தரமகாலிங்கம் [சுயம்பு லிங்கம்] |
மீண்டும் சதுரகிரி மலை பயணம்......
எப்போதும் இரவில் மலைஏறி அங்கு தங்கி காலையில் மலை இறங்குவது வழக்கம் இந்த முறை மதுரை “ பசுமைநடை” நண்பர்கள் வருவதாக கூற பகலில் மலை ஏறி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு சென்று வருவோம். மழை பெய்து மலை குளிர்ந்துபோய் இருக்கும், நம் மனமும் அங்குள்ள பசுமையை பார்க்கும் போது குளிர்ந்து போய்விடும்...என ...எண்ணிய படி
தீபாவளிக்கு மறுநாள் [3.11.2013] விருதுநகரில் இருந்து நான்கு பேரும், மதுரையில் இருந்து இரண்டு பேரும் என ஆறுபேர் அழகாபுரியில் சந்தித்து தம்பிபட்டி வழியாக தாணிப்பாறை புறப்பட்டோம், வத்றாப் விலக்கில் இருந்து தாணிப்பாறை ஏழு கி.மீ, அந்த பாதையில் முன் தினம் மழை பெய்து மண்வாசனை எங்கும் பரவி இருக்க மண்வாசனையை நுகர்ந்தபடி பைக்கில் பயணம் செய்வது எவ்வளவு ஆனந்தம், வார்த்தையால் வர்ணிக்கமுடியாது, பசுமையின் குளிர்ச்சியை ஆஹா என கண்களாலும், புகைபட கருவியிலும், அழகை திருடிக்கொண்டு இருந்தனர் மதுரை நண்பர்கள்.
தாணிப்பாறைதான் சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு செல்லும் மலை அடிவாரம்,அங்கு வந்து சேர்ந்தபோது மணி காலை 8மணி , கார், பைக் நிறுத்த ஸ்டாண்டு ஏற்பாடு செய்துள்ளனர், ஆனால் வண்டி நிறுத்த இடம் இல்லாத அளவிற்க்கு அதிகமான வண்டிகள், நெளியூரில் இருந்து வருபவர்கள் காரில் வந்து விடுகின்றனர், பஸ் வசதி இருக்காது என என்னி ஆனால் அரசு பேருந்து அதிக அளவில் வத்றாப்பில் இருந்து இயக்கப்படுகிறது.
அடிவாரத்தில் இரண்டு இடங்களில் அன்னதானம் வழங்கிகொண்டு இருந்தனர், நாங்கள் ஒரு இடத்தில் சாப்பிட்டு விட்டு மலை ஏறும் போது மணி 8.30 நுழைவாயிலில் வனத்துறையினர் போதைவஸ்துக்கள், மற்றும் பிளாஸ்டிக் பை வைத்து இருந்தால் உள்ளே அனுபதிப்பதில்லை , அகற்றி விட்டு அனுமதிக்கின்றனர்.
இந்தமுறை இளைஞர்கள் கூட்டம் அதிகமாகவே காணப்பட்டது. நுழைவாயில் இருந்து 20 நிமிட நடைக்கு பின் வன காளியம்மன் கோவில் வருகிறது, அங்கு அன்னதானம் வழங்கிகொண்டு இருந்தனர், அங்கு பெரிய பாறை திட்டு உள்ளது, அதில் பலர் உட்காரமுடியும், அங்கிருந்து பார்த்தால் சுற்றிலும் மலை தான் அழகான பகுதி அதன் அருகில் மலை ஆறு ஓடிகிறது ஒரு பெரிய பாறை வழியாக விழுந்து ஓடுகிறது அந்தபாறையில் 12 அடி உயரத்தில் இருந்து தண்ணீர் விழுவது அருவிபோல் உள்ளது பலர் அதில் குளித்துகொண்டு இருந்தனர்,
மீண்டும் புறப்பட்டோம் அடுத்த முப்பது நிமிடத்தில் வழுக்குபாறை வந்தது, சற்றே பெரிய பாறை ஏறும்போது கவனத்துடன் ஏறவேண்டும்,கடந்தமுறை இந்தபாறையில் ஏறும்போது ஒரு பெண் வழுக்கி கீழே விழுந்து பாறைகளில் அடிப்பட்டு இறந்ததாக கூறினார்கள், இந்தபாறையில் ஏறும் போது சுற்றிலும் அழகான இயற்கை காட்சியை காண முடியும் எனவே கவணம் அதில் போகும் போது வழுக்கிவிட காரணமாகிவிடுகிறது.
நாங்கள் சென்ற சமயம் முந்தினம் மழை பெய்து தண்ணீர் அந்த பாறை வழியாக கசிந்து செல்வதால் சற்றே வழுக்கியது, பாறையில் படி போல் செதுக்கியுள்ளனர், கவணமாக ஏறினோம். பாறையின் கீழ் மை தண்ணீர் குளம் போல் தேங்கி இருந்தது அதில் பக்தர்கள் உற்சாகமாக கத்திய படி குளித்துகொண்டு இருந்தனர், பார்பவர்களுக்கும் உற்சாகம் தொற்றிகொள்ள வேகமாக மலையில் ஏறினோம், என்றாலும் எனக்கு மூச்சு இறைத்தது, எனக்காக நண்பர்களும் நின்று ஏறினார்கள், போட்டோ எடுக்கும் ஆர்வத்தில் நண்பர் கந்தவேல் முன்னே ஏறிவிட்டார்,
முன்பெல்லாம் 2 அடி, 3அடி உயரம் உள்ள பாறைகள் பாதையில் இருக்கும் அதில் ஏறிதான் செல்லவேண்டும், சிரமாக இருக்கும், தற்போது அந்த பாறைகளை உடைக்கப்பட்டும், உடைக்கப்பட்ட பாறைகள் பாதையில் சீராக
அடுக்கப்பட்டுள்ளதால் மலை ஏற எளிதாக இருந்தது.
வழுக்குபாறை |
சங்கிலி பாறை மலை ஆறு |
சங்கிலிபாறை அருகில் மலை ஏற்றம் |
வழுக்கு பாறையில் இருந்து 30 நிமிடம் நடந்தபின் சங்கிலிபாறை வந்தது, அந்த இடம் குறுகிய மலை ஆறு உள்ள இடம் மழை பெய்து தண்ணீர் அதிகம் வரும்போது ஆபத்து இல்லாமல் கடந்து செல்ல ஒரு பாறையில் இரும்பு சங்கிலி இணைத்துள்ளனர், அதை பிடித்துகொண்டு ஆற்றை கடந்துசெல்லலாம், நாங்கள் சென்ற சமயம் முழங்கால் அளவு தண்ணீர் சென்றதால் காலை நனைத்துக்கொண்டே கடந்துசென்றோம், ஆறை கடந்தவுடன் ஒரு பெரிய ஏற்றம் கண்டிப்பாக அதில் ஏறும் போது மூச்சு வாங்கும், ஏறுவதை விட இறங்கும்போது தான் கவணமாக இறங்க வேண்டும்.
மீண்டும் 30 நிமிடமலை ஏற்றத்திற்கு பின் கோரக்கர் சித்தர் குகை வந்தது, மலை ஏறுபவர்கள் பலர் இந்த குகையை கண்டு இருக்க மாட்டார்கள், இது மலை பாதையில் ஏறும் போது இடது பக்கம் ஓடும் ஓர் மலைஆற்று க்குள் உள்ளது, பாதயில் இருந்து சற்றே விலகி செல்ல வேண்டும் பாதையில் பக்தர்கள் அசிங்கப்படுத்தியுள்ளனர், மலையில் எவ்வளவோ இடம் இருந்தாலும் பாதையின் ஓரத்தில் தான் காலைகடனை முடிக்கின்றனர். ஆற்றில் தண்ணீர் குறைந்தளவு சென்றதால் பக்தர்கள் சிலர் குளித்தனர், நண்பர்கள் சிலரும் குளிக்க ஆரம்பித்துவிட்டனர்.
மீண்டும் மலை ஏற்றம் இப்போது சற்றே கடினமான ஏற்றம் தான் இளைப்பு அதிகமானதால் உட்கார்ந்தே ஏறவேண்டி இருந்தது.சின்னபசுகிடை இடம் வந்தது கடந்த முறை இந்தபகுதியில் அதிகமான குரங்குகள் காணப்பட்டது இந்த முறை காணவில்லை,
அடித்த 30 நிமிடத்தில் பெரிய பசுகிடை திட்டு வந்தது அங்கு நாவல் ஊற்று உள்ளது ஊற்றில் நீர் குறைவாகவே இருந்தது, மலை ஏறிக்கொண்டு இருக்கும் போது பாதையில் இரட்டை லிங்க கோவில், வன துர்க்கை அம்மன் கோவில் உள்ளது பக்தர்கள் சாமிகும்பிடு ஏறுகின்றனர்.
அதில் இருந்து மலை பாதை மணல் பாதையாக இருபக்கமும், புல் விளைந்துள்ளதால் சுற்றியுள்ள மலைகளை ரசித்துகொண்டே ஏறினோம் , பிலாடி அய்யனார் கோவில் வந்தது அங்கு மூழிகை டீ விற்கினறனர் ரூபாய் 10 தான், மிகுந்த ருசி மலைஏறிய களைப்பு காணாமல் போய் விடுகிறது.
அங்கிருந்து 10 நிமிடத்தில் சுந்தரமகாலிங்க கோவில் வளாகம் வந்துவிடுகிறது. கோவில் நுழையும் இடத்தில் கடைகள் அதிகம், சுக்குமல்லி காபி கடை, சாம்பிரானி வகைவகையாக விற்கினறனர். ஒவ்வொன்றும் ஒரு மனம் பலர் வாங்கிசெல்கினறனர். வளாகத்தின் உள்ளே இருந்த கடைகள் அகற்றப்பட்டு கோவில் வரை கம்பி வேலி அமைத்து பாதுகாப்பு செய்துள்ளனர்.
கூட்டம் அதிகம் இருந்தாலும் கோவில் உள் குறைவான கூட்டம் தான் கோவிலை அடைந்தபோது மதியம் மணி 11.30 , மூன்று மணிநேரமாகியுள்ளது, மெதுவாகவே ஏறியதால் இவ்வளவு நேரம், வரிசையில் செல்வதால் சாமி கும்பிட தள்ளுமுள்ளு இல்லாமல் எவ்வளவு நேரமானலும் நின்றுசாமி கும்மிட முடிகிறது, கஷ்டப்பட்டு மலை ஏறிவருவதால் பக்தர்களை சாமி கும்பிட அனுமதிக்கினறனர். கோவில் பின் புறம் பக்தர்கள் தியானத்தில் உர்கார்ந்ர்துவிடுகினறனர். அந்த இடத்தை கடப்பது தான் சிரமமாக உள்ளது.
அம்மாவாசை அன்று உச்சிகால பூசை 12 மணிக்கு ஆரம்பிக்கினறனர். பக்தர்கள் பலர் காத்துள்ளனர், விருதுநகர் நண்பர்கள் அங்கு இருக்க , மதுரை நண்பர்களுடன் மலை இறங்கினேன், கந்தவேல் விரைவாக ஏறி அங்கு இருந்தார், கோவில் அருகில் மதியம் அன்னதானம் வழங்கினர், வயிறுநிறைவாக சாப்பிட்டு விட்டு கீழே புறப்பட்டோம், மதுரை நண்பர்கள் மறக்கமுடியாத அனுபவம் என்றனர்.
மலையில் இருந்து இறங்கும்போது மணி 12, இரண்டு மணி மலை இறக்கத்திற்கு பின் சங்கிலிபாறை வந்தோம், ஏறும் போது மூச்சு வாங்கியது எனில் இறக்கும்போது கால் வலி அதிகமானது, உடம்பின் மொத்த எடையும் காலில் தாங்கி இறக்குவதால் வலி தலைக்கு வருகிறது இதனால் தலைவலி வந்துவிடுகிறது.
சங்கிலிபாறை அருகில் உட்கார்ந்து ஓய்வு எடுத்தபோது, ஒரு பெண்னை கம்பில் போர்வைகொண்டு தொட்டில் போல் கட்டி மலையில் இருந்து இறக்கிவந்தனர் கம்பின் ஒருமுனையில் ஒருவரும், மறுமுனையில் ஒருவரும் தாங்கியவாரு எங்களை கடந்து சென்றனர், நாங்களும் அவர்கள் பின் சென்று விசாரித்தோம், மலை ஏறமுடியாதவர்களை இப்படி தொட்டில்போல் கட்டி மலை ஏற்றி சாமிகும்பிடவைத்து கீழே கொண்டு வந்து விடுவோம், அதற்கு கட்டணம் ரூபாய் 4000 ஆகும், அதிக எடை உள்ளவர்கள் எனில் 5000 ஆகும், என்றனர், சில சமயம் மலை ஏறியவர்கள் உடல்நலம் சரியில்லை எனில் மலையில் இருந்து இறக்கி வருவோம்,
மலையில் நெஞ்சு வலி வந்த பலரை தூக்கி வந்து காப்பாற்றியுள்ளோம், ஏறுவதற்கு 2 மணி நேரம், இறங்க 1.30 நிமிடம் ஆகும் என்றனர், வத்றாப்பில் உள்ளனர்,
மலை இறங்கி தாணிப்பாறை வந்தபோது மணி 3 ஆனது, பைக் எடுத்து கிளம்பிய 10 நிமிடத்தில் மழை பெய்ய ஆரம்பித்தது, பாதையில் உள்ள ஒரு வீட்டில் ஒதுங்கி நின்றோம், அங்கிருந்து பார்த்தால் எதிரில் மலை ,மழையால் நனைந்துகொண்டிருக்கும் காட்சியை ரசித்துகொண்டிருந்த போதுதான் மலை உச்சியில் மழைகாரணமாக வெள்ளி உருகி வடிவதைபோல் தண்ணீர் அருவி கீழே இறங்குவதை பார்த்தபோது பக்கத்தில் நின்றவர்கள் ஆனந்தத்தில் கத்தினர், அந்தகாட்சியை காணும் போது ஆச்சரியமாகவே இருந்தது, 15 நிமிடத்தில் மழை விட , அப்போது காணப்பட்ட அழகை படம் பிடித்தவாரு அழகாபுரி ஊர் வர நண்பர்கள் மதுரை நோக்கி செல்ல நான் விருதுநகர் திரும்பினேன்.
என்னுடன் வந்த நண்பர்கள் பெயர்;
எஸ். முருகன், பா. முருகன், கணேசன்,[விருதுநகர்]
மதுமலரன், கந்தவேல் [ மதுரை]
நன்றி:திரு.வேல்.முருகன்
Similar topics
» சதுரகிரி மலை பயணம் -பாகம் -1
» சதுரகிரி யாத்திரை நூல்
» ஆலவாய் (மதுரை மாநகரத்தின் கதை) - சரித்திரத்தின் ஊடே ஒரு நெடும் பயணம்
» காஷ்மீர் காத்திடுவோம் , பாகம் – 2
» மஹாபாரதம் வீடியோ - தமிழில்
» சதுரகிரி யாத்திரை நூல்
» ஆலவாய் (மதுரை மாநகரத்தின் கதை) - சரித்திரத்தின் ஊடே ஒரு நெடும் பயணம்
» காஷ்மீர் காத்திடுவோம் , பாகம் – 2
» மஹாபாரதம் வீடியோ - தமிழில்
இந்து சமயம் :: மகான்கள் :: சித்தர்கள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum