Latest topics
» சித்திரை-நமது புத்தாண்டுத் தொடக்கம். by Dheeran Tue Apr 12, 2022 8:21 am
» மீண்டும் வருக
by Dheeran Fri Oct 02, 2020 11:08 am
» கே இனியவன் ஆன்மீக கவிதைகள்
by கே இனியவன் Thu Nov 09, 2017 7:58 pm
» தீபத்திருநாள் வாழ்த்துக்கள்
by Dheeran Wed Oct 18, 2017 4:01 pm
» பண்டைய இந்தியாவின் விமானத் தொழில் நுட்பம்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:23 pm
» வெற்றி மாபெரும் வெற்றி!
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:16 pm
» பாரதி பாடலில் அராஜக “செக்யுலர்” திருத்தங்கள் - ஜடாயு
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:55 pm
» மோடி, கருப்புப்பண ஒழிப்பு, ஊடகங்கள் - ஜெயமோகன்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:41 pm
» அனைவருக்கும் வணக்கம்.
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:46 am
» நான் ஒரு ஹிந்து என்பதில் ஏன் பெருமிதம் கொள்கிறேன் – பாகம் 1 AGNIVEER
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:42 am
» தேவையா இந்த சமஸ்கிருத துவேஷம்
by Dheeran Sat Jun 25, 2016 12:46 pm
» சிவ வழிபாடு புத்தகம்
by tammy ranga Thu Dec 17, 2015 3:37 am
» ஷ்ரிடி சாய் பாபா புண்ணிய வரலாறு தமிழில்
by tammy ranga Thu Dec 17, 2015 3:35 am
» ஆரிய திராவிட மாயை
by Dheeran Thu Oct 29, 2015 4:10 pm
» தென்புலத்தார் வழிபாடு
by Dheeran Sun Sep 27, 2015 8:50 pm
» தமிழ் ஹிந்துவும் இலவச ஜோதிட கணிப்பு
by ஹரி ஓம் Mon Aug 03, 2015 2:36 am
» வெற்றி வேல்!!!வீரவேல்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
by ஹரி ஓம் Wed Jun 24, 2015 4:09 am
» சிவதாண்டவம் - PB ஸ்ரீனிவாஸ்
by i.mahatheva Thu Jun 18, 2015 5:24 pm
» கால சர்ப்ப தோஷம் என்றால் என்ன?
by jothi sangeetha Thu May 21, 2015 1:43 pm
» மல்லிகைப் பூவை தலையில் சூடுங்கள் - பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்து
by கே இனியவன் Thu May 21, 2015 11:02 am
இடுகம்பாளையம் ஸ்ரீ ஜெயமங்கள ஆஞ்சநேயர் திருக்கோயில்
Page 1 of 1
இடுகம்பாளையம் ஸ்ரீ ஜெயமங்கள ஆஞ்சநேயர் திருக்கோயில்
அந்நியப் படையெடுப்புகளால் அழிந்து போக இருந்த இந்து தர்மத்துக்குப் புத்துயிர் அளித்தவர்களுள் விஜயநகரப் பேரரசரான ஸ்ரீகிருஷ்ண தேவராயர் முக்கியமானவர். அதற்குக் காரணமாக இருந்தவர் அவரது குருநாதர் ஸ்ரீ வியாஸராஜர் ஆவார். பல ஆலயங்களை கிருஷ்ண தேவராய மன்னர் புதுப்பித்துள்ளார். இவரது குருநாதர் வியாஸ ராஜரால் சுமார் 700 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டதே இடுகம்பாளையம் ஸ்ரீ ஜெயமங்கள ஆஞ்சநேயர் திருக்கோயிலாகும். "ஸ்ரீ அனுமந்தராயசாமி கோயில்' என அழைக்கப்படும் இவ்வாலயம் கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் வட்டம், இடுகம்பாளையத்தில் அமைந்துள்ளது. காலப்போக்கில் சிதிலமான இக்கோயிலைப் புனரமைத்து, 2006 பிப்ரவரியில் கும்பாபிஷேகம் நடத்தியுள்ளனர். பவானி நதிக்கரையில் அமைந்துள்ள சிறுமுகையிலிருந்து தென்கிழக்கில் சுமார் 6 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது இடுகம்பாளையம்.
இங்குள்ள ஸ்ரீஜெயமங்கள ஆஞ்சநேயர், ஸ்ரீ வியாசராஜரால் புடைப்புச் சிற்பமாக அமைக்கப்பட்டுள்ளார். ஆறு அடி உயரமுள்ள, வரப் பிரசாதியான இந்த ஆஞ்சநேயர் -ஆலிலை போன்ற வயிறு, அநேக அணிமணி -ஆரங்கள் விளங்கும் அகன்ற மார்பு, உருண்டு திரண்ட உரமான புஜங்கள், அதில் ஜொலிக்கும் திருமண் காப்புகள், முத்துப் பற்களுடன் முறுவலிக்கும் பவள இதழ்கள், அபயம் அளிக்கும் சுதர்சன ரேகை படிந்த உள்ளங்கை, எழில் விளங்கும் மலர்க்கிரீடம், தலைக்கு மேலாகத் தூக்கி மணி கட்டப்பட்ட வால் என இவ்வளவு அழகுகளுடன் நம்மைக் கனிவோடு நோக்கி கருணை புரிந்து கொண்டிருக்கிறார்.
16-16 அடி அளவிலான மூலஸ்தானத்தையடுத்து அதே அளவுள்ள அர்த்த மண்டபம் உள்ளது. அதை அடுத்து 20-20 அளவுள்ள மகாமண்டபம், சிறந்த வேலைப்பாடுகள் நிறைந்த தீப ஸ்தம்பம் காணப்படுகின்றன. சுற்று மதிலுடன் கூடிய பிரகாரத்துடன் எழில்மிகு இயற்கைச் சூழலில் அமைந்துள்ளது இக்கோயில்.
ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு சம்பிரதாயப்படி அர்ச்சகர்களால் தினமும் காலை 6 மணி முதல், இரவு 8 மணிவரை திருமஞ்சனம், வடைமாலை சாற்றல், அர்ச்சனை, தீபாராதனை எனப் பூஜைகள் நடைபெற்று வருகின்றன.
ஒவ்வொரு தமிழ் மாத முதல் சனிக்கிழமையும் இக்கோயிலில் விசேஷம். அன்று பூஜைகள் தவிர பஜனைகள், ஆன்மீகச் சொற்பொழிவுகள், அன்னதானம் ஆகியவையும் நடைபெறுகின்றன. இதற்காகவே ஒரு தனி விழாக்குழு உண்டு. அனுமன் ஜெயந்தி விழாவும், ஸ்ரீ ராமநவமியும் இக்கோயிலில் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன.
புத்தி, பலம், புகழ், அஞ்சா நெஞ்சம், செயலில் உறுதிப்பாடு, ஆரோக்கியம், நாவன்மை இத்தனையும் தருபவர் ஸ்ரீ ஜெயமங்கள ஆஞ்சநேயர். வினயம், புத்தி, சமயோசிதப் புத்தி இவற்றில் முதலாவதாகத் திகழும், ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தியின் பரம பக்தர் அனுமன். எனவே இந்த இடுகம்பாளையம் அனுமனையும் "ஸ்ரீராம், ஜெய்ராம்' என்று ராம நாம ஜெபம் சொல்லி வழிபட்டால் நமது இடுக்கண்கள் நீங்குகின்றன. வாய்ப்பு கிடைக்கும் பொழுது கோவை மாவட்டத்தில் அமைந்த இந்த ஆஞ்சநேயரை நேரில் சென்று வழிபட்டு, அவரது அருள் பெறுவோமாகுக!
ஆனந்தபைரவர்- Posts : 1375
Join date : 27/07/2010
Age : 39
Location : இந்திய திருநாடு
Similar topics
» ஸ்ரீ ரங்கநாதர்,ஸ்ரீ நாமகிரியார் ,ஸ்ரீ நரசிம்மர்,ஸ்ரீ ஆஞ்சநேயர் நாமக்கல்
» கிருஷ்ணாபுரம் - ராமர் பிரதிஷ்டை செய்த ஆஞ்சநேயர்
» அருள்மிகு ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோயில்
» சுகவனேசுவரர் சுவாமி திருக்கோயில்
» வியாச பகவான் அருளும் திருக்கோயில்!
» கிருஷ்ணாபுரம் - ராமர் பிரதிஷ்டை செய்த ஆஞ்சநேயர்
» அருள்மிகு ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோயில்
» சுகவனேசுவரர் சுவாமி திருக்கோயில்
» வியாச பகவான் அருளும் திருக்கோயில்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum