இந்து சமயம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சித்திரை-நமது புத்தாண்டுத் தொடக்கம்.
by Dheeran Tue Apr 12, 2022 8:21 am

» மீண்டும் வருக
by Dheeran Fri Oct 02, 2020 11:08 am

» கே இனியவன் ஆன்மீக கவிதைகள்
by கே இனியவன் Thu Nov 09, 2017 7:58 pm

» தீபத்திருநாள் வாழ்த்துக்கள்
by Dheeran Wed Oct 18, 2017 4:01 pm

» பண்டைய இந்தியாவின் விமானத் தொழில் நுட்பம்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:23 pm

» வெற்றி மாபெரும் வெற்றி!
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:16 pm

» பாரதி பாடலில் அராஜக “செக்யுலர்” திருத்தங்கள் - ஜடாயு
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:55 pm

» மோடி, கருப்புப்பண ஒழிப்பு, ஊடகங்கள் - ஜெயமோகன்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:41 pm

» அனைவருக்கும் வணக்கம்.
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:46 am

» நான் ஒரு ஹிந்து என்பதில் ஏன் பெருமிதம் கொள்கிறேன் – பாகம் 1 AGNIVEER
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:42 am

» தேவையா இந்த சமஸ்கிருத துவேஷம்
by Dheeran Sat Jun 25, 2016 12:46 pm

» சிவ வழிபாடு புத்தகம்
by tammy ranga Thu Dec 17, 2015 3:37 am

» ஷ்ரிடி சாய் பாபா புண்ணிய வரலாறு தமிழில்
by tammy ranga Thu Dec 17, 2015 3:35 am

» ஆரிய திராவிட மாயை
by Dheeran Thu Oct 29, 2015 4:10 pm

» தென்புலத்தார் வழிபாடு
by Dheeran Sun Sep 27, 2015 8:50 pm

» தமிழ் ஹிந்துவும் இலவச ஜோதிட கணிப்பு
by ஹரி ஓம் Mon Aug 03, 2015 2:36 am

» வெற்றி வேல்!!!வீரவேல்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
by ஹரி ஓம் Wed Jun 24, 2015 4:09 am

» சிவதாண்டவம் - PB ஸ்ரீனிவாஸ்
by i.mahatheva Thu Jun 18, 2015 5:24 pm

» கால சர்ப்ப தோஷம் என்றால் என்ன?
by jothi sangeetha Thu May 21, 2015 1:43 pm

» மல்லிகைப் பூவை தலையில் சூடுங்கள் - பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்து
by கே இனியவன் Thu May 21, 2015 11:02 am

Topsites
Tamil 10 top sites [www.tamil10 .com ]
Ranking


சுகவனேசுவரர் சுவாமி திருக்கோயில்

Go down

சுகவனேசுவரர் சுவாமி திருக்கோயில் Empty சுகவனேசுவரர் சுவாமி திருக்கோயில்

Post by ராகவன் Thu Mar 15, 2012 10:48 pm

சுகவனேசுவரர் சுவாமி திருக்கோயில் Sugava10

சேலம் அருள்மிகு சுகவனேசுவரர் திருக்கோயில் நகருக்கு நடுவில் புதுமைத் தோற்றத்துடன் விளங்குகிறது. திருக்கோயில் கிழக்கு முகமாக அமைந்து வி;ளங்க, கோயிலுக்குச் செல்லும் வாயில் வளைவு தெற்கு முகமாகத் திகழ்கின்றது. திருக்கோயிலின் முன் திரு நந்தி மண்டபமும் முன்மண்டபமும் விளங்க, அவற்றையடுத்து கோபுர வாயில் அமைந்துள்ளது. முன் மண்டபத்தின் வடபாகத்தில் வாகன மண்டபமும், அலுவலகமும் அமைந்துள்ளன. கோயிலுக்கு வாயிலுக்குமேல் கீழ்புறத்தில் 3 கண்களையுடைய இராஜ கோபுரமும், மேற்புற வாயிலில் 3 நிலைகளுள்ள கோபுரமும் உள்ளன.

இத்தலத்துப் பெருமானுக்கு சுகவனேசுவரர் என்னும் திருப்பெயர் விளங்குகிறது. கிளி வழிபட்டதால் இப்பெயர் பெற்றது. கல்வெட்டுகளில் கிளிவண்ணமுடையார் என்று கூறப்படுகிறது. மேலும் கிளி வனநாதர், பாபநாசர், பட்டீச்சுரர், நாகீசர், மும்முடிநாதர் முதலிய திருப்பெயர்களால் விளங்குகின்றன. அம்மனுக்குச் சுவர்ணாம்பிகை, மரகதவல்லி, பச்சைவல்லி என்னும் திருப்பெயர்கள் விளங்குகின்றன. விநாயகர், வலம்புரி விநாயகர் (இரட்டை விநாயகர்) எனத் திருப்பெயர் பூண்டு விளங்குகிறார்.

சுமார் 700 வருடங்களுக்கு முன் 12-ம் நூற்றாண்டில் சுந்தர பாண்டியன் காலத்தில் இக்கோயில் கட்டப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. நான்கு கால்களைக் கொண்ட நிருத்தமண்டபமும் இப்பாண்டியன் காலத்தில் கட்டப்பட்டது.
ராகவன்
ராகவன்
வழிநடத்துனர்

Posts : 895
Join date : 27/07/2010
Location : தமிழகம்

http://www.tamilhindu.net/

Back to top Go down

சுகவனேசுவரர் சுவாமி திருக்கோயில் Empty Re: சுகவனேசுவரர் சுவாமி திருக்கோயில்

Post by ராகவன் Thu Mar 15, 2012 10:49 pmதலச்சிறப்பு:

கிரேதா யுகத்தில் தேவர்களுடைய பாவத்தைப் போக்கியாதால் இத்தலத்திற்குப் பாபநாசம் என்றும், எம்பெருமானுக்கு பாபநாசர் என்றும் திரேதாயுகத்தில் காமதேனுப் பசு வழிப்பட்டதால் தலத்திற்குப் பட்டீச்சுரம் என்றும், எம்பெருமானுக்குப் பட்டீச்சுரர் என்றும், துவாபரயுகத்தில் ஆதிசேடன் பூசித்து வழிபட்டதால் தலத்திற்கு நாகீச்சுரம் என்றும் எம்பெருமானுக்கு நாகீசர் என்றும், கலியுகத்தில் கிளி உருவங்கொண்ட முனிவர் பூசித்து வழிபட்டதால் தலத்திற்கு சுகவனம் என்றும் எம்பெருமானுக்கு சுகவனேசர் என்றும் திருப்பெயர்கள் வழங்கலாயின.

இத்தலத்திற்கு பாபநாசம், பட்டீச்சுரம், நாகீச்சுரம், கிள்ளைவனம், சுகவனம், சுகராண்யம், மும்முடித்தலைவாயில் என்ற பெயர்களும் விளங்குகின்றது. தஞ்சை மாவட்டத்தில் உள்ள பாபநாசம், பட்டீச்சுரம், நாகேசுவரம் என்னும் பெயர்களுடைய திருத்தலங்கள் வேறானவை.

இத்தலத்தின் பெயர்க் காரணமாகச் சில செய்திகள் விளங்கி வருகின்றன. சேரர் இல்லம் என்பது சேலம் என்று விளங்குவதாகக் கூறுவார். இவ்விடம் சேலை நெசவுக்குச் சிறப்புற்றிருப்பதால் சேலம் என்று வழங்குவதாகவும் கூறுவர். சேரன் ஆண்ட நகரமாதலால் சேலம் என மருவியது என்பர். சேரராஜன்மலை-சேர்வராயன் மலையென விளங்குpகறது என்று இத்தல புராணம் கூறுகிறது. இத்தலத்தில் 4 வேதங்கள் முதலான தேவர்கள் இறைவனை வழிபட்டதால் சதுர்வேதமங்கலம் என்னும் பெயர் பெற்றது.

சேலம் நகரின் நடுவில் இத்தலம் அமைந்துள்ளது. சுற்றிலும் பல மலைகளை உடையது. மூர்த்தி, தலம், தீர்த்தம், மூன்றிலும் சிறப்புடையது. சாபம் பெற்ற சுகமுனிவர் கிளியுருவங் கொண்டு இறைவனை வழிபட்டது. கிளி முகங் கொண்ட சுகமுனிவரின் மூலவர் உற்சவ மூர்த்தியும் உள்ளது. இதனாலேயே சுகவனம் என்றும், சுகவனேசுவரர் என்றும் அழைக்கப்படுகின்றார். மணிமுத்தாறு நதி, பல தீர்த்தங்களையும் கொண்டது. மூலவர் சுயம்பு லிங்கம், வேடனால் வெட்டப்பட்ட வெட்டுக் காயம் உள்ளது.

மேலும் பெருமானை அரசமர வடிவத்தில் வழிபட்டது, தேவர்களுடைய பாவங்களைப் போக்கியது. காமதேனப்பசு வழிபட்டது, சேரமானுக்கும் ஆதிசேடனுக்கும் தாண்டவ தரிசனம் காட்டியது, துன்மார்க்கத்தில் ஒழுகிய சரஸ்வதிக்குச் சிவலோகம் கிடைத்தது, கலிங்க தேசத்து மன்னர் ஹேமாங்கதனுக்கு அவன் மீண்டும் ராஜ்யத்தைப் பெறும்படி பெருமான் அருள் செய்தது, ஒளவையார் ஓர் வளர்ப்புப் பெண்ணுக்கு திருமணம் செய்வித்தது, மூவரசர் வேண்டுகோளின்படி மூன்று பனந்துண்டங்களை மரமாக்கிப் பழங்களை உண்டாக்கியது, ஆகிய சிறப்புகளையுடையதாக இத்தலம் உள்ளது.

இத்திருக்கோயிலில் உள்ள விகடச்சக்கர விநாயகரை (சகட்விநாயகர்) அர்ச்சனை செய்தால் குழந்தைகளுக்கு ஏற்படக்கூடிய பாலாஷ்ட்டம் உபாதைகள் நீங்கும்.

நவக்கிரஹங்களில் ராகு, செவ்வாய் இருவரும் இடம்மாறியுள்ளனர். இந்த கிரஹங்களை வழிப்படுவதால் நல்ல வரனும், உத்தியோகமும் கை கூடும். நவக்கிரஹசக்தி மேல்தளத்தில் பல்லி, உடும்பு உருவங்கள் உள்ளன. பல்லி விழும் உபாதைகள் நிவர்த்தி பெற்று சுகம் பெறலாம்.

மூர்த்திகளின் பெயர்கள்:

இத்தலத்துப் பெருமானுக்கு சுகவனேசுவரர் என்னும் திருப்பெயர் விளங்குகிறது. கிளி வழிபட்டதால் இப்பெயர் பெற்றது. கல்வெட்டுகளில் கிளிவண்ணமுடையார் என்று கூறப்படுகிறது. மேலும் கிளி வனநாதர், பாபநாசர், பட்டீச்சுரர், நாகீசர், மும்முடிநாதர் முதலிய திருப்பெயர்களால் விளங்குகின்றன. அம்மனுக்குச் சுவர்ணாம்பிகை, மரகதவல்லி, பச்சைவல்லி என்னும் திருப்பெயர்கள் விளங்குகின்றன. விநாயகர், வலம்புரி விநாயகர்(இரட்டை விநாயகர்) எனத் திருப்பெயர் பூண்டு விளங்குகிறார்.

இக்கோயிலில் சுமார் 10 கல்வெட்டுக்கள் உள்ளன. அவைகள் சர்க்காரால் நகல் எடுக்கப்பட்டுத் தென்னிந்தியக் கல்வெட்டுத் தொகுதிகளில் 1888-ம் ஆண்டில் 42 முதல் 51 வரையுள்ள எண்களாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன.
ராகவன்
ராகவன்
வழிநடத்துனர்

Posts : 895
Join date : 27/07/2010
Location : தமிழகம்

http://www.tamilhindu.net/

Back to top Go down

சுகவனேசுவரர் சுவாமி திருக்கோயில் Empty Re: சுகவனேசுவரர் சுவாமி திருக்கோயில்

Post by ராகவன் Thu Mar 15, 2012 10:50 pm

உப கோயில்கள்:

சிவன் கோயிலைச் சேர்ந்த உப கோயிலாக அக்ரஹார வீதியில் தேர்நிலைக்குப்பக்கத்தில் அருள்மிகு இராஜகணபித திருக்கோயில் உள்ளது. 2-வது அக்ரஹாரக் கோடி முனையில் அருள்மிகு காசி விசுவநாதர் திருக்கோயிலும் உள்ளது.

சேலம் தேர்நிலைக்குப் பக்கத்தில் அருள்மிகு இராஜகணபதி சுவாமி திருக்கோயில் உள்ளது. காலை 6.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை இடைவிடாது அபிஷேக ஆராதனையும், சிறப்பு வழிபாடும் நடைபெறும். மாதந்தோறும் வளர்பிறை, தேய்பிறை சதுர்த்தியில் கணபதியாகமும், சிறப்பு அபிஷேக ஆராதனையும், ஆவணி மாதத்தில் சதுர்த்தி விழா 10 நாள் திருவிழாவாகவும், இவ்விழாவில் 3-ம் நாள் திருக்கல்யாண வைபவமும், 10-ம் நாள் புஷ்ப பல்லக்கு ஊர்வலமும் நடைபெறும்.

அருள்மிகு இராஜகணபதி சுவாமிக்கு பக்தர்கள் ரூ.500-00 கட்டணம் செலுத்தி "வெள்ளிக்கவசம்" சாத்துப்படி சிறப்பு வழிபாடு 1.1.2002 முதல் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

சேலம் 2-வது அக்ரஹார கோடியில் காசிவிஸ்வநாதர் திருக்கோயில் உள்ளது. தினசரி ஆறு கால பூஜை நடைபெறுகிறது. மாதந்தோறும் கிருத்திகை சஷ்டி, பிரதோஷம், பௌர்ணமி, அமாவாசை நாட்களில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றது. அமாவாசையன்று பைரவருக்கு சிறப்பு வழிபாடு நடைபெறுவது தனிச் சிறப்பாகும். ஐப்பசி மாத பௌர்ணமியில் "நிறை மணிவிழா" மூன்று நாட்கள் சிறப்பாக நடைபெறும். இவ்விழாவில் சுவாமிக்கு அன்னாபிஷேகமும், காய்கறி அலங்காரமும் செய்து, வழிபாடு செய்வது மிகவும் சிறப்பானதாகும். முhசி மாதத்தில் சிவராத்திரியன்று 8 கால பூஜையும், சிறப்பு வழிபாடும் நடைபெறும். பங்குனியில் வசந்த நவராத்திரியும் வைகாசியில் வசந்த மஹோத்ஸவமும் நடைபெறும்.
ராகவன்
ராகவன்
வழிநடத்துனர்

Posts : 895
Join date : 27/07/2010
Location : தமிழகம்

http://www.tamilhindu.net/

Back to top Go down

சுகவனேசுவரர் சுவாமி திருக்கோயில் Empty Re: சுகவனேசுவரர் சுவாமி திருக்கோயில்

Post by ராகவன் Thu Mar 15, 2012 10:50 pm

திருவிழாக்கள்:

மாதந்தோறும் கிருத்திகை மற்றும் பூர நட்சத்திரம் பௌர்ணமி நாட்களில் அம்மனுக்கு விசேஷ அபிஷேக அலங்கார ஆராதனைகளும், உள் பிரகார புறப்பாடும் நடைபெறும். சங்கடஹர சதுர்த்தியில் விநாயகர் அபிஷேக ஆராதனையும், புறப்பாடும் நடைபெறும். ஆவணி மாதத்தில் விநாயக சதுர்த்தியன்று சிறப்பாக 33 விநாயகர் மூர்த்திகளுக்கு (ஆலயத்தில் உள்ளே) சிறப்பு அபிஷேக ஆராதனையும், ஐந்தாம் திருநாளன்று வல்லபை கணபதிக்கு திருக்கல்யாணமும், திருவீதி உலாவும் நடைபெறும்.

மாதந்தோறும் கிருத்திகை நாட்களில் சிறப்பு வழிபாடுகளும், நாயன்மார்களின் குருபூஜைக் காலங்களில் அபிஷேக ஆராதனைகளும், வெள்ளி நாட்களில் கஜலெட்சுமியம்மனுக்குப் பூஜைகளும் சிறப்பாக நடைபெறும். ஆனி மாதத்தில் நடராஜருக்கும் அபிஷேகமும் புறப்பாடும் உண்டு. அம்மனுக்கு ஆடி மாதத்தில் ஆடிப்பூர விழா 7 நாட்களும் முக்தி, கிளிவளநாதர் விழாவும் நடைபெறும். ஆவணி மூல விழா ஒரு நாள் நிகழும். புரட்டாசியில் 10 நாட்கள் நவராத்திரி விழா நடைபெறும். தினமும் அம்மையார் கொலுவில் திருக்காட்சியளிப்பார். விஜயதசமி நாளில் புறப்பாடு நிகழும். ஐப்பசியில் கந்தர் சஷ்டி விழா 6 நாட்கள் நிகழும். சூரசம்காரமும் சிறப்பாக நடைபெறும்.

திருவாதிரை உற்சவம் 10 நாட்கள் நடைபெறும். முதல் 7 நாட்கள் வரையில் அங்குரார்ப்பண உற்சவமும், 9-வது நாள் திருக்கல்யாணமும் திருவீதி உலாவும் நிகழும்.

சித்திரை வருடப் பிறப்பு நாளில் அபிசேகமும், இரவில் ரிஷபவாகனக் காட்சியும் நடைபெறும். திருவிழாக்கள் யாவும் தனித்தனித் தத்துவத்தை உணர்த்தும் பக்தர்களை பரவசமூட்டும். பன்னிரு திருமுறை விழா ஐப்பசி மாதத்திலும், அம்மையப்பர் விழா புரட்டாசியிலும் நடைபெறும்.

சேலம் தேர்நிலைக்குப் பக்கத்தில் அருள்மிகு இராஜகணபதி சுவாமி திருக்கோயில் உள்ளது. காலை 6.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை இடைவிடாது அபிஷேக ஆராதனையும், சிறப்பு வழிபாடும் நடைபெறும். மாதந்தோறும் வளர்பிறை, தேய்பிறை சதுர்த்தியில் கணபதியாகமும், சிறப்பு அபிஷேக ஆராதனையும், ஆவணி மாதத்தில் சதுர்த்தி விழா 10 நாள் திருவிழாவாகவும், இவ்விழாவில் 3-ம் நாள் திருக்கல்யாண வைபவமும், 10-ம் நாள் புஷ்ப பல்லக்கு ஊர்வலமும் நடைபெறும்.

சேலம் 2-வது அக்ரஹார கோடியில் காசிவிஸ்வநாதர் திருக்கோயில் உள்ளது. தினசரி ஆறு கால பூஜை நடைபெறுகிறது. மாதந்தோறும் கிருத்திகை சஷ்டி, பிரதோஷம், பௌர்ணமி, அமாவாசை நாட்களில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றது. அமாவாசையன்று பைரவருக்கு சிறப்பு வழிபாடு நடைபெறுவது தனிச் சிறப்பாகும். ஐப்பசி மாத பௌர்ணமியில் நிறை மணிவிழா மூன்று நாட்கள் சிறப்பாக நடைபெறும். இவ்விழாவில் சுவாமிக்கு அன்னாபிஷேகமும், காய்கறி அலங்காரமும் செய்து, வழிபாடு செய்வது மிகவும் சிறப்பானதாகும். முhசி மாதத்தில் சிவராத்திரியன்று 8 கால பூஜையும், சிறப்பு வழிபாடும் நடைபெறும். பங்குனியில் வசந்த நவராத்திரியும் வைகாசியில் வசந்த மஹோத்ஸவமும் நடைபெறும்.
உhயசழைவ
ராகவன்
ராகவன்
வழிநடத்துனர்

Posts : 895
Join date : 27/07/2010
Location : தமிழகம்

http://www.tamilhindu.net/

Back to top Go down

சுகவனேசுவரர் சுவாமி திருக்கோயில் Empty Re: சுகவனேசுவரர் சுவாமி திருக்கோயில்

Post by ராகவன் Thu Mar 15, 2012 10:52 pm

பூஜை நேரங்கள் :

சுகவனேசுவரர்சுவாமி திருக்கோயில்:

இத்திருக்கோயிலில் தினந்தோறும் ஐந்து கால பூஜைகள் நிகழ்ந்து வருகின்றன.விடியற்காலையில் 6 மணிக்கும் காலை 9 மணிக்கும் உச்சியில் 11 மணிக்கும் மாலை 5.30 மணிக்கும் இரவில் 8 மணிக்கும் ஆராதனைகள் நடைபெறுகின்றன.பூஜை நேரங்களில் பெரிய மணி அடிக்கப்படும்.அந்த நேரங்களில் சென்று வழிபடுவதால் மிக்க புண்ணியம் உண்டு.

இராஜகணபதி திருக்கோயில்:

காலை 6.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை இடைவிடாது அபிஷேக ஆராதனையும், சிறப்பு வழிபாடும் நடைபெறும். மாதந்தோறும் வளர்பிறை, தேய்பிறை சதுர்த்தியில் கணபதியாகமும், சிறப்பு அபிஷேக ஆராதனையும், ஆவணி மாதத்தில் சதுர்த்தி விழா 10 நாள் திருவிழாவாகவும், இவ்விழாவில் 3-ம் நாள் திருக்கல்யாண வைபவமும், 10-ம் நாள் புஷ்ப பல்லக்கு ஊர்வலமும் நடைபெறும். அருள்மிகு இராஜகணபதி சுவாமிக்கு பக்தர்கள் ரூ.500-00 கட்டணம் செலுத்தி "வெள்ளிக்கவசம்" சாத்துப்படி சிறப்பு வழிபாடு 1.1.2002 முதல் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

காசிவிஸ்வநாதர் திருக்கோயில்:

தினசரி ஆறு கால பூஜை நடைபெறுகிறது. மாதந்தோறும் கிருத்திகை சஷ்டி, பிரதோஷம், பௌர்ணமி, அமாவாசை நாட்களில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றது. அமாவாசையன்று பைரவருக்கு சிறப்பு வழிபாடு நடைபெறுவது தனிச் சிறப்பாகும். ஐப்பசி மாத பௌர்ணமியில் நிறை மணிவிழா மூன்று நாட்கள் சிறப்பாக நடைபெறும். இவ்விழாவில் சுவாமிக்கு அன்னாபிஷேகமும், காய்கறி அலங்காரமும் செய்து, வழிபாடு செய்வது மிகவும் சிறப்பானதாகும். முhசி மாதத்தில் சிவராத்திரியன்று 8 கால பூஜையும், சிறப்பு வழிபாடும் நடைபெறும். பங்குனியில் வசந்த நவராத்திரியும் வைகாசியில் வசந்த மஹோத்ஸவமும் நடைபெறும்.
ராகவன்
ராகவன்
வழிநடத்துனர்

Posts : 895
Join date : 27/07/2010
Location : தமிழகம்

http://www.tamilhindu.net/

Back to top Go down

சுகவனேசுவரர் சுவாமி திருக்கோயில் Empty Re: சுகவனேசுவரர் சுவாமி திருக்கோயில்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum