Latest topics
» சித்திரை-நமது புத்தாண்டுத் தொடக்கம். by Dheeran Tue Apr 12, 2022 8:21 am
» மீண்டும் வருக
by Dheeran Fri Oct 02, 2020 11:08 am
» கே இனியவன் ஆன்மீக கவிதைகள்
by கே இனியவன் Thu Nov 09, 2017 7:58 pm
» தீபத்திருநாள் வாழ்த்துக்கள்
by Dheeran Wed Oct 18, 2017 4:01 pm
» பண்டைய இந்தியாவின் விமானத் தொழில் நுட்பம்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:23 pm
» வெற்றி மாபெரும் வெற்றி!
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:16 pm
» பாரதி பாடலில் அராஜக “செக்யுலர்” திருத்தங்கள் - ஜடாயு
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:55 pm
» மோடி, கருப்புப்பண ஒழிப்பு, ஊடகங்கள் - ஜெயமோகன்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:41 pm
» அனைவருக்கும் வணக்கம்.
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:46 am
» நான் ஒரு ஹிந்து என்பதில் ஏன் பெருமிதம் கொள்கிறேன் – பாகம் 1 AGNIVEER
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:42 am
» தேவையா இந்த சமஸ்கிருத துவேஷம்
by Dheeran Sat Jun 25, 2016 12:46 pm
» சிவ வழிபாடு புத்தகம்
by tammy ranga Thu Dec 17, 2015 3:37 am
» ஷ்ரிடி சாய் பாபா புண்ணிய வரலாறு தமிழில்
by tammy ranga Thu Dec 17, 2015 3:35 am
» ஆரிய திராவிட மாயை
by Dheeran Thu Oct 29, 2015 4:10 pm
» தென்புலத்தார் வழிபாடு
by Dheeran Sun Sep 27, 2015 8:50 pm
» தமிழ் ஹிந்துவும் இலவச ஜோதிட கணிப்பு
by ஹரி ஓம் Mon Aug 03, 2015 2:36 am
» வெற்றி வேல்!!!வீரவேல்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
by ஹரி ஓம் Wed Jun 24, 2015 4:09 am
» சிவதாண்டவம் - PB ஸ்ரீனிவாஸ்
by i.mahatheva Thu Jun 18, 2015 5:24 pm
» கால சர்ப்ப தோஷம் என்றால் என்ன?
by jothi sangeetha Thu May 21, 2015 1:43 pm
» மல்லிகைப் பூவை தலையில் சூடுங்கள் - பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்து
by கே இனியவன் Thu May 21, 2015 11:02 am
யார் நமக்கு குரு ?
இந்து சமயம் :: செய்திகள் :: கட்டுரைகள்
Page 1 of 1
யார் நமக்கு குரு ?
நம்மில் பலருக்கு தற்போதைய கேள்வி எப்படி ஒரு குருவை தேர்ந்தெடுப்பது என்பதுதான்!
உங்களுக்கு நீங்களே மிக சரியான குரு, ஆனாலும் வெளியே ஒரு குரு சிலருக்கு தேவைப்படுகிறது.
ஏனென்றால் சொல்வது மிக எளிது, குருவற்ற வித்தை பலிதமாகாது என்று ஒரு வார்த்தை வழக்கு ஒன்று நம்மிடையே உண்டு.
சரி, இன்றுதான் எல்லா குருமார்களும் ஏதோ ஒரு வகை குறைபாடு உள்ளவராகவே இருக்கிறார்கள்.
நாம் சரியான வழி தேடிப் போக நமக்கு வரும் குருவும் வழிதேடும் நபராகவே இருந்தால் நாம் எப்படி முதிர்வடைவது? என்ற பெரிய குழப்பம் வந்து விடுகிறதல்லவா?
இதற்கு ஒரு எளிமையான, நமக்கு உகந்த குருவை கண்டுபிடிக்கும் வழி ஓன்று உண்டு,
இதன்படி நமது குருவை நாம் அடையாளம் காணமுடியும்.
ஒரு குருவிடம் செல்கிறோம், அவரது பேச்சிலோ, ஒழுக்கத்திலோ, நடைமுறை வாழ்க்கையிலோ, எளிமையிலோ, பண்பிலோ அல்லது
நீங்கள் ஒரு குரு இப்படித்தான் இருக்கவேண்டும் என்று தீர்மானித்தபடியோ அவர் இருந்தாலும் சரி, இவை எதுவும் இல்லாமல் இருந்தாலும் சரி, உங்கள் குருவை அடையாளம் காணும் வழி என்னவென்றால்...
உங்களுக்கு ஊரில் நல்ல மதிப்புண்டு, ஆனால் இங்கே போனால் உங்களுக்கு மதிப்பில்லை,
உங்களுக்கு எல்லாவிதமான கேள்வி ஞானமும் உண்டு ஆனால் இங்கே போனால் முட்டாளாகி விடுகிறீர்கள்,
உங்களுக்கு எங்கும் மிகுந்த மரியாதை உண்டு, ஆனால் இங்கே போனால் கிட்டத்தட்ட அவமானமே ஏற்படுகிறது,
மொத்தத்தில் நமது, நான் என்கிற உணர்வு, நமது அகங்காரம், வீண் ஜம்பம் எல்லாம் தவிடு பொடியாகிறது.
நமது மனம் உடனே புறப்படு, ஏன் இத்தனை அவமானமும் உனக்கு என்கிறது, நாமும் புறப்பட்டு விடுகிறோம்,
ஆனால் உள் மனம் மீண்டும் அங்கேயே போகச் சொல்கிறது. அந்த அவமானத்தை ஏற்றுக்கொள்கிறது,
ஆமாம் நீ அப்படித்தான் என்று நம்மை சுட்டிக்காட்டி உண்மையை நமக்கு சொல்கிறது.
........என்றால் அந்த இடம்தான் உங்கள் குரு உள்ள இடம், அவர்தான் உங்கள் குரு.
அவர் வயதில் குறைவானவராக,
அறிவில் குறைந்தவராக,
உங்களைவிட வசதியில் குறைந்தவராக,
அனுபவத்தில் குறைந்தவராக,
ஒழுக்கம் இல்லாதவராகக் கூட இருக்கலாம்,
ஆனால் அவர்தான் உங்கள் குரு.
(ஒரு குரு காண முடியாத, பலநிலைகளை,
மாணவன் காணமுடியும். குரு பக்தி இருந்தால்).
அவரை விடாதீர்கள்,
நீங்கள் கண்டிப்பாக யோக நிலையில்,
த்யான நிலையில்,
அவரைவிட மேன்மை அடைய முடியும்.
நம்பிக்கையுடன் குருவை நாடுங்கள்,
நம்பிக்கையுடன் அவரது சொல்லைக் கேளுங்கள்,
நம்பிக்கையுடன் அவர் சொன்ன வழி செல்லுங்கள் ,
குரு முன்னேற வில்லை என்றாலும்
நீங்கள் கண்டிப்பாக முன்னேறுவீர்கள்.
இங்கே நமது கவியரசர் கண்ணதாசன் சொன்னதை நினைவு கூர்வது பொருந்தும் என நினைக்கிறேன், கவியரசு சொல்கிறார்,
“என்னைப் பின்பற்றாதீர்கள் என் எழுத்தைப் பின்பற்றுங்கள் ”
இது எல்லா விஷயங்களுக்கும் பொருந்தும்.
சொல்பவர் கருத்தை பின்பற்றுங்கள்,
சொல்பவர் செய்கையை பின்பற்றாதீர்கள்,
அது போதும், நீங்கள் உயர்வதற்கு.
எல்லாநிலைகளிலும் நீங்கள் உயர வாழ்த்துக்கள்
அன்புடன் கருணாகரன்
ஆனந்தபைரவர்- Posts : 1375
Join date : 27/07/2010
Age : 39
Location : இந்திய திருநாடு
Similar topics
» யார் நல்ல குரு...?
» குரு வந்தனம்
» கடும் உழைப்பே நமக்கு தேவை - விவேகானந்தர்
» குரு திருவாதவூரர்
» முருகன் யார்?
» குரு வந்தனம்
» கடும் உழைப்பே நமக்கு தேவை - விவேகானந்தர்
» குரு திருவாதவூரர்
» முருகன் யார்?
இந்து சமயம் :: செய்திகள் :: கட்டுரைகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum