Latest topics
» சித்திரை-நமது புத்தாண்டுத் தொடக்கம். by Dheeran Tue Apr 12, 2022 8:21 am
» மீண்டும் வருக
by Dheeran Fri Oct 02, 2020 11:08 am
» கே இனியவன் ஆன்மீக கவிதைகள்
by கே இனியவன் Thu Nov 09, 2017 7:58 pm
» தீபத்திருநாள் வாழ்த்துக்கள்
by Dheeran Wed Oct 18, 2017 4:01 pm
» பண்டைய இந்தியாவின் விமானத் தொழில் நுட்பம்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:23 pm
» வெற்றி மாபெரும் வெற்றி!
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:16 pm
» பாரதி பாடலில் அராஜக “செக்யுலர்” திருத்தங்கள் - ஜடாயு
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:55 pm
» மோடி, கருப்புப்பண ஒழிப்பு, ஊடகங்கள் - ஜெயமோகன்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:41 pm
» அனைவருக்கும் வணக்கம்.
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:46 am
» நான் ஒரு ஹிந்து என்பதில் ஏன் பெருமிதம் கொள்கிறேன் – பாகம் 1 AGNIVEER
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:42 am
» தேவையா இந்த சமஸ்கிருத துவேஷம்
by Dheeran Sat Jun 25, 2016 12:46 pm
» சிவ வழிபாடு புத்தகம்
by tammy ranga Thu Dec 17, 2015 3:37 am
» ஷ்ரிடி சாய் பாபா புண்ணிய வரலாறு தமிழில்
by tammy ranga Thu Dec 17, 2015 3:35 am
» ஆரிய திராவிட மாயை
by Dheeran Thu Oct 29, 2015 4:10 pm
» தென்புலத்தார் வழிபாடு
by Dheeran Sun Sep 27, 2015 8:50 pm
» தமிழ் ஹிந்துவும் இலவச ஜோதிட கணிப்பு
by ஹரி ஓம் Mon Aug 03, 2015 2:36 am
» வெற்றி வேல்!!!வீரவேல்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
by ஹரி ஓம் Wed Jun 24, 2015 4:09 am
» சிவதாண்டவம் - PB ஸ்ரீனிவாஸ்
by i.mahatheva Thu Jun 18, 2015 5:24 pm
» கால சர்ப்ப தோஷம் என்றால் என்ன?
by jothi sangeetha Thu May 21, 2015 1:43 pm
» மல்லிகைப் பூவை தலையில் சூடுங்கள் - பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்து
by கே இனியவன் Thu May 21, 2015 11:02 am
நாகராஜன் கோயில்
Page 1 of 1
நாகராஜன் கோயில்
விஜயலட்சுமி சுப்பிரமணியம்
நாகராஜா மற்றும் நாகரம்மன் என்னும் நாக தெய்வத்தின் பெயரையே தனதாக்கிக் கொண்ட திருத்தலம் "நாகர்கோவில்' ஆகும். இத்தலம் கன்னியாகுமரி மாவட்டத்தின் தலை நகராக விளங்குகிறது. இந்த நாக தெய்வத்துக்கு நேர்த்திக்கடன் செய்வதன் மூலம் (உப்பு, மிளகு சமர்ப்பித்தல்) தோல் வியாதிகள் நீங்குவதோடு, உடல் உறுப்புகளும் நலம் பெறும் என்ற நம்பிக்கை காலங்காலமாக இப்பகுதி மக்களிடையே பரவிக் கிடக்கிறது.
நாகர்கோவிலின் மத்தியில் அமைந்துள்ள இந்த நாகராஜர் ஆலயத்தில் ஐந்து தலை நாகராஜர் மூலவராகக் காட்சி தருகிறார். மூலவரைச் சுற்றி எப்பொழுதும் நீர் நிறைந்து காணப்படுகிறது. அர்ச்சகர் அந்த நீரில் நின்று கொண்டுதான் வழிபாடுகள் செய்கிறார். இந்த நீர் எப்போதும் வற்றுவதில்லை என்பது இத் தலத்தின் சிறப்பு ஆகும். இதிலிருந்து எடுக் கப்படும் மண்ணே பக்தர்களுக்குப் பிரசாதமாகத் தரப்படுகிறது. மூலவர் உள்ள இடத்தின் மேற் கூரை ஓலையால் மட்டுமே வேயப்பட்டுள்ளது.
உட்பிராகாரத்தில் மகாவிஷ்ணு, ருக்மிணி- சத்யபாமாவுடன் அனந்தகிருஷ்ணன், கன்னி மூலை கணபதி, நாகலிங்க பூதத்தான் ஆகியோரின் சந்நிதிகள் உள்ளன. பூதத்தானின் சந்நிதியில் பல்வேறு பூதகணங்கள் உள்ளன.
இத்தலத்து நாகராஜரை குலதெய்வமாக வழிபடுவோரும் உண்டு. குடும்ப குலதெய்வம் தெரியாதவர்களும் இவரை வணங்குகின்றனர். நாகரை அடுத்து காசி விஸ்வநாதர் சந்நிதி உள்ளது. இவரும் அனந்தகிருஷ்ண பெருமாளும் இத்தலத்தின் உபதெய்வங்களாகக் கருதப் படுகின்றனர்.
இங்குள்ள அனந்தகிருஷ்ணன் கோவிலுக்கு சுமார் 350 ஆண்டுகளுக்கு முன்பாக கும்பா பிஷேகம் செய்யப்பட்ட செய்தியை இங்குள்ள கல்வெட்டு குறிப்பிடுகிறது. இத்தலத்தில் உள்ள பன்னிரண்டு கல்வெட்டுகளில் ஏழு கல்வெட்டு கள் கி.பி.1506-லிருந்து 1522-க்குள் செதுக்கப் பட்டவையாகும்.
முதல் கட்டுமானப் பணியை சமணர் தொடர்பு இருந்தபோது அரசன் "சிறவாய்மூத்த தம்பிரானான செய்துங்க நாட்டு சங்கரநாராயண என்ற மண் கொண்ட பூதலவீர உதய மார்த் தாண்டன்' என்பவன், "சோழகுலவல்லிபுரம்' எனப்பட்ட களக்காட்டைத் தலைநகராகக் கொண்டு "வீரமார்த்தாண்ட சதுர்வேதி மங்கல'த்தில் தான் கட்டிய புதிய மாளிகையிலிருந்து வேணாட்டை ஆட்சி செய்யும்போது மேற்கொண்டதாகக் கூறப்படுகிறது. இவனது கல்வெட்டுகள் நாஞ்சில் மற்றும் நெல்லை எல்லைப்புறப் பகுதி ஆலயங்களில் உள்ளனஎன்று கண்டறியப்பட்டுள்ளது. இத்தலத்து நாகராஜரை வழிபட, இவனது சரும நோய் குணமடைந்து கோவிலின் சில பகுதிகளைக் கட்டினான் என்பது மரபுவழிச் செய்தியாக உள்ளது.
இந்த மன்னன் பெயரால் அம்பாசமுத்திரத்தில் "பூதலவீர ராமவர்மா விநாயகர் கோவில்' ஒன்றும் இருப்பதாகக் கூறப்படுகிறது. கி.பி. 8-ஆம் நூற்றாண்டுக்கு முன்பு தமிழகத்தின் மிகப் பழைய கோவில்கள் எல்லாம் ஓலை வேயப்பட்டு மேற்கூரையோடு செங்கற் கோவில்களாக இருந்தனவாம். பின்னர் கற்றளிகளாக மாறியுள்ளன.
இத்தலத்தில் ஆயில்ய நட்சத்திர நாட்கள் மற்றும் ஆவணி ஞாயிற்றுக் கிழமைகளில் அதிக அளவு கேரளா மற்றும் தமிழ்நாட்டு மக்கள் வந்து வழிபாடுகள் செய்கின்றனர். ஒன்பது ஆயில்ய நட்சத்திர நாட்களில் விரதமிருந்து நாகரை வழிபட, பிள்ளைப்பேறு கிட்டும் என்பது ஐதீகம். கோவில் முகப்பில் காணப்படும் நாகர் சிலைகளால் சூழப்பட்ட இரு அரச மரங்களை மகப்பேறு வேண்டுவோர் சுற்றி வலம் வந்து வழிபடுகின்றனர்.
ஆவணி மாத ஞாயிற்றுக் கிழமைகளில் நாகர்கோவில் நகரம் திருவிழாக் கோலத்துடன் காட்சியளிக்கும். அதிலும் மூன்றாவது மற்றும் ஒடுக்கத்து ஞாயிறு எனப்படும் ஆவணி மாதக் கடைசி ஞாயிற்றுக் கிழமைகளில் வரும் பக்தர்களின் கூட்டம் கணக்கிலடங்காது.
இந்த ஆலயத்தை நாகங்கள் காவல் புரிவதாக ஒரு ஐதீகம் உள்ளது. இத்தலத்தில் உள்ள ஐந்து தலை நாகம் போன்று காட்சியளிக்கும் நாகலிங் கப் பூவை நாகராஜரின் உருவ அடையாள மாகவே எண்ணுகின்றனர். ஆலயத்தில் நிறைய நாகலிங்க மரங்கள் உள்ளன. இந்தப் பூவைக் கொண்டே நாகராஜருக்கு அர்ச்சனை செய்யப் படுகிறது.
இந்த பிரம்மாண்டமான ஆலயத்தில் நான்கு குளங்கள் உள்ளன. அதில் நந்தவனத்தில் உள்ள குளப்பகுதியில் நாகர் வசிப்பதாகக் கூறப் படுகிறது. ஆலயத் தூண்களில் பார்ச்சுவநாதரும் மகாவீரரும் தவக்கோலத்தில் நின்றும் அமர்ந்தும் காட்சி தருகின்றனர். இந்த ஆலயத் தின் தெற்குப்புற வாயில் ஒரு புத்த விகாரத்தை நினைவூட்டுகிறது. சைவம், வைணவம், சமணம், பௌத்தம் ஆகிய நான்கு சமயங்களின் கூட்டுருவாக இந்த ஆலயம் காட்சியளிக்கிறது.
இத்தலத்தில் இங்குள்ள அனந்தகிருஷ்ண ருக்கே தைத் திருவிழா தேரோட்டம் நடைபெறு கிறது. ஒன்பது நாட்கள் நடக்கும் இந்த விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்கின்றனர்.
தற்போது மூலவர் உள்ள இடத்தில் ஒரு காலத்தில் புல்லும் புதரும் மண்டிக் கிடந்ததாம். அங்கே புல்லறுத்துக் கொண்டிருந்த இளம் பெண்ணின் அரிவாள்பட்டு, புதருக்குள்ளிருந்த ஐந்து தலை நாகத்தின் தலையிலிருந்து ரத்தம் பீறிட்டதாம்! அதைக் கண்டு அஞ்சிய அந்தப் பெண் ஊராரிடம் சொல்ல, ஊர் மக்கள் திரண்டு வந்து அந்த இடத்தில் சிறு கோவில் கட்டி வணங்க ஆரம்பித்தனர். அவ்வாறு உருவானதே இந்தக் கோவில் என்கிறார்கள்.
ஒரு காலத்தில் கேரள மாநிலத்துடன் இணைந்திருந்த இந்த ஆலயத்தில் தற்போதும் கேரள நம்பூதிரிகளே பூஜைகள் செய்கின்றனர். இத்தலத்தில் நாகருக்கு பாலாபிஷேகம், உப்பு மற்றும் மிளகு தூவி வழிபடுவது மிகவும் சிறப் பாகக் கருதப்படுகிறது.
நாகத்தின் பெயரினையே தனதாக்கிக் கொண்ட நகரம், மாவட்டத்தின் தலைநகரையே பெயராகக் கொண்ட ஒரு அழகிய பிரம்மாண்ட மான கோவில், தேரோட்டம் நடைபெறும் நாகராஜா கோவில் என்னும் சிறப்பு வேறு எங்கும் இருப்பதாகத் தெரியவில்லை. கன்னியா குமரிக்கு சுற்றுலா செல்பவர்கள் அங்குள்ள குமரி அன்னை ஆலயம், சுசீந்திரம் தாணுமாலயப் பெருமான் ஆலயம் மற்றும் இந்த நாகர் கோவில், வடசேரிக்கு அருகிலுள்ள கிருஷ்ணன் கோவில் உள்ளிட்ட பழைமை வாய்ந்த ஆலயங் களுக்கும் சென்று வழிபட்டு வரலாம்.
நன்றி நக்கீரன்

ஆனந்தபைரவர்- Posts : 1375
Join date : 27/07/2010
Age : 39
Location : இந்திய திருநாடு
Similar topics
» பாபாஜி கோயில்
» சூரியனார் கோயில்
» தேரோட்டம் நடக்கும் ஒரே ஐயப்பன் கோயில்
» குழந்தைகளுக்கான ஐயப்பன் கோயில்
» கோயில் கோபுரங்களுக்கான காரணம்
» சூரியனார் கோயில்
» தேரோட்டம் நடக்கும் ஒரே ஐயப்பன் கோயில்
» குழந்தைகளுக்கான ஐயப்பன் கோயில்
» கோயில் கோபுரங்களுக்கான காரணம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum