Latest topics
» சித்திரை-நமது புத்தாண்டுத் தொடக்கம். by Dheeran Tue Apr 12, 2022 8:21 am
» மீண்டும் வருக
by Dheeran Fri Oct 02, 2020 11:08 am
» கே இனியவன் ஆன்மீக கவிதைகள்
by கே இனியவன் Thu Nov 09, 2017 7:58 pm
» தீபத்திருநாள் வாழ்த்துக்கள்
by Dheeran Wed Oct 18, 2017 4:01 pm
» பண்டைய இந்தியாவின் விமானத் தொழில் நுட்பம்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:23 pm
» வெற்றி மாபெரும் வெற்றி!
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:16 pm
» பாரதி பாடலில் அராஜக “செக்யுலர்” திருத்தங்கள் - ஜடாயு
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:55 pm
» மோடி, கருப்புப்பண ஒழிப்பு, ஊடகங்கள் - ஜெயமோகன்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:41 pm
» அனைவருக்கும் வணக்கம்.
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:46 am
» நான் ஒரு ஹிந்து என்பதில் ஏன் பெருமிதம் கொள்கிறேன் – பாகம் 1 AGNIVEER
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:42 am
» தேவையா இந்த சமஸ்கிருத துவேஷம்
by Dheeran Sat Jun 25, 2016 12:46 pm
» சிவ வழிபாடு புத்தகம்
by tammy ranga Thu Dec 17, 2015 3:37 am
» ஷ்ரிடி சாய் பாபா புண்ணிய வரலாறு தமிழில்
by tammy ranga Thu Dec 17, 2015 3:35 am
» ஆரிய திராவிட மாயை
by Dheeran Thu Oct 29, 2015 4:10 pm
» தென்புலத்தார் வழிபாடு
by Dheeran Sun Sep 27, 2015 8:50 pm
» தமிழ் ஹிந்துவும் இலவச ஜோதிட கணிப்பு
by ஹரி ஓம் Mon Aug 03, 2015 2:36 am
» வெற்றி வேல்!!!வீரவேல்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
by ஹரி ஓம் Wed Jun 24, 2015 4:09 am
» சிவதாண்டவம் - PB ஸ்ரீனிவாஸ்
by i.mahatheva Thu Jun 18, 2015 5:24 pm
» கால சர்ப்ப தோஷம் என்றால் என்ன?
by jothi sangeetha Thu May 21, 2015 1:43 pm
» மல்லிகைப் பூவை தலையில் சூடுங்கள் - பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்து
by கே இனியவன் Thu May 21, 2015 11:02 am
தவத்தில் சிறந்த சிவம்
Page 1 of 1
தவத்தில் சிறந்த சிவம்
சைவ உலகில், குரு பரம்பரையான சந்தான குரவர்களாக மெய்க்கண்ட தேவர், அருள் நந்தி சிவம், மறைஞான சம்பந்தர் மற்றும் உமாபதி சிவம் ஆகியோரைப் போற்றுவர்.
இவர்களில் உமாபதி சிவம், ஆனந்தத் தாண்டவம் ஆடிக் கொண்டிருக்கும் ஆனந்த நடராஜ மூர்த்தியின் உறைவிடமான தில்லையில், தீட்சிதர் மரபில், சம்பு தீட்சிதர் - கௌரி அம்மையார் தம்பதிக்கு கி.பி. 13ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் அவதரித்தார்.
வேதங்களையும், சிட்சை, கல்பம், வியாகரணம், சந்தஸ், நிருத்தம், ஜோதிடம் என்ற ஆறு அங்கங்களையும் கற்றதோடு மட்டுமில்லாமல் திருக்குறள், பன்னிரு திருமுறைகளையும் கற்ற "பக்த சிகாமணி' இவர். வடமொழி, தென்மொழி இரண்டிலும் வல்லமை பெற்றவராக விளங்கிய உமாபதி சிவாசாரியார், நூல்கள் இயற்றும் ஆற்றலும் உடையவர்.
பதினாறாம் வயதில் இவருடைய திருமணம் நடந்தது. இல்லறம் இனிதே தொடர்ந்தது. அதே சமயத்தில் அவருக்கு வைதீக முறையில் தீட்சைகள் செய்விக்கப்பட்டு, ஸ்ரீ நடராஜ மூர்த்திக்கு பூஜைகள் செய்யும் உரிமையும் வழங்கப்பட்டது. எனவே உமாபதி தீட்சிதர், தமக்குரிய பூஜை முறை நாட்களில், தில்லை திருச்சிற்றம்பலத்தானுக்கு பூஜைகள் செய்தார். மற்ற நாட்களில் தனது தந்தை தமக்கு பெட்டகத்துடன் அளித்திருந்த ஸ்ரீ சிவகாமி ஸமேத ஸ்ரீநடராஜரின் அர்ச்சாவதாரங்களை (விக்கிரகங்களை) பூஜித்து வந்தார்.
இந்நாட்களில் வடமொழி பவுட்கர ஆகமத்துக்கு வடமொழியில் விருத்தியுரை, சிவபரத்துவமான கருத்துக்களோடு ஸ்ரீநடராஜர் ஆலய அமைப்பைப் புலப்படுத்துகின்ற ""குஞ்சிதாங்கிரி ஸ்தவம்'' என்ற வடமொழி தோத்திர நூல் முதலியவற்றையும் இயற்றினார் உமாபதி. அன்றிருந்த ஜாதிக் கட்டுகளை மீறி, மறை ஞானசம்பந்தரிடம் ஞான தீட்சை பெற்றார். இதனால் ஊரை விட்டு விலகவும் நேர்ந்தது.
எதனாலும் மனம் தளராதவர் உமாபதி சிவம். இவர் சிவஞான போதம், சிவஞான சித்தியார் போன்ற பல நூல்களைக் கற்று, மறைஞான சம்பந்தரிடம் சித்தாந்தத் தெளிவு பெற்றதுடன், அவரின் தலைமை மாணவராகவும் உயர்ந்தார். சிதம்பரத்தின் கிழக்கு எல்லையில் ""கொற்றவன்குடி'' என்னும் பகுதியில் தங்கி, சைவ சித்தாந்த நெறிகளைப் பரப்பி வரலானார் உமாபதி சிவம்.
அவரிடம் சித்தாந்தம் பயின்றவர்கள் அவருக்கு திருமடம் கட்டித் தந்து உதவினார். நாளடைவில் இம்மடம் ""கொற்றவன்குடி உமாபதி சிவம் மடம்'' எனப் பெயர் பெற்றது. ஸ்ரீஉமாபதி சிவம் குருமூர்த்தம் (கொற்றவன் குடி திருமடம்), சிதம்பரத்தின் கிழக்கில் 1 கி.மீ. தொலைவில், அண்ணாமலை நகர் செல்லும் வழியில், அண்ணாமலை பல்கலைக் கழகத்தின் பொறியியல் கல்லூரிக்கு அருகில் அமைந்துள்ளது.
ஸ்ரீ நடராஜ மூர்த்திக்கு உமாபதி சிவம் நடத்த வேண்டிய பூஜை முறை வந்த ஒரு நாளில், ஸ்ரீ நடராஜமூர்த்தி, தில்லை திருச்சிற்றம்பலத்தில் இருந்து கொற்றவன்குடி மடத்தில், உமாபதி சிவத்தின் பூஜையில் எழுந்தருளி அருள்பாலித்தார். ஒரு சந்தர்பத்தில், மார்கழி திருவாதிரை திருவிழாவிற்கான கொடியேற்றத்தின்போது பல முறை தீட்சிதர்கள் முயற்சித்தும் கொடியேறாமல், உமாபதி சிவம் வந்து "கொடிக்கவி' பாடியதும் கொடியேறியது. இவை உமாபதி சிவத்தின் சிறப்பை உலகுக்கு உணர்த்தின!
இவ்வாறு பல இறைப் பணிகளையும், அறப் பணிகளையும் செய்து, பல நூல்களையும் இயற்றி அருள்புரிந்த இம்மகான், ஒரு சித்திரை மாத ஹஸ்த நட்சத்திரத்தில் கொற்றவன்குடி திருமடத்தில் முக்தி பெற்றார்.
"கொற்றவன் குடி' திருமடத்தில் ஸ்ரீ உமாபதி சிவத்தின் குருமூர்த்தம், தட்சிணாமூர்த்தி திருக்கோலத்தில் திருமேனி தாங்கி விளங்குகிறது. மகா மண்டபத்தில் ஸ்ரீவிநாயகர், ஸ்ரீவீரபத்திரர், ஸ்ரீமுருகப் பெருமான் மற்றும் ஸ்ரீ நடராஜர் ஆகியோர் அருள் பாலிக்கின்றனர். அர்த்த மண்டபத்தில் ஸ்ரீஉமாபதி சிவத்தின் பஞ்சலோக உற்சவத் திருமேனியை தரிசனம் செய்யலாம். பிரகாரத்தின் மேற்கில் ஸ்ரீஉமாபதி சிவத்தின் தலைமை மாணவராக விளங்கிய "ஸ்ரீஅருள் நமச்சிவாயர்' குரு மூர்த்தம், கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. திருமடத்திற்கு வெளியே ஸ்ரீஅனுக்கிரக விநாயகரும், ஸ்ரீபைரவ மூர்த்தியும் அருள் புரிகின்றார்கள்.
இத்திருமடத்தின் கும்பாபிஷேகம், கடந்த ஆகஸ்டு 27ஆம் தேதி, சிறப்பாக நடந்தது.
திருவண்ணாமலை துறையூர் ஆதீனம், திருமுதுகுன்றத்தின் (விருத்தாசலம் ஸ்ரீகுமாரதேவர் திருமடம்) கட்டுப்பாட்டில் உள்ள இந்த மடத்தில் நாள்தோறும் நித்திய பூஜைகள் நடக்கின்றன. ஒவ்வொரு மாதமும் ஹஸ்த நட்சத்திரத்தில் குருபூஜையும், ஒவ்வொரு வருடமும் சித்திரை மாதம் ஹஸ்த நட்சத்திரத்தில் மகா குருபூஜையும் சிறப்பாக நடந்து வருகின்றன. அன்பர்கள் வருகை புரிந்து, தவத்தில் சிறந்த ஸ்ரீ உமாபதி சிவத்தின் அருளைப் பெறலாம்!
-ஜே .கணேஷ்

ஆனந்தபைரவர்- Posts : 1375
Join date : 27/07/2010
Age : 39
Location : இந்திய திருநாடு
Similar topics
» விநாயகர் வழிபாட்டு ஊர்வலம் ஏன் ? சுகி.சிவம் பதில்
» தமிழ் - வடமொழி வேதம் ஒப்பீடு – ஆரியப்பிராமணர் உமாபதி சிவம்.
» பில்லி சூனியம் , ஏவல், பேய் , பிசாசு , செய்வினை , அபிசார துஷ்ட மந்திர பிரயோகம் போன்றவற்றால் பாதிக்கபட்டவர்களுக்கு ஒரு சிறந்த பரிகார தலம் நாமக்கல் -நரசிம்மர்,ஆஞ்சநேயர் " ஓம் சூராய நம"
» சனி பகவானின் தண்டனையில் இருந்து தப்பிக்க - ஒரு சிறந்த பரிகாரம்
» இந்தியாவில் முதல் தரமான மாநிலம் , உலகளவில் இரண்டாவது சிறந்த கவர்ன்மெண்ட்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum