Latest topics
» சித்திரை-நமது புத்தாண்டுத் தொடக்கம். by Dheeran Tue Apr 12, 2022 8:21 am
» மீண்டும் வருக
by Dheeran Fri Oct 02, 2020 11:08 am
» கே இனியவன் ஆன்மீக கவிதைகள்
by கே இனியவன் Thu Nov 09, 2017 7:58 pm
» தீபத்திருநாள் வாழ்த்துக்கள்
by Dheeran Wed Oct 18, 2017 4:01 pm
» பண்டைய இந்தியாவின் விமானத் தொழில் நுட்பம்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:23 pm
» வெற்றி மாபெரும் வெற்றி!
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:16 pm
» பாரதி பாடலில் அராஜக “செக்யுலர்” திருத்தங்கள் - ஜடாயு
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:55 pm
» மோடி, கருப்புப்பண ஒழிப்பு, ஊடகங்கள் - ஜெயமோகன்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:41 pm
» அனைவருக்கும் வணக்கம்.
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:46 am
» நான் ஒரு ஹிந்து என்பதில் ஏன் பெருமிதம் கொள்கிறேன் – பாகம் 1 AGNIVEER
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:42 am
» தேவையா இந்த சமஸ்கிருத துவேஷம்
by Dheeran Sat Jun 25, 2016 12:46 pm
» சிவ வழிபாடு புத்தகம்
by tammy ranga Thu Dec 17, 2015 3:37 am
» ஷ்ரிடி சாய் பாபா புண்ணிய வரலாறு தமிழில்
by tammy ranga Thu Dec 17, 2015 3:35 am
» ஆரிய திராவிட மாயை
by Dheeran Thu Oct 29, 2015 4:10 pm
» தென்புலத்தார் வழிபாடு
by Dheeran Sun Sep 27, 2015 8:50 pm
» தமிழ் ஹிந்துவும் இலவச ஜோதிட கணிப்பு
by ஹரி ஓம் Mon Aug 03, 2015 2:36 am
» வெற்றி வேல்!!!வீரவேல்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
by ஹரி ஓம் Wed Jun 24, 2015 4:09 am
» சிவதாண்டவம் - PB ஸ்ரீனிவாஸ்
by i.mahatheva Thu Jun 18, 2015 5:24 pm
» கால சர்ப்ப தோஷம் என்றால் என்ன?
by jothi sangeetha Thu May 21, 2015 1:43 pm
» மல்லிகைப் பூவை தலையில் சூடுங்கள் - பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்து
by கே இனியவன் Thu May 21, 2015 11:02 am
மகத்தான மருந்து மகா வில்வம்
இந்து சமயம் :: மகான்கள் :: சித்தர்கள்
Page 1 of 1
மகத்தான மருந்து மகா வில்வம்
சித்த மருத்துவ நிபுணர் அருண் சின்னையா
"நீயன்றி இனி எனக்கு ஒரு கதியுமில்லை; நீயன்றி இனி எனக்கு உய்வுமில்லை; உறக் கமும் இல்லை. நீயே எல்லாம். உன்னைத் தவிர ஒரு பொருளும் ஆத்ம நிறைவு அளித் திடாது. என்னுள் கலந்து உறைந்திட்ட அந்த உன்னதமான மகாசக்தி நீயன்றி வேறில்லை!' என்னும் சரணாகதித் தத்துவம்தான் இறைவனின் கருணையை நாம் நேரில் அனுபவிக்கும் தன்மையைத் தருகிறது.
ஜெகமெல்லாம் நிறைந்திட்ட ஈசனை- அந்த மகா சக்தியைச் சரணடைந்து விட்ட ஜீவன்களுக்கு எம்பெருமான் சிவன் கண்டிப் பாய் காட்சி தருவார். சுமார் 500 ஆண்டு களுக்குமுன் கர்நாடக மாநிலத்தில் உள்ள கானபுரி என்ற ஊரில் (தற்போது ஹிரியூர் என அழைக்கப்படுகிறது) "பெல்லவடி மல்லம்மா' என்ற சிவபக்தை வாழ்ந்து வந்தார்.
நாளெல்லாம் சிவலயத்தில் திளைத்து, சிவனைத் தவிர வேறு நினைவின்றி வாழ்ந் தார். ஒவ்வொரு வருடமும் வாரணாசியில் எழுந்தருளியிருக்கும் சிவனைத் தரிசிக்கக் கால்நடையாகவே சென்று வருவார். வருடங்கள் பல கடந்தன. வாலிபம் முடிந்து வயோதிகம் எட்டிப் பார்த்தது. நடை தளர்ந்தது; கொம்பின் பிடியுடன் கொடி நடையானது.
பெல்லவடி மல்லம்மா சிவனை நினைத்து உருகி ஏக்கப் பெருமூச்சு விட்டுக் கண்ணீர் சொரிந்தார். "உன்னைத் துதிப்பதையும் தொழுவதையும் தவிர வேறொன்றும் அறியேன் ஐயா! என் நாடி தளர்ந்து நடை பிறழ்ந்து போனதால், இனி எப்படி நடை யாத்திரையாய் வந்து காசியில் உன்னைத் தரிசிப்பேன் பெருமானே!' என்று அந்த அம்மையார் அழுதார்.
அன்றிரவு சிவபெருமான் பெல்லவடி மல்லம்மாவின் கனவில் வந்து, "என்னருள் வேண்டி, என்னையே நினைந்துருகி, என்னுள் இறைத் துளியாய்க் கரைந்திட்ட மல்லம்மையே! இனி நீ எம்மைக் காண காசிக்கு வரவேண்டாம். நானே நீ இருக்கும் இடம் தேடி வந்து தக்ஷிணகாசியாய் தேரு மல்லேஸ்வரர் என்னும் பெயரில் குடிகொள்வேன்' என்று அருள்பாலித்து மறைந்தார்.
பெல்லவடி மல்லம்மா அளவில்லா மகிழ்ச்சி கொண்டார். அன்று முதல் உரலில் சிவலிங்கம் போன்ற ஒரு கல்லை வைத்து வழிபட ஆரம்பித் தார்.
சிவபெருமானைமகாவில்வம், மாவிளங்கம், துளசி, சம்பங்கி மலர்களால் அர்ச்சித்து வழிபட்டார். கடைசி யில் சிவதரிசனம் கண்டு, சிவனுள் ஒடுங்கினார்.
பின்னர் கானபுரி என்னும் ஹிரியூர் மக்கள் சிவபெருமானுக்குச் சிறப்பாக ஆலயம் அமைத்தனர். பெருமானின் அருள் பெற்றுப் பெருவாழ்வு வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். ஹிரியூரில் தேரு மல்லேஸ்வரராய் எழுந்தருளி இருக்கும் சிவபெருமானை ஒருமுறை தரிசித்து வாருங்கள். காசிக்குச் சென்று தரிசித்த பலன் நிச்சயம் கிட்டும். ஹிரியூர், தேரு மல்லேஸ்வரர் ஆலயத்தின் தலவிருட்சமாய் மகா வில்வம் உள்ளது.
அந்த மகா வில்வத்தை எம்பெருமானாகவே காணுங்கள்.
எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் சிவசக்தி, காசியில் விசேஷமாய் குடிகொண்டிருப்பதை நாம் அறிவோம். வாழும்போது ஒரு முறையா வது காசிக்குச் சென்று வர ஆசைப்படுகிறோம்.
காசியில் மகா சக்தியாய் வீற்றிருக்கும் சிவசக்தியை அதே அம்சத்துடன் தேரு மல்லேஸ்வரர் அருள்பாலித்துக் கொண்டி ருக்கும் இங்கும் உணரலாம். மற்ற சிவத் தலங் களில் வில்வ இலைகளால் அர்ச்சிக்கப்படும் எம்பெருமான் இங்கு மட்டுமே மகா வில்வத்தால் பூஜிக்கப்படுகிறார்.
வில்வத்தின் ஒரு வகையே மகா வில்வம். இது குளுமைத் தன்மை கொண்டது. வில்வ இலைகளைவிட சற்று சிறியதாய், வட்ட வடிவில் காணப்படும். சுவையில் வில்வத்தின் இலையை ஒத்திருக்கும். கொடியைவிட சற்றுப் பெரியதாய் இதன் கிளைகள் இருக்கும். இலைகள் கூட்டிலைகளாய் காணப்பட்டு கடைசியில் மூன்று இலைகளாய் முடியும்.
அந்த மூன்று இலைகளும் சிவன், விஷ்ணு, பிரம்மா என்னும் மூவரும் நானே எனக் காட்டுவதாய் அமையும். அந்த மகா வில்வத்தை மருந்தாக்கும் முறையை இனி காண்போம்...
சர்க்கரை நோயுக்கு அற்புத மருந்து...
சர்க்கரை நோயுள்ளவர்கள் மகா வில்வத்தை மருந்தாக்கினால் மிகச் சிறந்த பலனைக் காணலாம். மகா வில்வ இலைகளை ஒரு கைப்பிடி அளவு எடுத்து, அத்துடன் அரை ஸ்பூன் கருஞ்சீரகம், அரை ஸ்பூன் வெந்தயம் சேர்த்து ஒரு லிட்டர் தண்ணீரிலிட் டுக் கொதிக்க வைத்து, பாதியாகச் சுண்டச் செய்து அதிகாலையில் சாப்பிட்டு வர, 48 நாட்களில் சர்க்கரையின் அளவு சராசரி நிலைக்கு வரும். சர்க்கரை வியாதியால் உண்டாகும் பிற விளைவுகளும் படிப்படியாய் மறையும்.
குடற்புண்ணை குணப்படுத்த...
குடல் சார்ந்த நோய்கள் அனைத்திற்கும் மகேசன் அருளிய மகா வில்வமே மருந்தென்றால் மிகையல்ல. குடற்புண்ணால் அவதி யுறுவோர் கீழ்க்காணும் மருந்தைத் தயாரித்துச் சாப்பிட்டுப் பாருங்கள். மகா வில்வத்தினுள் சிவனே உறைந்து, உங்களை செவ்வனே குணப் படுத்துவதை உணர்வீர்கள். உலர்ந்த மகா வில்வ இலை 50 கிராம், நெல்லிமுள்ளி, கடுக்காய், தான்றிக்காய், ஓமம், மாம்பருப்பு, வெந்தயம், சீரகம், மஞ்சள் ஆகியவை வகைக்கு 25 கிராம்- இவையனைத்தையும் ஒன்று கலந்து தூள் செய்து கொள்ளவும். பின்னர் இதனைச் சலித்துப் பத்திரப்படுத்தவும் .
இதனை காலை- மதியம்- இரவு மூன்று வேளையும் உணவுக்கு முன்பாக இரண்டு முதல் ஐந்து கிராம் அளவு சாப்பிட்டு வர, 48 நாட்களில் குடற்புண்கள் முழுமையாய் குணமாகும். இது சித்தர்கள் அருளிய சிறப் பான மருந்து. திட சித்தமாய் உண்டு வருபவர்கள் சீக்கிரமே குணமடைவார்கள்.
உடல் வலிவு பெற...
மகா வில்வ வேர் 50 கிராம் அளவில் எடுத்து ஒன்றிரண்டாய் சிதைத்து, ஒரு ஸ்பூன் சோம்பு, சிறிது மஞ்சள் சேர்த்து, ஒரு லிட்டர் தண்ணீரிலிட்டு நன்கு கொதிக்க வைத்து பாதியாகச் சுண்டச் செய்து, தினசரி அதிகாலை யில் தொடர்ந்து இரு மாதங்கள் சாப்பிட்டு வர, மேனி அழகு பெறும்; முகம் காந்தமாய் ஜொலிக்கும்; ஆண்மை விருத்தியாகும்; குரலில் ஓர் காந்த சக்தி, ஈர்ப்பு சக்தி உண்டாகும்.
இளைப்பு நோய் குணமாக...
மகா வில்வ வேர், தூதுவளை வேர், கண்டங்கத்தரி வேர், முசுமுசுக்கை வேர், மிளகு, மஞ்சள் ஆகியவற்றை வகைக்கு 50 கிராம் வீதம் எடுத்து ஒன்றாக்கித் தூள் செய்து கொள்ளவும். இதனை காலை- மாலை இருவேளையும் ஒரு ஸ்பூன் அளவில் தேனில் குழைத்து உண்டுவர, சளிக்கட்டு, இருமல், ஆஸ்துமாவில் உண்டாகும் மூச்சிரைப்பு, சைனஸ், தும்மல், காசநோய் போன்றவை மாயமாய் விலகும்.
மஞ்சள் காமாலை குணமாக...
மகா வில்வ வேர், கீழாநெல்லி வேர், நெல்லிமுள்ளி ஆகியவற்றை வகைக்கு 20 கிராம் எடுத்து, அரை லிட்டர் தண்ணீரிலிட்டு கொதிக்க வைத்து பாதியாகச் சுண்டச் செய்து, காலை- மதியம்- இரவு மூன்று வேளையும் ஏழு தினங்கள் தொடர்ந்து குடித்து வர மஞ்சள் காமாலை குணமாகும். கல்லீரல் பலப்படும்; கல்லீரல் சார்ந்த பிற நோய்களும் தணியும்.
கண் நோய்கள் குணமாக...
மகா வில்வத் தளிர் இலைகளை நெருப்பில் வாட்டி, அதைத் துணியில் முடிந்து வெது வெதுப்பாய் கண்களில் ஒற்றிவர, கண்சிவப்பு, கண்ணெரிச்சல் போன்றவை மாறும்.
மகா வில்வத்தால் ரத்த சுத்தி உண்டாகும்; நன்கு செரிமானம் உண்டாகும்; பசியைத் தூண்டும்; மலத்தை நன்கு இளக்கும். மொத்தத் தில் சிவனை நாட சுத்த தேகத்தை உண்டாக்கும்.
நீங்களும் ஒருமுறை மகா வில்வம் எழுந் தருளியிருக்கும் தேரு மல்லேஸ்வரர் ஆலயம் சென்று எம்பெருமானைத் தரிசித்து, காசியின் தெய்வீகப் பலனை இந்த தக்க்ஷிண காசியிலேயே உணருங்கள்.
பெங்களூர்- மும்பை தேசிய நெடுஞ்சாலை யில், பெங்களூரிலிருந்து சுமார் 160 கிலோ மீட்டர் தொலைவில், சித்ரதுர்க்கா மாவட் டத்தில் அமைந்துள்ளது ஹிரியூர். இங்கு அருள்பாலிக்கும் எம்பெருமான் ஈசனைக் காணும் கண்களுக்குச் சகல சௌபாக்கியங் களும் பூரண நலமும் புகழும் கிடைக்கும் என்பதில் துளியும் ஐயமில்லை.
நன்றி நக்கீரன்

ஆனந்தபைரவர்- Posts : 1375
Join date : 27/07/2010
Age : 39
Location : இந்திய திருநாடு
இந்து சமயம் :: மகான்கள் :: சித்தர்கள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum