இந்து சமயம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சித்திரை-நமது புத்தாண்டுத் தொடக்கம்.
by Dheeran Tue Apr 12, 2022 8:21 am

» மீண்டும் வருக
by Dheeran Fri Oct 02, 2020 11:08 am

» கே இனியவன் ஆன்மீக கவிதைகள்
by கே இனியவன் Thu Nov 09, 2017 7:58 pm

» தீபத்திருநாள் வாழ்த்துக்கள்
by Dheeran Wed Oct 18, 2017 4:01 pm

» பண்டைய இந்தியாவின் விமானத் தொழில் நுட்பம்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:23 pm

» வெற்றி மாபெரும் வெற்றி!
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:16 pm

» பாரதி பாடலில் அராஜக “செக்யுலர்” திருத்தங்கள் - ஜடாயு
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:55 pm

» மோடி, கருப்புப்பண ஒழிப்பு, ஊடகங்கள் - ஜெயமோகன்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:41 pm

» அனைவருக்கும் வணக்கம்.
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:46 am

» நான் ஒரு ஹிந்து என்பதில் ஏன் பெருமிதம் கொள்கிறேன் – பாகம் 1 AGNIVEER
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:42 am

» தேவையா இந்த சமஸ்கிருத துவேஷம்
by Dheeran Sat Jun 25, 2016 12:46 pm

» சிவ வழிபாடு புத்தகம்
by tammy ranga Thu Dec 17, 2015 3:37 am

» ஷ்ரிடி சாய் பாபா புண்ணிய வரலாறு தமிழில்
by tammy ranga Thu Dec 17, 2015 3:35 am

» ஆரிய திராவிட மாயை
by Dheeran Thu Oct 29, 2015 4:10 pm

» தென்புலத்தார் வழிபாடு
by Dheeran Sun Sep 27, 2015 8:50 pm

» தமிழ் ஹிந்துவும் இலவச ஜோதிட கணிப்பு
by ஹரி ஓம் Mon Aug 03, 2015 2:36 am

» வெற்றி வேல்!!!வீரவேல்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
by ஹரி ஓம் Wed Jun 24, 2015 4:09 am

» சிவதாண்டவம் - PB ஸ்ரீனிவாஸ்
by i.mahatheva Thu Jun 18, 2015 5:24 pm

» கால சர்ப்ப தோஷம் என்றால் என்ன?
by jothi sangeetha Thu May 21, 2015 1:43 pm

» மல்லிகைப் பூவை தலையில் சூடுங்கள் - பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்து
by கே இனியவன் Thu May 21, 2015 11:02 am

























Topsites
Tamil 10 top sites [www.tamil10 .com ]
Ranking


பிரணவ மந்திரம் - பிரேமா சுரேந்திரநாத்

Go down

பிரணவ மந்திரம் - பிரேமா சுரேந்திரநாத் Empty பிரணவ மந்திரம் - பிரேமா சுரேந்திரநாத்

Post by ஆனந்தபைரவர் Sun Dec 19, 2010 12:27 am

பிரணவ மந்திரம் - பிரேமா சுரேந்திரநாத் Output

ஓம்காரம் பிந்து சம்யுக்தம் நித்யம் த்யாயந்தி யோகின:
காமதம் மோக்ஷதம் சைவ ஓம்காராய நமோ நமோ:

நம் ஹிந்து மதத்தில் ஓம் என்னும் பிரணவ மந்திரத்திற்கு ஒரு புனிதமான இடம் அளிக்கப்பட்டிருக்கிறது. இந்தியப் பண்டிகைகள், பூஜைகள், மங்கள நிகழ்வுகள் அனைத்திலும் ஆதாரமாக ஓம் அமைந்துள்ளது. 'பிரணவம்' என்ற சொல்லிற்கு வடமொழியில் ஒலி எழுப்புதல் (humming) என்று பொருள்.

நம் புனித மறை நூல்களான வேதங்களிலிருந்தும், உபநிஷத்துக்களிலிருந்தும், வேதாந்தத்திலிருந்தும், ஸ்ரீமத் பாகவதத்திலிருந்தும் நாம் பெறும் 'அ, உ, ம' என்னும் மூன்றின் சேர்க்கையால் அமைந்த "ஓம்" என்பது பிரம்மாண்டமான ஆல மரத்தைத் தன்னுள்ளே கருவாகக்கொண்ட சின்னஞ்சிறு ஆலம் விதையைப் போன்று அ¡¢ய கருவூலமாகத் திகழ்கிறது.

நம் நாடி நரம்புகளில் இடையறாது எழும்பும் ஒலியை ஆழ்நிலை தியானம் செய்பவர்கள் மின்சார ஒலிப்பேழைகளிலிருந்து எழும் ஒலியுடனும், தேனீக்களின் ரிங்காரத்துடனும், ஆயிரக்கணக்கான வீணைகளிலிருந்து எழும்பும் மெல்லிய இன்னிசையுடனும் ஒப்பிடுகிறார்கள்.

ஒவ்வொரு மனிதனின் உடலிலும் சக்தியின் இருப்பிடங்களாக ஏழு சக்கரங்கள் அமைந்திருப்பதாக (1.மூலாதாரா 2. ஸ்வாதிஷ்டானா 3. மணிப்பூரா 4. அனாஹதா 5. விசுத்தா 6. ஆக்ஞா 7. சஹஸ்ராரா) நம் முன்னோர் கண்டறிந்துள்ளனர்.

உலகியல் வாழ்வில் நாம் உழலும் பொழுது அல்லது நம் எண்ணங்கள் மாசுபட்டிருக்கும் பொழுது இந்த ஒலியை நாம் கேட்கும் திறன் குறைவாகவே இருக்கும். ஆனால் ஆழ்நிலை தியானத்தில் ஆன்றோர் பலர் மூலாதாரத்தில் உறங்கும் குண்டலினி சக்தியை, ஒலி வடிவான ஓம்கார தியானத்தின் வாயிலாக மேல் எழும்பச் செய்து சஹஸ்ராரத்தில் நிலை நிறுத்தி ஒளி வடிவான பேரானந்த நிலையை அனுபவித்து இறையனுபவத்தைப் பெற்றது யாரும் மறுக்கவொண்ணாத உண்மை.

'சீமலோ ப்ரஹ்மலோ' என்று தியாகராஜர் பாடியதைப் போன்று அந்த சான்றோர்கள் எறும்பிலும், பிற ஆண், பெண் அனைத்துயிர்களிலும் குடி கொண்ட இறைவனைக் கண்டு 'மனீ" பஞ்சகம்' என்ற அ¡¢ய நூலில் ஆசாரியர் ஆதி சங்கரர் குறித்தவாறு சண்டாளாரிடத்தும் 'த்விஜர்' எனப்படும் அந்தணாரிடமும் உறைவது ஒரே ஆத்மா என்றுணர்ந்து சம நோக்குடையவராக வாழ்ந்தனர் என்பது வெள்ளிடைப் பனிமலையாகும்.

நம் கோவில்களில் இறைவனை பூஜிக்கும் ஒவ்வொரு நாமாவளியும் 'ஓம்' என்றே துவங்குவது அனைவரும் அறிவார்கள். வேத பாராயணம் செய்பவர்களும் இம்மந்திரத்துடனே துவக்கி, தம் பாராயணத்தை இம்மந்திரத்துடனேயே முடிப்பது கண்கூடு. மேலும் நாதரூபமான, உருவமும், நாமமும் அற்ற பேரானந்த வடிவமான ஓம்காரம் உலகம் தோன்றுவதற்கு முன் தோன்றி ஊழிப்பிரளயத்திற்குப் பின்னரும் நிலைத்து நிற்கும் திறனுள்ளது. அகாரம், உகாரம், மகாரம், பிந்து, நாதம் என்னும் ஐந்து பகுதிகளைத் தன்னுள் கொண்ட ஓம்காரத்தை மகிமை வாய்ந்த பஞ்சாட்சர மந்திரமாகவும் கொள்ளலாம்.

அநேக வேத, புராணங்களில் பிரணவ மந்திரத்தின் சிறப்பு வருணிக்கப்பட்ட பொழுதும் குறிப்பாக ஆறுமுகப் பெருமான் 'தகப்பன் சாமி'யாகித் தன் தந்தை ஈசனுக்குப் 'பிரணவத்தின்' பொருளை' உரைத்த வரலாறு 'ஸ்கந்த புராண'த்தில் சிறப்பாக வருணிக்கப்பட்டுள்ளது. முனிவர் வாமதேவர் ஸ்கந்தனிடம் வேண்டி, பிரணவப்பொருளை அறிந்துக்கொண்ட வரலாறும் இப்புராணத்தில் காணக் கிடைக்கிறது. தும்பிக்கையுடன் கூடிய ஓம்கார வடிவினனான கணபதி 'பிரணவ ஸ்வரூபனாக' வணங்கப்படுகிறார்.

"எவன் ஒருவன் பிரம்ம ஸ்வரூபமான "ஓங்காரத்தை" இடைவிடாமல் ஜபிக்கிறானோ அவன் பாவத்திலிருந்து விடுவிக்கப்படுகிறான். எனவே ஓங்காரம் 'தாரக பிரம்ம'மாக அறியப்படுகிறது." "ஓ, விஷ்ணு, உன் நிஜ ஸ்வரூபமான ஓம்காரம் என்றும் நிலைத்திருப்பது. அம்மந்திரத்தை ஜபிக்கும் என்னுடைய அறிவு குறைகளுடனிருந்த பொழுதிலும் இடைவிடாமல் நான் அம்மந்திரத்தை உச்சாடனம் செய்வதினால் நான் பிரம்மத்தைப் பற்றிய பூரண அறிவைப் பெற இயலும்." இவ்வாறு வேதங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

SrilaSridhar Maharaja என்னும் ஆசாரியார் 'ஓம்' என்றால் 'ஆம்' என்று பொருள் உரைக்கிறார். இதற்கு அவர் 'ஓம்' ஒவ்வொரு சாதகனுக்கும் தேவையான மன நிறைவையும், மன மகிழ்ச்சியையும் 'காயத்திரி மந்திர வடிவிலும், வேதங்களாகவும், வேத சூத்திரங்களாகவும், ஸ்ரீமத் பாகவத ரூபத்திலோ அல்லது ஸ்ரீ கிருஷ்ண லீலையாகவோ அளிக்க வல்லது என்று கூறுகிறார்.

காயத்திரி மந்திரம் முதற்கொண்டு வேதங்கள், உபநிஷத்துகள், பாகவதம் வரை எல்லா அரிய நூல்களும் 'ஓம்' என்ற பிரணவத்துடனேயே துவங்குகின்றன. ஸ்ரீமத் பகவத் கீதையில் கிருஷ்ண பகவான் 'வேத்யம் பவித்ரம் ஓம்கார' எனறு தான் 'ஓம்' என்ற இரண்டெழுத்தில் இருப்பதாகக் கூறுகிறார். இதனால் வேதங்களின் மகாவாக்கியமாக, மகா மந்திரமாக விளங்குகிறது ஓம். 'அ' என்ற எழுத்து கிருஷ்ணரைக் குறிப்பதாகவும்,' உ' ராதையைக் குறிப்பதாகவும், 'ம்' உயிர்களைக் குறிப்பதாகவும் உரைப்பார்கள்.

"வேதங்களின் இலக்காகவும், யோகிகளும், முனிவர்களும் தவம் செய்து தேடும் அரிய பொருளாகவும், பிரம்மசாரியத்தைக் கடைப்பிடித்து, தவம் செய்து ஆன்றொர்கள் தேடுவதாகவும் இருப்பது ஓம் ஒன்றே." (கடோபநிஷத்து).

"ஓம் என்பது என்ன? ஓ, சத்யகாமா, Higher or Transcedental Brahmam or the Relative or Personal Creator, God Brahmaa. எனவே இதை அறிந்தவர்கள் இரண்டில் ஒன்றான மேலான நிலையை எய்துவர்."

"சகலத்திற்கும் ஆதாரமான இந்த ஓம்காரத்தின் துணையினால் அமைதியான, அழிவற்ற, நிரந்தரமான, உயரிய பரமாத்மாவை, பரபிரம்மத்தை அடையலாம்." (பிரஸ்னோபநிஷத்து)

"பிரணவம்" (the Mystic sound Om) என்பது வில்லாக உருவகப்படுத்தப்பட்டால், ஆன்மாவை அம்பாகவும், பிரம்மனை எய்த வேண்டிய இலக்காகவும் (target) கொள்ளலாம். ஒருவர் தன் மனதை ஒருமுகப்படுத்தி அம்பை இலக்கை நோக்கிச் செலுத்தி இலக்குடன் ஒன்றாக வேண்டும்." (முண்டக உபநிஷத்து)

"All this Cosmic Universe is the Eternal word Om. Its further explanation is this: the past, the present, the future and everything is just Om. And whatever transcends the three divisions of time, that too is just Om. Thus the Word Om is verily the Self [Aathman]. He who knows this, with his self [Jiva], enters the Self [Aathman]. (மாண்டூக்ய உபநிஷத்து)

நன்றி நிலாச்சாரல்
ஆனந்தபைரவர்
ஆனந்தபைரவர்

Posts : 1375
Join date : 27/07/2010
Age : 38
Location : இந்திய திருநாடு

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum