இந்து சமயம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சித்திரை-நமது புத்தாண்டுத் தொடக்கம்.
by Dheeran Tue Apr 12, 2022 8:21 am

» மீண்டும் வருக
by Dheeran Fri Oct 02, 2020 11:08 am

» கே இனியவன் ஆன்மீக கவிதைகள்
by கே இனியவன் Thu Nov 09, 2017 7:58 pm

» தீபத்திருநாள் வாழ்த்துக்கள்
by Dheeran Wed Oct 18, 2017 4:01 pm

» பண்டைய இந்தியாவின் விமானத் தொழில் நுட்பம்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:23 pm

» வெற்றி மாபெரும் வெற்றி!
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:16 pm

» பாரதி பாடலில் அராஜக “செக்யுலர்” திருத்தங்கள் - ஜடாயு
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:55 pm

» மோடி, கருப்புப்பண ஒழிப்பு, ஊடகங்கள் - ஜெயமோகன்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:41 pm

» அனைவருக்கும் வணக்கம்.
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:46 am

» நான் ஒரு ஹிந்து என்பதில் ஏன் பெருமிதம் கொள்கிறேன் – பாகம் 1 AGNIVEER
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:42 am

» தேவையா இந்த சமஸ்கிருத துவேஷம்
by Dheeran Sat Jun 25, 2016 12:46 pm

» சிவ வழிபாடு புத்தகம்
by tammy ranga Thu Dec 17, 2015 3:37 am

» ஷ்ரிடி சாய் பாபா புண்ணிய வரலாறு தமிழில்
by tammy ranga Thu Dec 17, 2015 3:35 am

» ஆரிய திராவிட மாயை
by Dheeran Thu Oct 29, 2015 4:10 pm

» தென்புலத்தார் வழிபாடு
by Dheeran Sun Sep 27, 2015 8:50 pm

» தமிழ் ஹிந்துவும் இலவச ஜோதிட கணிப்பு
by ஹரி ஓம் Mon Aug 03, 2015 2:36 am

» வெற்றி வேல்!!!வீரவேல்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
by ஹரி ஓம் Wed Jun 24, 2015 4:09 am

» சிவதாண்டவம் - PB ஸ்ரீனிவாஸ்
by i.mahatheva Thu Jun 18, 2015 5:24 pm

» கால சர்ப்ப தோஷம் என்றால் என்ன?
by jothi sangeetha Thu May 21, 2015 1:43 pm

» மல்லிகைப் பூவை தலையில் சூடுங்கள் - பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்து
by கே இனியவன் Thu May 21, 2015 11:02 am

Topsites
Tamil 10 top sites [www.tamil10 .com ]
Ranking


மக்கள் குறை தீர்க்கும் கொளஞ்சியப்பர்-எஸ்.பி. சேகர்

Go down

மக்கள் குறை தீர்க்கும் கொளஞ்சியப்பர்-எஸ்.பி. சேகர் Empty மக்கள் குறை தீர்க்கும் கொளஞ்சியப்பர்-எஸ்.பி. சேகர்

Post by ஆனந்தபைரவர் Mon Jan 10, 2011 4:30 pm

நாரத்தை என்னும் ஒருவகை மரம் உண்டு. அந்த வகையைச் சேர்ந்தது கொளஞ்சி மரம். அப்படிப்பட்ட மரங்கள் நிறைந்த வனப்பகுதியாக சில நூற்றாண்டுகளுக்குமுன் கடலூர் மாவட்டத் தைச் சேர்ந்த ஒரு பகுதி விளங்கி வந்தது. அந்த வனத்தில் அப்பகுதி மக்கள் ஆடு, மாடுகள் மேய்ப்பது வழக்கம். அப்படி ஒரு சிறுவன் மேய்த்த பசு ஒன்று தினமும் தன்னந்தனியே காட்டுக்குள் சென்று சிறிது நேரம் கழித்து வருவது வழக்கமாக இருந்தது. பால் கறக்க வேண்டிய அந்தப் பசுவின் மடி திரும்பி வரும்போது வற்றிப்போய் இருக்கும். இதைப் பார்த்து சந்தேகமடைந்த சிறுவர்கள், பசு காட்டுக்குள் தனித்துச் செல்லும்போது மறைந்து சென்று பார்த்தனர்.

அப்போது செடிகளுக்கிடையே சுயம்புவாகத் தோன்றிய ஒரு திருவுருவின்மீது பசு பாலைச் சொரிந்தபடி நின்றது. இதைக் கண்டு வியப்புற்ற சிறுவர்கள் ஊருக்குள் சென்று சொல்ல, ஊர் மக்கள் அங்கு வந்து செடி, கொடிகளை அகற்றிப் பார்த்தபோது அருவுருவமாக இருந்த தெய்வம் காட்சி தந்தது. அதே இடத்தில் சிறு கொட்டகை அமைத்து, கொளஞ்சித் தோப்பில் கண்டெடுக்கப் பட்டதால் அந்த தெய்வத்திற்கு கொளஞ்சியப்பர் என்று பெயரிட்டனர். அவரை முருகப் பெருமானின் மறுவுருவமாக அவ்வூர் மக்களும் அக்கம்பக்கத்து கிராம மக்களும் வழிபட ஆரம்பித்தனர். தற்போது புகழ்பெற்ற தலமாக விளங்குகிறது இந்தக் கோவில்.

கடலூர் மாவட்டம், விருத்தாசலம் நகரின் மையத்தில் உள்ளது பழமலைநாதர் ஆலயம். இவ்விறைவனுக்கு நான்கு எல்லைகளிலும் காவல் தெய்வங்கள் உண்டு. தெற்கே வேடப்பர் (முருகர்), வடக்கே வெண்மலையப்பர், கிழக்கே கரும்பாயிரம் கொண்ட அப்பர், மேற்கே கொளஞ்சியப்பர். இந்த கொளஞ்சியப்பர்தான் மேன்மேலும் புகழ்பெற்று மக்களின் குறைகளை அகற்றி வருகிறார்.

பல ஆண்டுகளுக்குப் பிறகு இக்கோவிலின் வடக்கு வாயிலில் ஐந்து நிலை கோபுரம் அமைக்கப்பட்டு, உள் மண்டபங்கள் கட்டப்பட்டு, புதுப்பொலிவுடன் அறநிலையத் துறையின் ஒப்பு
தலோடு கடந்த மே 23-ஆம் தேதி மகா கும்பாபிஷே கம் பல லட்சக்கணக்கான பக்தர்களின் கரகோஷத்துக்கிடையே வெகு விமரிசை யாக நடைபெற்றது. அதே நேரத்தில் சூரியனிலிருந்து அம்பு போன்ற ஒளி வெள்ளம் கோபுரத்தின் கலசம் வரை நீண்டு வந்த காட்சியை லட்சக்கணக்கான பக்தர்கள் கண்டு வியப்பிலும் ஆச்சரியத் திலும் மெய்சிலிர்த்துப் போனார்கள். இந்நிகழ்ச்சிக்கு அறநிலையத் துறை அமைச்சர் பெரியகருப்பன், சுகாதாரத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம், மாவட்ட ஆட்சியர் சீத்தாராமன், விழுப்புரம் சரக டி.ஐ.ஜி மாசானமுத்து உட்பட அரசு அதிகாரிகளும் வருகை தந்து சிறப்பித்தனர்.

இக்கோவிலில் மக்களால் பெரிதும் நம்பப்படுவது கொளஞ்சியப்பர் வழங்கும் நீதியே! பொதுமக்கள் தங்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளுக்கு நீதி வேண்டி இவ்வாலயத்தில் பிராது கொடுத்து, நீதி பெறுவது வழக்கம். கொடுத்த கடன் திரும்பக் கிட்டாமை, பிறர் வஞ்சித்தல், குடும்பச் சிக்கல்கள், திருமணத் தடை, தொழிலில் ஏற்படும் நஷ்டம், நிலம் சம்பந்தமான வழக்கு- இப்படி பல்வேறு இன்னல்களுக்கும் துன்பங்களுக்கும் ஆளாகும் மக்கள் நேரடியாக கொளஞ்சியப்பரை நாடி வருகிறார்கள். அங்குள்ள அலுவலகத்தில் தங்கள் குறைகளைப் போக்கச் சொல்லி பிராது (மனு) கொடுக்கிறார்கள். பக்தர் களின் பெயர், முகவரி, தங்கள் பிரச்சினைகள் ஆகியவற்றை உள்ளடக்கிய
அந்தக் காகிதத்தை சுருட்டிக் கட்டி, கொளஞ்சியப்பர் சந்நிதியில் வைத்து பூஜை செய்கிறார் கள். அதை சம்பந் தப்பட்டவர்கள் முன்னிலையில்- கொளஞ்சியப் பருக்கு இடப்புறம் எழுந்தருளியி ருக்கும் முனீஸ்வர ருக்குமுன் நடப் பட்டுள்ள சூலாயுதங்களில் கட்டிவிடுவார்கள். இதன்பிறகு மூன்று மணி நேரம் அல்லது மூன்று நாள் அல்லது மூன்று மாதங்களுக்குள் அவர்களது பிரச்சினைகளை கொளஞ்சியப்பர் சுபமாகத் தீர்த்து வைக்கிறார்.

பிராது கட்டுபவர் எந்த ஊரிலிருந்து வருகிறாரோ அந்த ஊருக்கும் கொளஞ்சியப்பர் கோவிலுக்கும் உள்ள தூரத்தைக் கணக்கிட்டு, ஒரு கிலோமீட்டருக்கு 25 பைசா என படிப் பணம் செலுத்த வேண்டும். இதற்கு முறையான ரசீதும் கொடுக்கப்படுகிறது. தங்கள் பிரச்சினைகள் தீர்ந்ததும் மீண்டும் கோவிலுக்கு வந்து 50 ரூபாய் செலுத்தி கொடுத்த மனுவை திரும்பப் பெற்றுக்கொள்ள வேண்டும். அதன்பிறகு சம்பந் தப்பட்ட பக்தர்கள் தங்கள் வேண்டுதலுக்கு ஏற்றபடி கோவிலுக்கு காணிக்கையோ நன்கொடையோ வழங்கி வருகிறார்கள்.

இந்த பிராது சம்பந்தமான சம்பவத்தைப் பற்றி தங்கள் அனுபவத்தில் கண்டதை மூத்த குருக்கள் உமாபதியும், ஹரிகர குருக்களும் நம்மிடம் விவரித்த னர்.

""குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த இந்தி பேசும் ஒரு நடுத் தர வயதுடைய மனிதர். பெரிய தொழிலதிபர். அம்மாநில இந்திப் பத்திரிகை ஒன்றில் நம் கொளஞ்சியப்பரைப் பற்றி செய்தி வந்திருந்ததை தற்செயலாகப் படித்துள்ளார். அதே நேரத்தில் இவரது தொழிலில் மூன்று கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. அதை சரிக்கட்ட முடியா மல் தத்தளித்த அந்த தொழிலதிபர், குஜராத்திலிருந்து புறப்பட்டு கொளஞ்சியப்பர்முன் வந்து நின்றார். கொளஞ்சியப்பர் பிராது மூலம் பிரச்சினைகளைத் தீர்ப்பது பற்றி பத்திரிகையில் படித்ததாகச் சொன்ன அவர், தனது பிரச்சினையையும் எழுதி பிராது கட்ட வேண்டும் என்றார். அதன்படி பூஜைகள் செய்யப்பட்டு அவர் எழுதிக் கொடுத்த பிராது சீட்டு கட்டப்பட்டது. அன்று மாலையே அவர் புறப்பட்டுச் சென்றுவிட்டார். என்ன அதிசயம்! மறுநாள் காலை மீண்டும் கொளஞ்சியப்பர் சந்நிதியில் அவர் வந்து நிற்க, நாங்கள் வியப்புடன் அவரிடம் விசாரித்தோம்.

Click Here!
அதற்கு அவர், "நான் என் ஊருக்குச் செல்வ தற்கு விமான நிலையம் சென்றேன். அந்த நேரத் தில் எனது குடும்பத்திலிருந்து செல்போன் மூலம் எனக்கு வியப்பான ஒரு செய்தி கிடைத்தது. ஏற்கெனவே எனக்கு வர வேண்டிய மூன்று கோடி ரூபாயை என் வீடு தேடி வந்து கொடுத்து விட்டுப் போனதாகச் சொன்னார்கள். வரவே வராது என்று நான் எண்ணியிருந்த பணம், நான் தொழிலில் நஷ்டப்பட்ட இந்த இக்கட்டான நேரத்தில் எனக்கு வந்து சேர்ந்தது மிகப்பெரிய அதிசயம். அதற்குக் காரணம் கொளஞ்சியப்பர்தான். பிராது செலுத்திய மூன்று மணி நேரத்தில் என் பிரச்சினையைத் தீர்த்த இத்தெய்வத்தின் மகிமை யைச் சொல்வதற்கு வார்த்தையே இல்லை' என்றார். அந்த குஜராத்தி மனிதர் அன்று முழுவதும் சந்நிதி யிலேயே இருந்து பூஜைகள் செய்துவிட்டு புறப் பட்டுச் சென்றார். அதேபோல் ஒரு வாரத்தில் மீண்டும் தன் குடும்பத்தினரோடு வந்து பூஜை செய்து பிராது மனுவை வாபஸ் பெற்றுக்கொண்டு மகிழ்வுடன் சென்றது எங்களையெல்லாம் வியப்படைய வைத்தது.

அதேபோல் புதுச்சேரியைச் சேர்ந்த ராமநாதன் என்பவரது முன்னோர்கள் தங்கள் உறவினர் ஒருவரிடம் பத்து ஏக்கர் நிலத்தை நம்பிக்கை கிரயம் கொடுத்துள்ளனர். அந்த நிலத்தை மீண்டும் ஒப்படைக்கும் காலத்தில், "முடியாது' என்று அந்த நபர் மறுத்து விட்டார். இதனால் மனமுடைந்துபோன ராமநாதன், வாழ்வதற்கு வழியில்லாமல் கொளஞ்சியப்பரை நாடி வந்தார். இவர் பிராது மனு எழுதிக் கட்டிவிட்டுச் சென்ற பத்து நாட்களுக்குள், நிலம் தர மறுத்த அந்த நபர் ஒரு பெரிய விபத்தில் சிக்கிக் கொண்டார். அந்த விபத்திலிருந்து உயிர் தப்பிய அந்த மனிதர் உடனடியாக ராமநாதனை அழைத்து அந்த பத்து ஏக்கர் நிலத்தையும் பத்திரப்பதிவு மூலம் ஒப்ப டைத்தார். "எனக்குச் சேர வேண்டிய நிலத்தை தர மறுத்த அந்த மனிதருக்கு உண்மையை உணர்த்தும் வகையில் அவரது மனதை விபத்து மூலம் மாற்றியது கொளஞ்சியப்பரின் அருளே' என்கிறார் புதுச்சேரி ராமநாதன்.

இப்படி மெய்சிலிர்க்க வைக்கும் சம்பவங்கள் ஏராளம். மக்கள் கொடுக்கும் பிராது மனுக்களைப் பெற்றுக்கொள்ளும் முனீஸ்வரர், சம்பந்தப்பட்ட ஊர்களுக்குச் சென்று புகார் கொடுத்தவர்களின் பிரச்சினைகளை ஆராய்ந்து வந்து கொளஞ்சியப் பரிடம் சொல்ல, இறுதித் தீர்ப்பை கொளஞ்சியப் பர் வழங்கி வருகிறார். ஒரு ஆண்டுக்கு சுமார் ஒன்றரை லட்சம் பிராது மனுக்கள் கொளஞ்சியப்பரிடம் வருகின்றன. அவற்றில் நியாயமான- உண்மையான புகார்களை 95 சதவிகிதம் தீர்த்து வைக்கிறார். பிராது கொடுத்த வர்கள் தங்கள் பிரச்சினைகள் தீர்ந்ததும் அதைத் திரும்பப் பெறுவது, அதற்கான ரசீதுகள் மூலம் இது தெரிய வருகிறது'' என்கிறார்கள் மேற்கண்ட இருவரும்.

கொளஞ்சியப்பரிடம் பிராது கட்ட வந்த திருவாரூர் பெரியவர் சிவராஜிடம் கேட்டோம். ""கொளஞ்சியப்பரைப் பற்றி சமீபத்தில் நான் தெரிந்துகொண்டேன். எல்லா முருகன் கோவில் களிலும் சிலை வடிவில்தான் முருகன் இருப்பார். ஆனால் இங்கே அருவுருவமாக- இயற்கையான முறையில் மிகவும் சக்தி வாய்ந்த தெய்வமாக இருப்பதை நேரில் கண்டு மெய்சிலிர்த்துப் போனேன். மேலும் எங்களுக்கு குலதெய்வம் அய்யனார். கொளஞ்சியப்பரின் தளபதியான முனீஸ்வரரும் அந்த வழியைச் சேர்ந்தவரே. எனக் குத் தொழிலில் சுமார் 25 லட்சம் வரை சரிசெய்யப் பட வேண்டும். அதன்மூலம் ஒரு நல்ல வெற்றிச் செய்தியை எதிர்நோக்கியுள்ள நான், இது கொளஞ்சியப்பர் மூலம்தான் நிறைவேறும் என்ற நம்பிக்கையோடு வந்து பிராது கட்டியுள்ளேன். நிச்சயம் எனக்கு இப்பிரச்சினையை முனீஸ்வரர் மூலம் தீர்த்து வைப்பார் கொளஞ்சியப்பர்'' என்கிறார் சிவராஜ்.

முடப்புளியைச் சேர்ந்த ஆசிரியை பத்மாவதி யும் அவரது கணவர் கருணாநிதியும் பிராது கட்டும்போது அவர்களிடம் கேட்டோம்.

""எந்தக் காரியமாக இருந்தாலும் நம்மால் முடியாது என்பதை முடித்து வைப்பவர் கொளஞ்சியப்பர். பலமுறை பிராது கட்டி அதன் மூலம் எங்கள் வாழ்க்கையில் வெற்றி பெற்றுள் ளோம். எந்த விஷயமாக இருந்தாலும் அதை உடனுக்குடன் கொளஞ்சியப்பர் வெற்றிகரமாக தீர்த்து வைத்துள்ளார். எனவே அவ்வப்போது எங்கள் குடும்பத்தோடு வந்து கொளஞ்சியப்பரை வழிபடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளோம்'' என்றார்கள்.

இவ்வாலய அர்ச்சகர்களான ஏ. மணிகண்டன், யு. மணிகண்டன் ஆகியோர், ""இவ்வாலயத்தைச் சுற்றியுள்ள 60-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் தங்களுக்கென்று குலதெய்வம் இருந்தாலும்கூட கொளஞ்சியப்பரையும் தங்கள் குலதெய்வமாக எண்ணி வழிபடுகிறார்கள். தங்கள் வேளாண்மை வளமாக விளைவதற்கு வேண்டிக்கொள்ளும் விவசாயிகள், கடலை, கம்பு, சோளம், நெல், எள்- இப்படி தானியங்களைக் கொண்டு வந்து கொளஞ்சியப்பருக்குச் சூறையிடுவது வழக்கம். அதேபோல் தங்கள் குடும்பத்தில் பிறக்கும் குழந்தைகளைக் கொண்டு வந்து முடி எடுத்து, பொங்கல் வைத்து பூஜை செய்து, அக்குழந்தைகளுக்கு ஆண் என்றால் கொளஞ்சியப்பன், கொளஞ்சி என்றும்; பெண்களுக்கு கொளஞ்சி யம்மாள் என்றும் பெயர் வைத்துச் செல்வது வழக்கத்தில் உள்ளது.

அதேபோல நேர்த்திக் கடனாக ஆடுகள், மாடுகள், சேவல்கள் ஆகியவற்றையும் கொண்டு வந்து செலுத்து கிறார்கள்.

கோவிலுக்கு பங்குனி மாத உத்திரத்தின்போது பத்து நாட்கள் உற்சவம் வெகு விமரிசையாக நடைபெறும். பால் காவடி, பன்னீர் காவடி, புஷ்பக் காவடி, சேவற் காவடி எடுப்பார்கள். மேலும் விதவிதமான முறையில் அலகு குத்தி ஊர்வலமாக வந்து கொளஞ்சியப்பரை வழிபடுகிறார் கள் பல லட்சக்கணக்கான மக்கள். திரை உலகப் பிரபலங்கள் உட்பட அமெரிக்கா, எகிப்து, இத் தாலி போன்ற அயல்நாடுகளிலிருந்தெல்லாம் கொளஞ் சியப்பரை வந்து வழிபட்டுச் செல்கிறார்கள்.

இவ்வாலயம் காலை 5.00 மணி முதல் இரவு 8.30 மணி வரை எல்லா நாட்களிலும் பக்தர்களின் வருகைக்காக திறந்தே இருக்கும். பகல் நேரங்களில் நடை சாற்றுவது இல்லை. மிகமிக அதிக அளவில் பக்தர்களின் குறைகளைத் தீர்த்து வைத்துள் ளார் கொளஞ்சியப்பர்'' என்றார்கள்.

இவை அனைத்தும் உண்மை என்பதை நாம் கோவிலுக்குள் வலம் வரும்போது திரளான பக்தர்களின் தரிசனத்தின் மூலம் தெரிந்துகொண் டோம். பல கோவில்களில் இதுபோன்று பிராது செலுத்தி தீர்வு காணும் முறைகள் இருந்தாலும், கொளஞ்சியப்பர், அவரது தளபதி முனீஸ்வரர் இருவரும் பிராது செலுத்தியவர்களின் பிரச்சினைகளைத் தீர்த்து வைத்து வரும் முறையினால் நூற்றுக்கு 95 சதவிகிதம் மக்கள் பலன் பெற்றுள் ளனர் என்பது மிகவும் வியப்பான- மெய்சிலிர்க்க வைக்கும் செய்தி. மக்கள் குறை தீர்க்கும் கொளஞ் சியப்பரை ஒருமுறையேனும் தரிசனம் செய்யுங்கள்.
ஆனந்தபைரவர்
ஆனந்தபைரவர்

Posts : 1375
Join date : 27/07/2010
Age : 37
Location : இந்திய திருநாடு

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum