Latest topics
» சித்திரை-நமது புத்தாண்டுத் தொடக்கம். by Dheeran Tue Apr 12, 2022 8:21 am
» மீண்டும் வருக
by Dheeran Fri Oct 02, 2020 11:08 am
» கே இனியவன் ஆன்மீக கவிதைகள்
by கே இனியவன் Thu Nov 09, 2017 7:58 pm
» தீபத்திருநாள் வாழ்த்துக்கள்
by Dheeran Wed Oct 18, 2017 4:01 pm
» பண்டைய இந்தியாவின் விமானத் தொழில் நுட்பம்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:23 pm
» வெற்றி மாபெரும் வெற்றி!
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:16 pm
» பாரதி பாடலில் அராஜக “செக்யுலர்” திருத்தங்கள் - ஜடாயு
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:55 pm
» மோடி, கருப்புப்பண ஒழிப்பு, ஊடகங்கள் - ஜெயமோகன்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:41 pm
» அனைவருக்கும் வணக்கம்.
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:46 am
» நான் ஒரு ஹிந்து என்பதில் ஏன் பெருமிதம் கொள்கிறேன் – பாகம் 1 AGNIVEER
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:42 am
» தேவையா இந்த சமஸ்கிருத துவேஷம்
by Dheeran Sat Jun 25, 2016 12:46 pm
» சிவ வழிபாடு புத்தகம்
by tammy ranga Thu Dec 17, 2015 3:37 am
» ஷ்ரிடி சாய் பாபா புண்ணிய வரலாறு தமிழில்
by tammy ranga Thu Dec 17, 2015 3:35 am
» ஆரிய திராவிட மாயை
by Dheeran Thu Oct 29, 2015 4:10 pm
» தென்புலத்தார் வழிபாடு
by Dheeran Sun Sep 27, 2015 8:50 pm
» தமிழ் ஹிந்துவும் இலவச ஜோதிட கணிப்பு
by ஹரி ஓம் Mon Aug 03, 2015 2:36 am
» வெற்றி வேல்!!!வீரவேல்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
by ஹரி ஓம் Wed Jun 24, 2015 4:09 am
» சிவதாண்டவம் - PB ஸ்ரீனிவாஸ்
by i.mahatheva Thu Jun 18, 2015 5:24 pm
» கால சர்ப்ப தோஷம் என்றால் என்ன?
by jothi sangeetha Thu May 21, 2015 1:43 pm
» மல்லிகைப் பூவை தலையில் சூடுங்கள் - பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்து
by கே இனியவன் Thu May 21, 2015 11:02 am
விதியை வெல்ல ஜோதிட சூத்திரங்கள்.
2 posters
Page 1 of 1
விதியை வெல்ல ஜோதிட சூத்திரங்கள்.
விதியை வெல்ல முடியாது. அதற்கு பரிகாரங்களும் கிடையாது. ஜோதிடத்தில் கூறப்பட்டவை கண்டிப்பாக நடந்தே தீரும். மாற்று கிடையாது.
ஆனால் அதை எவ்வாறு நாம் அனுபவிக்கப் போகிறோம் என்பது தான் ஜோதிடம் கூறும் சூட்சுமம். ஜோதிடத்தில் 12 பாவங்கள் ஆனால் அனைவருக்கும் 337 பரல்கள் (மதிப்பெண்கள்) தான். அப்படியிருக்க ஒரு பாவம் பலவீனமானால் கண்டிப்பாக மற்றொரு பாவம் பலமாகத்தான் இருக்கும் அப்படி இருக்கும் பாவ பலத்தை நாம் எப்படி நம் விதிகளுக்கு பயன் படுத்தப் போகிறோம் என்பது தான் இந்த சூட்சுமம். இது ஜோதிடத்தை உணர்பவர்களுக்கு மட்டுமே தெரிய வரும்.
உதாரணமாக
12ம் இடம் சம்பந்தப்பட்ட திசா புத்தி அந்தர சூட்சும காலங்களில் விரயம் நட்டம் செலவுகள் நடக்கும் என்பது ஜோதிட விதி. இந்த விதியை எப்படி மதியால் வெல்லலாம் என்று பார்ப்போம்.
செலவு என்பது என்ன? எதிர்காலத்திற்கு பயன்படாத ஆனால் நிகழ்காலத்தில் பயன்படக்கூடிய ஒன்று. விரயம் என்பது நம்மையறியாமலே நடக்கக்கூடிய செலவு. நட்டம் என்பது எதிர்பார்த்த அளவு பயன் கொடுக்காமல் இருப்பது.
மொத்தத்தில் கையில் உள்ள பணம் வெளியே போய்விடுவது.
- நீங்கள் செலவு செய்யாமல் சொத்தாக மாற்றி விடுவதன் மூலம் இந்த செலவு நாளைய சொத்தாக மாறிவிடும் அதற்கு உங்கள் ஜாதகத்தில் சொத்தது வாங்கும் யோகம் இருப்பின்.
- இல்லையென்றால். புண்ணிய காரியத்திற்கு செலவு செய்தால் அந்த புண்ணியம் உங்களுக்கு நல்ல திசா காலங்களில் பயன் படும்.
- தொழில் உள்ளவர்கள் விற்காத சரக்கை மிகக் குறைந்த விலைக்கு விற்பதன் மூலம் இலாபம் அடையலாம்.
பணம் மட்டுமே விரயம் என்பதில்லை. நோய்கள் விபத்துகள் வீண் அலைச்சலகள் மூலம் கூட நமக்கு 12ம் இடம் பாதிப்பைத் தரலாம். அதற்கு என்ன செய்வது.
1. வாகனங்களை முறையாக பராமரிப்பது. அதுவும் செலவுதான் விபத்தைத் தவிர்க்க உதவும்.
2. ரத்த தானம் செய்வது – ரத்தம் வெளியேறுவதற்குச் சமம் தான்.
3. அடிக்கடி மருத்துவமனைகள் சென்று நோயாளிகளுக்கு உதவுவது. உங்கள் பணம் நோய்க்கு செலவிடப்படுகிறது.
4. அடிக்கடி உடல் பரிசோதனை செய்து கொள்வதும் மருத்துவம் எடுத்துக் கொள்வதற்குச் சமம் தான்.
மொத்தத்தில் நீங்கள் உங்களுக்கு விதிக்கப்பட்டதை அனுபவிக்கிறீர்கள் ஆனால் அது உங்கள் விருப்படி அமைகிறது. உங்களின் தேவைகளை நிறைவேற்றுகிறது. நீங்கள் தேர்ந்தெடுக்கும் முடிவு தான் மதி. அந்த மதி உங்களின் விதியை மாற்றுகிறது எனக் கூறலாம். உண்மையில் உங்களுக்கு விதிக்கப்பட்டதை நீங்கள் உணரும் போது அதற்கான விடைகளைத் தேடும் போது அது நடைபெறுகிறது.
இப்படி எல்லா பிரச்சனைகளுக்கும் ஒரு தீர்வு நம்மிடம் உண்டு. ஆனால் நம் ஜாதகத்தில் எந்த பாவம் பலம் எது நல்ல கிரகம் எந்த செயலை எப்பொழுது செய்ய வேண்டும் என்று தெரிந்திருந்தால் மட்டுமே இது சாத்தியம்.
ஆனால் எல்லாராலும் ஏன் இது சாத்தியப்படவில்லை. ஏன் ? அவர்களுக்கு மனோகாரகன் சரியில்லை அதாவது மதி வேலை செய்யவில்லை. அவர்கள் ஜோதிடத்தை உணரவில்லை என்பது தான்.
உணருங்கள் வெற்றி நிச்சயம்.
Re: விதியை வெல்ல ஜோதிட சூத்திரங்கள்.
மிக்க நன்று நண்பரே, இது போன்று சற்று வித்தியாசமாக எல்லோரும் சிந்தித்து ஒரு செயலால் தனக்கும் மற்றவருக்கும் பயன் தருமாறு நடப்பது மிக்க நன்மையை தரும். இதில் எனக்கு மிகவும் நம்பிக்கை உண்டு. மகாபாரதத்தில் இது போன்று சம்பவங்கள் நிறைய வரும். அதுவும் தர்மமே வடிவான எம்பெருமான் கண்ணனின் மாய சக்தியால், கௌரவர்கள் (மிகப்பெரிய படைபலமும், ஆள் பலமும் இருந்தும்) தவிடு பொடி ஆன கதை எல்லோரும் அறிவார்.
Venkatesh A.S- Posts : 70
Join date : 25/06/2011
Location : Chennai
Re: விதியை வெல்ல ஜோதிட சூத்திரங்கள்.
நண்பரே, எனக்கும் என் மூத்த நண்பருக்கும் இது போன்று பல விவாதங்கள் நடக்கும் . எல்லாமே விதிப்படி இயங்குகின்றன என்பதை அவரும் அறிவார். ஒரு சமயம் நான் அவருக்கு சிற்றுண்டி வாங்கி தந்த போது அவர் கேட்டார் , "இதை ஏற்றுக்கொள்வதால் நான் கடன் படுகிறேனா? அல்லது நீங்கள் கடன் பட்டுள்ளதால் எனக்கு இப்போலுது வாங்கி தருகிறீர்களா? " எனக்கு அப்போலுது என்ன சொல்வதென்று தெரியவில்லை. ஆனால் திடீரென்று ஒன்று மனதில் பட்டது - அதாவது அப்போது எனக்கு ஆறாம் அதிபதி தசை நடந்து கொண்டிருந்தது. (அவருக்கு ஒன்றாம் அதிபதி தசை - இருவரும் தூலா லக்கினம் ) அப்படியானால் அதன் படி நாம் பட்டுள்ள கடன்களை அனுபவிக்கும் நேரம் தானே? அதை தானே திரும்ப அடைத்து கொண்டிருக்கிறேன் என அவரிடம் சொன்னேன். அவர் ஏற்று கொண்டார். எனக்கு தோன்றிய இவ்வெண்ணம் சரியா? எனக்கு சற்று தெளிவில்லாமல் உள்ளது.
Venkatesh A.S- Posts : 70
Join date : 25/06/2011
Location : Chennai
Re: விதியை வெல்ல ஜோதிட சூத்திரங்கள்.
சரி தான் நண்பர் வெங்கடேஷ் அவர்களே.
எந்த ஒரு செயலையும் நாம் தான் செய்கிறோம். ஆனால் அதன் பலனை நாளும் கோளும் தான் முடிவுசெய்கின்றன.
ஆனால் நாளும் கோளும் கொடுக்கும் பலன் முன்கூட்டியே தெரிந்துவிடுமானால் அதற்கு தக்கவாறு நாம் நம் செயல்களை மாற்றிக் கொள்ளலாம். ஆறாம் அதிபதி திசையில் கையில் காசு இருக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அதற்காக நாம் எந்த செயலையும் செய்ய முடிவு பண்ணலாம். அது எதிர்காலத்திற்கு சேர்க்கப்படும் சொத்தாகவோ அல்லது மறுபிறவிக்கு சேர்க்கப்படும் புண்ணியமாகவோ இருக்கலாம். ஆனால் தற்சமயம் அது செலவொ அல்லது நட்டமாகவோ தான் இருக்க வேண்டும். கடன் வாங்குவது தான் 6ம் இடம் அடைப்பது 2ம் 11ம் ஆகும் அதனால் நீங்கள் பிற்காலத்தில் பயன்படும் என்று கருதி இப்பொழுது செலவு செய்யுங்கள்.
எந்த ஒரு செயலையும் நாம் தான் செய்கிறோம். ஆனால் அதன் பலனை நாளும் கோளும் தான் முடிவுசெய்கின்றன.
ஆனால் நாளும் கோளும் கொடுக்கும் பலன் முன்கூட்டியே தெரிந்துவிடுமானால் அதற்கு தக்கவாறு நாம் நம் செயல்களை மாற்றிக் கொள்ளலாம். ஆறாம் அதிபதி திசையில் கையில் காசு இருக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அதற்காக நாம் எந்த செயலையும் செய்ய முடிவு பண்ணலாம். அது எதிர்காலத்திற்கு சேர்க்கப்படும் சொத்தாகவோ அல்லது மறுபிறவிக்கு சேர்க்கப்படும் புண்ணியமாகவோ இருக்கலாம். ஆனால் தற்சமயம் அது செலவொ அல்லது நட்டமாகவோ தான் இருக்க வேண்டும். கடன் வாங்குவது தான் 6ம் இடம் அடைப்பது 2ம் 11ம் ஆகும் அதனால் நீங்கள் பிற்காலத்தில் பயன்படும் என்று கருதி இப்பொழுது செலவு செய்யுங்கள்.
Re: விதியை வெல்ல ஜோதிட சூத்திரங்கள்.
அன்பு நண்பருக்கு மிக்க நன்றி, நான் கடந்த 2002 முதல் ஜோதிடம் பற்றிய அறியும் கலையை கற்று வருகிறேன். இது வரை நிறைய தமிழ் மற்றும் ஆங்கில புத்தகங்களை / இணைய தளங்களை படித்தும் உள்ளேன். எதிலும் அடிப்படை என்ன என்று நான் பார்ப்பேன். அதில் தான் உறுதியாக இருக்க வேண்டும் என்று விரும்புபவன். அதன் படி ஜோதிடத்திலும் அடிப்படை விஷயத்தில் நிறைய கேள்விகள் எனக்கு உள்ளன. உதாரணமாக தசை இருப்பு விவரம் எதனை பொறுத்து அமைகிறது? ஒரு சிலருக்கு வாழ்கையில் யோக தசை வராமல் சென்று விடுகிறதே, அப்படி பட்டவர்கள் என்ன செயலாம்? தங்களின் ஆலோசனையை ஆவலோடு எதிர் பார்க்கிறேன். நன்றி .
Venkatesh A.S- Posts : 70
Join date : 25/06/2011
Location : Chennai
Similar topics
» நட்சத்திரங்களும் அதற்குரிய தெய்வங்களும் - வாழ்க்கையில் வெற்றிபெற உதவும் ஜோதிட சூத்திரங்கள்
» ஜோதிட வர்க்கச் சக்கரங்கள்.
» பதஞ்சலி சூத்திரங்கள்....(2) ருத்ரா
» நாடி ஜோதிட ரகசியம்
» மனக் கஷ்டம் தீர ஜோதிட வழி
» ஜோதிட வர்க்கச் சக்கரங்கள்.
» பதஞ்சலி சூத்திரங்கள்....(2) ருத்ரா
» நாடி ஜோதிட ரகசியம்
» மனக் கஷ்டம் தீர ஜோதிட வழி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum