இந்து சமயம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சித்திரை-நமது புத்தாண்டுத் தொடக்கம்.
by Dheeran Tue Apr 12, 2022 8:21 am

» மீண்டும் வருக
by Dheeran Fri Oct 02, 2020 11:08 am

» கே இனியவன் ஆன்மீக கவிதைகள்
by கே இனியவன் Thu Nov 09, 2017 7:58 pm

» தீபத்திருநாள் வாழ்த்துக்கள்
by Dheeran Wed Oct 18, 2017 4:01 pm

» பண்டைய இந்தியாவின் விமானத் தொழில் நுட்பம்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:23 pm

» வெற்றி மாபெரும் வெற்றி!
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:16 pm

» பாரதி பாடலில் அராஜக “செக்யுலர்” திருத்தங்கள் - ஜடாயு
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:55 pm

» மோடி, கருப்புப்பண ஒழிப்பு, ஊடகங்கள் - ஜெயமோகன்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:41 pm

» அனைவருக்கும் வணக்கம்.
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:46 am

» நான் ஒரு ஹிந்து என்பதில் ஏன் பெருமிதம் கொள்கிறேன் – பாகம் 1 AGNIVEER
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:42 am

» தேவையா இந்த சமஸ்கிருத துவேஷம்
by Dheeran Sat Jun 25, 2016 12:46 pm

» சிவ வழிபாடு புத்தகம்
by tammy ranga Thu Dec 17, 2015 3:37 am

» ஷ்ரிடி சாய் பாபா புண்ணிய வரலாறு தமிழில்
by tammy ranga Thu Dec 17, 2015 3:35 am

» ஆரிய திராவிட மாயை
by Dheeran Thu Oct 29, 2015 4:10 pm

» தென்புலத்தார் வழிபாடு
by Dheeran Sun Sep 27, 2015 8:50 pm

» தமிழ் ஹிந்துவும் இலவச ஜோதிட கணிப்பு
by ஹரி ஓம் Mon Aug 03, 2015 2:36 am

» வெற்றி வேல்!!!வீரவேல்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
by ஹரி ஓம் Wed Jun 24, 2015 4:09 am

» சிவதாண்டவம் - PB ஸ்ரீனிவாஸ்
by i.mahatheva Thu Jun 18, 2015 5:24 pm

» கால சர்ப்ப தோஷம் என்றால் என்ன?
by jothi sangeetha Thu May 21, 2015 1:43 pm

» மல்லிகைப் பூவை தலையில் சூடுங்கள் - பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்து
by கே இனியவன் Thu May 21, 2015 11:02 am

























Topsites
Tamil 10 top sites [www.tamil10 .com ]
Ranking


கம்ப இராமாயணம் - பால காண்டம்7. தாடகை வதைப் படலம்

Go down

கம்ப இராமாயணம் - பால காண்டம்7. தாடகை வதைப் படலம் Empty கம்ப இராமாயணம் - பால காண்டம்7. தாடகை வதைப் படலம்

Post by ஆனந்தபைரவர் Wed Aug 18, 2010 4:07 pm

கம்ப இராமாயணம் - பால காண்டம்7. தாடகை வதைப் படலம் Rama5
விசுவாமித்திரன் கூறிய அங்க நாட்டு வரலாறும், காமன் ஆச்சிரமப் பெருமையும்

'திங்கள் மேவும் சடைத் தேவன்மேல், மாரவேள்,
இங்கு நின்று எய்யவும், எரிதரும் நுதல் விழிப்
பொங்கு கோபம் சுட, பூளை வீ அன்ன தன்
அங்கம் வெந்து, அன்று தொட்டு அனங்கனே ஆயினான். 1

'வாரணத்து உரிவையான் மதனனைச் சினவு நாள்,
ஈரம் அற்று அங்கம் இங்கு உகுதலால், இவண் எலாம்,
ஆரணத்து உறையுளாய்! அங்க நாடு; இதுவும், அக்
காரணக் குறியுடைக் காமன் ஆச்சிரமமே. 2

'பற்று அவா வேரொடும் பசை அற, பிறவி போய்
முற்ற, வால் உணர்வு மேல் முடுகினார் அறிவு சென்று
உற்ற வானவன், இருந்து யோகு செய்தனன் எனின்,
சொற்றவாம் அளவதோ, மற்று இதன் தூய்மையே?' 3

இரவு தங்கி, மறுநாள் மூவரும் ஒரு பாலைவனம் சேர்தல்

என்று, அ(வ்) அந்தணன் இயம்பலும், வியந்து, அவ் வயின்
சென்று, வந்து எதிர் தொழும் செந் நெறிச் செல்வரோடு
அன்று உறைந்து, அலர் கதிர்ப் பரிதி மண்டிலம் அகன்
குன்றின் நின்று இவர, ஓர் சுடு சுரம் குறுகினார். 4

பாலை நிலத்தின் தன்மை

பருதிவானவன் நிலம் பசை அறப் பருகுவான்
விருது மேற்கொண்டு உலாம் வேனிலே அல்லது ஓர்
இருது வேறு இன்மையால், எரி சுடர்க் கடவுளும்
கருதின், வேம் உள்ளமும்; காணின், வேம் நயனமும். 5

படியின்மேல் வெம்மையைப் பகரினும், பகரும் நா
முடிய வேம்; முடிய மூடு இருளும் வான் முகடும் வேம்;
விடியுமேல், வெயிலும் வேம்; மழையும் வேம்; மின்னினோடு
இடியும் வேம்; என்னில், வேறு யாவை வேவாதவே? 6

விஞ்சு வான் மழையின்மேல் அம்பும் வேலும் பட,
செஞ்செவே செருமுகத்து அன்றியே, திறன் இலா
வஞ்சர் தீவினைகளால் மான மா மணி இழந்து
அஞ்சினார் நெஞ்சுபோல், என்றும் ஆறாது அரோ. 7

பேய் பிளந்து ஒக்க நின்று உலர் பெருங் கள்ளியின்
தாய் பிளந்து உக்க கார் அகில்களும், தழை இலா
வேய் பிளந்து உக்க வெண் தரளமும், விட அரா
வாய் பிளந்து உக்க செம் மணியுமே-வனம் எலாம். 8

பாரும் ஓடாது; நீடாது எனும் பாலதே:
சூரும் ஓடாது; கூடாதுஅரோ: சூரியன்
தேரும் ஓடாது, மா மாகம் மீ; தேரின், நேர்
காரும் ஓடாது; நீள் காலும் ஓடாது அரோ. 9

கண் கிழித்து உமிழ் விடக் கனல் அரா-அரசு கார்
விண் கிழித்து ஒளிரும் மின் அனைய பல் மணி, வெயில்
மண் கிழித்திட எழும் சுடர்கள், மண்மகள் உடல்
புண் கிழித்திட எழும் குருதியே போலுமே. 10

புழுங்கு வெம் பசியொடு புரளும் பேர் அரா
விழுங்க வந்து எழுந்து எதிர் விரித்த வாயின்வாய்,
முழங்கு திண் கரி புகும் முடுகி-மீமிசை
வழங்கு வெங் கதிர் சுட, மறைவு தேடியே! 11

ஏக வெங் கனல் அரசிருந்த, காட்டினில்
காகமும் கரிகளும் கரிந்து சாம்பின;-
மாக வெங் கனல் எனும் வடவைத் தீச் சுட,
மேகமும் கரிந்து இடை வீழ்ந்த போலுமே. 12

கானகத்து இயங்கிய கழுதின் தேர்க் குலம்,
'தான் அகத்து எழுதலால் தலைக் கொண்டு ஓடிப்போய்,
மேல் நிமிர்ந்து எழுந்திடில் விசும்பும் வேம்' எனா,
வானவர்க்கு இரங்கி, நீர் வளைந்தது ஒத்ததே! 13

ஏய்ந்த அக் கனலிடை எழுந்த கானல்-தேர்,
காய்ந்த அக் கடு வனம் காக்கும் வேனிலின்
வேந்தனுக்கு அரசு வீற்றிருக்கச் செய்தது ஓர்
பாய்ந்த பொன் காலுடைப் பளிக்குப் பீடமே! 14

தா வரும் இரு வினை செற்று, தள்ள அரும்
மூவகைப் பகை அரண் கடந்து, முத்தியில்
போவது புரிபவர் மனமும், பொன் விலைப்
பாவையர் மனமும், போல் பசையும் அற்றதே! 15

பொரி பரல் படர் நிலம் பொடிந்து கீழ் உற
விரிதலின், பெரு வழி விளங்கித் தோன்றலால்,
அரி மணிப் பணத்து அரா-அரசன் நாட்டினும்
எரி கதிர்க்கு இனிது புக்கு இயங்கல் ஆயதே! 16

வெம்மையை தாங்கும் ஆற்றல் பெற இராம இலக்குவருக்கு இரண்டு மந்திரங்களை முனிவன் உபதேசித்தல்

எரிந்து எழு கொடுஞ் சுரம் இனையது எய்தலும்,
அருந் தவன், 'இவர், பெரிது அளவு இல் ஆற்றலைப்
பொருந்தினர் ஆயினும், பூவின் மெல்லியர்;
வருந்துவர் சிறிது' என மனத்தின் நோக்கினான். 17

நோக்கினன் அவர் முகம்; நோக்க, நோக்குடைக்
கோக் குமரரும் அடி குறுக, நான்முகன்
ஆக்கின விஞ்சைகள் இரண்டும் அவ் வழி
ஊக்கினன்; அவை அவர் உள்ளத்து உள்ளினார். 18

அந்த நிலம் அழிந்த காரணத்தை முனிவனிடம் இராமன் வினாவுதல்

'சுழி படு கங்கை அம் தொங்கல் மோலியான்
விழி பட வெந்ததோ? வேறுதான் உண்டோ ?
பழி படர் மன்னவன் பரித்த நாட்டினூங்கு
அழிவது என்? காரணம், அறிஞ! கூறு' என்றான். 19

விசுவாமித்திரன் தாடகையின் வரலாறு கூறுதல்

என்றலும், இராமனை நோக்கி, 'இன் உயிர்
கொன்று உழல் வாழ்க்கையள், கூற்றின் தோற்றத்தள்,
அன்றியும் ஐ-இருநூறு மையல் மா
ஒன்றிய வலியினள், உறுதி கேள்' எனா, 20

'மண் உருத்து எடுப்பினும், கடலை வாரினும்,
விண் உருத்து இடிப்பினும், வேண்டின், செய்கிற்பாள்;
எண் உருத் தெரிவு அரும் பாவம் ஈண்டி, ஓர்
பெண் உருக் கொண்டெனத் திரியும் பெற்றியாள்; 21

'பெரு வரை இரண்டொடும், பிறந்த நஞ்சொடும்,
உரும் உறழ் முழக்கொடும், ஊழித் தீயொடும்,
இரு பிறை செறிந்து எழும் கடல் உண்டாம் எனின்,
வெருவரு தோற்றத்தள் மேனி மானுமே; 22

'சூடக அரவு உறழ் சூலக் கையினள்;
காடு உறை வாழ்க்கையள்;-கண்ணின் காண்பரேல்,
ஆடவர் பெண்மையை அவாவும் தோளினாய்!-
"தாடகை" என்பது அச் சழக்கி நாமமே; 23

'உளப் பரும் பிணிப்பு அறா உலோபம் ஒன்றுமே
அளப்ப அருங் குணங்களை அழிக்குமாறுபோல்,
கிளப்ப அருங் கொடுமைய அரக்கி கேடு இலா
வளப் பரு மருத வைப்பு அழித்து மாற்றினாள்; 24

'இலங்கை அரசன் பணி அமைந்து, ஒர் இடையூறா,
விலங்கள் வலிகொண்டு, எனது வேள்வி நலிகின்றாள்;-
அலங்கல் முகிலே!-அவள் இ(வ்) அங்க நிலம் எங்கும்
குலங்களொடு அடங்க நனி கொன்று திரிகின்றாள்; 25

'முன் உலகு அளித்து முறை நின்ற உயிர் எல்லாம்
தன் உணவு எனக் கருது தன்மையினள்;-மைந்த!-
என் இனி உணர்த்துவது? இனிச் சிறிது நாளில்
மன்னுயிர் அனைத்தையும் வயிற்றின் இடும்' என்றான். 26

தாடகையின் உறைவிடத்தை இராமன் வினாவுதல்

அங்கு, உறுவன் அப் பரிசு உரைப்ப, அது கேளா,
கொங்கு உறை நறைக் குல மலர்க் குழல் துளக்கா,
'எங்கு உறைவது, இத் தொழில் இயற்றுபவள்?' என்றான் -
சங்கு உறை கரத்து ஒரு தனிச் சிலை தரித்தான். 27

தாடகை உறையும் மலையை முனிவன் காட்ட, தாடகை அங்குத் தோன்றுதல்

கைவரை எனத் தகைய காளை உரை கேளா,
ஐவரை அகத்திடை அடைத்த முனி, 'ஐய!
இவ் வரை இருப்பது அவள்' என்பதனின் முன்பு, ஓர்
மை வரை நெருப்பு எரிய வந்ததென, வந்தாள். 28

தாடகையின் தோற்றம்

சிலம்புகள் சிலம்பிடை செறித்த கழலோடும்
நிலம் புக மிதித்தனள்; நெளித்த குழி வேலைச்
சலம் புக, அனல் தறுகண் அந்தகனும் அஞ்சிப்
பிலம் புக, நிலக் கிரிகள் பின் தொடர, வந்தாள் 29

இறைக்கடை துடித்த புருவத்தள், எயிறு என்னும்
பிறைக் கடை பிறக்கிட மடித்த பில வாயள்,
மறைக் கடை அரக்கி, வடவைக் கனல் இரண்டு ஆய்
நிறைக் கடல் முளைத்தென, நெருப்பு எழ விழித்தாள். 30

கடம் கலுழ் தடங் களிறு கையொடு கை தெற்றா,
வடம் கொள, நுடங்கும் இடையாள், மறுகி வானோர்
இடங்களும், நெடுந் திசையும், ஏழ் உலகும், யாவும்,
அடங்கலும் நடுங்க, உரும் அஞ்ச, நனி ஆர்த்தாள். 31

தாடகை ஆரவாரத்துடன் அவர்களை நோக்கி நகைத்து, வீர உரை பகர்தல்

ஆர்த்து, அவரை நோக்கி நகைசெய்து, எவரும் அஞ்ச,
கூர்த்த நுதி முத் தலை அயில் கொடிய கூற்றைப்
பார்த்து, எயிறு தின்று, பகு வாய்முழை திறந்து, ஓர்
வார்த்தை உரைசெய்தனள்-இடிக்கும் மழை அன்னாள்- 32

'கடக்க அரும் வலத்து எனது காவல் இது; யாவும்
கெட, கருவறுத்தனென்; இனி, "சுவை கிடக்கும்
விடக்கு அரிது" எனக் கருதியோ? விதிகொடு உந்த,
படக் கருதியோ?-பகர்மின், வந்த பரிசு!' என்றே. 33

'வேல் கொண்டு எறிவேன்?' எனத் தாடகை சினந்து வருதல்

மேகம் அவை இற்று உக விழிந்தனள், புழுங்கா,
மாக வரை இற்று உக உதைத்தனள்; மதித் திண்
பாகம் எனும் முற்று எயிறு அதுக்கி, அயில் பற்றா,
'ஆகம் உற உய்த்து, எறிவென்' என்று, எதிர் அழன்றாள். 34

'பெண்' என்றெண்ணி இராமன் கணை தொடாதிருத்தல்

அண்ணல் முனிவற்கு அது கருத்து எனினும், 'ஆவி
உண்' என, வடிக் கணை தொடுக்கிலன்; உயிர்க்கே
துண்ணெனும் வினைத்தொழில் தொடங்கியுளளேனும்,
'பெண்' என மனத்திடை பெருந்தகை நினைந்தான். 35

இராமன் கருத்தறிந்த முனிவன், 'இவள் பெண் அல்லள்; கொல்லுதி' எனல்

வெறிந்த செம் மயிர் வெள் எயிற்றாள், தனை
எறிந்து கொல்வென் என்று ஏற்கவும், பார்க்கிலாச்
செறிந்த தாரவன் சிந்தைக் கருத்து எலாம்
அறிந்து, நான்மறை அந்தணன் கூறுவான்: 36

'தீது என்றுள்ளவை யாவையும் செய்து, எமைக்
கோது என்று உண்டிலள்; இத்தனையே குறை;
யாது என்று எண்ணுவது? இக் கொடியாளையும்,
மாது என்று எண்ணுவதோ?-மணிப் பூணினாய்! 37

'நாண்மையே உடையார்ப் பிழைத்தால், நகை;
வாண்மையே பெற்ற வன் திறல் ஆடவர்
தோண்மையே இவள் பேர் சொலத் தோற்குமேல்,
ஆண்மை என்னும் அது ஆரிடை வைகுமே? 38

'இந்திரன் இடைந்தான்; உடைந்து ஓடினார்,
தந்திரம் படத் தானவர், வானவர்;
மந்தரம் இவள் தோள் எனின், மைந்தரோடு,
அந்தரம் இனி யாதுகொல், ஆண்மையே? 39

'கறங்கு அடல் திகிரிப் படி காத்தவர்
பிறங்கடைப் பெரியோய்! பெரியோரொடும்
மறம்கொடு, இத் தரை மன்னுயிர் மாய்த்து, நின்று,
அறம் கெடுத்தவட்கு ஆண்மையும் வேண்டுமோ? 40

'சாற்றும் நாள் அற்றது எண்ணி, தருமம் பார்த்து,
ஏற்றும் விண் என்பது அன்றி, இவளைப் போல்,
நாற்றம் கேட்டலும் தின்ன நயப்பது ஓர்
கூற்றும் உண்டுகொல்?-கூற்று உறழ் வேலினாய்! 41

'மன்னும் பல் உயிர் வாரி, தன் வாய்ப் பெய்து
தின்னும் புன்மையின் தீமையது ஏது? -ஐய!-
"பின்னும் தாழ் குழல் பேதைமைப் பெண் இவள்
என்னும் தன்மை, எளிமையின் பாலதே! 42

'ஈறு இல் நல் அறம் பார்த்து இசைத்தேன்; இவட்
சீறி நின்று இது செப்புகின்றேன் அலேன்;
ஆறி நின்றது அருள் அன்று; அரக்கியைக்
கோறி' என்று, எதிர் அந்தணன் கூறினான். 43

முனிவனின் ஏவலுக்கு இராமன் இசைந்து கூறுதல்

ஐயன் அங்கு அது கேட்டு, 'அறன் அல்லவும்
எய்தினால், "அது செய்க!" என்று ஏவினால்,
மெய்ய! நின் உரை வேதம் எனக் கொடு
செய்கை அன்றோ! அறம் செயும் ஆறு' என்றான். 44

தாடகை சூலப் படையை ஏவ, இராமன் அம்பால் அதனைத் துணித்தல்

கங்கைத் தீம் புனல் நாடன் கருத்தை, அம்
மங்கைத் தீ அனையாளும் மனக்கொளா,
செங் கைச் சூல வெந் தீயினை, தீய தன்
வெங் கண் தீயொடு மேற்செல வீசினாள். 45

புதிய கூற்று அனையாள் புகைந்து ஏவிய
கதிர் கொள் மூஇலைக் கால வெந் தீ, முனி
விதியை மேற்கொண்டு நின்றவன்மேல், உவா
மதியின்மேல் வரும் கோள் என, வந்ததே. 46

மாலும், அக் கணம் வாளியைத் தொட்டதும்,
கோல வில் கால் குனித்ததும், கண்டிலர்;
காலனைப் பறித்து அக் கடியாள் விட்ட
சூலம் அற்று வீழ் துண்டங்கள் கண்டனர். 47

தாடகை கல் மழை பொழிய, இராமன் அம்பு மழையால் தடுத்தல்

அல்லின் மாரி அனைய நிறத்தவள்,
சொல்லும் மாத்திரையின், கடல் தூர்ப்பது ஓர்
கல்லின் மாரியைக் கைவகுத்தாள்; அது
வில்லின் மாரியின், வீரன் விலக்கினான். 48

இராம பாணம் தாடகையின் நெஞ்சில் ஊடுருவ, அவள் மாய்ந்து மண்ணில் வீழ்தல்

சொல் ஒக்கும் கடிய வேகச் சுடு சரம், கரிய செம்மல்,
அல் ஒக்கும் நிறத்தினாள் மேல் விடுதலும், வயிரக் குன்றக்
கல் ஒக்கும் நெஞ்சில் தங்காது, அப்புறம் கழன்று, கல்லாப்
புல்லர்க்கு நல்லோர் சொன்ன பொருள் என, போயிற்று அன்றே! 49

பொன் நெடுங் குன்றம் அன்னான், புகர் முகப் பகழி என்னும்
மன் நெடுங் கால வன் காற்று அடித்தலும், -இடித்து, வானில்
கல் நெடு மாரி பெய்யக் கடையுகத்து எழுந்த மேகம்,
மின்னொடும் அசனியோடும் வீழ்வதே போல-வீழ்ந்தாள். 50

பொடியுடைக் கானம் எங்கும் குருதிநீர் பொங்க வீழ்ந்த
தடியுடை எயிற்றுப் பேழ் வாய்த் தாடகை, தலைகள்தோறும்
முடியுடை அரக்கற்கு, அந் நாள், முந்தி உற்பாதம் ஆக,
படியிடை அற்று வீழ்ந்த வெற்றி அம் பதாகை ஒத்தாள். 51

கான் திரிந்து ஆழி ஆகத் தாடகை கடின மார்பத்து
ஊன்றிய பகழி வாயூடு ஒழிகிய குருதி வெள்ளம்
ஆன்ற அக் கானம் எல்லாம் பரந்ததால்-அந்தி மாலைத்
தோன்றிய செக்கர் வானம் தொடக்கு அற்று வீழ்ந்தது ஒத்தே! 52

வாச நாள் மலரோன் அன்ன மா முனி பணி மறாத,
காசு உலாம் கனகப் பைம் பூண், காகுத்தன் கன்னிப் போரில்,
கூசி, வாள் அரக்கர்தங்கள் குலத்து உயிர் குடிக்க அஞ்சி,
ஆசையால் உழலும் கூற்றும், சுவை சிறிது அறிந்தது அன்றே. 53

தேவர்கள் மகிழ்ந்து வாழ்த்துதல்

'யாமும் எம் இருக்கை பெற்றேம்; உனக்கு இடையூறும் இல்லை;
கோமகற்கு இனி நீ தெய்வப் படைக்கலம் கொடுத்தி' என்னா,
மா முனிக்கு உரைத்து, பின்னர், வில் கொண்ட மழை அனான்மேல்
பூமழை பொழிந்து வாழ்த்தி, விண்ணவர் போயினாரே. 54

மிகைப் பாடல்கள்

உள்ளிய காலையின் ஊழித் தீயையும்
எள்ளுறு கொழுங் கனல் எரியும் வெஞ்சுரம்,
தெள்ளு தண் புனலிடைச் சேறல் ஒத்தது;
வள்ளலும், முனிவனை வணங்கிக் கூறுவான்: 18-1

'கல் நவில் தோளினாய்! கமலத் தோன் அருள்
மன்னுயிர் அனைத்தையும் வாரி வாய் மடுத்து,
இன் உயிர் வளர்க்கும் ஓர் எரி கொள் கூற்றமே
அன்னவள் யாவள் என்று அறையக் கேட்டியால்: 20-1

'இயக்கர்தம் குலத்துளான், உலகம் எங்கணும்
வியக்குறும் மொய்ம்பினான், எரியின் வெம்மையான்,
மயக்கு இல் சற்சரன், எனும் வலத்தினான், அருள்
துயக்கு இலன் சுகேது என்று உளன் ஒர் தூய்மையான். 20-2

'அன்னவன் மகவு இலாது அயரும் சிந்தையான்,
மன் நெடுந் தாமரை மலரின் வைகுறும்
நல் நெடு முதல்வனை வழுத்தி, நல் தவம்
பல் நெடும் பகல் எலாம் பயின்ற பான்மையான். 20-3

'முந்தினன் அரு மறைக் கிழவன், "முற்றும் நின்
சிந்தனை என்?" என,"சிறுவர் இன்மையால்
நொந்தனென்; அருள்க" என, "நுணங்கு கேள்வியாய்!
மைந்தர்கள் இலை; ஒரு மகள் உண்டாம்" என்றான். 20-4

'"பூ மட மயிலினைப் பொருவும் பொற்பொடும்,
ஏமுறு மதமலை ஈர்-ஐஞ்ஞூறுடைத்
தாம் மிகு வலியொடும், தனயை தோன்றும்; நீ
போ" என, மலர் அயன் புகன்று போயினான். 20-5

'ஆயவன் அருள்வழி, அலர்ந்த தாமரைச்
சேயவள் என வளர் செவ்வி கண்டு, "இவட்கு
ஆயவன் யார்கொல்?" என்று ஆய்ந்து, தன் கிளை
நாயகன், சுந்தன் என்பவற்கு நல்கினான். 20-6

'"காமனும் இரதியும் கலந்த காட்சி ஈது
ஆம்" என, இயக்கனும் அணங்கு அனாளும், வேறு
யாமமும் பகலும் ஓர் ஈறு இன்று என்னலாய்,
தாம் உறு பெருங் களிச் சலதி மூழ்கினார். 20-7

'பற்பல நாள் செலீஇ, பதுமை போலிய
பொற்பினாள் வயிற்றிடை, புவனம் ஏங்கிட,
வெற்பு அன புயத்து மாரீசனும், விறல்
மல் பொரு சுவாகுவும், வந்து தோன்றினார். 20-8

'மாயமும், வஞ்சமும், வரம்பும் இல் ஆற்றலும்,
தாயினும் பழகினார் தமக்கும் தேர்வு ஓணாது,
ஆயவர் வளர்வுழி, அவரை ஈன்ற அக்
காய் சினத்து இயக்கனும், களிப்பின் மேன்மையான். 20-9

தீது உறும் அவுணர்கள் தீமை தீர்தர,
மோதுறு கடல் எலாம் ஒரு கை மொண்டிடு
மாதவன் உறைவிடம் அதனின் வந்து, நீள்
பாதவம் அனைத்தையும் பறித்து வீசினான். 20-10

'விழைவு அறு மா தவம் வெஃகினோர் விரும்பு
உழை, கலை, இரலையை உயிர் உண்டு, ஓங்கிய
வழை முதல் மரன் எலாம் மடிப்ப, மா தவன்
தழல் எழ விழித்தனன்; சாம்பல் ஆயினான். 20-11

'மற்றவன் விளிந்தமை மைந்தர் தம்மொடும்
பொற்றொடி கேட்டு, வெங் கனலின் பொங்குறா,
'முற்றுற முடிக்குவென் முனியை' என்று எழா,
நற்றவன் உறைவிடம் அதனை நண்ணினாள். 20-12

'இடியொடு மடங்கலும் வளியும் ஏங்கிட,
கடி கெட அமரர்கள், கதிரும் உட்கிட,
தடியுடை முகில் குலம் சலிப்ப, அண்டமும்
வெடிபட, அதிர்ந்து, எதிர் விளித்து மண்டவே. 20-13

'தமிழ் எனும் அளப்ப அருஞ் சலதி தந்தவன்
உமிழ் கனல் விழி வழி ஒழுக, உங்கரித்து
"அழிவன செய்தலால் அரக்கர் ஆகியே
இழிக!" என, உரைத்தனன், அசனி எஞ்சவே. 20-14

'வெருக்கொள, உலகையும் விண்ணுளோரையும்
முருக்கி, எவ் உயிரும் உண்டு, உழலும் மூர்க்கராம்
அரக்கர்கள் ஆயினர், அக் கணத்தினில்
உருக்கிய செம்பென உமிழ் கண் தீயினர். 20-15

'ஆங்கு அவன், வெகுளியும், அறைந்த சாபமும்
தாங்கினர்; எதிர் செயும் தருக்கு இலாமையின்,
நீங்கினர்; சுமாலியை நேர்ந்து, "நின்கு யாம்
ஓங்கிய புதல்வர்" என்று, உறவு கூர்ந்தனர். 20-16

'அவனொடும் பாதலத்து அநேக நாள் செலீஇ,
தவன் உறு தசமுகன் தனக்கு மாதுலர்
இவர் என, புடைத்து அழித்து, உலகம் எங்கணும்,
பவனனின் திரிகுநர், பதகி மைந்தர்கள். 20-17

'மிகும் திறல் மைந்தரை வேறு நீங்குறா,
தகும் தொழில் முனிவரன் சலத்தை உன்னியே,-
வகுந்துவின் வசுவரி வதிந்தது இவ் வனம்
புகுந்தனள்,-அழல் எனப் புழுங்கும் நெஞ்சினாள். 20-18

'மன்னர் மன்னவன் காதல! மற்றும் ஒன்று
இன்னம் யான் உரைக்கின்றது யாது எனின்,
முன் ஓர் காலம் நிகழ்ந்த முறைமை ஈது'
என்ன ஓதலுற்றான் தவத்து ஈறு இலான். 39-1

'பிருகு என்னும் பெருந் தவன் தன் மனை
வரு கயல் கண் கியாதி, வல் ஆசுரர்க்கு
உருகு காதலுற, உறவாதலே
கருதி, ஆவி கவர்ந்தனன், நேமியான். 39-2

'"வானகத்தினில், மண்ணினில், மன்னுயிர்
போனகம் தனக்கு" என்று எணும் புந்திய
தானவன் குமுதிப் பெயராள்தனை
ஊன் ஒழித்தனன் வச்சிரத்து உம்பர்கோன், 39-3

'ஆதலால், அரிக்கு, ஆகண்டலன் தனக்கு,
ஓது கீர்த்தி உண்டாயது அல்லால், இடை
ஏதம் என்பன எய்தியவோ? சொலாய்-
தாது அடர்ந்து தயங்கிய தாரினாய்!' 39-4

ஏக்கமோடும் இமையவர் எங்கணும்,
வாக்கின் முந்துற மாயை வளர்ப்பவள்,
மூக்கும் வார் செவியும் முறை போயிட,
தாக்கும் வள்ளற்கு இளவலும் தாக்கினான். 48-1

விலக்கி நின்று, அவன் வெங் கணை விரைவினில் விலக்கி,
கலக்கம் வானவர் தவிர்ந்திட, காலனும் கலங்கத்
துலக்கி, வையகத்து இடுக்கணும் முனிவர்தம் துயரும்
உலக்க, ஊழித் தீ ஒப்பது ஓர் கணை தொடுத்து எய்தான். 48-2


ஆனந்தபைரவர்
ஆனந்தபைரவர்

Posts : 1375
Join date : 27/07/2010
Age : 38
Location : இந்திய திருநாடு

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum