Latest topics
» சித்திரை-நமது புத்தாண்டுத் தொடக்கம். by Dheeran Tue Apr 12, 2022 8:21 am
» மீண்டும் வருக
by Dheeran Fri Oct 02, 2020 11:08 am
» கே இனியவன் ஆன்மீக கவிதைகள்
by கே இனியவன் Thu Nov 09, 2017 7:58 pm
» தீபத்திருநாள் வாழ்த்துக்கள்
by Dheeran Wed Oct 18, 2017 4:01 pm
» பண்டைய இந்தியாவின் விமானத் தொழில் நுட்பம்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:23 pm
» வெற்றி மாபெரும் வெற்றி!
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:16 pm
» பாரதி பாடலில் அராஜக “செக்யுலர்” திருத்தங்கள் - ஜடாயு
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:55 pm
» மோடி, கருப்புப்பண ஒழிப்பு, ஊடகங்கள் - ஜெயமோகன்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:41 pm
» அனைவருக்கும் வணக்கம்.
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:46 am
» நான் ஒரு ஹிந்து என்பதில் ஏன் பெருமிதம் கொள்கிறேன் – பாகம் 1 AGNIVEER
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:42 am
» தேவையா இந்த சமஸ்கிருத துவேஷம்
by Dheeran Sat Jun 25, 2016 12:46 pm
» சிவ வழிபாடு புத்தகம்
by tammy ranga Thu Dec 17, 2015 3:37 am
» ஷ்ரிடி சாய் பாபா புண்ணிய வரலாறு தமிழில்
by tammy ranga Thu Dec 17, 2015 3:35 am
» ஆரிய திராவிட மாயை
by Dheeran Thu Oct 29, 2015 4:10 pm
» தென்புலத்தார் வழிபாடு
by Dheeran Sun Sep 27, 2015 8:50 pm
» தமிழ் ஹிந்துவும் இலவச ஜோதிட கணிப்பு
by ஹரி ஓம் Mon Aug 03, 2015 2:36 am
» வெற்றி வேல்!!!வீரவேல்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
by ஹரி ஓம் Wed Jun 24, 2015 4:09 am
» சிவதாண்டவம் - PB ஸ்ரீனிவாஸ்
by i.mahatheva Thu Jun 18, 2015 5:24 pm
» கால சர்ப்ப தோஷம் என்றால் என்ன?
by jothi sangeetha Thu May 21, 2015 1:43 pm
» மல்லிகைப் பூவை தலையில் சூடுங்கள் - பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்து
by கே இனியவன் Thu May 21, 2015 11:02 am
புரட்டாசி சனிக்கிழமை விரதம்
Page 1 of 1
புரட்டாசி சனிக்கிழமை விரதம்
கிரகதோஷங்களில் சனிதோஷம் கடுமையானது. இதைப் போக்கும் மகிமை பெருமாள் வழிபாட்டுக்கு உண்டு. "ஹரி ஹரி' என்று சொன்னாலும், "கோவிந்தா' என்று சொன்னாலும், இந்த தோஷத்தால் ஏற்படும் சிரமங்கள் நீங்கி விடும்.. சாதாரணமாக அல்ல...தீய்ந்தே போகும் என்பார்கள். இதனால் தான் சில பெருமாள் கோயில்களில், புரட்டாசி சனிக்கிழமைகளில், சனீஸ்வரருக்கு எள் எண்ணெய் தீபம் ஏற்றுவது போல, அக்னிகுண்டம் உருவாக்கி எள் பொட்டலங்களைப் போட்டு, நல்லெண்ணெய் ஊற்றி எரிக்கின்றனர்.
விரத முறை: இந்த ஆண்டில் இன்றும், வரும் 25, அக்டோபர் 2,9 மற்றும் 16ம் தேதிகளில் புரட்டாசி சனிக்கிழமைகள் வருகின்றன. இந்த சனிக்கிழமைகளில், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மஞ்சள் ஆடை உடுத்துவது நல்லது. நெற்றியில் திருநாமம் இட்டுக்கொள்வது அவசியம். ""கரையாத நாமக் கட்டியும் புரட்டாசியில் கரைந்துவிடும்'' என்பார்கள். காலை முதல் மாலை வரை பெரியவர்கள் பழம், பால் சாப்பிட்டும், குழந்தைகள், நோயாளிகள் இட்லி முதலான எளிய உணவு வகைகளைச் சாப்பிட்டும் விரதமிருக்க வேண்டும். மாலை ஐந்து மணிக்கு, மஞ்சள் தடவிய ஒரு பித்தளைச் செம்பில் அரிசி எடுத்து, அதை பெருமாள் படம் முன் வைத்து பூஜை செய்ய வேண்டும். அந்த அரிசியை வெண் பொங்கல் அல்லது சர்க்கரைப் பொங்கலாக சமைத்து, பெருமாளுக்கு நைவேத்யம் செய்து வணங்க வேண்டும். அருகிலுள்ள பெருமாள் கோயிலுக்குச் சென்று துளசிமாலை அணிவித்து வணங்கி வர வேண்டும். பின்பு, பெருமாளுக்கு படைத்த பொங்கலைச் சாப்பிட்டு விரதம் முடிக்க வேண்டும். அன்று முழுக்க மனதுக்குள் "கோவிந்தா ஹரி கோவிந்தா, கோகுல நந்தன கோவிந்தா' என்று சொல்லிக் கொண்டே நம் அன்றாடப்பணிகளைத் தொடர வேண்டும். மாலையில் கூட்டாக குடும்பத்துடன் அமர்ந்து "ஸ்ரீ வெங்கடேச சரணவ் சரணம் ப்ரபத்யே' என்ற மந்திரத்தை 108முறை ஜெபிக்கலாம். ""வெங்கடேசா! உன் திருவடிகளைச் சரண அடைகிறேன்'' என்பது இதன் பொருள்.
விரத மகிமை: பீமய்யா என்ற பக்தர் மண்பாண்டத்தொழில் செய்து வந்தார். திருப்பதி வெங்கடேசப் பெருமாள் மீது அலாதி பக்தி கொண்ட அவர், களிமண்ணில் பெருமாள் சிலை செய்தார். புரட்டாசியில் மட்டுமின்றி எல்லா சனிக்கிழமைகளிலும், களிமண்ணால் செய்த பூக்களைத் தூவி வழிபட்டு வந்தார். பீமய்யாவின் பக்தியை ஊரறியச் செய்ய எண்ணம் கொண்டார் பெருமாள். அவ்வூர், மன்னன் தொண்டைமானும், பெருமாளின் பக்தன் தான். ஆனால், தன்னை விட உயர்ந்த பெருமாள் பக்தன் யாருமில்லை என்று ஆணவம் கொண்டிருந்தான். அரண்மனையில் இருந்த பஞ்சலோக பெருமாள் சிலைக்கு, நவரத்தின மாலைகள் அணிவித்து, வாசனை மலர்களால் அர்ச்சனை செய்வான்.
ஒருமுறை மன்னனின் கனவில் தோன்றிய பெருமாள், ""மன்னா! பெருமைப்படாதே. நீ அளித்த நவரத்தின மாலைகளை விட, பீமய்யா செய்தளித்த மண்மலர்கள் எனக்குப் பிடித்துள்ளன. பக்தி என்பது பொருளில் இல்லை. அவரவர் மனதில் இருக்கிறது,'' என்றார். மறுநாள், தொண்டைமான் பீமய்யாவின் பக்திதிறத்தை நேரில் சென்று அறிந்ததோடு அவருக்கு வேண்டிய உதவிகளையும் செய்தான். பீமய்யா மனநிறைவாக பல காலம் வெங்கடேசப்பெருமாளுக்கு பூஜைகள் செய்ததோடு இறுதியில் வைகுண்டமும் சென்று, பிறவாநிலை பெற்றார். புரட்டாசி சனி விரதம் கிரகதோஷங்களை நீக்கும். நோயற்ற வாழ்வைத் தரும். திருமணத்தடைகளை விலக்கும். அனைவரும் இந்த எளிய விரதத்தை தவறாமல் இருந்து பாவங்களைப் போக்கி நற்கதி பெறலாம்.
நன்றி தினமலர்

ஆனந்தபைரவர்- Posts : 1375
Join date : 27/07/2010
Age : 39
Location : இந்திய திருநாடு
Similar topics
» புரட்டாசி சனிக்கிழமை விரதம்
» புரட்டாசி சனி
» புரட்டாசி சனி விரத மகிமை
» புரட்டாசி சனிக்கிழமையின் மகத்துவம் தெரியுமா?
» கந்தசஷ்டி விரதம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum