இந்து சமயம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சித்திரை-நமது புத்தாண்டுத் தொடக்கம்.
by Dheeran Tue Apr 12, 2022 8:21 am

» மீண்டும் வருக
by Dheeran Fri Oct 02, 2020 11:08 am

» கே இனியவன் ஆன்மீக கவிதைகள்
by கே இனியவன் Thu Nov 09, 2017 7:58 pm

» தீபத்திருநாள் வாழ்த்துக்கள்
by Dheeran Wed Oct 18, 2017 4:01 pm

» பண்டைய இந்தியாவின் விமானத் தொழில் நுட்பம்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:23 pm

» வெற்றி மாபெரும் வெற்றி!
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:16 pm

» பாரதி பாடலில் அராஜக “செக்யுலர்” திருத்தங்கள் - ஜடாயு
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:55 pm

» மோடி, கருப்புப்பண ஒழிப்பு, ஊடகங்கள் - ஜெயமோகன்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:41 pm

» அனைவருக்கும் வணக்கம்.
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:46 am

» நான் ஒரு ஹிந்து என்பதில் ஏன் பெருமிதம் கொள்கிறேன் – பாகம் 1 AGNIVEER
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:42 am

» தேவையா இந்த சமஸ்கிருத துவேஷம்
by Dheeran Sat Jun 25, 2016 12:46 pm

» சிவ வழிபாடு புத்தகம்
by tammy ranga Thu Dec 17, 2015 3:37 am

» ஷ்ரிடி சாய் பாபா புண்ணிய வரலாறு தமிழில்
by tammy ranga Thu Dec 17, 2015 3:35 am

» ஆரிய திராவிட மாயை
by Dheeran Thu Oct 29, 2015 4:10 pm

» தென்புலத்தார் வழிபாடு
by Dheeran Sun Sep 27, 2015 8:50 pm

» தமிழ் ஹிந்துவும் இலவச ஜோதிட கணிப்பு
by ஹரி ஓம் Mon Aug 03, 2015 2:36 am

» வெற்றி வேல்!!!வீரவேல்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
by ஹரி ஓம் Wed Jun 24, 2015 4:09 am

» சிவதாண்டவம் - PB ஸ்ரீனிவாஸ்
by i.mahatheva Thu Jun 18, 2015 5:24 pm

» கால சர்ப்ப தோஷம் என்றால் என்ன?
by jothi sangeetha Thu May 21, 2015 1:43 pm

» மல்லிகைப் பூவை தலையில் சூடுங்கள் - பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்து
by கே இனியவன் Thu May 21, 2015 11:02 am

























Topsites
Tamil 10 top sites [www.tamil10 .com ]
Ranking


செவ்வாய் தோஷத்திற்குப் பரிகாரம் செய்வது எப்படி?

Go down

செவ்வாய் தோஷத்திற்குப் பரிகாரம் செய்வது எப்படி? Empty செவ்வாய் தோஷத்திற்குப் பரிகாரம் செய்வது எப்படி?

Post by ஆனந்தபைரவர் Sat Sep 18, 2010 9:51 pm

செவ்வாய் தோஷத்திற்குப் பல பரிகாரங்கள் உள்ளன. செவ்வாயினுடைய கடுமைக்குத் தகுந்தபடி பரிகாரங்கள் செய்யப்பட்டு வருகின்றன. செவ்வாய் தோஷ பரிகாரத்தை அலட்சியமின்றி செய்ய வேண்டும். மனத்துக்கு தோன்றியபடி யெல்லாம் பரிகாரங்கள் செய்தால் பரிகாரத்தின் விளைவு பாதகமாக இருக்கும், சாதகமாக இருக்காது.

அந்த தோஷத்தினுடைய தன்மை, அதை நீக்கும் கழுவாய் இவைகளை முழுவதுமாகத் தெரிந்து கொள்ளாமல் பரிகாரங்களைச் செய்யாதே, அது வியர்த்தம்-வீண் என்று தந்திர நூல் மேதைகள் சொல்வார்கள். பசி போவதற்காக சாப்பிடுகிறோமே தவிர, பசிக்குச் சாப்பிட்டது வயிற்று வலியாக மாறினால் வயிற்றுப் போக்காக மாறினால் சாப்பாட்டால் என்ன பலன் கிடைக்கும்ப பசி போய் வயிற்றிலே வலி வந்தது மிச்சமாகும். ஏற்கனவே இருந்த வயிற்றுப் பசியே தேவலை என்ற நிலை நமக்கு ஏற்பட்டு விடும். பரிகாரங்கள் உண்மையான பரிகாரங்களக இருக்க வேண்டும். இல்லையென்று சொன்னால் பரிகாரங்கள் துக்கத்தையும் மேலும் சுமையுமே கொடுத்து விடும்.

பரிகார காலங்கள்:

செவ்வாய்க் கிரகம் அவரவருடைய ஜாதகத்தில் எந்த இடத்தில் இருக்கிறதோ அந்த இடத்துக்குரிய கிரகங்களின் நாட்களில் செய்வது சிறப்பு. பொதுவாகச் செவ்வாய்க் கிழமையிலும் செய்யலாம். ஜென்ம நட்சத்திரத்தன்று பரிகாரம் செய்வது ஒத்துக் கொள்ளப்பட்டது. இதைத் தவிர உள்ள சிறப்பு விதிகளை சுக்குல பக்ஷ பரிகாரத்தில் கூறுவோம்.

பரிகாரம் செய்ய ஆகாத நேரம்:

ஜென்ம நட்சத்திரத்துக்கு நான்கு எட்டு பன்னிரண்டு இந்த நட்சத்திரங்களில் பரிகாரங்கள் செய்வது நல்லதல்ல. இதைப் போல பரிகாரம் செய்து கொள்பவருடைய மனைவியின் நட்சத்திரத்திலிருந்து நான்கு, எட்டு, பன்னிரண்டு இந்த நாட்களிலும் செய்யக் கூடாது. இதைப் போல இந்த தம்பதியருக்கு மூத்த குழந்தை ஆணாக இருந்தால் அந்தக் குழந்தையின் நான்கு, எட்டு, பன்னிரண்டு நட்சத்திரங்களிலும் பரிகாரங்கள் செய்து கொள்ளக் கூடாது.

பரிகாரம் செய்ய ஏற்ற இடங்கள்:

பொதுவான எல்லாப் பரிகாரங்களையும் இடம், பொருள், காலம் இந்த மூன்றையும் தெரிந்து கொண்டு தான் செய்ய வேண்டும். இடம் என்பது பரிகாரம் செய்யக் கூடிய இடத்தைக் குறிக்கும். பொருள் என்பது பரிகாரத்திற்கு உதவும் பொருள்களைக் குறிக்கும். காலம் என்பது பரிகாரத்திற்கு ஏற்ற காலத்தை குறிக்கும். சுபமான பரிகாரங்களை வளர்பிறைகளிலும் துயர் கட்டுக்கள், நீக்கும், அதாவது துக்கஹர பரிகாரங்களை கிருஷ்ண பட்சத்திலும் செய்ய வேண்டும்.

குளக்கரை, கிணற்றங்கரை, நதிக்கரை, கோசாலை, சிவாலயங்கள், விஷ்ணு சந்நிதி, பிரும்ம சமூக மத்தி, சமுத்திர Úக்ஷத்திரம், அருவிக்கரை, குருமுகம், குருபாதுகாஸ்தலம், குரு ஆலயம் இந்த இடங்களில் எல்லாம் சுபமான பரிகாரங்கள் செய்து நற்பலன்களை நிரம்ப அடையலாம். ஒரு சிலர் பரிகாரங்களை உருத்திர பூமியிலும் செய்வதுண்டு.
பலன் தரும் பரிகாரங்கள்

துவரை தானம்:

உடைக்காத முழுத்துவரையை சிகப்புத்துணியில் பொதி கட்டிக் கொள்ள வேண்டும், வெற்றிலைப் பாக்கு, மஞ்சள், பழம் இவைகளுடன் கண் சிவந்த வேதியரிடம் தானம் கொடுக்க வேண்டும்.

வாழைப்பூத் தானம்:

முழு வாழைப்பூ அதே மரத்தில் காய்த்த பழம், அதே மரத்தில் கிழக்கு நோக்கிய நுனி இலை இவைகளை எடுத்துக் கொண்டு இந்த நுனி இலையில் இவைகளை வைத்துத் தானம் வாங்குபவனை நடு வீட்டில் அமரச் செய்து வெற்றிலைப் பாக்கு, மஞ்சள் துணி
இவைகளுடன் தானம் செய்ய வேண்டும்.இந்த இரண்டு தானங்களும் திருமணத் தடங்கலைத் தீர்த்து வைக்கும் தானங்கள்.

பரிகாரம்:

செவ்வாய் தோஷ செவ்வாய் தோஷம் ஒரு சிலர் நினைப்பது போல திருமணத் தடங்கலை மட்டும் செய்து போவது அல்ல. பல்வேறு வகையான இடையூறுகளும் இதனால் விளைவதுண்டு, கோபமான வார்த்தைகளினால் தனக்கு வர வேண்டிய நன்மைகளைத் தானே கெடுத்துக் கொள்வது, கல்யாண வீடுகளில் போன இடங்களில் சண்டையிட்டுக் கொள்வது, கல்யாணக் காரியங்களில் சண்டையிட்டுக் கொள்வது, கல்யாணக் காரியங்கள் பேசப் போனால் தடங்கல் இவராலேயே ஏற்படு வது, இப்படிப் பல கோணங்களில் செவ்வாய் தோஷம் தன்னு டைய குணத்தை வெளிப்படுத்தும். இந்த தோஷத்தைத் தன்னிடத்தில் இருந்து விலக்கி கொண்டு விட்டால் இத்தகு தொல்லைகள் வராது.

செவ்வாய் தோஷக்காரர்கள் செவ்வாய்க்கிழமையன்று, காலையில் எழுந்ததில் இருந்து 1 மணி நேரம் மௌனம் இருக்க வேண்டும். இந்த மௌனம் இருக்க முடியாத படி எத்தனையோ தடங்கல்கள் வரும். தடங்கல்களைத் தோணியாக்கிக் கொண்டு மேலும் அதிலேயே பயணம் செய்யக் கூடாது. தடங்கல்களை எதிர்த்து நின்று மௌனத்தைக் கடைப்பிடிப்பவன் செவ்வாய் தோஷத்தில் இருந்தே விரைவில் விடுபடுவான்.

செவ்வாய் தோஷக் காரர்கள் முருகப் பெருமானையும், வளம் தரும் வயிரவக் கடவுளையும் விடாது வழிபட வேண்டும். காலையில் முருகனையும், இரவில் வயிரவனையும் வழிபடுவது சாலச் சிறந்தது. முருகன் கோலங்கள் பலவாக இருந்தாலும் தண்டபாணியாக விளங்கும் கோலம் செவ்வாய்க்குச் சிறப்பு. வயிரவ வடிவங்கள் வெகுவாக இருந்தாலும் க்ஷத்ரபாலர் என்ற அவதூத வடிவம் சிறப்பானது. முருகனையும் க்ஷத்ர பாலனையும் அன்றாடம் தோத்திரங்களாலும் அருச்ச னைகளாலும் வழிபாடு செய்கிறவன் அறிவாளி என்கிறார் யோகஸ்ரீ மணிபாரதி.
ஆனந்தபைரவர்
ஆனந்தபைரவர்

Posts : 1375
Join date : 27/07/2010
Age : 39
Location : இந்திய திருநாடு

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum