இந்து சமயம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சித்திரை-நமது புத்தாண்டுத் தொடக்கம்.
by Dheeran Tue Apr 12, 2022 8:21 am

» மீண்டும் வருக
by Dheeran Fri Oct 02, 2020 11:08 am

» கே இனியவன் ஆன்மீக கவிதைகள்
by கே இனியவன் Thu Nov 09, 2017 7:58 pm

» தீபத்திருநாள் வாழ்த்துக்கள்
by Dheeran Wed Oct 18, 2017 4:01 pm

» பண்டைய இந்தியாவின் விமானத் தொழில் நுட்பம்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:23 pm

» வெற்றி மாபெரும் வெற்றி!
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:16 pm

» பாரதி பாடலில் அராஜக “செக்யுலர்” திருத்தங்கள் - ஜடாயு
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:55 pm

» மோடி, கருப்புப்பண ஒழிப்பு, ஊடகங்கள் - ஜெயமோகன்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:41 pm

» அனைவருக்கும் வணக்கம்.
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:46 am

» நான் ஒரு ஹிந்து என்பதில் ஏன் பெருமிதம் கொள்கிறேன் – பாகம் 1 AGNIVEER
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:42 am

» தேவையா இந்த சமஸ்கிருத துவேஷம்
by Dheeran Sat Jun 25, 2016 12:46 pm

» சிவ வழிபாடு புத்தகம்
by tammy ranga Thu Dec 17, 2015 3:37 am

» ஷ்ரிடி சாய் பாபா புண்ணிய வரலாறு தமிழில்
by tammy ranga Thu Dec 17, 2015 3:35 am

» ஆரிய திராவிட மாயை
by Dheeran Thu Oct 29, 2015 4:10 pm

» தென்புலத்தார் வழிபாடு
by Dheeran Sun Sep 27, 2015 8:50 pm

» தமிழ் ஹிந்துவும் இலவச ஜோதிட கணிப்பு
by ஹரி ஓம் Mon Aug 03, 2015 2:36 am

» வெற்றி வேல்!!!வீரவேல்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
by ஹரி ஓம் Wed Jun 24, 2015 4:09 am

» சிவதாண்டவம் - PB ஸ்ரீனிவாஸ்
by i.mahatheva Thu Jun 18, 2015 5:24 pm

» கால சர்ப்ப தோஷம் என்றால் என்ன?
by jothi sangeetha Thu May 21, 2015 1:43 pm

» மல்லிகைப் பூவை தலையில் சூடுங்கள் - பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்து
by கே இனியவன் Thu May 21, 2015 11:02 am

























Topsites
Tamil 10 top sites [www.tamil10 .com ]
Ranking


வேள்வியும் தமிழரும் (பகுதி-2) வடமொழி வேள்வி புலை வேள்வி

2 posters

Go down

வேள்வியும் தமிழரும் (பகுதி-2)       வடமொழி வேள்வி புலை வேள்வி Empty வேள்வியும் தமிழரும் (பகுதி-2) வடமொழி வேள்வி புலை வேள்வி

Post by சாமி Wed Apr 04, 2012 9:06 am

புறநானூறு 15 ஆம் பாடல்
நிழல்படு நெடுவேல் ஏந்தி ஒன்னார்
ஒண்படைக் கடுந்தார் முன்புதலைக் கொண்மார்
நசைதர வந்தோர் பலர்கொல்? புரையில்
நற்பனுவல் நால் வேதத்(து)
அருஞ்சீர்த்திப் பெருங் கண்ணுறை
நெய்ம்மலி ஆவுதி பொங்கல் பன்மாண்
வீயாச் சிறப்பின் வேள்வி முற்றி
யூபம் நட்ட வியன்களம் பல்கொல்?


புறநானூறில் கூறிய பாண்டியன் செய்த வேள்விகள் பற்றிய செய்திகள் இவன் ஆற்றிய வேள்விகள் முற்றிலும் தமிழர் வழக்கின்பாற்பட்டது என்பதைப் புலப்படுத்துகிறது. காரணம் இது நால்வேதத்திபடி செய்யப்பட்ட வேள்வி என்று குறிப்பிடும்போது, இங்கே குறிப்பிடும் நால்வேதம் நற்பனுவலான நால்வேதம் (அறம், பொருள், இன்பம், வீடு என்ற தமிழ் வேதம்) என்று அடைமொழி கொடுக்கப்படுவதால் நல்லதல்லதான வேறு ஒருவகை வேதத்தினின்றும் அருத்தாபத்தி நியாயத்தால் (பொருட்பேறு) பிரிக்கப்பட்டதே இதற்குச் சான்று ஆகும்.

அன்றி இவன் செய்த வேள்விகளில் நிறுவப்பட்ட வேள்வித்தூண் (யூபம்) பிற்காலத்து ஆரியர் வழக்கின்பாற்பட்ட வேள்வித்தூணுக்கு வேறானது என்பதும் புலப்படுகிறது. இங்கே வீயாச்சிறப்பின் வேள்வி முற்றி யூபம் நட்டான் என வருகிறது. அதாவது வேள்வி முடிந்தபின் சிறப்புற நடந்தேறிய தவவேள்விச் சிறப்பினை உலகம் அறிய ஒரு தூண் நிறுவினான் என்பது இவ்வரிகளின் பொருள்.

ஆனால் ஆரியர் வழக்க வேள்வியில் வேள்வித்தூண் வேள்வி முடிந்தபின் நடுவதல்ல. வேள்விக்கு முன்னே நடப்படுவது. அந்தத் தூணில் ஆற்றப்போகும் புலைவேள்வியில் பலியிடப்படும் ஆடு, மாடு, குதிரை போன்ற மிருகங்கள் கட்டி வைக்கப்படும்.

பலியிடப்படபோகும் மிருகங்களைக்கட்டி வைக்கப்படும் தூண் வேறு. இதில் மேற்கூறிய பாண்டியன் எழுப்பிய வேள்வித்தூண் பின்னது. இரண்டிற்கும் உள்ள பாரதூரமான வேறுபாட்டினை உய்த்துணர்க. இதுவே தமிழர் வழக்க வேள்வி என்ற ஒன்று கடல்கோளுக்குப் பின் வந்த கடைச்சங்க காலத்திற்கு முன்னேயே வழங்கி வந்தது என்பதற்குத் தனிச்சிறப்புச் சான்றாகும்.

(தொடரும்)
(நன்றி: தமிழ் வேள்வி புத்தகம்)
சாமி
சாமி
நண்பர்கள்

Posts : 121
Join date : 15/02/2012

http://arundhtamil.blogspot.in

Back to top Go down

வேள்வியும் தமிழரும் (பகுதி-2)       வடமொழி வேள்வி புலை வேள்வி Empty Re: வேள்வியும் தமிழரும் (பகுதி-2) வடமொழி வேள்வி புலை வேள்வி

Post by பத்மநாபன் Thu Apr 05, 2012 7:00 pm

சாமி wrote:
ஆனால் ஆரியர் வழக்க வேள்வியில் வேள்வித்தூண் வேள்வி முடிந்தபின் நடுவதல்ல. வேள்விக்கு முன்னே நடப்படுவது. அந்தத் தூணில் ஆற்றப்போகும் புலைவேள்வியில் பலியிடப்படும் ஆடு, மாடு, குதிரை போன்ற மிருகங்கள் கட்டி வைக்கப்படும்.

நானும் ரிக் போன்ற வடமொழி வேதங்கள் படித்துள்ளேன். அதில் சோம பானமும் (சாராயமும் ) மிருகங்களை பலியிடுவதைப் பற்றியும் நிறைய வருகிறது.

நன்றி
பத்மநாபன்
பத்மநாபன்

Posts : 28
Join date : 05/04/2012

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum