இந்து சமயம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சித்திரை-நமது புத்தாண்டுத் தொடக்கம்.
by Dheeran Tue Apr 12, 2022 8:21 am

» மீண்டும் வருக
by Dheeran Fri Oct 02, 2020 11:08 am

» கே இனியவன் ஆன்மீக கவிதைகள்
by கே இனியவன் Thu Nov 09, 2017 7:58 pm

» தீபத்திருநாள் வாழ்த்துக்கள்
by Dheeran Wed Oct 18, 2017 4:01 pm

» பண்டைய இந்தியாவின் விமானத் தொழில் நுட்பம்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:23 pm

» வெற்றி மாபெரும் வெற்றி!
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:16 pm

» பாரதி பாடலில் அராஜக “செக்யுலர்” திருத்தங்கள் - ஜடாயு
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:55 pm

» மோடி, கருப்புப்பண ஒழிப்பு, ஊடகங்கள் - ஜெயமோகன்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:41 pm

» அனைவருக்கும் வணக்கம்.
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:46 am

» நான் ஒரு ஹிந்து என்பதில் ஏன் பெருமிதம் கொள்கிறேன் – பாகம் 1 AGNIVEER
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:42 am

» தேவையா இந்த சமஸ்கிருத துவேஷம்
by Dheeran Sat Jun 25, 2016 12:46 pm

» சிவ வழிபாடு புத்தகம்
by tammy ranga Thu Dec 17, 2015 3:37 am

» ஷ்ரிடி சாய் பாபா புண்ணிய வரலாறு தமிழில்
by tammy ranga Thu Dec 17, 2015 3:35 am

» ஆரிய திராவிட மாயை
by Dheeran Thu Oct 29, 2015 4:10 pm

» தென்புலத்தார் வழிபாடு
by Dheeran Sun Sep 27, 2015 8:50 pm

» தமிழ் ஹிந்துவும் இலவச ஜோதிட கணிப்பு
by ஹரி ஓம் Mon Aug 03, 2015 2:36 am

» வெற்றி வேல்!!!வீரவேல்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
by ஹரி ஓம் Wed Jun 24, 2015 4:09 am

» சிவதாண்டவம் - PB ஸ்ரீனிவாஸ்
by i.mahatheva Thu Jun 18, 2015 5:24 pm

» கால சர்ப்ப தோஷம் என்றால் என்ன?
by jothi sangeetha Thu May 21, 2015 1:43 pm

» மல்லிகைப் பூவை தலையில் சூடுங்கள் - பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்து
by கே இனியவன் Thu May 21, 2015 11:02 am

























Topsites
Tamil 10 top sites [www.tamil10 .com ]
Ranking


வேள்வியும் தமிழரும் (பகுதி-3) தமிழ் வேள்வி புனித வேள்வி

2 posters

Go down

வேள்வியும் தமிழரும் (பகுதி-3)                    தமிழ் வேள்வி புனித வேள்வி Empty வேள்வியும் தமிழரும் (பகுதி-3) தமிழ் வேள்வி புனித வேள்வி

Post by சாமி Thu Apr 05, 2012 8:04 am

தொல்காப்பியத்தில் வேள்வி
தமிழ் இலக்கணத்தில் மிகப்பழமை வாய்ந்ததும், ஆணைச் சான்றாக கொள்ளக் கூடியதும், ஒல்காப் புகழ் பெற்றதுமான தொல்காப்பியம் பாடாண் திணையின் துறைகளை விரித்துரைக்கையில் அதில் ஒன்றாக,
“கபிலைக் கண்ணிய வேள்வி நிலையும்” (86-6) என்று கூறுகிறது. வேள்வியாற்றிய பின், வேள்வி ஆற்றிய சான்றோர்க்கு கபிலநிறம் என்ற கருமை நிறப் பசுக்களைத் தானமாகக் கொடுத்தலை மேற்கூறியவாறு தொல்காப்பியர் குறிப்பிடுகிறார்.
எனவே வேள்வி என்பது தொல்காப்பியர் காலத்திலேயே தமிழர் வழக்கில் இருந்ததை அறிகிறோம்.
அதிலும் தொல்காப்பியத்தில் குறிப்பிடப்படுவதெல்லாம் அவருக்கு முன் மிகப் பழங்காலத்திலிருந்து தொன்று தொட்டு வந்தவையாகும் என்பதற்கு அடிக்கடி அவர்தம் சூத்திரங்களில் காணப்படும் ‘என்மனார் புலவர்’ என்ற சொற்றொடர் சான்று பகரும். இப்படி எனக்கு முன்னிருந்த புலவர்கள் சொன்னார்கள் என்பது அதன் பொருள். எனவே வேள்வி தொல்காப்பியரின் காலத்திற்கு முன்னாலேயே தமிழகத்தில் வழங்கி வந்தது என்பது உறுதியாகிறது.

சங்க நூல்களில் வேள்வி
இன்னும் வேள்வி பற்றிய செய்திகளைக் கூறும் சங்க நூல்கள் சில.
மதுரைக்காஞ்சி (494-495)
ஆவுதி மண்ணி அவிர்துகில் முடித்து
மாவிசும்பு வழங்கும் பெரியோர் போல

புறநானூறு 361
கேள்வி முற்றிய வேள்வி அந்தணர்க்கு
அருங்கலம் நீரோடு சிதறி

கலித்தொகை 36
கேள்வி அந்தணர் கடவும்
வேள்வி யாவியின் உயிர்க்கும் என் நெஞ்சே

பதிற்றுப்பத்து 70
புரையோள்கணவ பூண்கிளர் மார்ப
தொலையாக் கொள்கைச் சுற்றஞ் சுற்ற
வேள்வியில் கடவுள் அருத்தினை

பரிபாடல் 5
மாதிரம் அழல வெய்து அமரர் வேள்விப்
பாகம் உண்ட பைங்கண் பார்ப்பான்

சிலப்பதிகாரம் 23 (67-70)
ஒன்றுபுரி கொள்கை இருபிறப் பாளர்
முத்தீச் செல்வத்து நான்மறை முற்றி
ஐம்பெரும் வேள்வியும் செய்தொழில் ஓம்பும்
அறுதொழில் அந்தணர் பெறுமுறை வகுக்க

சிலப்பதிகாரம் 28 (175-178)
வானவர் போற்றும் வழிநினக் களிக்கும்
நான்மறை மருங்கின் வேள்விப் பார்ப்பான்
அருமுறை மருங்கின் அரசர்க் கோங்கிய
பெருநல் வேள்வி நீ செயல் வேண்டும்.

சிலப்பதிகாரம் 28 (228-233)
கைவினை முற்றிய தெய்வப் படிமத்து
வித்தகர் இயற்றிய விளங்கிய கோலத்து
முற்றிழை நன்கலம் முழுவதும் பூட்டிப்
பூப்பலி செய்து காப்புக்கடை நிறுத்தி
வேள்வியும் விழாவும் நாடொறும் நிறுத்தி
கடவுள் மங்கலம் செய்கென ஏவினன்

மேலே காணப்படும் சிலப்பதிகாரச் சான்றுகளில் இறுதியில் வரும் சான்று கடவுள் உருவச் சிலையை நாட்டி கும்பாபிசேகம் செய்வது பற்றி வருவது. அதற்கான வேள்வி புலை வேள்வியாக இல்லாமல் ‘புனித வேள்வியாக அங்கே பூப்பலி மட்டும் செய்யப்படுவது குறிப்பில் கொள்ளத்தக்க செய்தி.
அத்துடன் இன்று நாம் கும்பாபிசேகம் என்று கூறுவதை மிக அழகிய தமிழில் இளங்கோ அடிகள் கடவுள் மங்கலம் செய்தல் என்று கூறுவது எண்ணி எண்ணி மகிழத்தக்கது.

(தொடரும்)
(நன்றி: தமிழ் வேள்வி புத்தகம்)
சாமி
சாமி
நண்பர்கள்

Posts : 121
Join date : 15/02/2012

http://arundhtamil.blogspot.in

Back to top Go down

வேள்வியும் தமிழரும் (பகுதி-3)                    தமிழ் வேள்வி புனித வேள்வி Empty Re: வேள்வியும் தமிழரும் (பகுதி-3) தமிழ் வேள்வி புனித வேள்வி

Post by பத்மநாபன் Thu Apr 05, 2012 7:04 pm

சாமி wrote: சிலப்பதிகாரச் சான்றுகளில் இறுதியில் வரும் சான்று கடவுள் உருவச் சிலையை நாட்டி கும்பாபிசேகம் செய்வது பற்றி வருவது. அதற்கான வேள்வி புலை வேள்வியாக இல்லாமல் ‘புனித வேள்வியாக அங்கே பூப்பலி மட்டும் செய்யப்படுவது குறிப்பில் கொள்ளத்தக்க செய்தி.
அத்துடன் இன்று நாம் கும்பாபிசேகம் என்று கூறுவதை மிக அழகிய தமிழில் இளங்கோ அடிகள் கடவுள் மங்கலம் செய்தல் என்று கூறுவது எண்ணி எண்ணி மகிழத்தக்கது.

கடவுள் மங்கலம்
அருமையான வார்த்தை !
இளங்கோ அடிகளுக்கு நன்றி. இதை பதிவிட்ட சாமிக்கு நன்றி !
பத்மநாபன்
பத்மநாபன்

Posts : 28
Join date : 05/04/2012

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum